பணம்-பணம்-பணம் : நூல் விமர்சனம்

அண்ணே வணக்கம்ணே !

நாம வெளியிட்ட 4 நூல்களுக்கான விமர்சனம் தொடருது . நன்றி: திருமதி பானுகுமார்

என்னச் சொல்ல……வார்த்தைகளுக்கும் ,விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டது..இந்த புத்தகம்.
யார் யாரோ இங்கே பொருளாதார மேதை என்று கூறிக் கொள்கிறார்கள்….கொஞ்சம் அவர்களையெல்லம் கூட்டி வந்து ஒரு ரூமில் அடைத்து மவன்களா படிங்கடா இதைனு சொல்லனும்.

ஒரு பொருளாதார வல்லுனருக்கான அத்துணை தகுதிகளும் ஐயா திரு.சித்தூர்.முருகேசனாரிடம் அமைந்துள்ளது.இந்தளவிற்கு அலசி ஆராய்ந்து,அதை மிகச் சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக வேறு யாராவது எழுதியிருந்தால் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.

சான்ஸே இல்லே பாஸ்…எப்படி இத்தனை கலவையான துறைகளில் உங்களால் நிபுணத்துவத்தைக் காட்ட முடிகிறது?
இறைவனின் தனித்துவமான படைப்பு சார் நீங்கள்.சாதாரணமாகத்தான் படிக்கத்துவங்கினேன்….கீழே வைக்கவே முடியவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன் ஐயா…15 வருடங்களுக்கு முன்பு இந்த புத்தகம் என் கையில் கிடைத்திருந்தால் இன்று என் வாழ்க்கையின் தரமும்,உயரமும் வான் தொட்டிருக்கும்.
என் கனவுகளை காட்சிப் படுத்தியிருப்பேன்…..லட்சியங்களை லட்சங்களாக மாற்றியிருப்பேன்….

அப்போது எனக்கு இந்த வித்தையை புரிய வைக்க உம் போல் யாரும் இல்லாததினால் தான் இன்று வரை அடுத்தவரைச் சார்ந்து வாழ்ந்தே என் சுயங்களைத் தொலைத்து விட்டேன். இதில் தொட்டு காட்டியிருக்கும் ஒவ்வொரு விஷயங்களும் கற்பனைக்கு எட்ட முடியாத உயரத்திற்கு உயர்த்தும் ஏவுகணை போன்றது.

நீங்கள் யாரோ ஒருவருக்காக சொல்லித்தரவில்லை…எந்த நிலை மனிதர்களுக்கும் பொருந்தும் விதமாக….அவரவர் திறமைக்கும்,தரத்திற்கும் ஏற்ற விதத்தில் அவர்கள் நிலையிலிருந்து என்னச் செய்யலாம்,எவ்வாறு செய்யலாம் என்று ஆராய்ந்து,அதற்கான வழிமுறைகளை எந்தவித விட்டுகொடுத்தலும் இன்றி மனதோடு சொல்லியிருக்கிறீர்கள் பாருங்கள்…அதற்கு என் பணிவான வணக்கங்கள்.

படிக்கும் போது தேவைப்படும் எனக் குறிப்பேடுத்தேன்….ஆஹா..எதை விடுவது….படித்து முடித்து பார்த்தால் 90% குறியிட்டிருக்கிறேன்…மீதி 10% அலுப்பில் விட்டது தான்.இப்படி எழுதினால் நான் என்ன செய்றது பாஸ்…
யாருக்கும் தோன்றாத ஒரு கோணம்,யுக்தி,தீர்வு…..ஏயப்பா….இதோ அதிலிருந்து நான் குளித்தெடுத்த முத்துக்களில் சில…….

*ஈகோவை விட்டால் தான் வியாபாரம்,பணம்…இத்யாதி இத்தியாதியெல்லாம்…
*செக்ஸுக்கு மாற்று பணம்
*சம்பாரிக்கணும்னா நம்மை நாம பலி கொடுக்கனும்…சம்பாரிச்சுட்டா அடுத்தவனை பலி போடலாம்…
*நீங்க செத்து போக ரெடியாயிரணும்….இதற்கு நாடோடி மன்னன் உ-ம் சூப்பர்!
*பணம் சம்பாதிக்க வேண்டுமனால்..முதல் பாடம் உங்கள் ஈகோவை குழி தோண்டி புதைப்பது…எதிராளி ஈகோவை திருப்தி படுத்துவது…ஒன்றே வழி

*பணம் பண்ணனும்னு முடிவு பண்ணியாச்சுனா சபரி மலைக்கு மாலைபோட்டாப்ல ஆயிரணும்….ஈகோ,கற்பனைகள்,பலகீனங்கள் மூட நம்பிக்கைகள்,ஊகங்கள் நம்பிக்கைகள்,சார்புநிலைகள்…எல்லாத்தையும் தூக்கி கடாசிரணும்…
*நம்ம பண வேட்டைக்கு குடும்பம் உதவி பண்ணலேனாலும் உபத்திரவம் பண்ணக்கூடாது.
*நீங்க கோழி வளர்த்து முட்டை வியாபாரம் செய்ய கோழி வாங்கினா அது கேபிடல் எக்ஸ்பென்டிசர்,அதையே குருமா வைத்து நீங்களும் உங்க குடும்பமும் மட்டும் தின்ன வாங்கினா ரெவின்யூ எக்ஸ்பென்டிச்சர்…..(கிளாஸ் சார்)

*முதலீடு சுவத்திலே மாட்டின சீனரி மாதிரி இருக்கணுமே தவிர சுவத்துக்கு அடிச்ச சூப்பர்சிம்மா இருக்கக் கூடாது
*காத்திருக்கும் பொறுமை,பொருளாதார பலம் இருக்கணும்….
*கவனித்தல்,முடிவெடுத்தல்…
*மக்கள் விருப்பத்திற்கேற்ப செயல்படறவன் வியாபாரி…தன் லட்சியத்திற்கேற்ப மக்களை மாத்தறவன் லட்சியவாதி…

*பணவேட்டைக்குப் புறப்படுபவன் எந்நிலையிலும் முட்டாள்களுடன் உறவு இல்லைனு கமிட் ஆயிரனும்.
*சிலர் சிங்கம் மாதிரி வேட்டை கிடச்சதும்…….(ஹ ஹா)
*அம்பானிக்கும் நமக்கும் கடவுள் தந்தது 24 மணி நேரம் தான்….(சூப்பர்)
*நேரத்தை வீணாக்குறது இயற்கையை,கடவுளை அவமானப்படுத்துவது போல்…

எதை எதையோ பொருளாதார பாடமாக வைக்கிறார்கள்….ஒரு முறை தயவு செய்து காசு கொடுத்து இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்…

அதிலேயும் என்ன ஒரு காருண்யம்…என்ன ஒரு தயாளம்…இந்த புதையலுக்கு அவர் வைத்திருக்கும் விலை வெறும் 50 ரூபாய் மட்டுமே!!!

நமக்கெல்லாம் என்ன ஒரு கெட்ட குணம்னா..பாலீஷா அட்டை போட்டு பளபளப்பா பேப்பர் போட்டு,ஒரு பெரிய மனுஷனிடம் முன்னுரை வாங்கி, டிஜிட்டல் விளம்பரம் கொடுத்து,501/-ரூபாய்னு போட்டா பாய்ந்து போய் வாங்குவோம்.இவ்ளோ காஸ்ட்லியா போட்டிருக்கான்…நிச்சயம் நல்லா இருக்கும்யானு மெச்சிக்குவோம்…

பணத்தைப் பற்றியும் அதனை பெருக்குவது பற்றியும் இத்தனை சொல்பவர்க்கு தன் விஷயத்தில் கோட்டை விட்டுட்டாரோனு தோணும்….

இந்த பாழாய் போன…போகும் மக்கள் மீதும்,இந்த தேசத்தின் மீதும் அவருக்கு இருக்கும் மகத்தான அன்பு தான்….இந்த கோட்டை விடலுக்கு காரணம்.

அவரது வல்லரசு கனவுகளிலும் இந்த அன்பின் பெருக்கத்தைக் காணலாம். நம் முருகேசனாரை போன்ற எத்தனை
மே(பே)தைகள் தங்கள் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறர்களோ யாருக்குத்தெரியும்???

ஒன்று மட்டும் சொல்கிறேன் ஐயா…நீங்கள் வாழும் காலத்தில் நாஙளும் வாழ்கிறோம்…பூர்வ புண்ணியத்தால் உங்களோடு சரி சமமாக பேசவும் ,பழகவும் ஒரு வாய்ப்பை பெற்றிருக்கிறோம்…

இது சத்தியமான வார்த்தை… நிச்சயம் மிகைப்படுத்தல் கிடையாதுங்க.. என் ஆழ்மனதிலிருந்து என் ஆன்மாவின் குரலாகச் சொல்கிறேன் ஐயா…

வாழிய பல்லாண்டு!!!

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *