ஆண்-பெண் வித்தியாசங்கள்: நூல் விமர்சனம்

அண்ணே வணக்கம்ணே !

வாசகி திருமதி பானுகுமார் அவர்களின் நூல் விமர்சனம் உங்கள் பார்வைக்கு .

இந்த உலகம் என்பது இந்த இருவர் மட்டும் தான்.இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சரிவரப் பொருந்தும் போது தான் இந்த உலகம் உயர்வடைகிறது,விரிவடைகிறது, சிறப்படைகிறது.

திரு.சித்தூர் .முருகேசன் அவர்கள் தனக்கு புரியாததை புரிந்த மாதிரி சொல்பவரல்ல.அவர் சொல்லும் அனைத்துமே அவரது அனுபவங்களினாலும்,பிறரது அனுபவங்களைப் புரிந்து கொண்டதாலும் அவர் பெற்ற படிப்பினைகள்.இதனால் தான் அவர் அனுபவ ஜோதிடம் என்றே சொல்லுகிறார்.

இந்த ஆண்-பெண் வித்தியாசங்கள் என்பது சர்வ நிச்சயமாய் ஒரு மனோவியலை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் பாடம். அதை ஜாதகரீதியாக அணுகியிருக்கிறார் ஆசிரியர்.லக்னத்திலிருந்து ஆரம்பிச்சு பாவாதிபதிகள் வரை ஒரு முழு வாழ்வியல் சார்ட்டு,தீஸிஸ் என்று சொல்லலாம்.

என்னவொரு நுணுக்கமான மனவியல் அலசல்!!!

அட இந்த லக்னம், பாவம் எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்கபா….உங்களை நீங்கள் அறிவீர்கள் தானே….அப்போ எதிராளியைப் பற்றியும் தெரிந்து கொள்ளனும் இல்லையா?

நண்பணோ, எதிரியோ அது யார்? எப்படி பட்டவர்கள்? எனத் தெரிந்து கொண்டாலே வாழ்க்கையை ஜெயித்தாற் போலத்தான்.அதிலும் இவரது ஆராய்ச்சிகள் முக்கியமா பெண்களை பற்றியே இருக்கிறது..அதற்கு காரணம் பெண்ணின்றி அமையாது வாழ்வு என்பதை அவர் தெளிவாக அறிந்திருப்பது தான்.

ஆணின் உணர்வுகளின் இடி தாங்கி பெண்.அந்த போக்கிடம் இல்லாதவன் பொறம்–போக்காகி விடுகிறான்.வெத்து வேட்டாகி விடுகிறான்.ஆனால் வாழ்க்கையை ஆண் எவ்வாறு அணுகுகிறான்…பெண் எவ்வாறு அணுகுகிறாள் என்பதில் தான் வாழ்வியல் ரகசியம் இருக்கிறது.

அந்த ரகசியங்களை எல்லாம் வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார்.அந்த திறமைக்கு,துணிச்சலுக்கு,அன்பிற்கு,கருணைக்கு தலை வணங்குகிறேன்!!!

எனக்கொரு ஆச்சர்யம் என்னவென்றால் எப்படி ஒரு ஆணாயிருந்து இவ்வளவு விஸ்தாரமா,விபரமா,துல்லியமா பெண்களின் உணர்வுகளை புரிந்து கொண்டார்,தெரிந்து கொண்டார்னு தான்.நிச்சயம் இவர் தாயுமானவரே….அதில் சந்தேகமேயில்லை.ஒருஜோதிடராக மட்டும் அவர் இதை சொல்லவில்லை…ஒரு நல்ல மனிதராக,கணவராக,தந்தையாக வாழ்வதினாலேயெ இது சாத்தியப் பட்டிருக்கிறது.

அதுவும் ஒன்பதாம் பாவத்தை பற்றி விளக்குமிடத்தில் பக்கம் 54 புதல் 55 வரை பெண்ணை அலசியிருக்கிறார் பாருங்கள்…..நிஜமாவே சாவடிக்கிறார் மனிதர்.நேரில் இருந்தால் காலில் விழுந்து விடுவேன்.இது உணர்ச்சிவசப்பட்டு கூறுவதல்ல…மிகப் பெரிதான நன்றி உணர்வு.

//யார் பாவம் செய்யவில்லையோ அவர் முதல் கல்லை எறியுங்கள்//என்றாரே ஏசுபிரான்….அந்த புரிதலை இவரிடம் பார்க்கிறேன்.

பிற்செர்க்கை ஜோதிட மர்மங்கள் என்று வேறு அடிஷனல் பொக்கிஷம்….அது ஆக்சுவலா ஜோதிட தர்மங்கள் என்று இருக்க வேண்டும்…

யாருக்கு வரும் இந்த தயாள குணம்?தன்னிடம் இன்னும் ஏதாவது இருந்தால் அதையும் இப்பவே கொடுத்துடனும் என்கிற துடிப்பு…..எதையாவது செய்து இந்த வாழ்க்கைச் சிக்கலைச் சரி செய்துவிட வேண்டும் என்கிற பேராவல்….

வாழ்க நீ எம்மான்!!!

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *