பாலாரிஷ்டம் : 3

அண்ணே வணக்கம்ணே !

இன்னைக்கு தான் சனிபெயர்ச்சி .இந்த ச.பெ அனுகூலமா உள்ளவிகளுக்கு நல்ல பலன் கூடவும் – பிரதி கூலமா உள்ளவிகளுக்கு தீய பலன் குறையவும் சில பரிகாரங்களை தந்திருக்கன். (சனியே சொல்றாப்ல)

சனி ஸ்பீக்கிங்:
மொதல்ல என் காரக்த்வத்தை பார்க்கலாம்.
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.

பரிகாரங்கள்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.

பாலாரிஷ்ட விதிகளை பார்த்துக்கிட்டிருக்கம். இன்னைக்கு லக்னத்தில் செவ் இருந்து குரு பார்வை இல்லாமல் இருந்தால் சிசுவுக்கு அரிஷ்டம். லக்னத்துல செவ் இருந்தா என்ன ஆயிரும்?

இதுக்கு ப்ரத்யட்ச உதாரணம் நம்ம நண்பர் ஒருத்தரோட ஜாதகம் தான். இத்தனைக்கும் அவருது மகர லக்ன ஜாதகம். செவ் யோக காரகன். லக்னத்துல உச்சம். ஆளே கொஞ்சம் நசுங்கினாப்ல தான் இருப்பார். ( ஃபோன்சாய்க் மாதிரி ) ஐடிஐ .எலக்ட் ரிக்கல் . கொஞ்ச காலம் ப்ரைவேட் வைர் மேன். பிறவு ஈபி . கண்ணாலம் லேட்.அதுக்கு மிந்தி ஒரு ரெண்டு அட்வென்சர் . அதுல கொஞ்சம் அசால்ட்டா இருந்திருந்தா டிக்கெட்டு . மொத அட்வென்சர்ல பட்லியோட கணவன். ரெண்டாவது அட்வென்சர்ல பட்லியே. அவ்வ்வ்

ரெண்டு பெண் குழந்தைங்க. ஆனா பாருங்க பொஞ்சாதி இமிசை தாங்க முடியாம ப்ளட் ஷுகர் வந்திருச்சு. ஒரு தற்கொலை போல அதை மானிட்டர் பண்ணாம மைல்ட் அட்டாக் வந்து டிக்கெட்டு .சாகறப்ப வயசு 40+ தான். ஏன் இப்படி ஆச்சு ?

அடுத்த பதிவுல விரிவா சொல்றேன்.

2 Replies to “பாலாரிஷ்டம் : 3”

Pandian

26/10/2017 at 5:02 pm

ஐயா வணக்கம்,

/*/இத்தனைக்கும் அவருது மகர லக்ன ஜாதகம். செவ் யோக காரகன்./*/ மகர லக்கினத்திற்கு செவ்வாய் பாதகாதிபதியாச்சே அவர் எப்படி யோகம் செய்ய முடியும்!!!!!

Reply

    S Murugesan

    26/10/2017 at 5:04 pm

    பாண்டியன் !

    ஒரு வகையில நீங்களும் தப்பு நானும் தப்பு. செவ் யோக காரகன் அல்ல. சுபன்.

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *