பாலாரிஷ்டம் : 2

அண்ணே வணக்கம்ணே !

பல காலத்துக்கு பிறகு சூட்டோட சூடா ரெண்டாவது சாப்டரை போட்டிருக்கன். தொடர் தொடரனும்னா பதிவை ஷேர் பண்ணுங்க -உங்க கருத்தை சொல்லுங்க- குத்தம் குறை இருந்தா விளக்கலாம். விவாதிக்கலாம். இல்லின்னா எனக்கொன்னும் நஷ்டமில்லிங்கோ ?

நான் பாட்டுக்கு ஆன்லைன் ஜோதிட ஆலோசனையிலும் -ஆறிலிருந்து அறுபது வரை புஸ்தவ வேலையிலயும் பிசியாக்கிக்குவன். நெல்லா கல்லா கட்டி ஆனந்தமா காலத்தை ஓட்டிருவன். பதிவுக்கு போயிரலாமா?

பாலாரிஷ்டம் என்பதை இன்றைய ட்ரென்டில் சொல்ல வேண்டுமானால் சிசு மரணம்னு சொல்லலாம். இந்த பாலாரிஷ்டம்ங்கற தலைப்புல கொடுத்திருக்கிற கிரக ஸ்திதிகள் உள்ளவர்கள் எத்தனையோ பேர் தீர்காயுசா இருக்கிறத பார்த்திருக்கன். இது எப்படி? அப்ப ஜோசியம் பொய்யான்னா இல்லை பாஸ் ! கால தேச வர்த்தமானங்களை கணக்கில் எடுத்துக்கிட்டு ஆராய்ச்சி பண்ணனும்.

அன்னய தேதிக்கு அஃதாவது இந்த பாலாரிஷ்ட விதிகள் தொகுக்கப்பட்ட தேதிக்கு இருந்த வி ஞ் ஞான ,அறிவியல் முன்னேற்றம் என்ன? மக்கள் வாழ்க்கை முறை என்னங்கற மனசுல வச்சு ரோசிக்கனும்.

கடந்த பதிவில் பாப கிரக வீட்டில் / பாப கிரக பார்வை பெற்று 6-8 ல் சந்திரன் இருந்தால் டிக்கெட்டுன்னு ஒரு விதியை சொன்னேன். சந்திரன் ஜலகண்டம் / நீரால் பரவும் வியாதிகள் /நீர் சத்துக்குறைவு / நுரையீரல் பாதிப்பு/சிறு நீரக பாதிப்பை கொடுக்க முடியாத பட்சத்தில் மனவியல் பிரச்சினைகளை கொடுக்கலாம்னு சொன்னதை நினைச்சு பாருங்க.

இதான் பாஸ் சூட்சுமம். தேர் ஆர் மெனி ஆப்ஷன்ஸ் ஃபார் தி ப்ளேனட்ஸ். இந்த தகிரியத்துல தான் தேச கனவுகளை அமல் படுத்திரலாம்னு துடிக்கிறேன். எல்லா மக்களுக்கும் கை நிறைய வேலை / கவுரதையான வருமானம் / உணவு -உடை-இருப்பிடம்-செக்ஸுக்கு குந்தகமில்லாத வாழ்க்கையை கொடுத்தாச்சுன்னா மிஞ்சி போனா பேட்டரி அவுட் ஆயிரும். அம்புட்டுதேன்.

பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடி நீரை கொடுத்தாச்சுன்னா மனவியல் பிரச்சினைகள் வரும். கை நிறைய வேலை இருந்தா இதுவும் கட்டுக்குள்ள தான் இருக்கும். கட்டாய இலவச கல்வியை கொடுத்தாச்சுன்னா ஸ்கின் ப்ராப்ளம் வரும் . அதான் இலவச மருத்துவமும் தருவம்ல.

கவுரதையான வருமானம் தந்தாச்சுன்னா மிஞ்சி போனா கண்ணாலம் கட்டறவன் நெம்பர் குறையும் /அப்படியே கட்டினாலும் சனத்தொகை குறையும். நல்லது தானே.
நிற்க அடுத்த பாலாரிஷ்ட விதியை பார்ப்போம்.

ஐந்தில் சனி ,ராகு ,கேது இருந்தால் சிசுவிற்கு அரிஷ்டம் .ராகு கேதுல்லாம் ஜெனட்டிக் ஃபீச்சர் .வமிச விருட்சத்திலிருந்து பாசிட்டிவான ஜீன்ஸை பெற ராகு கேதுக்களின் இருப்பு ரொம்ப முக்கியம். இதுவே பல்பு வாங்கியிருந்தா ? வமிச விருட்சத்திலிருந்து லொடக்கானி ஜீன்ஸை பெற்று சிசு அல்லாடும்.
ராகு கேது என்றால் விஷம். தேள் கடிச்சு கூட பொட்டுனு போயிரலாம். ஆனால் இன்றைய நகரமயமாக்கலில் இதுக்கு சான்ஸ் குறைவு. இதுக்கு பதிலா மெடிக்கல் ரியாக்சன் நடக்கலாம். பக்கத்துல ஆஸ்பத்திரியிருந்தா இதுலருந்தும் எஸ் ஆகலாம்.

சனி என்பவர் பிதுர்களுக்கு காரகன். வமிச விருட்சத்துல அகால மரணங்கள் / துர்மரணங்கள் சம்பவிச்சிருந்தா இப்படியா கொத்த கிரக ஸ்திதியில கொளந்தை பிறக்கும்.

அஞ்சுங்கறது பூர்வ புண்ணிய ஸ்தானம் இங்கிட்டு சனி நின்னாருன்னா .. அதை பெற தாமதம் ஏற்படலாம் .மந்த புத்தி இருக்கலாம்.சனி – ஆசனத்துக்கு காரகன். சைலன்சர்ல அடைப்பு இருந்தா எந்த வண்டி ஓடும்? எந்த வண்டி நல்ல மைலேஜ் கொடுக்கும்?

ஆனால் இன்னைக்கிருக்கிற வி ஞ் ஞான /அறிவியல் /மருத்துவ முன்னேற்றம் காரணமா உரிய சிகிச்சை மூலம் ஒப்பேத்திரலாம். இதனோட எஃபெக்ட் பிற்காலத்துல அந்த குழந்தை ஹோமோவா / ஆனல் செக்ஸ் பிரியனா மாற வாய்ப்பிருக்கு. அல்லது பயங்கர கஞ்சூஸா மாறும்.

ஆகவே இந்த பாலாரிஷ்ட விதிகள் உங்க ஜாதகத்துலயோ /உங்க வாரிசுகள் ஜாதகத்துலயோ இருந்தா டர்ராயிராதிங்க. பீலர்கள் /குவாக்ஸ்/அரை குறை நாட்டு வைத்தியர்கள் / பாட்டி வைத்தியங்களை சரணடையாமல் நெல்லா சில் ட்ரன் பெசலிஸ்டா பாருங்க மேட்டர் ஓவர்

3 Replies to “பாலாரிஷ்டம் : 2”

thanigaivel

26/10/2017 at 6:39 pm

நன்றி ஐயா.

Reply

thanigaivel

25/10/2017 at 5:43 pm

ஐயா,
5 ல் கேது / ராகு இருந்தால் என்ன ஆகும் னு சொல்லுங்க.

Reply

    S Murugesan

    25/10/2017 at 7:58 pm

    மறதி /புத்திக்குழப்பம் /அவமானம் / தவறான முடிவுகள் /சந்தானமின்மை குறைபிரசவம் இப்படி பலதும் /பலதில் சிலதும்/ ஒன்றும் நடக்கலாம்.

    இவர்கள் நின்ற பாவாதிபதி சுபராகி சுப பலன் தரும் நிலையில் இருந்தால் சில காலத்துக்கு பின் பிரச்சினைகள் தீரும். வாழ்க்கை நிலைமாறும்.

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.