Tags       

Categories  ஜோதிடம் 360 நூல் விமர்சனம் நூல் விற்பனை

ஜோதிடம் 360 ( நூல் விமர்சனம்)

அண்ணே வணக்கம்ணே !

2014 ல் ஒரே மூச்சில் நான்கு நூல்கள் வெளியிட்டது தெரியும் தானே .அவற்றில் ஒன்றான ஜோதிடம் 360 பற்றி வாசகி திருமதி பானுகுமார் தம் பார்வையை எழுதி அனுப்பியிருக்கிறார் . அது உங்கள் பார்வைக்கு.

ஒரு முறை வெளி வந்து இருமுறை மறு அச்சு கண்ட சூப்பர் ஹிட் முக்காபுலா இந்த நூல். ஓவர் டு திருமதி பானுகுமார்.

__________

நூல் விமர்சனம்…அதுவும் சித்தூர்.திரு.முருகேசனாரின் நூல் விமர்சனம்….

அதற்கான சில தகுதி முதலில் எனக்கு இல்லை. இது வெறும் பார்வை அவ்வளவே.நான் படித்து வியந்ததை, புரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

தனிமையில் அழலாம் தப்பில்லை…ஆனால்

சந்தோஷத்தைக் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.அது தான் நம்மை

சந்தோஷப்படுத்திய விஷயத்திற்கு நாம் தரும் மரியாதை.நம்மால் மதிக்கப்படும்

எவையும் நம்மை மதிக்கும்..இது இயற்கை நியதி.

இந்த சோதிடம் இருக்கே அது நமக்கு நல்லது செய்றதை விட சோதிப்பதே

அதிகம்.எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கும் வரை ஜாதகத்தைப் பற்றி யாரும்

கவலைப்படுவதே இல்லை.

பொதுவா ஜாதகம்னு ஒன்னு இருக்கிறதே கல்யாண வயது வந்தால் தான்

பெரும்பான்மையினருக்குத் தெரியவரும்.இதைத்தவிர பொருளாதார பின்னடைவு,

கல்வியில் பாதிப்பு,உடல்நிலை பாதிப்பு,மனநிலை பாதிப்பு,அசாதரணமான நிகழ்வுகள்,விபத்துகள்,துர்மரணங்கள் காரணங்களினாலும் ஜாதகங்களை எடுத்துக் கொண்டு ஜோதிடரைத் தேடி அலைகிறார்கள்.

ஜாதகமே அப்பத்தான் தெரிஞ்சதுனா ஜோசியரை பற்றி சொல்லவா வேணும்….

இருக்கவே இருக்கிறார்கள் ராசிபலன் ஜோதிடர்கள்,,,எப்படின்னா ஒரு மாசம்

விடாம இருக்கிற சானல்களில் எல்லாம் சொல்கிற ராசிபலன், பரிகாரங்களை

எல்லாம் ஒன்னுவிடாம கேக்க வேண்டியது…அடுத்த மாதம் ஜோதிட சிகாமணினு

ஒரு போர்டு போட்டுகிட்டு உட்காந்துர வேண்டியது.

இவன் பத்து பொருத்தமும் பொருந்துதுனு சொல்லி கோத்து விட்றுவான்…அதுங்க

பத்து நாள்லே படார்னு முறிச்சுட்டு வந்து நிக்கும்.

கிரகங்கள் உள்ளது உண்மையானால்….அதன் அடிப்படையில் அவை இன்னின்ன

பலன்களைத் தரும் என்பதும் உண்மையே..

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிரகங்களின் அல்லது கோள்களின் வீச்சை துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மக்கள் பலர் வந்து கூடும் கோவில்களாகக் கட்டி அதன் மூலம் அந்தந்த கிரக பாதிப்புகளிலிருந்து மக்கள்
தங்களை தற்காத்துக் கொள்ள..பாதிப்புகளின் வீரியத்தை குறைத்துக் கொள்ளவும் வடிவமைத்த நம் மூப்பர்கள் எத்தனை புத்திசாலிகள்!!!

தற்காத்துக் கொள்ள என்று தான் சொன்னேனே தவிர தப்பித்துக் கொள்ள எனச்

சொல்லவில்லை.கிரகங்கள் கொடுக்கும் பலன்கள் நல்லதோ,கெட்டதோ நிச்சயம்

நம்மை வந்து அடைந்தே தீரும்.ஒரு தரம் முடிவு செஞ்சுட்டால் அவங்க முடிவை

மாத்திக்கவே மாட்டாங்க.

அப்ப என்ன புண்ணாக்குக்கு சோதிடம்னு கேக்க கூடாது.நம்மை திடப்படுத்தி

தெளிவு படுத்தி,சுகப்படுத்துறதுக்கு தான்னு ரொம்ப அழகாவும்,ஆழமாவும்

வலியுறுத்துகிறார் நம் சித்தூரார்.எதற்கும் ஒரு தீர்வு உண்டு.அதை நமக்கு

புரியிற மாதிரி எடுத்துச் சொல்கிறார்.

முக்கால்வாசி பேர் டுபாக்கூர்னு தெரிஞ்சிடிச்சி..இப்ப என்ன செய்யலாம்….

இருக்கவே இருக்கு ஐயாவோட ’’ஜோதிடம்360’’.ஜோதிடம் புரியுது..யாருக்கெல்லாம் ஜோதிடத்தில் நம்பிக்கையும்,ஆர்வமும் இருக்கிறதோ அவர்களுக்கு இதை விட சிறந்த கைடு இருக்கவே முடியாதுங்க.அதுலேயும்
ஒரு இக்கு வைக்கிறார் ஆசிரியர்…

//எதிர்காலம் என்ற தேவரகசியத்தில் யாருக்கு

ஆர்வம் இல்லையோ அவர்களுக்கே இது தரிசனம் தரும்// என்கிறார்.இது அவரது

அனுபவமும் கூட.

அதாவது நல்ல ஜோதிடன் என்பவன் தான் கற்ற கலையை மக்களைக்

காப்பாற்றத்தான் பயன் படுத்த வேண்டுமே தவிர துன்புறுத்த அல்ல.இது

நானா புரிந்து கொண்டது.

இந்த புத்தகத்தில் ராசி கட்டத்தில் துவங்கி கிரக காரகம்,தொழில்-வீடு-மனைவி,வாஸ்து,நவகிரக தோஷங்களுக்கான

நவீன பரிகாரங்கள்னு(100% பலன் தரும்) A to Z சும்மா கலந்து கட்டி ஒரு பாக்கேஜா கொடுத்திருக்கிறார்.எந்த விஷயத்தை வேண்டுமானாலும் இதன்மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.அந்த அளவிற்கு ஒரு ஜோதிட களஞ்சியம்…

ஜோதிட ஆர்வம் உள்ளவர்களின் பொக்கிஷம் இந்த நூல்.இது வரையாரும் இவ்வளவு வெளிப்படையாக இந்த விஷயங்களை வெளிப்படுத்தியதில்லை….

இனியும் பண்ணமாட்டார்கள்.எத்தனையோ விஷயங்களை சுயநலத்திற்காக மூடி மறைத்தாலேயே நாம் இழந்திருக்கின்றோம்.அந்த வகையில் தாம் பெற்ற இன்பத்தை இந்த வையம் பெறவேண்டும் என நினைக்கும் சித்துரார் நமக்கெல்லாம் ஒரு பொக்கிஷம்!!!

S Murugesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *