திரைக்கடலோடி : தொழில் யோகம் (புதிய தொடர்)

all in one

அண்ணே வணக்கம்ணே !

திரைக்கடலோடியும் திரவியம் தேடு – உத்யோகம் புருஷ லட்சணம் -செய்யும் தொழிலே தெய்வம் -உழவுக்கு தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- போன்ற மூதுரைகள் ஆகட்டும் .பத்தில் ஒரு பாம்பாவது இருக்கவேண்டும் பாவியாவது இருக்க வேண்டும் என்ற ஜோதிட மொழி ஆகட்டும்.

இதெல்லாம் சொல்றது ஒரே மேட்டரை தான் “ச்சும்மாவே இருந்திராதிங்கடே”. ச்சும்மா இருந்தா என்னாகும்னா? வேணாம் ஆரம்பத்துலயே அச்சானிய தகவல் எல்லாம் எதுக்கு ?

எல்லா மானிலமும் வளர்ந்தாதான் இந்தியா வளரும்னு வெங்காய நாயுடு சொல்ட்டு போயிருக்காரு. கொய்யால ஒவ்வொரு இந்தியனும் வளரனும். அப்பத்தேன் இந்தியா வளரும்.

நிற்க ..தொழில்-உத்யோகம் -வியாபாரம் இந்த 3 கேட்டகிரியையும் எடுத்துக்கிட்டு நொங்கு எடுக்கலாம்னு ஒரு கெட்ட எண்ணம். ஏற்கெனவே 2 சீரியலை டீல்ல விட்டுட்டதால இதுக்கு ஒழுங்கு மருவாதியா சினாப்சிஸ் ரெடி பண்ணிட்டன். நேத்திக்கே விஸ்தாரமா ஒரு முன்னுரை கூட “எழுதி” வச்சுட்டன்.

கிழவாடிக்கெல்லாம் விடியல்ல தான் மேல் மாடி ஷகரா வேலை செய்யுமாம்ல. அதான் இன்னைக்கு விடியல்ல உட்கார்ந்து ஒரு ப்ளூ ப்ரிண்டை வீடியோவா ஷூட் பண்ணி வச்சுக்கிட்டன். இதையே தான் பல்லாண்டு வாழ்க சீரியலுக்கும் செய்தம்.ஆனாலும் முட்டு சந்துல முட்டி நின்னுருச்சு அது வேற கதை .

தொழில்-உத்யோகம் -வியாபாரம்னு பிரிச்சு சொன்னாலும் இந்த மூன்றுக்குமே தேவை நம் உழைப்பு .உழைப்புங்கறது ஜஸ்ட் பிழைப்புக்காகத்தான்னாலும் உழைப்புக்கும் -பிழைப்புக்கும் நிறைய வித்யாசம் இருக்குங்கோ .

மொதல்ல இந்த தொடருக்கு “பொளப்பு”னு பேரை வச்சேன். அந்த செனேரியோல எழுதின முன்னுரை இது .

எச்சூஸ்மீ !

முன்னுரை:

இந்த தொடருக்கு ஹிப்பாக்ரடிக்கா எத்தனையோ தலைப்பை வச்சிருக்கலாம் ( இப்பம் வச்சிருக்கிறதும் இதே கேட்டகிரி தான்) என்ன செய்ய? ஒரு கெத்து வேணம்ல (கு.ப.தலைப்புலயாவது )

பேசிக்கலா நம்முது பாரதியார் டைப். எமக்கு தொழில் கவிதை – நாட்டுக்குழைத்தல் .இங்கிலீஷ் மீடியத்துல படிச்ச புள்ளைகளுக்கும் புரியட்டுமேன்னு பேச்சு தமிழ்ல பதிவு போட்டா தமிழை கொலை பண்றான்னு புலம்பற அதே கூட்டம் கவிதைன்னதும் பேஸ்தடிச்சுருது .

அட்சர லட்சம் கொடுக்க போஜர்களும் இல்லை . குழையடிச்சு லாபி பண்ண தோதா ஒரு நூலும் இல்லை . “எதையோ” “எதையாச்சும்” செய்துதேன் வாழ்க்கைய ஓட்ட வேண்டியிருக்கு.

பிழைப்புங்கற வார்த்தையே ஒரு வித சூனிய வாதம். நமக்கு எதை செய்தாலும் ஆத்மார்த்தமா செய்யனும்.ச்சும்மா கதை பண்றதெல்லாம் சாத்தியம்னா ஏன் லட்டு மாதிரியான 2 தொடரை டீல்ல விடப்போறேன். ஆக பிழைப்புங்கறதே வசைச்சொல்லா பயன்படுத்தற சொல். (இதெல்லாம் ஒரு பிழைப்பு?)

அதை கொச்சையாக்கி “பொளப்பு”ன்னு சொல்லும் போது எவ்ள கேவலமா தெரியுது பார்த்தியளா?

விரும்பி தருவது உழைப்பு . விருப்பமில்லாது “நொட்டுவது ” பிழைப்பு .எந்த துறையானாலும் -எந்த வேலையானாலும் விரும்பி சிந்தப்படும் வியர்வை உயர்வை தரும். விருப்பமில்லாத பிழைப்பு ? அயர்வை தரும்.

இளமையில் ரத்தம் பி.டி உஷா கணக்கா ஓடும் போது ரெண்டுக்கும் பெருசா வித்யாசம்லாம் தெரியாது . ஆனால் இளமை தமிழ் சினிமா க்ளைமேக்ஸ்ல ஹீரோயின் கணக்கா டாட்டா காட்டற சமயம் உண்மை உறைக்கும்.
எனக்கு கார்ப்பென்டரிங்குன்னா ஒரு ஜாய். ஏதோ படத்துல சைக்கிளுக்கு பெண்ட் எடுக்க கஞ்சா கருப்பு ஒரு மூவ்மென்ட் கொடுத்துக்கிட்டே வருவாரே அப்படி .

அதுல விடியல்ல இறங்கிட்டா பகல் டேக் ஆஃப் ஆனதும் தெரியாது . இரவு லேண்ட் ஆனதும் தெரியாது . நம்மில் எத்தனை பேருக்கு எதுல இந்த மாதிரி மயக்கம் இருக்குன்னு அவியளுக்கே தெரியாது . தெரிஞ்சுக்க ட்ரை பண்ணுவம்.
இதான் இந்த தொடரோட நோக்கம். ஓகேவா .. உடுங்க ஜூட்..

(தொடரும்)

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *