கேள்வியும் நானே பதிலும் நானே :1

அண்ணே வணக்கம்ணே !

பதிவுகள் போட்டு பல காலமாச்சு. எப்படியும் இன்னைக்கு ஆரம்பிச்சே ஆகனும்னு ஆரம்பிச்சுட்டேன். அவசரத்துக்கு நானே கேள்வி கேட்டு நானே பதிலும் கொடுத்துட்டன்.

உங்கள்ள யாராச்சும் உருப்படியான கேள்விகள் கேட்டு / பதில் ஒரு பதிவாவே நீளும்ங்கற அளவுக்கு கேள்வி இருந்து தொலைச்சா இதை தொடரலாம்னு நினைக்கிறேன்.

பதிவுக்கு போயிரலாமா?

இந்த தலைப்புல படம் கூட வந்திருக்குனு நினைக்கேன். கலைஞர் முரசொலியில அவரே கேள்வி கேட்டுக்கிட்டு அவரே பதில் சொல்லிகிட்டு கிடப்பாரு. மத்த மேட்டர்ல கலைஞரை எல்லாம் டச்சு கூட பண்ண முடியாது குறைந்த பட்சம் இதுலயாவது டச்சு பண்ணுவமேனு தான் இந்த பதிவு.

1.ஏன் சமீபகாலமா வலைதளத்துல புதிய பதிவுகள் வரதில்லை?

நம்முது கடகலக்னம். புதன் விரயாதிபதி. லக்னத்துலயே உட்கார்ந்திருக்காரு .வலைப்பதிவு /முக நூல் பதிவு/ஜோதிடம்/வீடியோ ப்ளாகிங்/ நூல் வெளியீடு/கதை /கவிதை /திரைக்கதை எல்லாத்துக்கும் புதன் தான் காரகன் .எதிர்முனை தான் மனிதனை அதிகமா கவருமாம். அதுவும் எதெல்லாம் ஆப்போ அதுதான் ரெம்பவே கவருமாம்.

மேற்படி சப்ஜெக்ட்ஸ்ல ஏதாச்சும் ஒன்னை செய்தாலே தோல் /கீல்/அண்டம்லாம் பல்பு வாங்கிரனும். இதுல நாம எல்லாத்தையும் கலந்து அடிக்கிறம்.
என்னதான் இலவச ஜோதிட ஆலோசனை /நாம வெளியிட்ட நூல்களுக்கு இலவச தபால் செலவு / ஊரு சனத்தோட தொடர்பே இல்லாம இருக்கிறது/வெப்சைட் பதிவுகளுக்கு ப்ரேக் ன்னு பல பரிகாரங்களை ஃபாலோ பண்ணிக்கிட்டிருந்தாலும் ஓவர் டைம் /ஓவர் லோட் காரணமா புதன் கவுந்து படுத்துக்கிறாரு .

விஜயதசமிக்குன்னு அறிவிச்ச நூல் வெளியீட்டை தள்ளி போட வேண்டியதாயிருச்சு. முக நூல் வழியாக இந்த தகவலை அட்வான்ஸாவே கொடுத்துட்டம். ஜஸ்ட் இந்த பதிவு மூலமா மொத மொதலா தெரிஞ்சுக்கறவிகளுக்கு கெதக்குனு இருக்கும். டோன்ட் ஒர்ரி .லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும்.
இதுவரை சொன்ன காரணம்லாம் நெஜமேன்னாலும் அடிப்படையில ஒரு காரணம் இருக்கு. அது என்னன்னா ஜோதிடம்ங்கறது ஆன்மீக உலகோட தலைவாசல் தான். நம்ம சனம் ஜோதிடத்துலயே சுத்தி சுத்தி வர்ராய்ங்க. அதுலயும் சப்ஜெக்ட் தெரிஞ்சுக்கனுங்கறதை விட சொந்த ஜாதகத்தை /சொந்த பலனை தெரிஞ்சுக்கறதுல தான் அவியளுக்கு ஆர்வமே.

நமக்கு சுய நலம்னாலே செம கடுப்பு . நாம ஒன்னும் பிறக்கறச்சயே பொது நலத்தோட பிறக்கல .ஆனாலும் மனித வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மை /அந்த அர்த்தமற்ற தன்மையில் இருக்கிற உள்ளார்ந்த அர்த்தம்லாம் புரிஞ்ச பிறவு சுய நலத்தை சுருக்கிக்கிட்டே வர்ரம்.

வெளி உலகத்து சுய நலம் -நமக்குள்ள மிஞ்சி இருக்கிற சுய நலத்தை ஞா படுத்திருதா என்ன தெரியல .செம கடுப்பாயிருது .நான் ஜோதிட பதிவுகள் போடும் போதெல்லாம் என்ன நினைப்பேன்னா சுத்தியடிக்கிற ஜோதிட விதிகளை எல்லாம் படிச்சுட்டு கொய்யால ! என்னடா இது டெலிஃபோன் எக்சேஞ்ச் கணக்கா கொச கொசன்னு இருக்கு ..இந்த கருமத்தை எல்லாம் பை பாஸ் பண்ணிட்டு போக எதாச்சும் வழியிருக்கா கேட்பாய்ங்கன்னு தான்.

ஆனால் இதுவரை ஆரும் அப்படி கேட்கல. கட்டண ஆலோசனைன்னாலும் பரவால்ல .பைசா வருது . அந்த பைசாவ சம்பாதிக்க அவிய எதை எல்லாம் இழந்தாய்ங்களோ ? அவியளுக்கு “எதையாச்சும்” கொடுத்து ஈடு கட்ட வேண்டிய கடமை இருக்கு.

ஆனால் ப்ளாக் போஸ்ட் அப்படி இல்லையே.. அடுத்தவிக போதைக்கு நாம ஏன் ஊறுகாய் ஆகனும்ங்கற ஃபீல் தான் என்னை புதிய பதிவுகள் போடாம பண்ற தலையாய காரணம்.

2.உங்க பதிவுகள் /முக நூல் நிலை செய்திகள்ள எல்லாம் திமுகவுக்கு ஓவரா சொம்படிக்கிறிங்களே.ஸ்டாலின் சிஎம் ஆயிட்டா உங்க திட்டங்களை எல்லாம் அமல் படுத்திருவாருன்னு நம்பறிங்களா?

திட்டங்கள் / யோசனைகளுக்கு காரகன் குரு . இவர் நம்ம ஜாதகத்துல உச்சம். என்ன 6-9 பாவங்களுக்கு அதிபதியா இருக்காரு. இதனால நம்ம பாதி ஆவிசு காலம் வரை இவற்றால் வீண் விவாதம் /விரோதங்கள் தான் வரனும் (வந்துக்கிட்டிருக்கு) மறுபாதியில செமயா ஒர்க் அவுட் ஆகனும் போல. இப்பமே நமக்கு 51 வயசு .இன்னம் மொத பாதி முடியலின்னா 100+ வருசம் இந்த உலகத்துல சிங்கியடிக்கனும்னு தலை எழுத்திருக்கோ என்னமோ?
ஒரு வேளை நான் சொன்ன முதல் பாதி முடிஞ்சுபோச்சுன்னா ஸ்டாலின் என்ன.. நிர்மலா சீதாராமனே தமிழக முதல்வர் ஆனாலும் நம்ம திட்டங்கள் அமலுக்கு வந்தே தீரும்.

1990 முதல் 2009 வரை எங்க ஊரு சனம் தான் நம்ம கிட்ட ஜோதிட ஆலோசனை பெற்று பைசா தருவாய்ங்க. சனம் கொடுக்கிறதென்னமோ ஆலோசனை கட்டணம்ங்கற ஃபீல்ல தான். ஆனால் நாம அப்படி நினைக்கிறதில்லை. ஒரு கடனாத்தான் நினைச்சம். செஞ்சோற்று கடன் தீர்த்த கர்ணன் மாதிரி ஆந்திர அரசோட முட்டி மோதிக்கிட்டிருந்தம்.

2009 க்கு பிறவு நம்ம க்ளையண்ட்ஸ் எல்லாமே மோஸ்ட்லி தமிழர்கள் தான். ஆகவே தமிழக அரசோட மோதிக்கிட்டிருக்கம்.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவரா இருக்கிறதால அடக்கி வாசிக்கிறம். முதல்வரானா? பிறவு இருக்கு தீபாவளி தெறிக்க விடுவம்.
நம்ம திமுக ஆதரவு நிலைங்கறது “ஆபத்கால தர்மம்” அவ்ளதான். மக்கள் நலன் கருதி தான் இந்த முடிவு. திமுக மக்கள் நலனுக்கு முரணா போனா தூள் பண்ணுவம். விட்டுருவமா என்ன?

3. நீங்க ஒரு ஜோதிடரா தான் இணையத்துல எல்லாருக்கும் அறிமுகம். ஜோதிடம் தான் உங்களுக்கு சோறு போடுது . நீங்க ஏன் அதர் ஆக்டிவிட்டீஸ்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு ஒழுங்கா பொளப்பை பார்க்க கூடாது?

நெல்ல கேள்வி. இதுல ஒரு தொழில் ரகசியம் என்னன்னா ஜோதிடம்ங்கறது ஒரு பெரிய கடல். என்னதான் 1990 ல இருந்து இன்னைக்கு வரைக்கும் பல்லாயிரம் ஜாதகங்களை பார்த்து பலன் சொன்ன அனுபவம் இருந்தாலும் -இன்னைக்கும் ஒவ்வொரு ஜாதகத்துல இருந்து புதுசா ஒரு மேட்டரை தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.

மத்த ஃபுல் டைம் ஜோதிடர்களோட ஒப்பிட்டா நம்ம சரக்கு ஜூஜுபி. எத்தனையோ பண்டித சிரோன்மணிகள் சிங்கிள் டீக்கு லாட்டரி அடித்து கொண்டிருக்க நமக்கு தெரிஞ்ச காலணா சப்ஜெக்டுக்கு இத்தனை க்ளையன்ட்ஸ் வரவும் – நம்ம கணிப்புகளில் கு.பட்சம் 60% முதல் அதிக பட்சம் 90 % வரை திருப்தி அடையவும் காரணம் சுய நலம் சுருக்கி -பொது நலம் கருதி மெனக்கெடும் என் சைல்டிஷ் பிஹேவியராலத்தான்னு நான் நம்பறேன். (வெரிஃபைட்)

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *