மின் நூல் விமர்சனம் : ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம்

அண்ணே வணக்கம்ணே !

இணைய உலகில் “யாவும்” சிரஞ்சீவத்துவம் பெற்று விடுகின்றன. எப்போதோ வெளியிட்ட மின் நூல் அதற்கு இப்போது விமர்சனம். நன்றி : திருமதி பானுகுமார்

எந்த ஒரு நூதன அனுபவமும் போகப் போக இயந்திரத்தனமாய் ஆகிவிடும்.ஆனால்….அம்பாளின் அனுபவங்கள் மட்டும் யுகம் யுகமாகத்தொடர்ந்தாலும் அதி நூதனமாக,சுகானுபவமாக,ஆச்சரியமாக,அதிர்ச்சியாக ஒரு மின்னலைப் போல் வெட்டிக்கொண்டே இருக்கும் ஒன்றாகும்.

அந்த வகையில் திரு.சித்தூர்.முருகேசனாரின் ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கத்தை சமீபத்தில் படிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்.இது நாள் வரையில் இது போன்ற எத்தனையோ துதிகளை,நாமாவளிகளைப் படித்துள்ளேன்.வெறும் நாமாவளியாக அவர் இதைக் கொடுத்திருந்தால் அம்பாளின் கோடான கோடி நாமங்களில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்

ஆனால் தானாகத் தோன்றிய நாமங்களுக்கு அவர் தனக்குள் தோன்றிய விளக்கஙகள் கொடுத்திருக்கிறார் பாருங்கள் அதில் தான் விஷேசம் இருக்கிறது.

ஒரு ஆன்மா புனிதப்படாமல் இருந்தால் ஆத்தா இது போன்ற விளக்களைப் புகுத்த மாட்டாள்.அவளே விளக்கமாக அதில் விளங்குகிறாள்..வீற்றிருக்கிறாள்.

அவரின் இந்த நாம விளக்கங்களைப் படிக்கும் போது எனக்கு கவிகாளமேகத்தின் புலமையும் ..அது அவருக்கு கிடைத்த அருமையும் நினைவுக்கு வருகிறது.

திருவானைக்கோவிலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் தாய் ஸ்ரீ அகிலாண்டேஷ்வரி அங்கே அவளது அருள் வேண்டி தவம் செய்து கொண்டிருந்த ஒரு துறவிக்கு அருள மனம் கொண்டு அவரிடம் தன் தாம்பூலத்தை ஏற்கும்படி கேட்க அந்த துறவி அவளின் தாம்பூலத்தை எச்சில் என்று ஏற்க மறுத்துவிட..

அது சமயம் அங்கே அயர்ந்து வாய் திறந்து உறங்கிக் கொண்டிருந்த வரதன் என்ற கோவில் ஊழியனின் வாயில் தன் அமுதத்தை உமிழ்ந்துச் சென்று விட்டாள் அன்னை.

அங்கே உதித்தான் ….கவி காளமேகம்….சாதாரண வரதன்…ஆசு கவி எனப் போற்றப் பெற்றான்.

அன்று அந்த அகிலா துப்பிய அமுதத்தின் துளிகளில் சில இவர் வாயிலும் விழுந்தனப் போலும்….. அப்போ துப்பியது இப்போ எப்படி இவர் வாயில் என கேக்கக் கூடாது..ஆத்தா பல கோடியுக தாரிண்யை.அவளது கருணை ஒரு தைல தாரையாக யுகம் யுகமாக ஒழுகிக் கொண்டே தான் இருக்கிறது.

அவளுக்கு இஷ்டமானவர்களுக்கு அது அதிர்ஷ்டமாக …அமிர்தமாக கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது.
ஆத்தாவின் மனம் இளகி இவனுள் இறங்கி விட்டாள் போலும் இல்லாவிட்டால் இத்தகைய விளக்கங்கள் சாத்தியமில்லை.நாம் இது நாள் வரை இத்தகைய நாம விளக்கங்களை வெகு ஆச்சாரமான(!!!!) முறையில் தான் கேட்டு வந்திருக்கிறோம்.(அதற்கே தனி விளக்கவுரை வேண்டும்.)

ஆனால் நம் முருகேசன் ஐயா அவர்கள் சாதாரண பாமரனுக்கும் புரியும் வகையில் அவருக்கே உரித்தான அந்த ஸ்லாங்கில் சும்மா தூள் கிளப்பியிருக்கிறார்.

தயவுசெய்து இதனை அவர் புத்தக வடிவில் வெளியிட வேண்டும்.அதற்கும் அந்த ஆத்தா அருள் செய்ய வேண்டும்.

இந்த விளக்கங்களை சீரிய முறையில் தொகுத்தளித்துள்ள திரு.சொக்கலிங்கம் இராமநாதன் அவர்கள் பல்லாண்டு வாழ என் தாய் பராசக்தி அருள் செய்யட்டும்.

இனி என்னைக் கட்டிப் போட்ட…காணாமலேயே போக்கிய அவரது அமுத துளிகளில் சில:

1.அம்ருத்தாயை–ஆத்தாகூட டீல் வச்சுகிட்டா அமிர்தம் கிடைக்கும் பாஸ்!!!!
2.ஆர்த்த ஜன ரக்‌ஷின்யை–ஆர்த்த,அன்னார்த்த–உதவி நாடி வந்தவங்க..சோத்துக்கு இல்லாதவங்க.
3.அஷ்டைஸ்வர்ய ப்ரதாயின்யை–ஷோடஸ லட்சுமி-16 லட்சுமி-பதினாறு பேறு-அதற்கான மூலம்-ஆத்தா
4.அருணாயை—ருணம் -கடன் இல்லாதவள்(பிறவிக் கடன்)
5.பஹளா முக்கே–எந்த சாமியை கும்பிட்டாலும் அதற்கான பலனைத் தருவது இந்த உருவம்
6.சந்திர மண்டல வாசின்யை–இதற்கான விளக்கம் இருக்கே அதி அற்புதம்….

7.தர்ம ரூபின்யை–தர்மம்னா நாலணா எட்டணா பிச்சை போடுற தர்மமில்லைனு அடிச்சார் பாருங்க செவுளைக் காட்டி ஒரு அடி…
8.ஈஸ்வர்யை—-நான் சொல்றதை விட நீங்க படிங்க அனுபவிங்க..
நாம எப்படியாப்பட்ட குணமுடையவர்களாயிருந்தாலும் அவள் தாயல்லவா தள்ளுவதில்லை.
9.கெளரி மாத்ரே -Pride
10.ஜ்யோதிர்மய—-விளக்கத்தில்அருமையா ஆத்தா வெளிப்பட்டிருக்கா

11காளிகாயை—-சாதாரணமா எல்லா நாமத்திலையும் வரது தான்.ஆனால் காளி நெனச்சா கலியுகத்தைக் கூட திரேதாயுகமா,திரிஷாயுகமா மாத்திர்றாள்னு புது விளக்கமல்லவா கொடுக்கிறார்!!!
12கன்யாயை-நொடிக்கு நொடி பிறப்பவள்,வளர்பவள்…ஆகவே என்றும் பதினாறு.
13.காலாதீதாயை—காலமாகவும்,,,காலனாகவும்- இவற்றிற்கெல்லாம் அதீதமானவளாகவும் ம்ம்ம்ம்ம்
14.காம கோடி ப்ரதாயை—-இது வரை இத்தகைய விளக்கம் அறிந்தேனில்லை அப்பனே!!
15.லீலா வினோதின்யை—–இதன் முழு அர்த்தம் இவரே தான்

16.மஹா மாயா ஸ்வரூபின்யை—-அவளே அவளை மறைக்கும் மாயாவாகவும் இருக்கிறாள்…..அவளே அந்த மாயாவை கிழித்தெறியும் ஞானமகவும் இருக்கிறாள்//..இதற்கு மேல் என்ன சொல்ல…
17.நித்யாயை–பிறப்பு,இறப்பில்லாதவள்
18.ஓம்கார ரூபின்யை—இதில் ஓஷோ விளக்கம் அருமை
19.ஹ்ரீம் மயீ தேவினே- ‘தேன்’
20.ஹூம்கார ஐங்கார ஸ்ரூபின்யை—–’பரிபூர்ணம்’

21.பரமந்த்ர சேதினி—நாம சரியா இருந்தா அவள் கூடவே இருப்பாள்
22.சூக்‌ஷ்ம்னா த்வார மத்யாயை-என்ன ஒரு விளக்கம்!!!
23.சர்வ ஸ்வதந்த்ரா—–எனக்கு மிக பிடித்த..பொருத்தமான நாமா
24.ஸ்ரீ சக்ர வாசினி—–அவர் உணர்ந்ததை உணர்த்த முற்பட்டிருக்கிறார்.
25.சிவமானஸ ஹம்சின்யை—-அருமை

26சர்வ ஜன வசங்கர்யை—புதுமையான விளக்கம்….
27.சர்வ சங்க்க்ஷோப பரிஹாராயை—-கிரைசிஸ்?!!!!!
28.த்ரிகால ஞான ப்ரதாயை—–]
29.தேஜோ ப்ரதாயை ]அடடா
30வராஹி மாத்ரே—-

அன்பர்களே நான் குறிபிட்டிருக்கும் இந்த நமாக்கள் என் மனதில் புகுந்து கொண்டவை.நீங்கள் படிக்கும்போது உங்களுக்கு வேறு வேறு பொருளில் புரியலாம்.

மீண்டும் விண்ணப்பிக்கிறேன் ஐயா…புத்தகமாக வெளியிட முயற்சி செய்யுங்களேன்….பிளீஸ்

எச்சரிக்கை:
இந்த விமர்சனத்துக்குரிய மின் நூல் இன்னமும் ஆன் லைன் ஸ்டோரேஜ்ல இருக்கு. இங்கே அழுத்தி டவுன்லோடலாம்

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *