வாசகியின் விமர்சனமும் -அடியேன் விளக்கமும்

mensus

அண்ணே வணக்கம்ணே !

கடந்த பதிவில் வாசகி ஒருவரின் விமர்சன மெயிலை வெளியிட்டிருந்தேன். அதன் ஒரு பகுதிக்கான என் விளக்கமே இந்த பதிவு .

____________

அம்மா !
அடியேன் வெளியிட்ட ஆண்பெண் வித்யாசங்கள் நூலை பற்றிய தங்கள் விமர்சனம் கிடைக்கப்பெற்று அதனை தாங்கள் கோரிய வண்ணமே வலை தளத்திலும் பதிப்பித்துவிட்டேன். ( நீங்கள் அறிவுறுத்திய படி தங்கள் ஊர் – பெயர் இத்யாதிகளை சேர்க்காமைக்கு/ வெட்டி விட்டமைக்கு மன்னிக்கவும். காரணத்தை இறுதியில் தருகிறேன்)

விரிவான விமர்சனத்தை முன் வைத்தமைக்கு முதலில் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இனி தங்கள் விமர்சனங்களுக்கான என் பதில்கள்.

//நீங்கள் வெளியிட்ட 4 நூல்களில் ஆண் பெண் வித்யாசங்கள் என்ற நூலை படித்தேன்.எதையோ சொல்ல முன் வருகிறீர்கள் .ஆனாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெண் வீக்கர் செக்ஸ் என்றே ஆரம்பித்திருக்கிறீர்கள் . இந்த ஆரம்பம் தான் சினமுற செய்கிறது .//

ஆரம்பம் தான் அப்படி ஆனால் அதே நூலில் பல தருணங்களின் பெண்ணின் வலிமையை – அவள் தனித்துவத்தை -இயற்கையுடனான நெருக்கத்தை , ஆன்மாவின் குரலுக்கு செவி சாய்க்கும் தன்மையை எல்லாம் விரிவாகவே சொல்லியிருக்கிறேன்.
யதார்த்த நிலையை புரிந்து கொண்டாலன்றி தீர்வுகள் நோக்கிய பயணம் அசாத்தியம். கலைஞர் ஒரு வானளாவிய ஆளுமை . அவரது வலிமைகள் நூற்றுக்கு 98 அமானுஷ்யமானவை . கின்னஸ் சாதனைக்கே தகுதி படைத்தவை..ஆனால் அவரது ஒன்றிரண்டு பலவீனங்களை குறி பார்த்து ஒரு கூட்டம் தொடர்ந்து அடித்து அவமானப்படுத்தியபடியே இருக்கிறது .

98 பெருசா? 2 பெருசான்னா 98 தான் பெருசு . இது லாஜிக்.ஆனால் அந்த 2 மேட்டர் தான் இந்த 98 மேட்டரையும் அவுட் ஆஃப் ஃபோக்கஸுக்கு கொண்டு போகுது .

பெண் வீக்கர் செக்ஸ் என்பது உயிரியல் உண்மை . உயரம் ,எடை ,ஹீமோ குளோபின் அளவு இப்படி பலப்பல விஷயங்களில் வீக் . யதார்த்தம் இதுவே . இவை பெண்ணை முடக்கி போட்டு விடவில்லை . சாதனை படைத்த பெண்கள் எல்லாம் இந்த பலவீனங்களுடனேயே வென்றிருக்கிறார்கள். இவர்கள் வெற்றிக்கு காரணம் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு தீர்வுகள் நோக்கி பயணித்ததே.

இந்த பலவீனம் என்பது பொருட்படுத்த தேவையற்ற அளவுக்கு / அலட்சியப்படுத்த கூடிய அளவுக்கு சொற்பமானதே.பிரச்சினை அதுவல்ல. இந்த பலவீனம் அவளது ஒட்டு மொத்த மனவியலை -சிந்தனை போக்கை பாதிக்கிறது என்பதே பிரச்சினை. அவள் மேற்சொன்ன தன் பலகீனங்களை உணர்ந்தாலன்றி தன் மனவியலை -சிந்தனை போக்கை அதிலிருந்து “தனிமை”ப்படுத்த முடியாது .

மனவியலும் -சிந்தனை போக்கும் மேற்படி பலகீனங்களின் தாக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டால் மேற்படி பலகீனங்கள் ஒரு பொருட்டே அல்ல. மேலும் அவற்றை குறைத்து கொள்ளவும் -ஏன் மாற்றி கொள்ளவும் வழிவகை ஏற்படும்.

அதற்காகவே வீக்கர் செக்ஸ் என்ற விஷயத்தை பல முறை பிரஸ்தாபித்திருக்கிறேன். காரணத்தை அறிந்தாலே அன்றி காரியத்தை கணிக்க முடியாது . மாற்ற முடியாது .

//கொஞ்சம் பேஸுடன் கூடிய குரலும் , ஒரு பிடி உயரமான உருவமும் , துடைப்பக்கட்டை போல் மீசையும் இருந்து விட்டால் ஆண் ஸ்ட் ராங்கர் செக்ஸ். இவை இல்லாத பெண் வீக்கர் செக்ஸா?

உருவம். குரல் முக்கியமில்லை. செயல் முக்கியம் அன்பரே..நான் செக்ஸை சொல்லவில்லை….அது இல்லாவிட்டாலும்,அதற்கு முடியாவிட்டாலும் எந்த ஒரு பெண்ணும் தன் துணையை வெறுப்பதில்லை விட்டு பிரிவதிலை.அது அவளுடைய வாழ்வில் ஒரு சின்ன பகுதி அவ்வளவு தான்.//

நான் ஏதோ பெண் வீக்கர் செக்ஸ் என்று கூறி பெண்ணினத்துக்கு பெரிய அ நீதி இழைக்கிறேன் என்பது போல் பொங்கி தீர்த்த நீங்களே சறுக்கியிருக்கிறீர்கள்.

உயிர்களின் முழு முதற்கடமை உயிர் வாழ்தல் – அந்த உயிர் வாழ்தலுக்கான உந்துதலை தருவதே செக்ஸ் தான். இது ஒவ்வொரு உயிருக்கும் இயற்கை தந்திருக்கும் உரிமை .

இதை விட்டு கொடுத்தலோ – சின்ன பகுதி என்று கன்வின்ஸ் செய்து கொள்வதோ நான் அரிசி கொடுக்கிறேன் – நீ பருப்பு கொடு பாணி அரசியல் தான்.

இது குடும்பம், சமூகம் , பொருளாதாரம் முதற்கொண்டு அரசியல் வரை அனைத்தையும் மோசமாக பாதிக்கும். மனவியல் ரீதியாக பார்க்கும் போது ?? சாமியாடுதல் முதற்கொண்டு ஹிஸ்டீரியா போன்ற தீவிரமான வியாதிகள் வரை கொண்டு செல்லும்.

தன் உரிமைக்காக போராடும் வலிமை இருந்தும் போராடாது இருந்து விடுவது வேறு . ஆனால் கல்வி, தொழிற்பயிற்சி,வேலைவாய்ப்பு,பொருளாதார சுதந்திரமற்ற பெண் இப்படி விட்டு கொடுப்பதும் – இதையே பெருமைக்குரியதாய் கருதுவதும் பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.

//தன் நிலை என்ன? தன்னால் என்ன பெற முடியும்,,,தன்னால் என்ன தர முடியும் என்பதை ஒரு பெண்ணானவள் உணர்ந்தே இருக்கிறாள்.//

இது இயலாமையின் காரணமாய் நிகழும் போது சர்வைவல் இன்ஸ்டிங்ட் என்ற ஒற்றை வரியில் அடங்கி போகிறது .

//தன் துணை என்ன செய்வான் எப்படி செய்வான் என்பதை அவள் கணித்து விட்டாளேயானால் அதற்கு தகுந்தாற் போல் தன் உடலை டுயூன் செய்து செட் செய்து விடுகிறாள்.அதன் பிறகு அவள் உடல் அதற்கு தகுந்தாற் போல் தான் ரியாக்ட் செய்கிறது.அதனால் தான் அவன் என்ன செய்தாலும் (அ) எப்படி செய்தாலும் அவள் உடல் தாங்கிக் கொள்கிறது,,,வாங்கிக் கொள்கிறது.//

ஓஷோ சொன்ன தவளை கதை தான் ஞா வருகிறது .இயலாமை காரணமாய் -முயலாமை காரணமாய் ஏற்படும் இந்த நிலையை கூட பெண் வீக்கர் செக்ஸ் அல்ல என்று ஸ்தாபிக்க உபயோகித்திருக்கிறீர்கள் .

//என்னமோ பேச்சுக்கு பேச்சு பெண்களை வீக்கர் செக்ஸ் என்று உங்கள் ஆண்-பெண் வித்யாசத்தில் சொல்றீங்க..ஹலோ யாரு வீக்கர் செக்ஸ்….பெண்களா…உடல் பலம் அதிகமா உங்களுக்கு(ஆண்களுக்கு)..எங்கே ஒரு மாதவிடாயின் வலியை தாங்கிப் பாருங்களேன் பார்ப்போம்.தன் முனைப்பே இல்லாமல் நாலைந்து நாட்கள்,,,அதிலும் திருமணத்திற்கு முன்பு பத்துபதினோரு நாட்கள் கூட ஏதோ பைப்பிலிருந்து தண்ணி கொட்டுவது போல ஊறி வரும் உதிர போக்கு தாங்க முடியுமா உங்கள் செக்ஸால்?

தும்மினால்,இருமினால் கூட வந்து விழும் உதிரக் கட்டிகளை பொறுத்துக் கொள்ள முடியுமா உங்கள் செக்ஸால்? நாலு நாள் சளி பிடித்தால் கூட என்னா அலட்டு அலட்டுறீங்க?இத்தனை இம்சைகள் இருந்தாலும் ஒரு வேலையக் கூட தவிர்த்துவிடாமல்,,,தவிர்க்க முடியாமல்,,,அத்தனையும் செய்து ..படிக்கும் பருவமாக இருந்தால் தன் படிப்பிலும் முனைப்புகாட்டி …குடும்பத்தில் இருந்தால் தன் ஒட்டு மொத்த குடும்ப வேலைகளையும் செய்து தன்னிலிருந்து வரும் தாரையொழுக்கின் சுவடு தெரியாமல் வாழும் பெண்களா வீக்கர் செக்ஸ்?//

ஒரு ஆரோக்கியமான உடலில் -அது ஆரோக்கியமான தாக பராமரிக்கப்பட்டால் அதன் மாதவிலக்கு போன்ற அடிப்படையான செயல்பாடுகள் இப்படி நீட்டி முழக்கி விவரிக்கும் அத்தனை அசௌகரியமானதாக இருக்கும் என்று தோன்றவில்லை.
இயற்கை தந்த பலவீனத்தோடு – ஜீன் வழி குறைபாடுகள் – சத்துக்குறைவு -ரத்தக்குறைவு இத்யாதி காரணங்கள் அதை நரகமாக்கவும் கூடும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதை எல்லாம் அட்ரஸ் செய்து தீர்வுகளை நோக்கி பயணிக்காமல் இதையும் ஒரு வாதமாக வைப்பது கடைந்தெடுத்த மசாக்கிசம்.

ஐந்தறிவே படைத்த மிருகங்களிலும் இது நிகழ்கிறது என்பதை கவனத்தில்கொள்ளவும் . அவை வெகு சாதாரணமாக இதை எதிர்கொள்கின்றன.தொடர்ந்து ரத்ததானம் செய்யும் என் போன்றோர் மா. வி அனுபவத்தின் ட்ரெய்லரையாவது சந்தித்துள்ளோம். ஆண்களில் பெப்டிக் அல்சர் / மூலம் / ஃபிஸ்டுலா / ப்ளட் வாமிட்டிங்ஸ்/ ப்ளட் மோஷன்ஸ் உள்ளிட்டவற்றை எதிர்கொண்டவர்களும் உண்டே .
Delivary

//மன பலமாவது உண்டா உங்கள் சூப்பர் செக்ஸுக்கு?….பிரசவம்?அதிலேயே இருக்கே பிழையாவிட்டால் சவம் என்று.அந்த வேதனகளை கற்பனையால் கூட உங்கள் செக்ஸால் தாங்கிக் கொள்ள முடியாது.இந்த பிரசவம் என்று ஒன்று இல்லாவிட்டால் உங்கள் பிரவேசம் எப்படி?//

மறுபடி மிருகங்களை உதாரணம் காட்ட வேண்டி வருகிறது மன்னிக்கவும். ஏன் ஆறறிவு பெற்ற மனித குலத்தில் தான் பெண்கள் எத்தனை படி நிலைகளில் வாழ்கிறார்கள்? ஒரு புறம் பிரசவ கால விடுப்பு அதிகரிக்கப்பட்டு கொண்டே செல்ல ஒரு புறம் தானே பிரசவித்து – சிசுவை சுத்தப்படுத்தி மரத்தில் தூளி கட்டி உறங்க வைத்துவிட்டு கூலி வேலையை தொடரும் படி நிலையிலும் பெண்கள் வாழ்கிறார்களே?

ரோஜாவாக வரம் வாங்கிவிட்டு முட்களுக்கு முனகினால் எப்படி ? இயற்கை நிகழ்வு ஒன்றை வாதமாக வைப்பது ஏற்க தக்கதாக இல்லை .

//என்ன பெரிதாக செய்து அவளை உங்களால் சந்தோஷப்படுத்திவிட முடியும்?நீங்கள் சம்பாதிக்கும் பணம்?நீங்கள் இல்லாவிட்டால் அவள் செத்துவிடப் போகிறாளா?புருஷன் செத்ததும் பிள்ளைகளைக் கொன்று தானும் செத்துவிடுகிறாளா என்ன?ஆலமரமாய் நின்று அரவணத்து காப்பாற்றுகிறாள்.//

நாளதுவரை கணவனின் நிழலாகவே வாழ்ந்து விட்டவள் அவன் மறைவுக்கு பிறகு அவன் “பாத்திரத்தை”ஏற்று செயல்படும் போது அதுவரை உபயோகிக்க படாத “ஆண்மை” ஊற்றாய் கிளம்புகிறது .இதன் பின்னும் இருப்பது சர்வைவல் இன்ஸ்டிங்ட் தான்.

கணவன் தன் நட்புக்கோ /உறவுக்கோ பரிதாபப்பட்டு செய்யும் பண உதவியை கூட / கடன் என்று சொல்லி கன்வின்ஸ் செய்ய வேண்டி வருவது ..பெண்ணின் வீக்கர் செக்ஸ் நிலை காரணமாகத்தான் என்பதை மறுக்க முடியுமா?ஒரு கட்டத்தில் தன் சர்வைவலுக்காக கணவனிடமே எனக்கு பணம் தான்யா முக்கியம் என்று டிக்ளேர் செய்வதும் உண்டே.. பிள்ளைகளை கொல்லாது வளர்த்தெடுப்பதும் ஒரு சர்வைவல் இன்ஸ்டிங்ட் தான்.

//அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள்.நீங்கள் வாங்கித் தரும் நகைநட்டு?துடைத்து விட்டாற் போலிருந்தாலும் தன் துணையை,அவன் மானத்தை,மரியாதையை தன் நகையாக பூட்டிக் கொள்வாள்.//

ஹ ஹா கணவன் சொந்த உழைப்பில் வாங்கி போட்ட நகைகளை கூட அவன் அஞ்சு -பத்துக்கு அல்லாடும் சமயத்தில் கூட கழட்டி கொடுக்காத பெண்கள் லட்சம். காரணம் அவள் வீக்கர் செக்ஸ் என்பதே.

//சொத்து சுகம்?பிளாட்பாரத்தில் கூடத்தான் குடும்பங்கள் வாழ்கின்றன.//

லேசா ஜூம் பண்ணி பாருங்க .அங்கும் பளிச்சிடும் சர்வைவல் இன்ஸ்டிங்ட் .
//எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருக்கின்றன.அது போல் பெண்களிலும் உண்டு தான்.அது பற்றி பிரச்சினையில்லை.பொதுவாக தானே வீக்கர் செக்ஸ் என்று பேசுகிறீர்கள்.//

நானும் விதிவிலக்குகளை பற்றி பேசவே இல்லை. பொதுவாகத்தான் பேசுகிறேன் . பெண் வீக்கர் செக்ஸ் தான். அவள் பலகீனங்களை -யதார்த்த நிலையை உணர்ந்து மீண்டு உயர வேண்டும் என்ற அக்கறையில் தான் பேசுகிறேன்.

குறிப்பு:
பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி குறித்த என் கருத்துகளையும் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். அவை குறித்த என் விளக்கங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.