பெண் வீக்கர் செக்ஸா? : பொங்கும் வாசகி

faceless

அண்ணே வணக்கம்ணே !

இந்த அண்ணே வணக்கம்லயே ஒரு மேல் சேவனிசம் இருக்கு . அக்கா வணக்கம்க்கானும் சேர்த்து போடலாம்ல. பலமுறை இப்படி சேர்த்து போடலாம்னு தோனும்.

ஆனால் நமக்கு இந்த அக்கா ,தங்கை விளிப்பில் ஒரு ஹிப்பாக்கிரசி -ஒரு வித சந்தேகம் இருக்கிறதா தோனும். பட்டுனு அந்த எண்ணத்தை மாத்திக்குவன்.

நிற்க . நாம நம்ம பதிவுகள்ள ஒரு ஆரம்பம் போல “பெண் ஃபிசிக்கலா வீக்கு”னு ஆரம்பிப்பம். அதன் ஃபினிஷிங் சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்குங்கறதுதானே.

தெரியாத்தனமா நாம பப்ளிஷ் பண்ண நாலு புஸ்தவங்கள்ள ஆண் பெண் வித்யாசங்களை படிச்சுட்டு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வாசகி அனுப்பின மெயிலை அப்படியே தந்திருக்கன்.

என்னதான் நிர்வாண உண்மைகள்னு பேரை வச்சு ப்ளாக் எழுதினாலும் -சைக்காலஜி -செக்ஸாலஜினு ரவுண்டு கட்டி அடிச்சாலும் பெண் என்றால் ஒரு சாஃப்ட் கார்னர் நமக்குண்டு. இதுவும் மேல் சேவனிசத்தின் ஒரு பகுதிதான் போல. அவ்வ்வ்

மொதல்ல வாசகியின் கடிதத்தை படிச்சு வைங்க பிறவு என் பதிலை சொல்றேன். நாளிது வரை நம்ம எழுத்துக்களை தொடர்ந்து படிச்சவிக ஆராச்சும் பதில் கொடுக்க முன் வந்தாலும் மகிழ்ச்சி.

ஓவர் டு பெயர் தெரிவிக்க விரும்பாத வாசகி

____________

ஐயா !

நீங்கள் வெளியிட்ட 4 நூல்களில் ஆண் பெண் வித்யாசங்கள் என்ற நூலை படித்தேன்.எதையோ சொல்ல முன் வருகிறீர்கள் .ஆனாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெண் வீக்கர் செக்ஸ் என்றே ஆரம்பித்திருக்கிறீர்கள் . இந்த ஆரம்பம் தான் சினமுற செய்கிறது .

கொஞ்சம் பேஸுடன் கூடிய குரலும் , ஒரு பிடி உயரமான உருவமும் , துடைப்பக்கட்டை போல் மீசையும் இருந்து விட்டால் ஆண் ஸ்ட் ராங்கர் செக்ஸ். இவை இல்லாத பெண் வீக்கர் செக்ஸா?

உருவம். குரல் முக்கியமில்லை. செயல் முக்கியம் அன்பரே..நான் செக்ஸை சொல்லவில்லை….அது இல்லாவிட்டாலும்,அதற்கு முடியாவிட்டாலும் எந்த ஒரு பெண்ணும் தன் துணையை வெறுப்பதில்லை விட்டு பிரிவதிலை.அது அவளுடைய வாழ்வில் ஒரு சின்ன பகுதி அவ்வளவு தான்.

தன் நிலை என்ன? தன்னால் என்ன பெற முடியும்,,,தன்னால் என்ன தர முடியும் என்பதை ஒரு பெண்ணானவள் உணர்ந்தே இருக்கிறாள்.தன் துணை என்ன செய்வான் எப்படி செய்வான் என்பதை அவள் கணித்து விட்டாளேயானால் அதற்கு தகுந்தாற் போல் தன் உடலை டுயூன் செய்து செட் செய்து விடுகிறாள்.அதன் பிறகு அவள் உடல் அதற்கு தகுந்தாற் போல் தான் ரியாக்ட் செய்கிறது.அதனால் தான் அவன் என்ன செய்தாலும் (அ) எப்படி செய்தாலும் அவள் உடல் தாங்கிக் கொள்கிறது,,,வாங்கிக் கொள்கிறது.என்னமோ பேச்சுக்கு பேச்சு பெண்களை வீக்கர் செக்ஸ் என்று உங்கள் ஆண்-பெண் வித்யாசத்தில் சொல்றீங்க..

.ஹலோ யாரு வீக்கர் செக்ஸ்….பெண்களா…உடல் பலம் அதிகமா உங்களுக்கு(ஆண்களுக்கு)..எங்கே ஒரு மாதவிடாயின் வலியை தாங்கிப் பாருங்களேன் பார்ப்போம்.தன் முனைப்பே இல்லாமல் நாலைந்து நாட்கள்,,,அதிலும் திருமணத்திற்கு முன்பு பத்துபதினோரு நாட்கள் கூட ஏதோ பைப்பிலிருந்து தண்ணி கொட்டுவது போல ஊறி வரும் உதிர போக்கு தாங்க முடியுமா உங்கள் செக்ஸால்?

தும்மினால்,இருமினால் கூட வந்து விழும் உதிரக் கட்டிகளை பொறுத்துக் கொள்ள முடியுமா உங்கள் செக்ஸால்? நாலு நாள் சளி பிடித்தால் கூட என்னா அலட்டு அலட்டுறீங்க?இத்தனை இம்சைகள் இருந்தாலும் ஒரு வேலையக் கூட தவிர்த்துவிடாமல்,,,தவிர்க்க முடியாமல்,,,அத்தனையும் செய்து ..படிக்கும் பருவமாக இருந்தால் தன் படிப்பிலும் முனைப்புகாட்டி …குடும்பத்தில் இருந்தால் தன் ஒட்டு மொத்த குடும்ப வேலைகளையும் செய்து தன்னிலிருந்து வரும் தாரையொழுக்கின் சுவடு தெரியாமல் வாழும் பெண்களா வீக்கர் செக்ஸ்?

மன பலமாவது உண்டா உங்கள் சூப்பர் செக்ஸுக்கு?….பிரசவம்?அதிலேயே இருக்கே பிழையாவிட்டால் சவம் என்று.அந்த வேதனகளை கற்பனையால் கூட உங்கள் செக்ஸால் தாங்கிக் கொள்ள முடியாது.இந்த பிரசவம் என்று ஒன்று இல்லாவிட்டால் உங்கள் பிரவேசம் எப்படி?

என்ன பெரிதாக செய்து அவளை உங்களால் சந்தோஷப்படுத்திவிட முடியும்?நீங்கள் சம்பாதிக்கும் பணம்?நீங்கள் இல்லாவிட்டால் அவள் செத்துவிடப் போகிறாளா?புருஷன் செத்ததும் பிள்ளைகளைக் கொன்று தானும் செத்துவிடுகிறாளா என்ன?ஆலமரமாய் நின்று அரவணத்து காப்பாற்றுகிறாள்.அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள்.நீங்கள் வாங்கித் தரும் நகைநட்டு?துடைத்து விட்டாற் போலிருந்தாலும் தன் துணையை,அவன் மானத்தை,மரியாதையை தன் நகையாக பூட்டிக் கொள்வாள்.

சொத்து சுகம்?பிளாட்பாரத்தில் கூடத்தான் குடும்பங்கள் வாழ்கின்றன.எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருக்கின்றன.அது போல் பெண்களிலும் உண்டு தான்.அது பற்றி பிரச்சினையில்லை.பொதுவாக தானே வீக்கர் செக்ஸ் என்று பேசுகிறீர்கள்.

நீங்கள் தானே விலைமகளீர் வேண்டும் எனச் சொன்னது….ஏன்னா..அப்ப தான் சமூக குற்றங்கள் குறையும் என்பது உங்கள் வாதம்.சபாஷ்.என்ன ஒரு ஆண்மை!!!.அதென்ன உங்களுக்கு மட்டும் விலைமகளீர்?நீங்கள் செயல் படும் அழகிற்கு ,,,கொடுக்கும் சுகத்திற்கு…..பெண்களுக்கு வேண்டாமா இந்த ஆப்ஷன்?இதனால் மட்டும் சமூக குற்றங்கள் அதிகரிக்காதா என்ன?

பெண்களை வெறும் உடம்பாக பார்க்கும் பிரசனைத்தான் அத்தனைக்கும் காரணம்.விலைமகளீர்னு லேசா கடந்துவிட முடியாது.அவளும் பெண் தான்.கட்டினவன் கூட ஒரு முறை படுத்து எந்திருப்பதே கொடுமை என்றால்…அதையே தொழிலா செய்வது என்றால் என்ன ஒரு உறுதி தன்மை வேண்டும் தெரியுமா?

அவளது உடம்பு என்ன சிலிகானால் செய்யப்பட்டதா?இரத்தமும் சதையும் கொண்ட கூடம்.அவள் வெறும் துளை அல்ல.பெண் உணர்வுகளால் உந்தப் படும் போது மட்டுமே அவள் உடம்பு நெகிழும்…மற்ற பொழுதில் அதில் ஏற்படும் வலி உணர்ந்ததுண்டா உங்கள் செக்ஸ்?

ஒரு நாளக்கு எத்தனை பேர் என்று கணக்கு உண்டா அவளுக்கு?விலையென்று போனப்பின் வலி சொல்ல முடியுமா?சொன்னால் உங்கள் செக்ஸ் விட்டு விடுமா?//என்னடி பெரிய பத்தினி மாதிரி பேசற //எனும்.பத்தினிகளுக்கென்று தனி உடம்பு …பரத்தைகளுக்கென்று தனி உடம்பா இருக்கிறது?பத்தினிகளுகென்று என்ன அப்படி புரொடெக்‌ஷன்?உங்களுடைய கரெப்ஷனின் வடிவம் தானே உங்களால் விலைக்கு வாங்கப் பட்ட அந்த மகளீர்?அவர்களது ப்ரொடெக்‌ஷனை யார் செய்வது?

பெண்களின் ஒரு உதிரத் துளிக்குள் இந்த பிரபஞ்சமே அடக்கம்.அந்தத் துளியில் உருவானது தான் உங்கள் சூப்பர் செக்ஸ்.அவளின் ஒரு செல்லின் வலிதாங்கு திறன் கூட இல்லாத நீங்கள் இனி பெண்களைப் பார்த்து வீக்கர் செக்ஸ் என்று சொல்வதை நிறுத்துங்கள்.

அவளிடம் சுயநலமில்லாத,அகந்தையில்லாத,ஆணவமில்லாத அவ்வளவு நீங்கள் ஆண் என்பதை கூட மறந்து நிபந்தனையில்லாத அன்பு காட்டுங்கள்…..அது மட்டுமே அவளுக்கு வேண்டும்…….அதை மட்டும் தான் உங்களால் அவளுக்கு கொடுக்க முடியும்…

மற்றதனைத்தும் அவளில் இருந்து அவளே பெற்றுக் கொள்வாள்.தன்னைத் தின்று தானே வளரும்,,,மலரும் பட்டு பூச்சி அவள்.அவளது சிறகுகளை கொய்துவிடாமல் அவளை சிறகடிக்க விடுங்கள்….உங்கள் வீடும் இந்த நாடும் தேன் சுமக்கும் சோலையாவது நிச்சயம்.

2 Replies to “பெண் வீக்கர் செக்ஸா? : பொங்கும் வாசகி”

Deenathayalan

03/06/2017 at 2:19 pm

I Respect and Salute these Post Sister.Nice post & Wish u all the best.

Reply

    Mayuranathan

    06/06/2017 at 12:03 pm

    சகோதரியின் கட்டுரையினை படித்தேன் அவரது பதிவு மிக சரியானது . நான் அவரது ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆதரிக்கிறேன் . நல்ல தெளிவான தைரியமான கருத்துக்கள்

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.