திரைக்கடலோடி : 2 ( தொழில்யோகம்)

Jal-tarang-Jaltarang-Jalatarangam-o-Jalatharangam-02

அண்ணே வணக்கம்ணே !
இந்த தொழில் யோகம் தொடரை ஆரம்பிச்சதே டூ இன் ஒன்னுங்கோ . இப்படி பார்த்தா மைக்ரோ லெவல்ல ஒவ்வொரு ஜாதகரும் தொழிலில் சிறக்க உதவும். அதே சமயம் ஒவ்வொரு ஜாதகரும் தொழிலில் சிறந்தா? நாடே சிறக்கும்.

மேம்போக்கா பார்த்தா தொழில் எதுக்கு? பைசாவுக்காவ. பைசா எதுக்கு? தன்+ தன் குடும்பத்தோட வவுத்தை ரொப்பன்னு தோனும்.
எங்க காலத்துல ஆறு வயசு முடிஞ்சாதேன் ஒன்னாம் வகுப்புல சேர்ப்பாய்ங்க. இப்ப எப்படி? அஞ்சுல யுகேஜி , நாலுல எல்.கே.ஜி, மூனுல ப்ரி கேஜி ,ரெண்டுல பேபி க்ளாஸ் இப்படி போகுதோ?

பாப்பா அம்மாவோட கர்பத்துலயே பல “தொழில்களை” செய்யுது . லேபர் வார்ட்ல வெளிய எடுத்து துடைச்சு தொட்டில் போட்டதுமே மும்முரமா தொழில் செய்யுது . கொஞ்சம் போல விவரம் புரிஞ்ச பிறவாச்சும் சாக்லெட்டுக்காவ ரைம் சொல்லுது , சனங்களோட அப்ளாஸுக்காவ தைய தக்கான்னு ஆடுது. அதுக்கும் முன்னே என்ன ம.. னாவுக்கு தொழில் செய்யனும்?

தொழில்ங்கறது டோட்டலா சர்வைவல் பிரச்சினை. நாம பைசாவுக்காவ தொழில் செய்றது ஃபைனான்சியல் சர்வைல். பாப்பா தொழில் செய்றது தன் ஃபிசிக்கல் சர்வைவ் -ஃபிசிக்கல் ஃபிட்னெஸ்க்காவ.

தொழில் பைசாவ மட்டும் கொடுக்கலிங்கோ.. ஃபிசிக்கலா -சைக்கலாஜிக்கலா நம்மை சர்வைவ் பண்ண வைக்குது . உடல் ரீதியிலான உழைப்பு உடலுக்கும் – மூளை ரீதியிலான உழைப்பு மூளைக்கும் பயிற்சியை கொடுக்குது .வலுப்படுத்துது .

வேலை போச்சுன்னதும் எல்லாருக்கும் பைசா மேட்டர் தான் நியான் விளக்குல எரியுது . அதுக்கும் பின்னாடி இருக்கிற இன்ஸ்டிங்ட் -உள்ளுணர்வு என்னடான்னா அய்யய்யோ பயிற்சி போயிருமே ..உடலும் -மூளையும் கொஞ்சம் கொஞ்சமா லொடக்காணி ஆயிருமேங்கறதுதான்.

ஆக்சுவலா வேலை போச்சுன்னா ஃபைனான்சியல் ப்ராப்ளம்ஸ் வரும் தான் இல்லைங்கல. அதுக்கு 1008 ஆல்டர்னேட்டிவ்ஸ் இருக்கும்.ஆனாலும் மனசு வேலை வேலைன்னு பரபரக்குது . ஏன்னா வேலையே இல்லாம இருந்தா உடலும் -மூளையும் கொஞ்சம் கொஞ்சமா லொடக்காணி ஆகி செத்து போயிருவம் பாஸ் ! செத்து போயிருவமோ இல்லையோ இந்த உணர்வு ஒன்னு தான் வேலை போச்சுன்னதுமே பேதியாக்குது.

தொழில்ங்கறது உங்க மோட் ஆஃப் லிவிங் என்பதை தாண்டி உங்க அடையாளமா மாறி போயிருது . அடையாளமே நீங்களாயிர்ரிங்க. தொழிலை தாண்டி தாங்கள் யார்னு இங்கே பலருக்கும் தெரியாது . 12 பாவங்கள்ள தொழிலும் ஒரு பாவம் நமக்கு இருக்கிறதோ 24 மணி நேரம் தான். இதுல 8 மணி நேரம் தூக்கத்துக்கு போயிருதுன்னு வச்சுக்கிட்டா மிச்சம் இருக்கிறது 16 மணி நேரம். இதுல எட்டு மணி நேரத்தை அதாவது நமக்கு இருக்கிற 16 மணி நேரத்துல பாதியை தொழிலுக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கு .

உணவு , தூக்கம் , கில்மாவுக்கெல்லாம் விரய பாவம் எனும் ஒரே பாவம் தான் காரகம். அதுக்கு ஓவராலா எட்டுமணி நேரம். தொழில் உத்யோகம் வியாபாரம் இத்யாதிக்கு ஜீவன பாவம் எனும் ஒரே பாவம் தான் காரகம்.

கொய்யால ரெண்டே பாவத்துக்கு 16 மணி நேரத்தை தாரை வார்த்துர்ரம். மிச்சமிருக்கிற 8 மணி நேரத்தை வச்சு மத்த பத்து பாவங்களை ஒப்பேத்த வேண்டியிருக்கு. நமக்கு ஏன் நேரம் போதறதில்லைனு இப்ப புரியுதா?

ஆனால் இந்த ரெண்டு பாவமும் 16 மணி நேரத்தை பூதம் கணக்கா விழுங்கிட்டாலும் தூங்காம இருக்கமா? இல்லை. இதே போல வேலை போச்சுன்னா ஸ்..அப்பாடா லம்பா எட்டுமணி நேரம் மிச்சம். வேலை வரப்ப வரட்டும் அதுவரை அந்த எட்டு மணி நேரத்தை இவ்ள காலம் இக்னோர் பண்ண மத்த 10 பாவங்களுக்கு செலவழிப்பம்னு ரிலாக்ஸ் ஆயிர்ரமா? இல்லை ஏன்?

இது இரண்டுமே இன்டர் லிங்க்ட். இது ரெண்டுக்கும் ஒழுங்கு மருவாதியா நேரத்தை செலவழிச்சா மிச்சமிருக்கிற 10 பாவ காரகமும் ஸ்மூத் ஆயிருது -உரிய நேரத்தை செலவழிக்காமலே.

எப்படி ? லைட்டா பார்ப்பமா?

வேலைக்கு போறம்னா ஆட்டோமெட்டிக்கா ஹேர் கட் /செல்ஃப் ஷேவ்/ ட்ரஸ் அப் /ஹெல்த் ப்ரிகாஷன்ஸ்லாம் மெயின்டெய்ன் ஆயிருது (லக்ன பாவம்) .
முந்தின நாள் சரக்கு போடும் போது கூட “போதும்பா ..நாளைக்கு ஆஃபீஸ் போகனும் ” அண்ட் ஆல் தட் .

எட்டுமணி நேரம் வீட்டை விட்டு விலகி இருக்கிறதால பொஞ்சாதி கூட புருசன் எப்ப வேலையிலருந்து வீடு திரும்புவான்னு வெய்ட் பண்ணும். நாம எதாவது அச்சானியமா பேசினாலும் செரி ஆஃபீஸ்ல செமர்த்திய வாங்கியிருக்கும் போலனு அஜீஸ் ஆயிர்ராங்க. பைசா வருது . குடும்பமும் கட்டுக்கோப்பா இருக்கு. ( தன பாவம்)

அண்ணன் தம்பி கூட .. எதுனா விவகாரம் பேசனும்னா கூட வேலை நாள்ள எதுக்கு ஞா கிழமை பேசிக்கலாம்னு அடக்கி வாசிக்கிறாய்ங்க. இப்படி சொல்லிட்டே போகலாம்.

விரயம் -ஜீவன பாவம் ரெண்டுமே இன்டர்லிங்க்ட்னு ஆரம்பிச்சன். டைவர்ட் ஆயிட்டன் போல.இத இப்ப சொல்லிர்ரன். முந்தின நாள் நெல்ல தூக்கம் கிடைச்சா மறு நாள் ஆஃபீஸ்ல நம்ம பெர்ஃபார்மென்ஸ் பெட்டரா இருக்கும். ஆஃபீஸ்ல இடுப்பு ஒடிய வேலை செய்தா ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
அய்யய்யோ ..வேலைங்கறது அவ்ள முக்கியமா? அப்ப எனக்கு ஏத்த தொழில் என்னனு சொல்லுங்கண்ணே .. வேலைய காப்பாத்திக்க என்ன செய்யனும்னும் சொல்லுங்கண்ணேங்கறிங்களா சொல்றேன்.

அதுக்கு மிந்தி உங்க அடிப்படை இச்சை கொல்வதா? கொல்லப்படுவதான்னு டிசைட் பண்ணிக்கங்க. இது ரெண்டுமே எல்லா உயிர்லயும் இருக்கக்கூடிய அடிப்படை இச்சைகள் தான்னாலும் ஒவ்வொருத்தர்ல ஒவ்வொரு இன்ஸ்டிங்ட் மேஜரா இருக்கும்.

அதுக்கேத்த தொழில் உத்யோக வியாபாரங்களை தேர்வு செய்துக்கிட்டா செமயா க்ளிக் ஆகலாம். அல்லது ஜோதிட ரீதியா சொல்லனும்னா அடுத்த பதிவுக்கு வெய்ட் பண்ணுங்க. பெரிய்ய சப்ஜெக்ட் பாஸ் .. கொஞ்சம் கொஞ்சமா தான் விஷயத்தை கக்க முடியும்.
உடுங்க ஜூட்டு .

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.