திமுக இணைய தள அணி : சில யோசனைகள் 2

இணைய தள அணியின் தலையாய பணி பிரச்சாரம். இதில் 3 வகை .ஒன்று திமுகவின் சாதனைகளை பொதுவெளியில் பரப்புவது. இரண்டு எதிர் பிரச்சாரங்களை முறியடிப்பது. மூன்று எதிரிகளின் தோல்விகளை வெளிச்சம் போடுவது .

இந்த மூன்று அம்சங்களுக்கும் தேவை வெறுமனே பொத்தாம் பொதுவான மொன்னையான தகவல்கள் அடங்கிய உதிரியான பிடிஎஃப் தரவுகள் மட்டுமல்ல.
ஆரிய படை எடுப்பில் இருந்து, வேதங்கள் -மனுதர்மம்-வர்ணாசிரமம் இத்யாதியில் ஆரம்பித்து சுதந்திர போராட்டம், சுதந்திர இந்தியாவின் வரலாறுகளில் ஆரிய ஆதிக்கம் -வடவர் மேற்கொண்ட திட்டமிட்ட இன விரோத செயல்கள் முதற்கொண்டு -திராவிட எழுச்சி -திராவிட இயக்கத்தை சீர்குலைக்க நடந்த சதிகள் வரை கு.பட்சம் மேன்டேஜ் ஷாட்டுகளாய் பதிவுகள் இருக்க வேண்டும்.

திராவிட இயக்கத்தை சீர்குலைக்க நடந்த சதிகளில் தலையாயதும் / திமுகவினர் ஸ்கிப் பண்ணி செல்வதுமான எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய பிளவு -அவர் ஆட்சிகாலத்து கோமாளித்தனங்கள் , திராவிட கருத்தியிலின் அடி நாதமே ஆழ குழி தோண்டி புதைக்கப்பட்டது உள்ளிட்ட பதிவுகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

திராவிட இயக்கம் எனில் அது திக – திமுக மட்டுமே என்பது நிறுவப்பட வேண்டும். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் கலைஞர் காட்டிய பெருந்தன்மை – மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்தது – ஜெ’வின் எழுச்சி -அதற்கு காரணமான பொய் பிரச்சாரங்கள் இப்போதேனும் முறியடிக்கப்பட வேண்டும். திமுக மீது நடத்தப்பட்ட ஆட்சிகவிழ்ப்பு / ஆட்சி கலைப்பு தாக்குதல்கள் வெளிச்சம் போடப்பட்டாகவேண்டும்.

திமுக வெற்றியில் ரஜினியின் வாய்ஸ் பங்கு என்ன? பிறகு கலைஞர் ஆட்சிய “மைனாரிட்டி” ஆட்சி பற்றிய உண்மைகள் பறை சாற்றப்பட வேண்டும்.
திமுக மீதும் கலைஞர் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எத்தனை மலிவானதாய் இருப்பினும் / ஆதாரமற்றவையாக இருப்பினும் அவற்றிற்கும் உரிய பதில் சொல்லப்பட்டாகவேண்டும் (உ.ம் தன்யா ராஜேந்திரன் வைஃப் 123 )

1 வாஜ்பாய் தலைமையிலான .பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தமை
2.ஈழ இன அழித்தொழிப்பு விவகாரம்
3.குடும்ப ஆட்சி என்ற கறை
4.ஊழல் குற்றச்சாட்டுகள்
இப்படி ஒவ்வொன்றும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு தீவிரமாக எதிர்கொள்ளப்படவேண்டும்.

மேற்படி தரவுகள் தேதி வாரியாய் / நாளிதழ்களின் ஸ்கேன் ஆதாரங்களுடன் இருப்பது அவசியம். விடுதலை/முரசொலி உள்ளிட்ட ஏடுகளின் ஸ்கான் களை கடைசி பட்சமாக உபயோகிக்க வேண்டும். எளிய சின்ன சின்ன வாக்கிய அமைப்புகள் எளிய சொல்லாடலுடன் சின்ன பத்திகளாய் இருக்க வேண்டும். முக்கியமாக இளைய தலைமுறை /அதிலும் ஆங்கில வழி கல்வி பயின்றவர்களுக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும்.

1.திமுகவின் சாதனைகளை பொதுவெளியில் பரப்புவது:
திமுகவின் சாதனைகள் என்றதும் பெயர் மாற்றம் /சிலை வைத்தல் /மணி மண்டபம் எழுப்புதல் பிரதானமாக சொல்லப்படுகின்றன. இவற்றை கடைசிக்கு நகர்த்தியாக வேண்டும்.

சில திட்டங்கள் கள அளவில் கடும் தோல்வியை கண்டுள்ளன. உதாரணமாக ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்குதல் . இது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது .

திமுக சந்தித்த சோதனைகளுக்கு அசலான காரணங்கள் வேறாய் இருக்க (உ.ம் மானில உரிமைகளுக்கு குரல் கொடுத்தல் /எமர்ஜென்சி எதிர்ப்பு) -ஊழலை பிரதானமாக கட்டமைப்பதில் எதிரிகள் ஓரளவு வெற்றி கண்டுள்ளார்கள் . அசலான காரணங்களை பரப்புவது முக்கியம்.

2.எதிர் பிரச்சாரங்களை முறியடிப்பது:
உ.ம் ஈழ இனப்படுகொலை

3.எதிரிகளின் தோல்விகளை வெளிச்சம் போடுவது :
உ.ம் அதிமுக ஆட்சி அமைந்து இத்தனை காலம் ஆகியும் அதன் தேர்தல் அறிக்கை கண்டு கொள்ளவே படவில்லை .

எப்படி செயல்படுத்தலாம்:

இணைய தள அணி தலைமை கழகத்தில் இருந்து கட்டமைப்பதை விட பகுதி/வட்டம் அளவில் கட்டமைக்கப்படுவது நலம். வட்ட /பகுதி பொறுப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதே இணைய தள அணிக்கு நல்லது . இந்த பணிக்கு கிராஸ் ரூட் லெவலில் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு சின்னதாய் எழுத்து தேர்வு கூட வைக்கலாம். (ஆன்லைன் மூலமாகவே)

நான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன தரவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும். எழுத்து தேர்வில் தேறியவர்களுக்கு அந்தந்த மாவட்ட மையங்களில் கழக முன்னோடிகளை கொண்டு நேர்முக பயிற்சி மற்றும் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யலாம்.

மக்கள் பணி:
இணைய தள அணியின் முக்கிய செயல்பாடு ஆன் லைன் பிரச்சாரமாகவே இருந்தாலும் இவர்கள் மக்கள் பிரச்சினைகளில் ஈடுபாடு காட்டுவது முக்கியம். தனிப்பட்ட பிரச்சினைகளில் இல்லாவிட்டாலும் பொது பிரச்சினைகளில் மக்கள் குரலை இணைய தள அணி பிரதிபலிக்க வேண்டும்.
வெறுமனே பதிவுகளோடு நின்று விடாமல் ஆர்.டி.ஐ படி தகவல்கள் சேகரிப்பது / மேலதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்புவது /மக்கள் போராட்டங்களுக்கு உரிய பிரச்சாரம் செய்வது முக்கியம்.

ஒவ்வொரு வட்ட ஐடி பிரிவிலும் இதழியல் வாசம் / கேமரா பயன்பாடு குறித்த ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் இருக்கும்படி செய்து களத்தில் இருந்து பிரச்சினைகளை ஃபோட்டோ/வீடியோக்கள் மூலம் இணையத்தில் பரப்பலாம்.

வாக்காளர் பட்டியல்:
தலைமை கழகம் ஒரு சென்ட் ரலைஸ்ட் டேட்டா பேஸை உருவாக்கி தர -அதன் மூலம் போலி வாக்காளர்கள்/ இறந்தவர்கள் / ஊரில் இல்லாதவர்களின் பெயர்களை நீக்குதல் / புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல் இத்யாதியிலும் ஈடுபடலாம்.

பெண்கள் ,இளைஞர்கள் மேம்பாட்டுக்காக திமுக மேற்கொண்ட முயற்சிகளை / தற்போதைய அரசுகள் காட்டும் அலட்சியத்தை பெண்கள் /இளைஞர்கள் விரோத போக்கை பெரிய அளவில் வெளிச்சம் போடலாம்.

3 Replies to “திமுக இணைய தள அணி : சில யோசனைகள் 2”

raja

18/09/2017 at 2:00 pm

jodhida.padhiugala. podunga…

Reply

R.M. Paulraj

17/09/2017 at 8:12 pm

நான் எழுதி வரும் நூலில் விளக்க முனைந்துள்ள கருத்துக்கள் உங்கள் பதிவிலும் இடம் பெற்றுள்ளன. மகிழ்ச்சி. இந்த‌ கருத்துக்களுடன் நான் என் பாணியில் ஒரு நூலை எழுதி வருகிறேன். அது முடிவடையும் நிலையில் உள்ளது.

Reply

    S Murugesan

    17/09/2017 at 8:43 pm

    R.M. Paulraj
    wise men think alike . களம் ஒன்று -கனவு ஒன்று -உள்ளம் ஒன்று -உணர்வு ஒன்று .தீர்வுகள் எப்படி வேறுபடும்.

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.