நாட்களை எண்ணி வரும் எடப்பாடிக்கு ஒரு பம்பர் ஆஃபர்

அண்ணே வணக்கம்ணே !

பூனை எந்த நிறமா இருந்தா என்ன எலிய பிடிக்கனுங்கறது நம்ம பாலிசி . ஆகவே நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் எடப்பாடிக்கு இந்த பம்பர் ஆஃபரை தந்திருக்கேன். பார்ப்பம்

ஓவர் டு எடப்பாடி

_________

மா.மி.தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களே !

உங்களுக்கு ஒரு ஓப்பன் லெட்டர் போடற நேரத்துல உருப்படியா எதையாச்சும் செய்யலாம் தான்.ஆனால் துண்டுபிரசுரம் கொடுத்தாலே ராஜதுரோக குற்றத்துல அரெஸ்ட் பண்றியளாமே? கையோட கையா என்னையும் தூக்கி உள்ள வைக்க மாட்டிங்களா -அந்த 16 வருச கதை பொது வெளிக்கு வராதாங்கற நப்பாசையில தான் இந்த லெட்டரை அடிச்சுக்கிட்டிருக்கன். அதென்ன 16 வருசம்? உங்க தலைமை செயலாளர்க்கிட்டே கேளுங்க. சொல்லுவாங்க. இல்லின்னா வெய்ட்.. பதிவின் கடைசியில சொல்றேன்.

நீட் தேர்வு மேட்டர்ல மத்திய -மானில அரசுகளை விமர்சிச்சு துண்டு பிரசுரம் வினியோகம் செய்றதை ராஜ துரோகம்னு ஆரோ சொல்லியிருக்காங்க. நீங்களும் வெள்ளந்தியா கைது நடவடிக்கைய முடுக்கி விட்டிருக்கிங்க.

சீதை இலங்கையில ராவணனோட கஸ்டடியில “எப்படி ” இருந்தாளோன்னு அவதூறு பண்ண சலைவைத்தொழிலாளி மேல ராஜாவா இருந்த ராமன் கூட ராஜ துரோக குற்ற சாட்டுல நடவடிக்கை எடுக்கல.

ஆர்.கே நகர்ல நீங்க ஓட்டு கேட்க போனியளே .. அப்ப சசிகலா – தினகரன் நிலை வேற. அந்த காலக்கட்டத்துல இன்னைக்கு கொடுக்கிற அலப்பறைல்லாம் கொடுத்திருந்தா நீங்க ஹீரோ ஆகியிருக்கலாம். ஆனால் இன்னைக்கு தினகரனுக்கு இருக்கிற இமேஜ் வேற.

எப்போ நீங்க தில்லி கண்ட் ரோலுக்கு போயி – உங்க ஆட்சியை ஊழலாட்சினு சொன்ன ஓபிஎஸ்ஸோட கை கோர்த்தியளே அப்பமே உங்க இமேஜ் காலி. மேல மேல சொதப்பி தினகரனை ஹீரோ ஆக்கிக்கிட்டு இருக்கிங்க. கட்சிக்குள்ள மட்டுமில்லை – கட்சிக்கு வெளியவும் இதான் நிலை .

எதை தின்னா பித்தம் தெளியுங்கற நிலையில நீங்க இருக்கிங்க.ஒங்கள சொல்லி குத்தமில்லை. ஒங்களை ஒழிச்சுக்கட்டவே ஐடியா கொடுத்துக்கிட்டிருக்கிற கோட்டரிய சொல்லனும்.கொஞ்சம் வரலாறை திரும்பி பாருங்க பாஸ் !

இந்திரா காந்திக்கு சீனியர்ஸோட பிரச்சினை வந்தது .ஒடனே அந்தம்மா வங்கிகள் தேசீய மயம் – எஸ்.சி ரிசர்வேஷன்னு ஒரு யுடர்ன் எடுத்தது. விபிசிங்குக்கு ராஜீவோட பிரச்சினை வந்தது படக்குனு ஆயுத பேர ஊழலை தூசு தட்டினாரு . போர்ட் ஃபோலியோவ மாத்தினாங்க. ஒடனே பிக் ஷாட்ஸோட வரி ஏய்ப்பை கையில எடுத்தாரு.

பிரதமாரன பிறவு பா.ஜ.கவோட பிரச்சினை வந்தது. படக்குனு மண்டல் கமிஷன் ரிப்போர்ட்டை கையில எடுத்தாரு .இதெல்லாம் ஓல்ட் . கொஞ்சம் லேட்டஸ்டா வருவம்.

எங்க பக்கத்துல உங்களை மாதிரியே கிரண் குமார் ரெட்டி எதிர்பாரா விதமா சி.எம் ஆனாரு . மானில பிரிவினை பிரச்சினை பத்தி எரியுது இன்னைக்கு தினகரன் உங்களை தெறிக்க விடறாப்ல அவரை ஜகன் ஒரு பக்கம் தெறிக்க விட்டுக்கிட்டிருக்காரு .அந்த சைக்கிள் கேப்ல என்னெல்லாம் திட்டங்களை கொண்டு வந்துட்டாரு தெரியுமா?

இன்னைக்கு கிரண் குமார் ரெட்டி ஃபீல்டுலயே இல்லை .ஆனால் சனம் அவரை இன்னைக்கும் வாழ்த்திக்கிட்டே இருக்காங்க. உம். அவர் வரதுக்கு மிந்தி சிறு தொழில் கடனுக்கு 30% மானியம் இருந்தது. அதை அதிரடியா 50% க்கு உசத்தினாரு .

என்னதான் துட்டுக்கு ஓட்டுங்கற நிலை இருந்தாலும் – எல்லா ஓட்டையும் துட்டு கொடுத்து வாங்கிரமுடியுங்கற நிலை இன்னம் வரல. இன்னமும் துட்டை தாண்டி பல மேட்டர் /பல ஃபேக்டர் இருந்துக்கிட்டு தான் இருக்கு .

மத்திய அரசும் -பா.ஜகவும் – மோடியும் உங்களை காப்பாத்திருவாங்கன்னு நினைக்கிறிங்க. மோடி சிம்பன்சியாவே இருக்கட்டும் – நீங்க அதன் குட்டியா கூட இருங்க. ஆனால் சிம்பன்சி ராட்சச நீர் தொட்டியில இருக்கு. தண்ணி வேகமா குதிச்சிக்கிட்டிருக்கு.

ஒரு ஸ்டேஜ் வரை தூக்கி கூட பிடிக்கலாம். ஆனால் நீர்மட்டம் மூக்கை தொட்டாச்சின்னா உங்களை கீழே போட்டு உங்க மேல ஏறி நின்னுக்கும் அந்த சிம்பன்ஸி . சர்வைவல் இன்ஸ்டிங்ட் பாஸ் !

என்னமோ அண்ணாவுக்கு பிறவு நான் தான் நிறைய புஸ்தவம் படிக்கிறேன். ஜெ காலத்துல கூட கோப்புகள் தேங்கித்தான் கிடந்தது நான் உடனுக்குடனே பைசல் பண்றேன்னு பில்டப் பண்றிங்க.

தமிழகத்தோட நிதி நிலையை வச்சு ச்சொம்மா பூசி மெழுகலாமே தவிர டிங்கரிங் கூட பண்ண முடியாதுன்னு உங்களுக்கே தெரியும்.
ஜெ ‘காலத்துலயே டாஸ்மாக் வருமானத்தை வச்சு தான் பாய்லா காட்டிக்கிட்டிருந்திங்க. இப்ப நிலைமை படு மோசமா போயிட்டிருக்கு.

மத்திய அரசோட /பாஜகவோட /மோடியோட கண்ட்ரோல்ல நீங்க இருந்துக்கிட்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாது. இவிக கட்டுப்பாட்ல இருந்து படக்குனு பெய்ல் அவுட் ஆகி -அதே நேரம் மக்கள் /அரசியல் விமர்சகர்கள் மத்தியிலயும் கெத்தாகனும்னா சிம்பிள் ட்ரிக் இருக்கு . நான் ஆரம்பத்துல சொன்ன 16 வருச கதையும் இதுல அடக்கம்

கையில மாவு இருந்தாதான் ரொட்டி சுடமுடியும்/பரோட்டா சுடமுடியும்/சமோசா சுடமுடியும் மாவு இல்லாம ஒரு ம..னாவும் செய்யமுடியாது. அதே மாதிரி கஜானா கலகலன்னு இருந்தா தான் “எதையாவது”செய்ய முடியும்.

ஜெ ‘வா இருந்தா ஜெயா டிவில வந்து “கசப்பு மருந்து ” அது இதுன்னு பேசி பஸ் கட்டணம் முதலாக எல்லாத்தையும் உசத்தி வருமானம் பார்க்க முடியும். நீங்க அந்தளவுக்கு ஒர்த்தில்ல. வேட்டிய உருவிருவாங்க.

சனங்க மேல பாரம் சுமத்தாம -அரசு நிர்வாகத்தை எளிமை படுத்தி அரசு வருவாயை கூட்டிக்க நான் உருவாக்கின திட்டம் தான் மானில கனவுகள். ஆக்சுவலா இது இந்திய நதிகள் இணைப்பு திட்டத்துக்கான நிதி திரட்டும் மார்கம் .

ஆனால் நீங்களும் -தமிழக அரசும் கேடு கெட்ட நிலையில இருக்கிறதால – இதன் காரணமா தமிழக மக்கள் படாத பாடு பட்டுக்கிட்டிருக்கிறதால என் திட்டங்களால் ஈட்டப்படும் உபரி வருவாய்ல ஒரு 50% தமிழக நதிகளை இணைக்க பயன் படுத்திக்கறதா உறுதி கொடுத்தா போதும் என் மானில கனவுகளை அமல் படுத்த அனுமதி தரேன்.

தமிழகம் -அரசு நிதி நிலை இன்னைக்கிருக்கிற கேடு கெட்ட நிலைக்கு என் மானில கனவுகள் நிச்சயமா ஒரு சலைன் பாட்டிலாவாச்சும் ஒர்க் அவுட் ஆகும்.

இதை எப்பல்லாம் நான் ஆன்லைன் செல் மூலமா ஜெ’வுக்கு அனுப்பினேனோ அப்பல்லாம் அது டாஸ்மாக் எம்.டிக்கு தான் ஃபார்வார்ட் ஆயிட்டிருந்தது. அவர் தான் பதில் கொடுத்துக்கிட்டிருந்தாரு.

பன்னீர் ரெஜிம்லயாவட்டும் -உங்க ரெஜிம்லயாவட்டும் ரிஜெக்ட் ஆயிரும். எல்லாத்துக்கும் ஸ்க்ரீன் ஷாட் ஆதாரம் வச்சிருக்கன் ஜெ’வுக்கு கார்டன் முகவரி /தலைமை கழக முகவரி /தலைமை செயலக முகவரிக்கெல்லாம் அனுப்பியாச்சு .ஒரு கட்டத்துல 234 எம்.எல்.ஏவுக்கும் கொடுத்து விவாதிக்க சொல்லி 234 பிரதில்லாம் அனுப்பியிருக்கன்.

பிறகு பரப்பண அக்கிரஹாரா செயிலுக்கு அனுப்பியிருக்கன். ஏன் அப்போலோ ஆஸ்பத்திரிக்கு கூட அனுப்பி பார்த்துட்டன். மெரீனாவுக்கு அனுப்ப என் பகுத்தறிவு இடம் கொடுக்கல.

உங்க விஷயத்தை பார்த்தா கடந்த மார்ச் மாசம் 200 பிரதி அனுப்பினேன். தலைமை செயலாளருக்கு ஹார்ட் காப்பி அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் எல்லாமே ராக் இன் தி வெல் தான். வாழ்க.

கொட்டுவாய்ல நீங்க இதை அமல் படுத்தறேன்னு ஜி.ஓ போட்டா உடனே ஒரு பக்கி கோர்ட்டுக்கு போயி ஸ்டே வாங்கிரும்.ஆகவே என் திட்டங்களை அடிப்படையா வச்சு டீட்டெய்ல்ட் ப்ரப்போசல்ஸ் ரெடி பண்ணி நேர சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்சுக்கு கொண்டு போயிருங்க.

தமிழக நிதி நிலை ரெம்ப மோசமா இருக்கிறதால போர்க்கால அடிப்படையில இதை எல்லாம் அமல்படுத்தியே ஆகனும். இல்லின்னா மானிலம் திவாலாயிரும்னு கதறுங்க. சுப்ரீம் கோர்ட் க்ளியர் பண்ற விஷயங்களையாவது உடனுக்குடனே அமல் படுத்த நடவடிக்கை எடுங்க.

யு வில் பீ அவுட் ஆஃப் டேஞ்சர். அதை விட்டுட்டு சின்ன புள்ளத்தனமா பாம்லெட் கொடுத்ததுக்கெல்லாம் தினகரனை கைது பண்ணிக்கிட்டிருந்தா மத்திய அரசோட /பாஜகவோட /மோடியோட காப்பை மீறி அவர் வைக்கிற ஆப்பு ஆசனத்துக்குள்ள போய் வாய் வரை வந்துரும். பிறவு உங்க விருப்பம்.

பி.கு:
மானில கனவுகள் மட்டும் இல்லாம இதே செனேரியோல இன்னம் நிறைய திட்டங்கள்ளாம் இருக்கு . கேட்டா தரேன். இந்த பதிவின் வீடியோ வடிவம் இங்கே

2 Replies to “நாட்களை எண்ணி வரும் எடப்பாடிக்கு ஒரு பம்பர் ஆஃபர்”

vignesh

03/10/2017 at 5:41 pm

31.07.1992.6.30pm
Thanjauvr.lakandhula.sani.kodumayana. vallka.valren.valliy sollunga

Reply

  S Murugesan

  03/10/2017 at 8:58 pm

  ஐயா !
  இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். ரிப்ளை கவர் வைக்க தேவையில்லை. பதில் தர வேண்டிய சரியான மெயில் ஐடி+பிறப்பு விவரம்+ஒரு கேள்வி எழுதினால் போதும்.
  கடிதம் எழுத வேண்டிய முகவரி :
  சித்தூர் .முருகேசன்,
  19-305, ரெட் கிராஸ் எக்ஸ்டென்ஷன்,
  மிட்டூர்,சித்தூர் ஆ.பி
  517001

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *