பல்லாண்டு வாழ்க ( நோய்புராணம்) : 10

அண்ணே வணக்கம்ணே !
சில காலத்துக்கு மிந்தி பல்லாண்டு வாழ்க : நோய்புராணம்னு ஒரு தொடரை ஆரம்பிச்சம். ஒன்பது அத்யாயம் முடிக்கிறதுக்குள்ள எந்த கொள்ளி கண்ணு பட்டுதோ அப்டியே ப்ளாக் ஆயிருச்சு (மைன்டை சொன்னேன்) அதுவும் அசலான மேட்டருக்கு வரும்போது ப்ளாக் ஆயிருச்சு.
ஜெனட்டிக் /அப்பா -அம்மா வழியே வர வியாதிகள். அதுக்கு மிந்தி அசிமிலேஷன் -எலிமினேசன் ப்ராசஸ் பத்தி சொல்லிட்டே வந்து டைவர்ட் ஆயிருக்கன்.
அசிமிலேஷன் -எலிமினேஷன் பக்காவா நடக்கனும். இல்லின்னாலே நோய் தான். இந்த சப்ஜெக்ட்ல கடந்த பதிவில் சில டேட்டா கொடுத்திருந்தேன்.அது இங்கே

//அசிமிலேஷன்:
உடல் காற்றை ஏற்கவேண்டுமானால் மூக்கு ,மூச்சுக்குழாய் ,நுரையீரல் எல்லாம் பக்காவா இருக்கனும். உணவை ஏற்க வேண்டுமானால் வாய் , உணவுக்குழல் , ஜீரண மண்டலம் , நீரை ஏற்கவேண்டுமானாலும் வாய் , உணவுக்குழல் , ஜீரண மண்டலம் இதெல்லாம் வெல் பில்ட்டா இருக்கனும்.

எலிமினேஷன்:
கரியமில வாயுவை வெளியேற்ற மூக்கு ,மூச்சுக்குழாய் ,நுரையீரல் , சிறு நீரை பிரித்து எடுக்க சிறு நீரகம் , சேமித்து வைக்க சிறு நீர் பை இத்யாதி . கக்காவை வெளியேற்ற அது தொடர்பான சர்க்யூட்லாம் பர்ஃபெக்டா இருக்கோனம்//

மூக்கு /மூச்சுக்குழாய் /நுரையீரல் ஃபங்சன் சிறப்பா இருக்கனும்னா சந்திரன் நெல்லாருக்கனும்.சிறு நீரை பிரித்து எடுக்க சிறு நீரகம் , சேமித்து வைக்க சிறு நீர் பை இத்யாதிக்கும் காரகன் சந்திரன் தான் .ஆக சந்திரன் டப்பாஸுன்னா மூக்கு /மூச்சுக்குழாய் /நுரையீரல் மட்டுமில்லை சிறு நீரகம் , சேமித்து வைக்க சிறு நீர் பை தொடர்பான சிக்கலும் வரலாம்.

இவர் மனோகாரகன். மாத்ரு காரகன். குழந்தை அக வாழ்வை தாய்க்கிட்டருந்தும் /புற வாழ்வை தந்தையிடம் இருந்தும் கிராஸ்ப் பண்ணிக்குது .
அக வாழ்வு மீன்ஸ் சைக்கலாஜிக்கல் செட்டப். சென்டிமென்ட்ஸ், குடும்பத்துடனான உரையாடல் இத்யாதி . அகவாழ்வு கொஞ்சம் பெட்டரா இருந்தாலும் இதன் இன்ஃப்ளுயன்ஸ் புற வாழ்வு மேல விழுந்து அது பெரிய அளவுல மோசமாயிராம பார்த்துக்கும்.

மைன்டுக்கும் /சிந்தனைகளுக்கும் – நுரையீரல் /சிறு நீரகம்/சிறு நீர் பைகளுக்கும் உள்ள லிங்கை லேசா டச்சு பண்ணிரலாம்.என்னதான் ஷுகர் பேஷன்டா இருந்தாலும் தூங்கி போயிட்டா /மனசும் / யூரினேஷன் குறையுது சாதாரணர்கள் விழிச்சிருக்கும் போது நாலு தடவை பாத்ரூம் போறது தூங்கி போயிட்டா ??
குழந்தையை தூக்கி போட்டு பிடிச்சா வாய்லயே உச்சா போயிருது . வீசிங் பிரச்சினைக்கு மன அழுத்தமும் ஒரு காரணம். வீசிங் இருக்கிற வரை சிறு நீர் வெளியேறாது .சிறு நீர் வெளியேறினதும் வீசிங் நின்னுரும் (பெரியார் எழுதி வச்சிருந்தாரு /நான் டாலி பண்ணிக்கிட்டன்).நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு சகட்டுமேனிக்கு ஆன்டிபயாடிக்ஸ் யூஸ் பண்ணா கிட்னி டப்பாஸு .

எந்த ஜாதகர் ஜாதகத்துல சந்திரன் பல்பு வாங்கியிருக்காரோ அவருக்கு தேன் தூசு /தும்பு/புகை /எண்ணெய் புகை நிறைஞ்ச என்விரான்மென்ட் அமையுது. அவருதேன் தம் போட ஆரம்பிக்கிறாரு .அவருக்குதான் ஸ்ட்ரெஸ் வருது .

ஆக நுரையீரல் -மனம் -சிறு நீரகம் எல்லாமே இன்டர் லிங்க்ட். அதனாலதான் இந்த 3 ஐயும் சந்திரனோட லிங்க் பண்ணி வச்சிருக்காய்ங்க.
இந்த சந்திரன் மாத்ருகாரகன். இவர் மட்டும் ஜாதகத்துல பக்காவா உட்கார்ந்தாச்சுன்னா மேற்சொன்ன வியாதிகளும் வராது நான் இந்த பதிவில் சொன்ன தாய்வழி ஜெனட்டிக் பிரச்சினைகளும் வராது. எப்பூடி ?

ராத்திரியில பிறக்கிறவிகளுக்கு மட்டும் சந்திரன் மாத்ருகாரகன்.பகல்ல பிறக்கிறவுகளுக்கு சுக்ரன் மா.காரகனாச்சே? இதை எப்படி ஜஸ்டிஃபை பண்ணுவிங்கன்னு ஆரும் கேட்க மாட்டாய்ங்க. கேட்டா பார்த்துக்கலாம்.

அடுத்தது உணவை ஏற்க வேண்டுமானால் வாய் , உணவுக்குழல் , ஜீரண மண்டலம் , நீரை ஏற்கவேண்டுமானாலும் வாய் , உணவுக்குழல் , ஜீரண மண்டலம் இதெல்லாம் வெல் பில்ட்டா இருக்கனும். இதுக்கும் உங்கள் உடல் உழைப்பும் தொடர்பு இருக்கு .பிறக்கும் போதே பிரச்சினையோட பிறந்தவிக மேட்டர்லாம் டாக்டர் டேபிளுக்கு போவட்டும்.நாம நார்மல்ஸ் பத்தி பேசுவம்.

இயற்கை ஃப்ரீ கிஃப்டா கொடுத்த மேற்படி மேட்டரை எல்லாம் நாம எப்படில்லாம் நாறடிக்கிறம்னு உங்களுக்கே தெரியும்.

வாய் – பபுள் கம்/ சிகரட் /குட்கா /ஐஸ் க்ரீம்/சாஃப்ட் ட்ரிங்ஸ் இன்னம் நிறைய. ஜீரண மண்டலம்- பசிச்சப்ப சாப்பிடமாட்டோம்/ அப்டியே சாப்டாலும் அகாலமா ஜங்க் ஃபுட் / பீசா பர்கரு . அவரவர் தொழிலுக்கும் உணவுக்கும் லிங்க் இருக்கு.

நான்லாம் திடீர் திடீர்னு ரூட்டை மாத்துவன் தெரியும்ல. இப்டி நோகாம உட்கார்ந்து பதிவு போடற காலத்து பசிக்கும் -உணவுக்கும் / கார்ப்பென்டரிங் செய்த பிறகான பசிக்கும் உணவுக்கும் வித்யாசம் இருக்கு .

கடந்த 2 மாசமா வாக்கிங் போயிட்டிருக்கன். உள்ளே போனதும் தெரியமாட்டேங்குது /வெளியே வந்ததும் தெரியமாட்டேங்குது .ஆனால் இதுக்கு மிந்தி ? பார்த்து பார்த்து சாப்பிடனும்.

ஆக உடல் உழைப்பு பக்காவா இருந்தா இந்த சர்க்யூட்லாம் தன்னை தானே சர்வீஸ் பண்ணிக்கும். நோட் திஸ் பாய்ண்ட். உடல் உழைப்பு உண்டா இல்லையாங்கறது உங்க லக்னாதிபதி எங்கே இருக்காருங்கறதை பொருத்த விஷயம். (நமுக்கு ரெண்டுல -கொய்யால சனத்துக்கு அட்வைஸ் பண்ணியே அரை ஆவிசு போச்சு )

1-5-9 எல்லாம் கோண ஸ்தானம் .இங்கே இருந்தா மோஸ்ட்லி டேபிள் ஒர்க் . 4-7-10 ல இருந்தா ஓரளவுக்கு மாசத்துல பாதி நாளாச்சும் கிழியற மாதிரி வேலை.1-5-9 / 4/7/10 / 6-8-12 தவிர இதர பாவங்களில் இருந்தால் ஓடி ஓடி உழைக்கனும் தான்.

அட இந்த தீனி விஷயத்துல கூட சந்திரன் தான் பாஸ் ஹெட். கொய்யால ஷுகர் பேஷன்ட் ஸ்வீட்டும் -பாயாசமும் உள்ள விட்டுக்கிட்டு டிக்கெட்டு போடறதுக்கு காரணம் சபலம் .சந்திரன் தானே இந்த சஞ்சலம் -சபலத்துக்கு எல்லாம் காரகம்.

வாயு கோளாறு உள்ளவன் தான் போன்டா பஜ்ஜியா உள்ளே தள்ளுவான்.அல்சர் உள்ளவன் மிளகாய் பஜ்ஜி . இப்படி சொல்லிட்டே போகலாம்.
என்னமோ மிஸ் ஆன த்ரெட் கிடைச்சாப்ல இருக்கு. தொடரை தொடருவம்ல??

2 Replies to “பல்லாண்டு வாழ்க ( நோய்புராணம்) : 10”

A.Selva

22/07/2017 at 9:28 pm

அண்ணே வணக்கம்,

சனி+செவ்வாய் சேர்க்கை இருந்தா கோவில், குளம் இங்கெல்லாம் போககூடாதா ?பூஜை ,புணஷ்காரம் எல்லாம் கூடாதா?

நன்றி.

Reply

    S Murugesan

    22/07/2017 at 9:48 pm

    செல்வா !
    இந்த நிபந்தனை குரு+சனி/ராகு/கேது சேர்க்கைக்குதான். சனி செவ் சேர்க்கை இருந்தால் பலி வாங்கும் அம்மன் கோவில் சென்று வழிபடலாமே

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *