கேள்வியும் நானே பதிலும் நானே :2

அண்ணே வணக்கம்ணே !

நீங்க ஆரும் கேள்வி கேட்காததால நானே கேள்வி கேட்டு நானே பதில் தந்துக்கிட்டிருக்கன். ஆருனா பொறுப்பா கேள்வி கேட்டா பதில் சொல்ல ட்ரை பண்றேன். (சொந்த ஜாதக கேள்விகள் மட்டும் வேண்டாமே)

தல ! நீங்க எந்த காரியத்தையும் ஒழுங்கா -முறையா முடிக்க மாட்டிங்களா?

ஆங் ..அதெப்படி? நம்முது கடக லக்னமாச்சா ? அதிபதி சந்திரன் ரெண்டே கால் நாளைக்கொருக்கா ராசி மாறிக்கிட்டே போவாரு . இதனால எதையும் ஒழுங்கா ஐ மீன் தொடர்ச்சியா செய்ய முடியாது .

ஏதோ கொஞ்சம் மைன்ட் ட்யூனிங் தெரிஞ்சதால கவுத்து மேல நடந்தாப்ல கதை பண்ணலாம் தான் .ஆனால் இதுல நம்முது ரா.கி பரமஹம்சர் ஸ்டைல்.
அவரு பூசாரியா இருந்தப்ப தொடர்ச்சியா பல நாள் பூஜையே பண்ண மாட்டாராம்.ஒரே கம்ப்ளெயிண்ட் .”ஏன்யா..இப்படின்னு கேட்டா என் மனசுல பக்தி இல்லாம எப்படி பூஜை பண்ண முடியும்னு கேட்பாராம்.

முறையா செய்ய மாட்டிங்களானு ஒரு கேள்வி. நமக்கு 10 ல ராகு. எதையும் முறையில்லாத முறையில செய்தா தான் நமக்கு ஒர்க் அவுட் ஆகும். ஜாதக ராசி அப்படி.

இதனால லோகாயதமா லாபமே இல்லியான்னா இருக்கு பாஸ் !

சந்திரன் நின்ற ராசி தானே ஜென்ம ராசி ? சந்திரன் இன்னைக்கு மகரத்துல இருக்காருன்னு வைங்க. ரெண்டே கால் நாளைக்கு கருமமே கண்ணாயினார் கணக்கா இருப்பம். அடுத்து கும்பத்துக்கு வராருன்னு வைங்க மாங்கு மாங்குனு உழைக்கிறமே இதனால நமக்கு என்ன லாபம்னு ரோசிப்பேன். இப்படி லோகத்துல உள்ள 12 ராசிக்காரவிக கேரக்டரும் நமக்குள்ள அடக்கம்.

ஒரு சோசியரா இது லாபம் தானே?

பத்துல ராகுங்கறியளா? ஜட்டி போட்டு அது மேல பேண்ட் போட்டா மேன். பேண்ட் போட்டு அது மேல ஜட்டி போட்டா சூப்பர் மேன். லூஸ்ல விடுங்க.
______

பாஸ் ! நீங்க எழுதறத போலவே உங்க வாழ்க்கையை அமைச்சு -நடாத்திக்கிட்டிருக்கிங்களா?

ஹ ஹா.. நம்முது கடக லக்னமுங்கோ ..அர்த்த ஜல ராசி . கடற்கரை மாதிரி எட்ட உள்ளவிக வந்து காத்து வாங்குவாய்ங்க. கவிதை பேசுவாங்க. காதல் பண்ணுவாங்க. கிட்டத்துல உள்ளவன்? கக்கா போயிட்டு போவான்.
நமக்கு சப்ஜெக்ட் தெரியுங்கறதால ஒரு கேட்டை போட்டு உள்ள உட்கார்ந்திருக்கம். அதையும் மீறி வாட்ச் மேனே கலீஜு பண்ணிர்ரதும் உண்டு.
மனிதன் நினைப்பதுண்டு.. கதை தான். ஆனால் என்ன மத்தவிக எல்லாம் காம்ப்ரமைஸ் ஆயிடறாய்ங்க. நாம தொடர்ந்து முயற்சிக்கிறம். அவ்ளதான் வித்யாசம்.
__________

முருகேசன் சார் !
நீங்க சொல்லிட்டிருக்காப்ல ராகு தசை ஒர்க் அவுட் ஆகி சினிமாவுக்கு போயிட்டிங்கன்னா எங்களை எல்லாம் மறந்துருவிக தானே? முக்கியமா உங்க வல்லரசு கனவுகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு மெமரி ஆயிரும் அப்படித்தானே?

மறதி மனுசனுக்கு சகஜம். ஆனால் நம்ம மறதில்லாம் அதிக பட்சம் 12 x 2 1/4 நாள் தான். லக்னாதிபதியான சந்திரன் மறுபடி மொதல்லருந்து பயணத்தை துவக்கினா பழசெல்லாம் ஞா வந்துரும்.
சிஸ்டம் ரெஸ்டோர் ஆயிரும். டோன்ட் ஒர்ரி. அன்னைக்கிருந்த சினிமா கனவுகள் வேற. இன்னைக்கு நம்ம சினிமா கனவின் நோக்கம் ? ஜஸ்ட் பைசா ..கொஞ்சம் போல பிராபல்யம்.
பைசா தேத்தி வீட்டுக்கு பதிலா ஒரு ஏசி பஸ் /அதையே மொபைல் புக் ஸ்டோரா /மொபைல் மேடையா பயன் படுத்தி நேஷ்னல் டூர் ஆரம்பிச்சுருவம்.
முக்கியமா சோஷியல் மீடியாவ விடறதா இல்லை. கு.பட்சம் கோஸ்ட் ரைட்டர் போட்டாவது ஃபீல்டுல இருப்பம்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *