Tags   

Categories  அனுபவஜோதிடம் தொழில் யோகம்

திரைக்கடலோடி :3 (தொழில் யோகம்)

killer

அண்ணே வணக்கம்ணே !
சனம் ஸ்தூலமா என்ன செய்தாலும் அதன் பின்னாடி இருப்பது இரண்டே இச்சைகள் .கொல்லுதல் -கொல்லப்படுதல் உங்க ஜீவனாதிபதி நைசர்கிக பாப கிரகமானால் உங்கள் தொழில்-உத்யோக-வியாபார முயற்சிகளின் பின்னே கொல்லும் இச்சை இருக்கலாம். நைசர்கிக பாப கிரகமானாலும் அது லக்னாத் சுபகிரகமானால் உங்கள் கொல்லும் இச்சையால் தூண்டப்பட்ட தொழில்-உத்யோக-வியாபார முயற்சிகள் வெற்றி கண்டு பைசா புரளும்.ஆனால் அந்தகிரகம் தொடர்பான வியாதிகள் வரலாம். மேற்படி நைசர்கிக பாப கிரகம் லக்னாத்தும் பாபகிரகமானால் மொக்கை தான்.

உங்க ஜீவனாதிபதி நைசர்கிக சுபகிரகமானால் தொழில்-உத்யோக-வியாபார முயற்சிகளின் பின் உங்களது கொல்லப்படும் இச்சை இருக்கும். அது லக்னாத்தும் சுபகிரகமானால் பைசா பெரிய அளவில் புரளாவிட்டாலும் அது தொடர்பான வியாதிகள் வராது – வாழ்வில் நிம்மதி இருக்கும் -பெயர்புகழ் கிடைக்கும்.
உலகத்துல உள்ள தொழில்,வியாபார,உத்யோகங்களை இரண்டு வகையா பிரிக்கலாம் .ஒன்று மக்களின் கொல்லும் இச்சையை நிறைவேற்றுபவை -இரண்டு மக்களிலான கொல்லப்படும் இச்சையை நிறைவேற்றுபவை .இந்த தொடரை எத்தனை பேர் சின்சியரா ஃபாலோ பண்றாய்ங்கன்னு தெரிஞ்சுக்க சின்ன கேள்வி .

உங்கள் பார்வையில் மேற்படி இரண்டு வகை தொழில் உத்யோக வியாபாரங்களுக்கு உதாரணம் சொல்லுங்க பார்ப்பம்.
______

நியூ அட்மிஷன்ஸுக்கு தலை கால் புரியாதுங்கறதால சுபர் -பாபர் குறித்த டேட்டா கீழே தரப்படுகிறது .

நைசர்கிக சுபத்வ பாபத்வம்:
குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக சுபகிரகங்கள்.சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக பாப கிரகங்கள்.

லக்னாத் சுபத்வ பாபத்வம்:
அவிகவிக லக்னத்தை பொருத்து கிரகங்களோட சுபத்வம் -பாபத்வம் டிசைட் ஆகும். இதைத்தேன் லக்னாத் சுபத்வ பாபத்வம்னு சொல்றோம். மேஷம் முதலான 12 லக்னங்களுக்கும் பாபர் யார் சுபர் யார்ங்கற டேட்டா இங்கே இருக்கு.

print

759 total views, 1 views today

S Murugesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *