திரைக்கடலோடி :4 (சாடிசம் -மசாக்கிசம் வெர்சஸ் தொழில் வாய்ப்புகள்)

அண்ணே வணக்கம்ணே !
வருசங்களை சொல்லி ஃப்ளாஷ் பேக் சொல்றது கிழவாடிங்க ஸ்டைல். ஆனா என்ன பண்ணி தொலைக்க? நிகழ்காலத்துக்கான வித்தை கடந்த காலத்துல தானே தேட வேண்டி இருக்கு ?

இந்த கம்ப்யூட்டர் -இணையம் -ப்ளாக் -முக நூல் இத்யாதில்லாம் கை வந்த கலையான பிற்பாடு தண்ணி காட்டுதே இதை -இந்த இடைவெளிய எப்படி ஜஸ்டிஃபை பண்ணிக்கிறதுன்னே புரியல. நான் வழக்கமா ஒரு தியரி சொல்லுவேன். மவுசுக்கு இத்தனை க்ளிக்குன்னு இருக்கும்.அதை டச்சு பண்ணியாச்சுன்னா மவுஸ் நொண்டியடிக்கும். அதை போல நான் எனக்கு அனுமதிக்கப்பட்ட பதிவுகளை எல்லாம் எழுதி முடிச்சுட்டேனா என்னனு கூட தோனுது .

அதே சமயம் நான் போட்ட பதிவுகள் இன்னைக்கிருக்கிற இதே நிலையில சனத்துக்கு எந்தளவுக்கு உதவும்னு சொல்ல முடியல. ஆனால் நான் ப்ளான் பண்ணியிருக்கிற “ஆறில் இருந்து அறுபது வரை ” நூல் முன் வெளியீடு திட்டம் சக்ஸஸ் ஆனால் கு.பட்சம் ஜோதிட பதிவுகளையாவது பட்டியில அடைச்சுரலாம்.

கடவுள் புண்ணியத்துல சனம் முன் பதிவு பண்ணாலும் பண்ணலின்னாலும் போட்டு தள்ளிர்ர பொருளாதார பின்புலம் இருக்கு. இல்லேங்கல.
ஆனால் நிலுவையில உள்ள ஜாதகங்களும் -போட வேண்டிய தொடர்பதிவுக்கான பதிவும் கண்ணா மூச்சி காட்டறத பார்க்கும் போது குறுக்குல குளிர் அலை ஓடுது .

வழக்கமா என் ஆன்மீகம் முப்பது முக்கோடி தேவர்கள் ,பிதுர்கள், முன்னவர் ,பின்னவர்,சம காலர்கள் இப்படி எல்லாரையும் உள்ளடக்கி போற்றி புகழ்வதா இருக்கும். ஆனால் ஒரு கட்டத்துல கிராஃப் படபடன்னு சரிஞ்சு ஆஞ்சனேயர்ல போய் நிற்கும். பிறவு கவுதம புத்தர் – அதிலும் குறிப்பா சத்யமே ஜெயதே .
மறுபடி இங்கிருந்து முதலுக்கு போகும்.இன்னைய தேதிக்கு என் ஆன்மீகம் எந்த நிலையில இருக்குன்னு தெரிஞ்சுக்கனும்னா ஃபேஸ்புக் கவர் பேஜை பார்த்தா போதும்.
_______
சரி..அதுக்காவ வெப்சைட்ட நீண்ட காலத்துக்கு அப்டேட் இல்லாம விடமுடியாதுல்லயா? கடந்த பத்து நாளா நாளைக்கு ரெண்டு வரின்னு ஒப்பேத்தின மேட்டரை பதிவா போட்டுர்ரன்.

இதுக்கு பிறவாவது பழைய ஃப்ளோ வந்துட்டா செரி .இல்லின்னா “பெரியார் வழி தான்”

_____
திரைக்கடலோடிங்கற இந்த தொடர்ல உங்களுக்கான தொழில் எதுன்னு நீங்களே டிசைட் பண்ண தேவையான ஸ்டஃப் தரப்படும்.
உங்களுக்கேத்த தொழில் எதுன்னு டிசைட் பண்ணனும்னா நீங்க மசாக்கிஸ்டா? சாடிஸ்டானு டிசைட் பண்ணனும். மசாக்கிஸ்டுன்னா தன்னை தான் கொன்னுக்கறது . சாடிஸ்டுன்னா அடுத்தவிகளை கொல்றது . தன்னை தான் கொன்னுக்குட்டா தற்கொலை கேஸ் ? ( இப்ப இதை குற்றமில்லைன்னு அறிவிட்டானுவோ) அடுத்தவிகளை கொன்னா கொலைகேஸ் . நெல்ல வேளையா இதை இன்னும் குற்றப்பட்டியல்லருந்து நீக்கல.

மொத்தமா தற்கொலை செய்ய பேசிக்கல் சர்வைவல் இன்ஸ்டிங்ட் அனுமதிக்காது ஆகவே தவணை முறையில கொன்னுக்கறான் மசாக்கிஸ்ட். மொத்தமா கொலை பண்ணா செயில்ல போட்டுருவாய்ங்க. ஆகவே தவணையில கொலை செய்றான் சாடிஸ்டு .

உங்க அடிப்படை கோரிக்கை உங்க தொழில்/உத்யோகம் /வியாபாரத்துல நிறைவேறுதுன்னா பேயா வேலை செய்விங்க. பைசா கொட்டோ கொட்டுன்னு கொட்டும். (அதை வச்சு வாழறது -வாழாதது -அனுபவிக்கிறது -அடுத்தவன் கிட்டே ஏமாந்துர்ரதுல்லாம் வேற டிப்பார்ட்மென்ட் ) மாறுபட்ட ஃபீல்டுல மாட்னா செத்தவன் கையில வெத்திலை பாக்கு கொடுத்த மாதிரி இருப்பிக.

நீங்க சாடிஸ்டா மசாக்கிஸ்டாங்கறதை திறந்த மனசோட யோசிச்சா நீங்களே கெஸ் பண்ணிரலாம். (வீட்ல சம்சாரத்தை கேட்டு வச்சிராதிங்க. சொல்லி வச்சாப்ல எல்லாரோட சம்சாரமும் சாடிஸ்டுன்னு சொல்லி வச்சிருவாய்ங்க.அவ்வ்) அல்லது அடுத்த பாராவுல உள்ள கிரக ஸ்திதி உங்க ஜாதகத்துல இருந்தா இதை வச்சும் டிசைட் பண்ணலாம்.

லக்னம் /ஐந்து / ஏழாமிடத்தில் பாபகிரகங்கள் இருந்தா கொஞ்சம் சாடிஸ்டிக் கேரக்டர் இருக்கும்.அதே சமயம் லக்னத்துல பாப கிரகம் இருந்தா அந்த கிரகம் தொடர்பான வியாதிகளும் வரலாம். இதை எல்லாம் விஸ்தாரமா சொல்லிப்போடலாம்னு தான் பல்லாண்டு வாழ்கனு ஒரு தொடர் ஆரம்பிச்சேன். அதுவும் பாதியில நிற்குது.ஆனால் இந்த கிரகம் கெட்டா இன்ன வியாதிங்கற டேட்டா நிச்சயமா அதுல இருக்கும். பார்த்து வச்சுக்கங்க.

அஞ்சுல பாபகிரகம் இருந்தா மந்த புத்தியாளரா இருப்பிக.வாரிசுகள் மேட்டர்ல நிராசை /அவப்பெயர் /அவமானம்லாம் கூட எதிர்ப்படலாம் .
ரெண்டாமிடத்தில் பாபகிரகம் இருந்தா செய்விங்களோ இல்லையோ இன்னெல்லாம் செய்வேன்னு பயங்கர மிரட்டல்லாம் விடுவிங்க. கூடவே கண்கள் /தொண்டை/வாய் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். குடும்பத்துலயும் அப்பப்ப முட்டிக்கும்.

எட்டுல பாப கிரகம் இருந்தா அது இரண்டை பார்க்கும்ங்கறதால பிபி எகிறிப்போற அளவுக்கு காச் மூச்சுன்னு கத்துவிங்க. வேலை நடக்கும். அதே சமயம் உடல் நலமும் பாதிக்கும். உங்களால பாதிக்கப்பட்டவன் உங்களை போட்டு தள்ளவும் கூடும். டேக் கேர்.

பத்துல பாபகிரகம் இருந்தா பார்ட்னரை /ஊழியர்களை பிழியோ பிழின்னு பிழிஞ்சு ஜூஸ் எடுப்பிங்க. லாபஸ்தானத்துல பாபகிரகம் இருந்தா லாபத்தை பார்க்க என்ன வேணா செய்விங்க.

இந்த தோசைய அப்படி திருப்பி போட்டா அடுத்த பதிவு ரெடி.அஃதாவது மேற்சொன்ன இடங்களில் சுபகிரகங்கள் இருந்தால் என்ன பலன்னு சொல்லனும். அடுத்த பதிவுல சொல்றேன்.

உடுங்க ஜூட்டு.

One Reply to “திரைக்கடலோடி :4 (சாடிசம் -மசாக்கிசம் வெர்சஸ் தொழில் வாய்ப்புகள்)”

maruthappan

27/06/2017 at 7:35 pm

i am waiting for next post tahala

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *