தாம்பத்யம் சிறக்க


அண்ணே வணக்கம்ணே !

கேள்வியும் நானே பதிலும் நானேன்னு தலைப்பை வச்சா சீந்தமாட்டிங்கன்னு தெரியும். அதான் இந்த தலைப்பு .என்னாச்சும் ஆரும் கேள்வி கேட்கவே இல்லை? ஃபெஸ்டிவல் ஃபீவர் ?

தாம்பத்யம் சிறக்க?

ஜோதிட ரீதியாக சொன்னால் ஜாதகத்தில் குரு ,சனி,சுக் பலம் இருக்க வேண்டும். லக்னம்,இரண்டு,நான்கு ,ஐந்து ,ஏழு,பனிரெண்டாம் பாவங்கள் பங்கப்படாதிருக்க வேண்டும்.

முக்கியமாக தம்பதிகளுக்கு தோஷங்கள் இருக்கக்கூடாது. (செவ்/சர்ப்ப)குரு பலம் என்பது பைசா /இதயம் ; சனி பலம் இருந்தால் தான் ஒரு அடிமை சிக்குவாள் . சுக் பலம் இருந்தா தான் மேட்டர்.கோசாரத்துலயும் சனி ,குரு,சுக் பலம் இருந்தா அந்த கால கட்டம் செம.

பெண்களை பொருத்தவரை கணவருக்கு குரு/சனி பலம் இல்லாமல் சுக் பலம் மட்டும் இருந்தால் நலம்.சம உரிமையை (?) மனமுவந்து தரலாம் கணவனுக்கு. ஆனால் ஓவர் டோசாயிட்டா புருசன் மாரை (சொந்த) பிடிச்சுக்கிட்டு தவிக்க 108 க்கு ஃபோன் போட வேண்டி வந்துரும். பாவங்களை பொருத்தவரை எட்டாம் பாவம் ,ஒன்பதாம் பாவமும் பெட்டரா இருக்கோனம்.

கோசாரத்துலயும் கணவருக்கு சனி,குரு பலம் இல்லாம சுக் பலம் மட்டும் இருந்தா சூப்பர் ஷோ ..

மனவியல் ரீதியா சொன்னா ஒருத்தர் சாடிஸ்ட் /இன்னொருத்தர் மசாக்கிஸ்ட்னு இருந்தா சூப்பர் ஜோடி.ஆனால் தம்பதிகள் தங்களில் யார் சாடிஸ்ட் /யார் மசாக்கிஸ்ட் என்பதை புரிந்து நடந்து கொள்ளவேண்டும்.

பகலில் புரிந்து நடந்தால் இரவில் ரோல் மாறும்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *