ஜோதிடமும் தாம்பத்தியமும்

அண்ணே வணக்கம்ணே !

வாசகி திருமதி பானுகுமார் அவர்களின் நூல்விமர்சனம் இது .

வாவ்!!! தாம்பத்தியத்தைப் பற்றி எத்தனயோ புத்தகங்கள் வந்துவிட்டன..இன்னும் வந்து கொண்டே இருக்கின்றன.ஆனால் திரு சித்தூர்.முருகேசனார் அளவிற்கு விஸ்தாரமாய்

ஜோதிட ரீதியாக

தாம்பத்தியத்தை வேறு யாரும் அனுகியிருக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்பேன்.

தாம்பத்தியம் என்றாலே அது ஏதோ ஒரு சில நிமிடங்கள் தானே அதற்கு எதற்கு இத்தனை பில்டப்புனு நினைகிறவங்க தான் இங்கே அதிகம்.அப்படியொரு எண்ணம் இருந்தால் சாரி தய்வு செய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

நம் ஒட்டு மொத்த வாழ்க்கை ஓடுகிறதே அதன் கடையாணியே தாம்பத்தியம் தான்.

அதை வெறும் செக்ஸ் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அது அப்படித்தான்

தோன்றும்.உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மாபெரும் உந்து சக்தியே

அது தான்.உயிர் வாழ்தலின் அடிப்படை அம்சமே அதுதான்.உங்கள் வாழ்க்கையின்

ஜீவ ரஸமே அது தான்.

அதை ஏதோ டீ குடிப்பது போல செய்வது தான் சோகமே.சமயதில் அதைக் குடிக்க காட்டும் முனைப்பைக் கூட செக்ஸ் விஷயத்தில் காட்டுவதில்லை.டீயை எப்படி ஒரு கொண்டாட்டமாக குடிக்கனும் என்பதை ஜப்பானியர்களிடம் கற்று கொள்ள வேண்டும்.

இந்த புத்தகம் கொஞ்சம் அந்த விஷயத்தில் ஆண்கள் ஸ்பெசல் என்று தான் சொல்ல வேண்டும்.

இதில் அவர் ஒன்பது வகை பெண்களை வகைப் படுத்தியிருக்கிறார்,,,உங்கள் வசதிக்காகவே.இந்த அத்தினி சித்தினி வகையல்ல.அது அனாடமி பேசிஸ்..இது மெண்டல் பேசிஸ்.

இதை ஏன் சொல்லியிருக்கிறார் என்றால் சிலர் தம் எதிர்பார்ப்பிற்கு மாறான பெண்ணை திருமணமோ…காதலோ செய்து விட்டு வாழ்நாள் முழுக்க போராட—னும் அல்லது ஏற்கனவே இந்த கெடு பலனெல்லாம் நடந்து முடிந்திருந்தால் அதை எப்படி கொஞ்சமாவது நல்லவிதமாக மாற்றலாம் என்று தான்.

இதில் ஒரு விஷயம் பாருங்கள் பெண்களை மட்டும் தான் இவ்வாறு வகைப் படுத்தியிருக்கிறார்.அப்போ வகை படுத்த முடியாத அளவிற்கு ஆண்கள் இருக்கிறார்களா என்ன?

பெண்களை மட்டுமே ஆசிரியர் எழுதியிருப்பது பெண்களின் தனித்துவத்தின் முக்கியத்துவமாகவே கருதுகிறேன்.பெண்களைப் புரிந்து கொண்டு,அவரவர்க்கு தோதான பெண்களை திருமணம் செய்தாலும் சரி…திருமணம் செய்தப் பெண்ணை புரிந்து கொண்டு செயல் பட்டாலும் சரி…இல்லறம் நல்லறமாகும்.

ஒரு வீடு அமைதியாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தால் அது ஒரு அலையாக பரவி அவர்கள் வாழும் இடத்தை,ஊரை,நாட்டை,தேசத்தை வளமாக்கும்.அதனால் தான் திரு,முருகேசன் அவர்கள் பெண்களுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறார் என்று நினைக்கிறேன்.

அவளை சக்தியாக,கத்தியாக,கேடயமாக,காப்பாக,அமிர்தமாக,மருந்தாக,வாழ்வாக,ஆயுளாக மாற்றக் கூடிய விஷயங்களை நமக்கு பாடமாகச் சொல்லி பெண்களை புடம் போட்ட தங்கமாக மாற்றக் கூடிய வித்தைகளை கற்று தருகிறார்.

தாம்பத்தியம் என்பது வாழ்வின் உயர் நிலை.இதில் வெற்றி பெறுபவன் எந்த சாதகமும் செய்யாமலே முக்தி அடைகின்றான்.

எத்தனையோ சாதிகள்,மதங்கள்,நாம் படைத்த தெய்வங்கள்…இத்தனைக்கும் ஆதார சுருதி தாம்பத்தியமே.இதில் முழுமை அடைந்தவன் தன் சந்தோஷத்தை மற்ற்வர்களுக்கு பகிர்கிறான்…தோல்வி அடைந்தவன் அத்தனை சமுதாய கேடுகளுக்கும் காரணமாகிறான்.

ஆணின் உயர்வுக்கும்,உந்துதலுக்கும் பெண் வேண்டும்.பெண்ணின் உணர்வுகளை நெறிப்படுத்தி அதை ஆக்க சக்தியாக மாற்ற ஆண் வேண்டும்.இதற்கான புரிதலை ஆசிரியர் அமுதமாக அள்ளித் தந்திருக்கிறார்.

ஒவ்வொரு ஆணும் இதை புரிந்து படித்து பெண்ணை ஜெயித்து அதன் முலம்

தன் வாழ்க்கையிலும் ஜெயிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

ஏனென்றால் இப்போதும் பெண்களில் 90% பேர் இன்னும் வெறு பூட்டாகவே

இருக்கிறார்கள். அதிலும் தாம்பத்திய வாழ்வில்,,,அதன் விருப்பங்களில் வாய்க்கு பெரிய பூட்டாகத்

தான் பூட்டியிருக்கிறார்கள்.முதலில் அவர்களின் இந்த வாய் பூட்டை உங்கள்

அன்பால் திறவுங்கள்…பின் உடல் பூட்டை திறக்க முயற்சி செய்யுங்கள். உளப்

பூர்வமான முற்சிகள் செய்தால் பூட்டுகள் தானே திறக்கும்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…அதை நமக்கெல்லாம் புரியும்படி சொல்லித்தரும் நல் ஆசான் கிடைத்தது..நாம் செய்த தவம்.

மிகப் பெரிய தோஷமே சந்தோஷத்தை தொலைத்து வாழ்வது தான்….தொலைத்த இடத்தில் தானே தேடனும்….அது உங்களிடம் தான் தொலைந்து போயிருக்கிறது….

மீட்டெடுங்கள்…கொண்டாடுங்கள்!!!

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *