வாசகி விமர்சனத்துக்கு விளக்கம் : 2

call girl

அண்ணே வணக்கம்ணே !

நாம வெளியிட்ட ஆண் பெண் வித்யாசங்கள் நூலை விமர்சித்து வாசகி ஒருவர் அனுப்பிய மெயிலை பிரசுரித்திருந்தேன். அந்த விமர்சனங்களில் ஒரு பகுதிக்கு என் விளக்கத்தையும் தந்திருந்தேன்.

இந்த பதிவில் அடுத்த பகுதிக்கான விளக்கம்.

//நீங்கள் தானே விலைமகளீர் வேண்டும் எனச் சொன்னது//

திருத்தி கொள்ளுங்கள் தயவு செய்து . என் எந்த பதிவிலும் அவர்களை விலைமகளிர் என்று குறிப்பிட்டதே இல்லை. பாலியல் தொழிலாளிகள் என்றே குறிப்பிடுவது வழக்கம்.

நான் வேண்டும்னு சொல்லல. பாலியல் தொழிலாளிகளுக்கு சட்ட அனுமதி தேவைன்னு தான் சொன்னேன். தொழிலாளிகள் என்பது பால் கடந்த சொல். ஆண் -பெண் என இருபாலாரையும் குறிக்கும்.

//….ஏன்னா..அப்ப தான் சமூக குற்றங்கள் குறையும் என்பது உங்கள் வாதம்//

எந்த குற்றத்துக்கும் பின்னணி பாலியல் வறட்சின்னு சிக்மன் ஃப்ராய்ட் சொல்லியிருக்காராம். உள்ளடக்கி வைக்கப்பட்ட காம இச்சைகளே வன்முறையாய் வெடிக்கின்றன என்பதும் அன்னாரின் ஆய்வு முடிவே . என் ஊகம் அல்ல.

//.சபாஷ்.என்ன ஒரு ஆண்மை!!!.அதென்ன உங்களுக்கு மட்டும் விலைமகளீர்?நீங்கள் செயல் படும் அழகிற்கு ,,,கொடுக்கும் சுகத்திற்கு…..பெண்களுக்கு வேண்டாமா இந்த ஆப்ஷன்?இதனால் மட்டும் சமூக குற்றங்கள் அதிகரிக்காதா என்ன?//

ஹ.. வேண்டாம்னு நினைச்சிருந்தா நீங்க உபயோகிச்ச – பெண் பால் சொல்லான விலைமகளிர் என்பதையே நானும் உபயோகிச்சிருப்பேனே? பெண்களுக்கு இந்த ஆப்ஷன் இல்லாவிட்டாலும் சமூககுற்றங்கள் நிச்சயம் அதிகரிக்கும்.

//பெண்களை வெறும் உடம்பாக பார்க்கும் பிரசனைத்தான் அத்தனைக்கும் காரணம்.//

பெண் வீக்கர் செக்ஸ் என்பதை போலவே பெண் என்பவள் உடலும் தான் என்பது யதார்த்தம். யதார்த்தத்தை மறந்த முன்னெடுப்பு என்றும் தீர்வை தரவே தராது .

psychology

ஆண் தன் உடலை மறக்க ( காமம்) தம் போடறான் /சரக்கடிக்கிறான் / 1000 சிசி வண்டியில காத்தா பறக்கிறான்/ அட்வென்சர் பண்றான்/யோகா பண்றான்/தியானம் பண்றான் என்னென்னமோ பண்றான்.ஆனால் ஒரு நாளில்லை ஒரு நாள் அவன் உடம்பு அவனை வச்சு “செஞ்சுருது ” தந்தியில செய்தி ஆயிர்ரான். இதை அவாய்ட் பண்ண அவனுக்கு ஒரு ஆப்ஷன் தேவைப்படுது .

இந்த கருமத்தையே பெண் வேறு பாதையில் செய்கிறாள் . பூசை புனஸ்காரம், விரதம் ,கோவில் ,டிவி சீரியல், அக்கப்போர் , நீ அதுக்கு தான் லாயக்கில்லேன்னு புருசனை எக்கனாமிக்கலா எக்ஸ்ப்ளாய்ட் பண்றது ,தலையில ஏறி உட்கார்ந்து சவாரி பண்றது, மாமனார் மாமியாரை ஓல்டேஜ் ஹோம்க்கு அனுப்பறது ..இப்படி என்னென்னமோ பண்றாள்.ஆனால் ஒரு நாள் உடம்பு அவளை செயிச்சுருது . நடந்தது என்ன நிகழ்ச்சியில ஹீரோயின் ஆயிர்ரா.

இந்த இழவெல்லாம் தடுக்கப்படனும்னா அவளுக்கும் ஒரு ஆப்ஷன் இருக்கிறதே நலம்.

//விலைமகளீர்னு லேசா கடந்துவிட முடியாது.அவளும் பெண் தான்.கட்டினவன் கூட ஒரு முறை படுத்து எந்திருப்பதே கொடுமை என்றால்…அதையே தொழிலா செய்வது என்றால் என்ன ஒரு உறுதி தன்மை வேண்டும் தெரியுமா?//

நீங்கள் ஒரு பெண் என்பதால் ஒவ்வொரு வார்த்தையையும் டபுள் செக் செய்ய வேண்டியதாயிருக்கு .ஆனால் இந்த பாராவுல இதெல்லாம் வேலைக்காகாது .

அவனவன் கொட்டுவாய்ல தான் வருவான். கொட்டிட்டு போயிட்டே இருப்பான். அப்படியே எவனாச்சும் நின்னு விளையாட வந்தாலும் அவனை எப்படி அவுட் ஆக்கறதுங்கற சூட்சுமம் மேற்சொன்ன பாலியல் தொழிலாளிக்கு பால பாடம்.

//அவளது உடம்பு என்ன சிலிகானால் செய்யப்பட்டதா?இரத்தமும் சதையும் கொண்ட கூடம்.அவள் வெறும் துளை அல்ல.//

உங்கள் கருத்து சரியே.ஆனால் அவள் மட்டுமல்ல எந்த பெண்ணும் கீதா கிருஷ்ணன் மாதிரி “எந்த வடிவத்தில் வழிபட்டால் அந்த வழியில் அருள் பாலித்து விடுகிறாள்”

//பெண் உணர்வுகளால் உந்தப் படும் போது மட்டுமே அவள் உடம்பு நெகிழும்…மற்ற பொழுதில் அதில் ஏற்படும் வலி உணர்ந்ததுண்டா உங்கள் செக்ஸ்?//

இதுக்கெல்லாம் செயற்கை லூப்ரிக்கேஷன்ஸ் டஜன் கணக்குல இருக்குங்கோ .

//ஒரு நாளக்கு எத்தனை பேர் என்று கணக்கு உண்டா அவளுக்கு?விலையென்று போனப்பின் வலி சொல்ல முடியுமா?சொன்னால் உங்கள் செக்ஸ் விட்டு விடுமா?//என்னடி பெரிய பத்தினி மாதிரி பேசற //எனும்.பத்தினிகளுக்கென்று தனி உடம்பு …பரத்தைகளுக்கென்று தனி உடம்பா இருக்கிறது?//

இங்கே மனம் ,உடல் அனைத்தையும் கடந்து பொருளாதாரம் /சர்வைவல் இன்ஸ்டிங்ட் முதன்மை பெறுகிறது . முடிந்தவரை தவிர்க்கிறாள்,முடியாவிட்டால் சகிக்கிறாள் . (இந்த ஃபார்முலா பாலியல் தொழிலாளிகளுக்கானது மட்டுமல்ல. பத்தினி பெண்டிருக்கும் பொருந்துவதே -சர்வைவல் இன்ஸ்டிங்ட்)

நீங்கள் சொல்லும் வலி நான் சொல்லும் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் மூலம் முழுக்க இல்லாவிட்டாலும் 99.99 சதவீதம் தடுக்கப்படும் .

//பத்தினிகளுகென்று என்ன அப்படி புரொடெக்‌ஷன்?//

ஒரு வெங்காயமும் கிடையாது . ஆனால் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் என்பது சாத்தியமானால் அவர்களுக்கான ப்ரொட்டெக்ஷன் சாத்தியப்படும்.

//உங்களுடைய கரெப்ஷனின் வடிவம் தானே உங்களால் விலைக்கு வாங்கப் பட்ட அந்த மகளீர்?அவர்களது ப்ரொடெக்‌ஷனை யார் செய்வது?//

ஒரு தொழில் சட்டவிரோதமானதாக இருக்கும் வரை பாதுகாப்பெல்லாம் பூஜ்ஜியமாக இருக்கும் . இதற்கான தீர்வே பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்

//பெண்களின் ஒரு உதிரத் துளிக்குள் இந்த பிரபஞ்சமே அடக்கம்.அந்தத் துளியில் உருவானது தான் உங்கள் சூப்பர் செக்ஸ்.//

சக்தி இல்லையேல் சிவமில்லை .சிவமில்லையேல் சக்தி இல்லை . நாத விந்துகலாதீ நமோ நமோ என்று தான் அருணகிரி நாதரே பாடி வைத்திருக்கிறார்.

//அவளின் ஒரு செல்லின் வலிதாங்கு திறன் கூட இல்லாத நீங்கள் இனி பெண்களைப் பார்த்து வீக்கர் செக்ஸ் என்று சொல்வதை நிறுத்துங்கள்.//

மனித உடல் அற்புதமானது . ஆணுக்கு வலி தாங்கும் அவசியம் ஏற்படும் போது அவன் செல்களுக்கும் அந்த “திறமை”ஏற்பட்டு விடுகிறது . இதில் ஆண் பெண் வித்யாசம் என்பது ப்ரிலிமினரி ஸ்டேஜ்ல மட்டும் தான்.

//அவளிடம் சுயநலமில்லாத,அகந்தையில்லாத,ஆணவமில்லாத அவ்வளவு நீங்கள் ஆண் என்பதை கூட மறந்து நிபந்தனையில்லாத அன்பு காட்டுங்கள்…..அது மட்டுமே அவளுக்கு வேண்டும்…….அதை மட்டும் தான் உங்களால் அவளுக்கு கொடுக்க முடியும்…//

அட்சர சத்தியம் .வழி மொழிகிறேன்.

//மற்றதனைத்தும் அவளில் இருந்து அவளே பெற்றுக் கொள்வாள்.தன்னைத் தின்று தானே வளரும்,,,மலரும் பட்டு பூச்சி அவள்.//

இப்படி இன்ட் ராவர்ட்டாக இருப்பது ஒரு கட்டம் வரை பெருமை தரலாம்.ஆனால் இதுவே பலவீனத்தின் விளைவு தான் என்பதால் ஒரு நாள் வெடிக்கும்.

//அவளது சிறகுகளை கொய்துவிடாமல் அவளை சிறகடிக்க விடுங்கள்//

கொய்து விடுவார்கள் என்று அஞ்சி சிறகுகளையே விரிக்காமல் வைத்திருந்தால் என்னத்த செய்ய?

//….உங்கள் வீடும் இந்த நாடும் தேன் சுமக்கும் சோலையாவது நிச்சயம்.//

அந்த நாள் விரைவில் வரவே என் பேச்சும் எழுத்தும் .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.