அதிரடி ஜோதிட கேள்வி- பதில்கள்

அண்ணே வணக்கம்ணே !
எந்த கொள்ளி கண்ணு பட்டுதோ …(கவுளி சொல்லுது ) ஜூலை 20 ஆம் தேதி போட்ட போஸ்டோட கோவிந்தா .இடையில திருமதி பானுகுமார் எழுதிய நூல் விமர்சனம் ஒரு 4 பதிவா ஒப்பேத்திருச்சு. இல்லின்னா? அவ்வ்.

என்னண்ணே ..சரக்கு தீர்ந்து போச்சுன்னா அதுக்கு ஆரு மேலயோ பழி போட்டுர்ரதானு கேப்பிக. ஒரு இசை மேதை சொன்னாராம் என் வாழ் நாள் எல்லாம் ஸ்ருதி கூட்டறதுக்கே சரியா போச்சுன்னு. அப்படி எட்டு வருசமா நான் போட்டுக்கிட்டு வந்த பதிவெல்லாம் ச்சும்மா டீசர் மாதிரி தான். டச்சே பண்ணாத மேட்டர்லாம் மஸ்தா கீது நைனா.

நாம வெறுமனே சோசியக்காரனா இருந்தா தூள் பண்ணலாம்.ஆனால் சனம் சோசியத்துக்குன்னு கொடுக்கிற காசை எல்லாம் நாட்டை செங்குத்தா தூக்கி நிறுத்த கொடுத்த காசா தானே நினைக்கிறோம். இதனால முக நூல்ல நிறைய மெனக்கெடறம்.
மேலும் காசு கொடுத்தவிகளுக்கு வேலை செய்யனும்ல?

எனக்கொரு டவுட்டு என்னடான்னா இதுக்கு மிந்தி இருந்த வீடு தெற்கு பார்த்த வாசல் . செவ்வாய்க்குரிய திசை. நமக்கு ஜீவனாதிபதியே செவ் தான். வாஸ்து தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் சுறு சுறுன்னு இருக்கும் (சில சமயம் சுர்ருன்னு கோவம் கூட வரும்)
இப்ப வந்திருக்கிற வீடு கிழக்கு பார்த்த வாசல் .கொய்யால கூல் பண்ணிருச்சா? அல்லது வாயு மூலையில தப்பா இருக்கிற செப்டிக் டேங்க் ஆப்படிக்குதா? ஒன்னம் புரியல. இதுல ஈசான்யம் கூரை மூடியிருக்கு. வாயு மூலையில ஓப்பன். அவ்வ். வாணலிக்கு பயந்து அடுப்புல பாஞ்சுட்டமாஆஆ?

நிற்க நேத்திக்கு தான் நாட் நாட்ல ஒரு ப்ளாகர் கம் ரீடர் நமக்கு 12 கேள்விகளை அனுப்பி /அதை போஸ்டாவும் போட்டு டீல்ல விட்டுட்டது கண்ல பட்டுது.

முக நூல்ல முற்போக்கு ஜோதிட ஆர்வலர்கள்னு ஒரு க்ரூப்பை வேற ஆரம்பிச்சிருக்கமா. அதுல மேற்படி கேள்விகளை போட்டு பதில் கொடுத்துக்கிட்டே வந்தேன். ஒர்த்தான மேட்டருதான். துண்டு துக்கடாவா போயிரப்படாதே. தொகுத்து ஒருபதிவா போட்டா என்னன்னு தோனிச்சு. அதான் இந்த பதிவு .
கேள்விகளுக்கு போயிரலாமா?

1. ஒவ்வொரு கிரகங்களின் திசை ஆண்டுகள் (உடுமகாதிசை) எதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன? உதாரணமாக கேதுவிற்கு 7 வருடம் என பயன்படுத்துகிறோம், 7 வருடம் என்பது எதன் அடிப்படையில் வந்தது?

தலைமுறை தலைமுறைகளாய் தொடர்ந்த அவதானிப்பு இதற்கு அடிப்படையாக இருக்கலாம்.
உ.ம் சுக் =கில்மா / ஒருவன் 20 வருடங்கள் தொடர்ந்து தாம்பத்யத்தில் ஈடுபட்டால் அதன் இம்பாக்ட் அவன் லைஃப் மேல ஏறக்குறைய இருக்காதுதானே
உ.ம் சூரியன்= ஈகோ , ஒரு ஆயா நான்/ எனது அரசு /எனது தலைமையிலான அரசுன்னு சீன் போட்டுது ஆறு வருசத்துல மேட்டர் ஓவராயிரலயா?

2. ஜோதிடத்தில் லக்னமே பிரதானமானது, லக்னத்துடன் சந்திராலக்னத்தையும் சேர்த்து பார்க்க துல்லியமான பலம் கிடைக்கிறதென்பது அடிப்படை மற்றும் அனுபவம். ஆனால் மற்ற கிரகங்களுக்கில்லாத தனித்தன்மை (இரண்டாம்நிலை லக்னம்) சந்திரனுக்கு ஏற்பட காரணமென்ன?

மனித உடலில் 70% நீர் சத்தே. கர்பிணியின் பனிக்குட நீர் -கடல் நீர்-மனித உடலின் நீர் சத்து மூன்றுக்கும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன்.
கடல் நீரை பவுர்ணமி சந்திரன் பிரபாவிப்பது போல் /மனித உடலிலான /பனிக்குடத்திலான நீரையும் சந்திரன் பிரபாவிக்கிறது.
சந்திரன் மனோகாரகன். மனம் மனித உடலை மட்டுமல்ல /அவன் சிந்தனைகளையும் பாதிக்கவல்லது .”நான் பாப்பாத்தி” என்று திராவிட பூமியில் ஜெ’வை கொக்கரிக்க வைத்தது சந்திரன் தானே/

3. திரேக்காணம், சதுர்த்தாம்சம் போன்ற தசவர்க்கங்கள் மற்றும் இன்ன பிற வர்க்கங்களை கணித்து கொண்டு பலன் கூறுவது துல்லியம் தரும் என்பது ஜோதிடவியல், ஆனால் 30 நிமிட, 60 நிமிடங்களில் ஜோதிட பலாபலன் கூறி முடிக்கும் தற்பொழுதைய நிலவரத்தில் இந்த கட்டங்களை அமைக்க மற்றும் பலாபலன் தெரியாத ஜோதிடர்கள் தானே இனி உருவாகமுடியும்? ( நவாம்சம் கூட அமைக்க தெரியாத ஜோதிடர்களை நான் பார்த்திருக்கிறேன், இவர்களால் ஜோதிடத்திற்கு அவமானம் தானே).

ஜோதிடவியலின் “கெத்தே” அதை எவ்வளவு மேம்போக்காக அணுகினாலும் பலன் தருவதே. சக்கரங்கள் போட கணிணி சாஃப்ட்வேர்கள் இருக்கும் காலத்தில் லேசாக ஒரு புரட்டு புரட்டினாலே போதுமே. இதை கூட செய்யாதவர்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை

4.ஒரு நாட்டிற்கு ஜாதகம் பார்க்கும் முறை எப்பொழுது வந்தது? இந்தியாவிற்கு சுதந்திரமடைந்த தேதியை ஜாதகமா கணிப்பதை பார்த்திருக்கிறேன். சுதந்திரமடைவதற்கு முன் இந்தியா என்ற ஒரு நாடு இல்லையா? அதற்கு முன் இந்தியாவிற்கு ஜாதகம் பார்க்க எந்த முறை உபயோகப்படுத்தியிருப்பார்கள்?

மனிதர்களின் வாழ்வை ஒவ்வொரு கால கட்டத்தில் பல்வேறு விஷயங்கள் புரட்டிப்போடுகின்றன. அவை தாக்கிய கணம் முதல் அந்த வாழ்வு தலைகீழாக மாறுகிறது .

கான்ஷியஸ் -சப் கான்ஷியஸ் தாண்டி ஆழமான பதிவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த மனிதனின் வாழ்வை “அந்த”விஷயம் ஒன்றே வழி நடத்த ஆரம்பித்துவிடுகிறது.

ஒரு நாட்டுக்கு சுதந்திரம் என்பது புரட்டிப்போடும் விஷயம் தானே. இந்திய சுதந்திரத்துக்கு முன் ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு சீரிய ஆளுமை ஆட்சிக்கு வந்த கால கட்டத்தை வைத்து கணித்திருக்கலாம் .சகாப்தம் இத்யாதில்லாம் அந்த சாதி தானே.
5. சுக்கிரன் ஒரு நீர்க்கிரகம், குளுமையானது என்பது ஜோதிடம், ஆனால் சுக்கிரன் 460 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள ஒரு வெப்பக்கிரகம் என்பது விஞ்ஞானம். முரண்பாடுதானே!

நோ பாஸ் ! சந்திரன் ஜல கிரகம் . சந்திரன்ல வாட்டர் சோர்ஸ் இருக்கிறதா தானே விஞ்ஞானம் சொல்லியிருக்கு. சுக்கிரன் சுக்கில/ சுரோணிதங்களுக்கு காரகன். தெலுங்கில் சுக்கிலத்தை “சுக்ர கணாலு” என்பார்கள்.

6. மாந்தி(TITAN) சனியின் துணைக்கிரகம் எனில் சனிக்கு இருக்கும் 60 க்கு மேற்பட்ட துணைக்கிரகங்கள் என்ன ஆனது? இதுபோல குருவிற்கும் அதிக துணைக்கிரகங்கள் உள்ளதே, இதனையெல்லாம் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?

மோடிக்கு எத்தனையோ “ஜகுனிகள்” இருந்தாலும் அமித்ஷா என்ற ஜகுனியின் இம்பாக்ட் தானே நாட்டை பாதிக்கிறது.சந்திரபாபுவுக்கு எத்தனையோ ஆலோசகர்கள் இருந்தாலும் நம்ம மத்திய பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சீதாராமனின் காதல் கணவர் பரக்கால பிரபாகரின் ஆலோசனைகள் தானே எடுபடுது .

7. ராகு, கேதுக்கள் ஆரம்ப கால ஜோதிடங்களில் பயன்படுத்தவில்லை என முன்னோர்களின் நூல்களில் இருந்து தெரிகிறது. எனில், தற்பொழுது கூட ராகு கேதுக்கள் தவிர்த்தால் துல்லியமான் பலன் கிட்டுமா?

ராகு கேதுக்கள் ஜெனட்டிக் காசஸை காட்டும் கிரகங்கள் (மாதாமஹ /பிதாமஹ காரகர்கள்) ஒரு கால கட்டம் வரை மனித குலம் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றே வாழ்ந்தது.

பிறகுதானே சுயம் – ஈகோ எல்லாம். இவை இரண்டும் மனித மூளையை பொல்யூட் செய்துவிட புதுமை தாகம் பிறக்க / மனித முயற்சிகள் பஞ்ச பூதங்களை பொல்யூட் செய்துவிட பாம்புகளின் வாழ்விடத்தை தமது வாழ்விடமாக்கி கொள்ள / இரசாயண உரங்களாலும் /பூச்சி மருந்துகளாலும் நிலத்தை வளமாக்க /அது என்விரான்மென்டை விஷமயமாக்க ராகு கேதுக்களின் பிரபாவம் அதிகரித்து விட்டது.

ராகு கேது = பிற மதங்கள் /பிற மதங்களின் /மதஸ்தர்களின் படையெடுப்பு /ஆட்சிகள் இவற்றின் இன்ஃப்ளுயன்ஸ் அதிகரிக்க அதிகரிக்க ராகு கேதுக்களின் இம்பாக்டும் அதிகரித்து விட்டது.

எனவே ராகு கேதுவை தவிர்த்து ஜாதகங்களை ஆய்வு செய்தால் ஆக்யுரசி குறையும். பலன் தலைகீழா மாறும்.உ.ம் என் ஜாதகத்துல நான்கில் செவ் கேது . கேதுவை விட்டு பார்த்தால் தாய்க்கு ஒரு விபத்து /தீவிபத்து மாதிரி தானே நடக்கனும்.ஆனால் அவியளுக்கு வந்தது கேன்சர்.

4=வித்யாஸ்தானம் செவ் =புரட்சி . இங்கே செவ் மட்டும் நின்றிருந்தால்/செவ்வாயை மட்டும் கணக்கெடுத்திருந்தால் நானும் சீமான் மாதிரி கழுத்து நரம்பு புடைக்க பேசிக்கிட்டு இருந்திருப்பன்ல . கேது அவரோட சேர்ந்ததாலதான் “மறை பொருள்” எல்லாத்தையும் லாஜிக்கலா சொல்லி மெர்சலாக்கிக்கிட்டிருக்கம்.

8. நடக்கவேண்டியவை நடந்தே தீரும், அதனை நடத்தி வைக்கவே கிரகங்கள் எனில் நாம் ஜாதகம் பார்த்து அதன் படி நடந்து கொள்வதால் ஒன்றும் மாறிவிடாதல்லாவா?

மாறாதுதான்.ஆனால் ஓரளவு “சௌகரியம்” இருக்கும் தானே. உதாரணமாக சனி பிடித்த காலத்தில் சம்பளத்துக்கு வேலை பார்த்தால் பாதி தோஷம் ஃபணால். மழை காலத்தில் குடை ஏற்பாடு செய்து கொள்வதும் /கோடையில் செருப்பை ஏற்பாடு செய்து கொள்வதும் போன்றதே இது.

மேலும் என் அவதானிப்பின் படி மனிதன் ரெசிப்டிவா மாறிட்டா நடக்கவேண்டிய தீயபலன்லாம் பேர் பாதியா குறைஞ்சுருது .அவன் ரெபலா மாறும் போது டபுள் தமாக்காவா மாறுது .

9. பரிகாரம், பல ஜோதிடர்கள் போலி ஜோதிடராக மாற பரிகாரம் மட்டுமே காரணம் என்பது உலகறிந்தது, இதனாலயே ஜோதிடம் பொய் என்கிற மனநிலைக்கு வர வேண்டி இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் கிரகங்கள் தன் வேலைகளை செய்யும்போது அதனை தடுக்க அல்லது சரிசெய்ய பரிகாரம் செய்வது என்பது கிரகங்களுக்கு எதிராக செயல்படுவது என்பதாகத்தானே அர்த்தமாகிறது. நாம் இங்கே இரண்டு வாழைப்பழம் ஒரு தேங்காய் வைத்து வணங்குவதால் பல லட்சம் மைல் தூரத்தில் நம் பூமியை விட பல மடங்கு பெரிய கிரகங்களும் நட்சத்திரங்களும் நம் வழிக்கு வந்து நமக்கு சாதகமாக வேலை செய்யும் என நினைக்கும்போது நகைப்பாக தானே இருக்கிறது.

நீங்கள் சம்பிரதாய பரிகாரங்களை பற்றி சொல்லியிருக்கும் விஷயங்கள் ஏற்புடையவையே. ஆனால் மனிதர்கள் “வெள்ளந்திகளாய்” ” தான்” என்ற எண்ணம் இல்லாத காலங்களில் அவையும் ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன.

விவேகானந்தர் உன் பிரார்த்தனைக்கான பலன் உன்னிலிருந்தே கிடைக்கிறதுங்கறாரு . வாழைப்பழம் /தேங்காய் எல்லாம் உங்கள் ஆன்ம சக்தியை தூண்டும் என்றால் ஒர்க் அவுட் ஆகும் தானே. எதையும் எதனோடும் தொடர்பு படுத்தலாம் .

ஓஷோ சொன்ன நாய் -மணி கதையை ஞா படுத்திக்கங்க. எண்ணம் போல் மனம் -மனம் போல் வாழ்வு

10. கிரகங்கள் தான் உலக நிகழ்விற்கு காரணமெனில் இறைவன் என்பது கேள்விக்குள்ளாப்படுகிறதே.

இறைவன் பிரதமர் .நவகிரகங்கள் அவரது மந்திரிசபையின் மந்திரிகள்.தமிழில் “ஆண்டவன்” என்ற சொல் இறந்த காலத்தை குறிக்கிறது . இப்பம் நம்மை ஆள்றது நம் பூர்வ கரும வாசனைகள். நம் பூர்வ கருமங்களை தொலைக்க ஏதுவான கிரகஸ்திதியில நாம பிறக்கிறோம்.

11. எண் கணிதம் என்ற ஒரு கொடுமையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வெறும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த மொழியின் வரி வடிவங்களை மாற்றுவதன் மூலம் மனித வாழ்வு மாறும் என்பது நினைக்க மடமையாக உள்ளதே. ( எண் கணிதத்திற்கு எந்த ஒரு வரலாறும் இல்லையென நினைக்கிறேன்).

ஹ ஹா இந்த பஞ்சாயத்தை பலமுறை பைசல் பண்ணியிருக்கன். ஜாதக கிரகஸ்திதிக்கும் எண் கணிதத்துக்கும் ஒத்திசைவு இருந்தால் எண் கணிதம் பலிக்கிறது.ஆனால் எண் கணிதத்துக்கும் -ஜாதக கிரக ஸ்திதிக்கு ஒத்திசைவு இல்லை என்றாலும் ஜோதிடம் பலிக்கிறது

12.அபிஜித் என்ற ஒரு நட்சத்திரம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் (திருவோணம் அவிட்டம் இடையில் சரிதானே) அதை ஏன் பயன்படுத்துவதில்லை?

தெலுங்கில் திருமண பொருத்தம் பார்க்க பயன்படுத்தப்படுகிறது

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.