ஆதார் ஜோதிடம் (புதுசு கண்ணா புதுசு )

அண்ணே வணக்கம்ணே !
ஜோசியத்துல கண்டுபிடிப்புகள்னு நாம கொடுக்கிற அலப்பறைகளுக்கு குடுமிங்கல்லாம் டர்ராகி கிடக்கிறது அல்லாருக்கும் தெரியும் தானே. இது போதாதுன்னு ஆத்தா இன்னொரு கண்டுபிடிப்பை கொடுத்திருக்கா. ஒரு அந்தாசா நம்ம நண்பர்கள் வட்டத்துல ட்ரெயில் விட்டு பார்த்ததுல செமயா மேட்ச் ஆகுது .

அதான் உங்களுக்காவ இந்த பதிவு.

உங்க ஆதார் கார்டை எடுத்து பக்கத்துல வச்சுக்கோங்க. கு.பட்சம் நெம்பர். இப்ப பரபரன்னு ஒரு ராசிச்சக்கரம் வரைஞ்சிருங்க. உங்க லக்னம் எதுவோ அதை மார்க் பண்ணுங்க. இப்ப என்ன பண்ணனும்னா உங்க ஆதார் நெம்பர்ல இருக்கிற ஒவ்வொரு இலக்கத்தையும் வரிசையா (க்ளாக் வைஸ் ) போட்டுக்கிட்டே போங்க. நம்ம சைட் / நம்ம புக் எதுலயாச்சும் கிரகங்கள் நின்ற பலன் டேட்டாவ மேட்ச் பண்ணிக்கிட்டே வாங்க .

எம்பூட்டு டாலி ஆவுதுன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
என் ஆதார் நெம். 5571 7652 9658

நம்முது கடக லக்னம் . லக்னத்துல அஞ்சை போட்டாச். அப்டியே சிம்மத்துல 5, கன்னியில 7 ,துலாம்ல 1 இப்படி போட்டுக்கிட்டே போய் மிதுனத்துல 8 போட்டு முடிச்சுட்டன். (படத்தை பாருங்க)

இங்கே எண் கணிதத்தை கொஞ்சம் துணைக்கு கூப்டுக்கனும்.

1- சூ
2-சந்தி
3- குரு
4-ராகு
5- புதன்
6-சுக்
7-கேது
8-சனி
9 -செவ்
இப்போ ராசிச்சக்கரத்துல ஏற்கெனவே போட்ட எண்களுக்குரிய கிரகங்களின் பேரை எழுதிக்கிட்டே வாங்க. (படத்தை பாருங்க)
இப்ப என்னாச்சு?
லக்னம் -புத
வாக்கு -புத
சகோதரம்- கே
மாத்ரு- சூரியன்
புத்ர -கேது
ரோகம் -சுக்
களத்ரம்-புத
ஆயுள்-சந்திரன்
பாக்யம்-செவ்
ஜீவனம் -சுக்
லாபம் -புத
விரயம்-சனி

புது விதமான ராசிச்சக்கரம் ரெடி. இதுல ஒரே கிரகம் பல முறை இடம் பெறலாம் ( எண்கள் ரிப்பீட் ஆறதால) எனக்கான பலன் எப்பூடி டாலி ஆச்சுன்னு சொல்றேன். உங்களுக்கு எந்தளவு டாலி ஆகுதுன்னு தெரிஞ்சுக்கனும்னா நம்ம யு ட்யூப் சானல்ல ஆன்லைன் ஜோதிட வகுப்புகள் வீடியோவுல தடவி பாருங்க/ நம்ம சைட்ல தேடிப்பாருங்க. அல்லது நானே அடுத்த பதிவுல டெலிக்ராஃபிக் லாங்குவேஜ்லனாச்சும் சொல்றேன்.

லக்னம் -புத
நமக்கு தொழில் ஜோதிடம்

வாக்கு -புத
வீடியோ /ஆடியோன்னு தூள் பரத்தறம்ல

சகோதரம்- கே
ஜெ’எப்ப மண்டைய போடும்னு வெய்ட் பண்ணி இப்ப கொண்டைய தூக்கி காட்டற பக்கிங்கள மாதிரியா நாம தில்லு துரையாச்சே.

மாத்ரு- சூரியன்
வீடு மாத்தினேன்/ ஃபாரஸ்டுக்கு வாக் போறேன்/ மலை மேல எல்லாம் ஏறி ஃபோட்டோ எடுக்கிறேன்/ரா முச்சூடும் கண் முழிக்கிறேன்.

புத்ர -கேது
மவ படாத பாடு பட்டாச். கூட்டுக்குடித்தனத்துல அல்லாடி /மழை தண்ணியில பத்து தேச்சு -சிக்கனமாம்/ ப்ரெய்ன் ஃபீவர்னு பேதிக்கு கொடுத்து / பிரசவத்துல போட்ட தையல் சீழ் பிடிச்சு / பிறந்த குழந்தைக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி / உடனடி லாட்டரி கணக்கா அம்மை .ஸ்..யப்பா
இது போதாதுன்னு நமக்கு எத்தனை அவமானம்? மொபைல் புக் ஸ்டோர் ஊத்திக்கிச்சு / தேர்ட் டைம் ரீ ப்ரிண்டுக்கு போய் புக் காப்பிஸ் முடங்கி /மோடி -லேடி மேட்டர்ல வாய விட்டு சூனாவ புண்ணாக்கி .ஒன்னா ரெண்டா??

ரோகம் -சுக்
இடையில ஒரு தாய்க்குலம் ரெம்பவே நெருக்கமாகி (வெஜ் தான் பாஸ் !) பொஞ்சாதிக்கு சந்தேக பேய் பிடிச்சு உஸ்ஸ்ஸ்ஸ்.

களத்ரம்-புத
ஏறக்குறைய ஒரு மாத்திரை கடையே வச்சி நடத்திக்கிட்டிருந்தா போன மாசம் தேன் ஒரு மாத்திரை ரியாக்ட் ஆகி திருந்தியிருக்கா

ஆயுள்-சந்திரன்
வெப் சைட் ஏன் காத்து வாங்குதுன்னு கேட்காதவிக இல்லை. புது புஸ்தவம் சரஸ்வதி பூசைக்கு ரிலீஸ் ஆகவேண்டியது . கன்டென்ட் ரெடி ஆகாததால இப்ப 2018 ஜனவரி 14 க்கு தள்ளிவச்சிருக்கன். பல முறை ரைட்டர்ஸ் மெனோஃபஸ்னு புலம்பினது ஞா வருதா?

பாக்யம்-செவ்
ஏற்கெனவே கவர்ன்மென்ட்ல கொடுத்த ஓசி சைட்டை எனக்கு வாடகை கொடுக்கிற ஷக்தி இருக்கு .அதுவும் இல்லாதவிகளுக்கு கொடுங்க சரண்டர் பண்ணிட்டன். கடந்த மாசம் தேன் மவ ஜாதகத்தை பார்த்து நீ கவர்ன்மென்ட் குவார்ட்டர்ஸ்ல வாழனும் டாடி. இரு ஒரு ஹவுசிங் சைட் வாங்கி தந்துர்ரன்னு வாய விட்டிருக்கன்.

ஜீவனம் -சுக்
நம்ம ப்ளே பாய் இமேஜுக்கு குறைவில்லாம கில்மா போஸ்ட்லாம் அப்படியே தானே தொடருது

லாபம் -புத
ஜோசியம் /ஜோசிய புஸ்தவ விற்பனை தானே அன்னதாதா

விரயம்-சனி
கொய்யால கொண்டுட்டுபோற காசு செலவே ஆக மாட்டெங்குது. அப்படியே ரிட்டர்ன் பண்ணிர்ரன் மவளுக்கு /தூக்கம் தெரிஞ்ச கதை தானே

எப்பூடி?

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *