பாலாரிஷ்ட விதிகள் : 1

அண்ணே வணக்கம்ணே !
ஜனவரி 14 ஆம் தேதி வெளிவர இருக்கும் “ஆறில் இருந்து அறுபது வரை “புஸ்தவத்துக்கு மேட்டரை ஃப்ரஷ்ஷாவே எழுதிரலாம்னு முடிவு பண்ணது ரெம்ப நல்லதா போச்சு. ஆறில் இருந்துன்னு தலைப்பு ஆரம்பிச்சாலும் சோபனத்துல இருந்து எழுதித்தானே ஆகனும். இதுல பாலாரிஷ்டம்ங்கறது முக்கியமான கான்செப்ட் .

பால -அரிஷ்டம் . அரிஷ்டம்னா வறுமை /தரித்திரம்னு அருத்தம். கொளந்தை பிறந்த நேரத்தை வச்சு ஆருக்கு ஆப்புன்னு நம்ம ஸ்லாங்குல சொல்லலாம்.

உங்களில் ஜோதிட கிரந்தங்களை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கொண்டு படிப்பவர்கள் இருந்தால் இன்னின்ன கிரக ஸ்திதி இருந்தால் குழந்தை பிறந்ததும் இறக்கும் /ஒரு வாரத்துல இறக்கும்னுல்லாம் படிச்சிருப்பிங்கனு நினைக்கேன்.
ஜோதிடத்துல நூத்துக்கணக்கான விதிகள் இருக்கும். ஆனால் ஒரு விதியை சற்றே தள்ளி நில்லும் பிள்ளாய்னு தள்ளி வச்சு கோல் போடற விதியும் இருக்கும்.

ஹ்யூமன் பாடிக்குள்ளயே இம்யூன் சிஸ்டம் இருக்காப்ல ஜாதகத்துக்குள்ளயே பரிகார செட்டப்பும் இருக்கும். பரிகார செட்டப் இருந்தாலும் -இல்லின்னாலும் கொளந்தை டிக்கெட்டு தான் போடனும்னுல்ல. ஜாதகபலனை படிக்கிறவிக “அல்லது”ங்கற வார்த்தைய பார்த்திருப்பிங்க. அல்லது மீன்ஸ் ஆப்ஷன்.

அஷ்டமத்து சனின்னா டிக்கெட்டு தானுல்ல . மரணத்துக்கு ஒப்பான வறுமை /வீண் பழி /சிறைப்படுதல் இப்படி பலதுல ஏதோ ஒன்னு நடக்கலாம்.

இப்ப ஓரளவு செனேரியோ புரிஞ்சுருக்கும்னு நினைக்கேன். இப்ப பாலாரிஷ்ட விதிகளை பார்க்கலாம் .உபயம்: குடும்ப ஜோதிடம் லிஃப்கோ பப்ளிக்கேஷன்ஸ் வெளியீடு (கூடவே நம்ம வியாக்யானங்களும் )

1.பாப கிரக வீட்டில் நின்று -பாப கிரக பார்வை பெற்று லக்னாத் 6-8 ல் சந்திரன் இருந்தால் சிசுவுக்கு அரிஷ்டம்

சேலஞ்ச்னு ஒரு படம் .எண்டமூரி கதைய வச்சு எடுத்தானுவ. சிரஞ்சீவி தான் ஹீரோ. தமிழ்ல கூட சுசீலா கனகதுர்கா மொழிபெயர்ப்புல பணம் பணம் பணம்னு தொடரா வந்ததா ஞா. ஒரு வருசத்துல 50 லட்சம் சம்பாரிச்சு காட்டறேன்னு பந்தயம் போட்டுட்டு கோவில் வாசல்ல உட்கார்ந்திருப்பாரு. ஒரு பிச்சைக்காரி வந்து பிச்சை கேட்கும் “எங்கிட்ட இல்ல பாட்டி”ம்பாரு ஈரோ. அந்த பாட்டி அய்யோ பாவம் வயசு புள்ள ஒட்ட ஒட்ட பட்டினி இருந்தா எப்படி ? இந்த பத்து பைசாவுக்கு பொட்டுகடலை வாங்கி சாப்பிடுன்னு கொடுக்கும். அவரு ஈரோவாச்சே ..அந்த பத்து பைசா முதலீட்டுல இருந்து அம்பது லட்சம் சம்பாதிச்சுருவாரு .
நாம நம்ம வாழ்க்கையில எத்தனையோ பிக்காலிஸை பார்க்கிறோம் . 49 லட்சத்து 99 ஆயிரத்து , 999 ரூபாய் -90 பைசா வச்சிருப்பான் . அதை ரவுண்டாக்க பத்து பைசா வரலின்னா டெப்ரஸ் ஆயிருவான்.

இங்கே வேலை செய்றது பணம் இல்லை மனம். சந்திரன் மனோகாரன். அந்த சந்திரனே சத்ரு ரோக ருணபாவத்துல /அல்லது ஆயுள் ஸ்தானத்துல நின்னா மன நோய்க்கு மருந்தேது ? சந்திரன் 6-8 ல இருந்த மாத்திரத்துல கொளந்தை பிச்சை எடுக்கும்னு இல்லை. லட்ச லட்சமா சம்பாதிச்சாலும் பத்து பைசாவுக்கும் அலைஞ்சு பறை சாத்தும்னு அருத்தம். இது ஒரு வ்யூ.

அடுத்தது சந்திரன் ஜலகாரகன். கண்ட தண்ணிய குடிச்சு வாந்தி பேதி -டீ ஹைடிரேஷன் -டிக்கெட்டு அல்லது பக்கெட்டுல /தொட்டில கவிழ்ந்து மூழ்கி டிக்கெட்டு .சான்ஸ் இருக்கா இல்லையா? சந்திரன் நுரையீரலுக்கும் காரகன். கவுந்துக்கனும்னே இல்லை அண்டா தண்ணியை அளைஞ்சுக்கிட்டே இருந்தாலும் சளி பிடிச்சு – ஜூரம் . (எங்க ஒக்காபிலரில தொளக்கிக்கிட்டுனு சொல்லுவம் -உங்க பக்கத்துல ?)

அடுத்து சந்திரன் சிறு நீரகத்துக்கு காரகன். அடிக்கடி சளி பிடிக்குதுன்னு ஆன்டிபயாடிக்ஸ் எடுத்துக்கிட்டே இருந்தா கிட்னிக்கு ஆப்பு .இந்த விதிகள் எழுதப்பட்ட காலத்துக்கும் -இன்னைய தேதிக்கும் எவ்வளவோ வித்யாசங்கள்.

சில ரிமோட் ஏரியாஸ்/ வனப்பகுதிகள் /லேபர் ஏரியாஸ் தவிர மத்த இடங்கள்ள மேற்படி ரிஸ்க் எல்லாம் குறைவு தான். சோத்துக்கு இல்லாதவனும் கேன் வாட்டர் வாங்கித்தான் ஆக வேண்டியிருக்கு. எங்க பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம் / கொளந்தைய டிவி முன்னே கட்டி போட்டிருக்கம்.

இதனால என்னாகுதுன்னா மனோ காரகனான சந்திரன் அந்த பாப்பாவோட சைக்கலாஜிக்கல் செட்டப்பை நாஸ்தி பண்ணிர்ராருங்கோ .
ஸ்தூலமான பிரச்சினைகள் / காரணங்கள் இல்லாத போது சைக்கலாஜிக்கல் காரணங்கள்/பிரச்சினைகள் பூதாகரமாகும் . ஸ்தூலமான பிரச்சினைகள் / காரணங்கள் இருக்கும் போது சைக்கலாஜிக்கல் பிரச்சினைகள் மினிமைஸ் ஆகும் . இதான் லிங்க்.

ஆக மேற்படி இடங்களில் சந்திரன் நின்றால் வறுமை அல்லது வெறுமை . எப்படி சரியாத்தான் பேசறேனா? உங்க கமெண்டுகள் தான் நமக்கு ஸ்டீராயிட். வந்தமா போனமானு இருந்தா மாசத்துக்கு 2 பதிவு கூட தேறாது. உங்க பார்ட்டிசிப்பேஷன் இருந்தா காலை மாலைனு ரெண்டு பதிவு போடவும் நான் தயார். நீங்க தயாரா?

3 Replies to “பாலாரிஷ்ட விதிகள் : 1”

Kalyan

31/10/2017 at 2:41 pm

அருமையான பதிவு பாஸ். ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கேன். எல்லா ஜோசியரும் எனக்கு சொல்லுவாங்க, வாழ்க்கை முழுக்க கடன் இருக்கும்னு. இப்போதான் புரியுது 6-ல் சந்திரன்….!!!

Reply

  S Murugesan

  31/10/2017 at 3:16 pm

  கல்யாண் !

  ஆறுல சந்திரன் இருந்தா வாழ் நாள் முழுக்க கடன் என்பது தவறு. ஒரு ரெண்டே கால் வருசம் மூக்குக்கு மேல போகும் அடுத்த ரெண்டே கால் வருசம் பாதம் நனையற மாதிரி ஓடும்.ஆனால் கடன் இருந்து கிட்டே இருக்கும்.பல நேரம் நீங்க கடன் வாங்க ஸ்தூலமான காரணங்களை விட மானசிக காரணங்கள் அதிகமா இருக்கும்.

  Reply

   Kalyan

   01/11/2017 at 12:46 pm

   சரிதான் பாஸ், சில நேரம் கழுத்தை நெறிக்கும், சில நேரம் கஷ்டம் தெரியாது.

   Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.