Tags       

Categories  திரைக்கடலோடி

திரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்)

அண்ணே வணக்கம்ணே !
தொடர் எப்படி போயிட்டிருக்கு ? ஆரும் கமெண்டும் போட மாட்டேங்கிறிய. நானும் அமாவாசை இருட்டுல பெருச்சாளிக்கு போனதே வழின்னு போயிட்டிருக்கன். ஆனால் நெல்ல வேளையா ஹிட்ஸ் மட்டும் குறையல. அதான் ஒரு நம்பிக்கை.

மாஸ்டர் டீ போட்டு தந்தா சைலன்டா குடிச்சுட்டு போறாய்ங்கன்னா டீ சுமாராவாச்சும் இருக்குனு அருத்தம்.ஏம்பா நான் சரியா பேசறனா?
ஒலகத்துல செலாவணியில உள்ள எல்லா தொழில்களையும் 9 கேட்டகிரியில பிரிச்சுரலாம் அஃதாவது நவகிரக காரகங்கள். நவகிரகங்களை ரெண்டு கேட்டகிரியா பிரிச்சுரலாம் அஃதாவது சுப கிரகங்கள் -அசுப கிரகங்கள்.

சனங்களோட கேரக்டரை ரெண்டு க்ரூப்பா பிரிச்சுரலாம் .சாடிஸ்ட் .மசாக்கிஸ்ட். உங்களுக்கேத்த தொழில் எதுன்னு டிசைட் பண்ணனும்னா நீங்க மசாக்கிஸ்டா? சாடிஸ்டானு டிசைட் பண்ணனும். மசாக்கிஸ்டுன்னா தன்னை தான் கொன்னுக்கறது . சாடிஸ்டுன்னா அடுத்தவிகளை கொல்றது .
ஸ்டான்ட் எடுக்காம நிதானமா ரோசிச்சா உங்களுக்கே ஸ்பார்க் ஆயிரும். இல்லின்னா உங்க ஜாதகத்துல உள்ள கிரக ஸ்திதிகளை நோண்டி நுங்கெடுக்கனும். ஓப்பன் சைட்ல ஓரளவுக்கு தான் சொல்ல முடியுது .

அதுக்காவ நான் எதையோ ஒளிக்கிறேன்னு நினைச்சுராதிய .நான் சொல்ல வந்தது டீட்டெய்ல்ஸ். வில்லங்கமான சமாசாரமா இருந்தாலும் குறைஞ்ச பட்சம் ஹின்டாவது கொடுத்துர்ரது நம்ம ஸ்டைல்.ஆகவே கொஞ்சம் கவனம் செலுத்தி படிக்கோனம். படிப்பிங்கனு நம்பறேன்.

கடந்த பதிவுல குறிப்பிட்ட இடங்கள்ள பாபகிரகங்கள் இருந்தா சாடிஸ்டிக் தொழில் உத்யோகம் வியாபாரம் அமையும்னு சொன்னேன்.
அதென்ன சேடிஸ்டிக்?

விவாகரத்து பெசலிஸ்டு ,அஞ்சு வட்டி ,பத்து வட்டி ,வைன் ஷாப் நடத்தறது ,சீட்டாட்ட க்ளப் நடத்தறது இப்படி சனங்க வவுறெரிஞ்சுக்கிட்டே காசு கொடுத்துட்டு போற ஃபீல்டெல்லாம் சேடிஸ்டிக் ஃபீல்டு தேன்.

இந்த பதிவுல குறிப்பிட்ட இடங்கள்ள சுபகிரகங்கள் இருந்தா மசாக்கிஸ்டிக் தொழில் உத்யோகம் வியாபாரங்கள் அமையும்னு சொல்ல போறேன்.
அதென்ன மசாக்கிஸ்டிக் தொழில்? சனத்துக்கு நல்லது செய்ய மன்னாடறது .உ.ம் ஆசிரியர் தொழில் , நம்மை மாதிரி பரிகார பூஜைங்கற பேர்ல ஆட்டைய போடாத ஜோசிய தொழில் இப்படி நிறைய இருக்கு. நீங்க உட்கார்ந்து லிஸ்ட் போட்டா லிஸ்டு பெருசா போகும்.

லக்னம் /ஐந்து / ஏழாமிடத்தில் சுபகிரகங்கள் இருந்தா கொஞ்சம் மசாக்கிஸ்டிக் கேரக்டர் இருக்கும்.அதே சமயம் லக்னத்துல சுப கிரகம் இருந்தா வியாதி வெக்கைன்னு ஒன்னும் வராது ஆனா பொட்டுனு போயிருவம்.கொஞ்சம் பழுத்து பேரன் பேத்தில்லாம் பார்த்துட்டு ,பேத்தி பெரிய மனுஷியான ஃபங்சனுக்கு சொந்த பந்தம்லாம் வந்து டென்ட் போட்டிருக்க டிக்கெட்டு போடுவம். எல்லாரும் கொய்யால ஒரே கல்லுல ரெண்டு மாங்கா . கெளவன் சீமான்யான்னு வாழ்த்திக்கிட்டே ஊருக்கு கிளம்புவாய்ங்க.

சுபகிரகங்கள் -பாப கிரகங்கள் பட்டியல் நம்ம சைட்லயே கிடைக்கும் .ஏன் இந்த தொடர்லயே கூட ஆரம்பத்துல சொல்லியிருப்பன். அல்லது பல்லாண்டு வாழ்க தொடர்ல நிச்சயமா இருக்கும். இப்ப போயி அதை தேடினா ஃப்ளோ ஸ்டக் ஆயிரும். மன்னிச்சூ !

ஒவ்வொரு கிரகத்துக்கும் இன்னின்ன தொழில்னு ஒரு பட்டியல் இருக்கு. அதை எல்லாம் கடேசியில தந்தே உடறேன். சுபகிரகம் நான் சொல்ற பாவங்கள்ள இருந்தா பேசிக்கலா நீங்க மசாக்கிஸ்ட். குறிப்பிட்ட சுபகிரகத்தோட காரக தொழில்கள்ள மசாக்கிஸ்டிக் ஃபீல்டை மட்டும் நீங்க தேர்ந்தெடுக்கனும். கு.பட்சம் துறை/சீட் .

லக்னத்தை அடுத்து உங்க கேரக்டரை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற இன்னொரு பாவம் அஞ்சு. அஞ்சுல சுபகிரகம் இருந்தா மேதையா இருப்பிங்க. ஆனால் உங்க மேதைமை உங்களுக்கு /சொந்தத்துக்கு பயன்படாது . நீங்க சார்ந்திருக்கும் கம்பேனிக்கோ /உங்க எஜமானருக்கோ தான் ஒர்க் அவுட் ஆகும்.

ஒரு வேளை அந்த கிரகம் ஆட்சி /உச்சம்/பரிவர்த்தனம்/நீசபங்கம் /வர்கோத்தமம் இப்படி பலம் பெற்றிருந்தா சொந்த தொழில்லயும் ஒர்க் அவுட் ஆகலாம். ஆனால் சம்பாதிச்சதை தானம் /தர்மம்னு அள்ளி விட்டுக்கிட்டிருப்பிங்க .உங்க காசு சனங்க கிட்டே ரொட்டேஷன்ல இருக்கும்.

ஆனால் உங்க வாரிசுகள் காட்டு மரம் கணக்கா எந்த கவனமும் கொடுக்காமலே நெல்லா வருவாய்ங்க. நான் சொல்ற சுபகிரகம் குருவா இருந்து தொலைச்சா ஆண் வாரிசு இருக்காது அம்புட்டுதேன்.

உங்களுக்கு இருக்கிற/கிடைக்கிற பெயர் புகழ்,அங்கீகாரம் இதை எல்லாம் பார்த்து ஐடி காரன் நீங்க கோடிகள்ள புரள்றிங்கன்னு ஸ்கெட்ச் பண்ணா லட்சங்கள்ள தான் இருப்பிங்க.

ரெண்டாமிடத்தில் சுபகிரகம் இருந்தா உங்க பேச்சு தேர்தல் அறிக்கை கணக்கா நம்பிக்கை ஊட்டும் விதமா இருக்கும். ஒரு பண்பட்ட மன நல ஆலோசகர் பேச்சு போல இருக்கும். சனம் கன்வின்ஸ் ஆகும்.

எட்டுல சுப கிரகம் இருந்தா அது இரண்டை பார்க்கும்ங்கறதால கடந்த பாராவுல சொன்ன பலன் உங்களுக்கும் பொருந்தும்.என்ன ஒரு வில்லங்கம்னா கொடுக்கல் வாங்கல்ல கறாரா இல்லாம பட்ஜெட்ல துண்டு விழுந்து கிட்டே போகும்.இந்த வேதனையிலயே பொட்டுனு போயிருவிங்க.

பத்துல சுபகிரகம் இருந்தா பார்ட்னரை /ஊழியர்களை கடிந்து கொள்ள முடியாம அவிக வேலைகளையும் நீங்களே இழுத்து போட்டு செய்விங்க. ஜாய்ன்ட் /ஷ்யூரிட்டி/சிபாரிசுனு பண்ணி உங்களுக்கு நீங்களே ஆப்பு வச்சுக்குவிங்க. ஆறுதல் என்னன்னா சம்பாத்தியம் குறைவா இருந்தாலும் பதட்டம் இல்லாம கூலா தொழில் நடக்கும்.

அடுத்த பதிவுல சுபகிரக/பாப கிரக பட்டியலை தரேன். அடுத்தடுத்த பதிவுகள்ல சுப கிரக பாப கிரக காரக தொழில்கள் அதுக்குள்ள மசாக்கிஸ்டிக் /சேடிஸ்டிக் டிவிஷனையும் தரேன்.
உடுங்க ஜூட்டு

S Murugesan
A.Selva says:

வணக்கம் அண்ணே ,
ஆசிரியர் தொழில் மசாக்கிஸ்டிக் தொழில் இல்லை. ஒழுங்காகா பாடம் நடத்தமா மாணவர்களை பாடப்படுத்துர ஆசிரியர் எததன பேரு இருக்காங்க .அது சேடிஸ்டிக் ஃபீல்டு தேன்.

நன்றி

S Murugesan says:

வாங்க செல்வா !
நான் சொன்னது ஆசிரிய தொழில் . ஆ’சிறிய தொழில் இல்லையே? (எப்படி சமாளிக்கிறம் பார்த்தியளா?)

மகிழ்நன் says:

வணக்கம் . தங்கள் பதிவுகளை மிகவும் சிலாகித்து படித்து வருகிறேன். மிகவும் யதார்த்தமாகவும், எளிமையாகவும் பதிவிட்டு வருகிறீர்கள்.ஐந்தாமிடத்தில் பாப கிரகங்கள் இருந்தால் என்ன பலன்கள் என்று கூறினால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.வரும் பதிவுகளில் ஆர்வமுடன் எதிர்பார்கிறேன் .

S Murugesan says:

ஐயா !

ஐந்தில் பாப கிரகம் இருப்பதன் பலனை கடந்த பதிவில் தந்திருக்கிறேன். பாருங்கள்.

SAMPATH S says:

eddula guru neenka sonna madhri velai seiyuthu.

S Murugesan says:

Hm ! seythu thane agonam. wait for remedies.

A.Selva says:

அண்ணே வணக்கம்,

அப்படியே ராகு ,கேது பெயர்ச்சி பலன்களை கொஞ்சம் எழுதுங்களேன்.

நன்றி.

S Murugesan says:

வாங்க செல்வா !
எழுதிருவம்ல

மகிழ்நன் says:

அய்யா ,
வணக்கம். எனது லக்னம் மீனம். குரு கும்பத்தில். கடகத்தில் செவ்வாய், ராகு . துலாத்தில் சுக்கிரன் , சந்திரன். பத்தில் சூரியன், புதன். பதினொன்றில் சனி, கேது. என்னால் ஓரிடத்தில் நிலையாக தொழில் செய்யவோ, வசிக்கவோ இயலவில்லை. இதனை எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு ஆலோசனை கூறவும்.

S Murugesan says:

லக்னாதிபதி 6-8-12 ல் இருந்தாலோ -இந்த அதிபதிகளுடன் சேர்ந்தாலோ முதல்ல இந்த மேட்டருக்கான பரிகாரங்களை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுரனும்.

மினிமம் ஒரு ஒன்னரை வருசம் பரிகாரங்கள் செய்து முடிச்சா பிறகு ஜாதகத்துல உள்ள பிற நல்ல அம்சங்கள் கை கொடுக்க ஆரம்பிச்சிரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *