தெய்வம் இருப்பது எங்கே?

Handicaped

அண்ணே வணக்கம்ணே !

இன்னைக்கு நம்மாளுங்க எந்த நிலையில இருக்காய்ங்கன்னா இந்த பதிவுல கடவுளோட விலாசத்தையே நான் தந்து தொலைச்சாலும் கமெண்ட்ல வந்து அண்ணே ..விலாசம் தானே இருக்கு ஃபோன் நெம்பர் இல்லையா தலைன்னு கேப்பாய்ங்க.

கடவுள் தினம் தினம் -நொடிக்கு நொடி -எங்கோ – ஏதோ ஒரு சம்பவத்தில் தன்னை வெளிப்படுத்திக்கிட்டே தான் இருக்கார். என்ன ஒரு இமிசைன்னா இதெல்லாம் நம்ம நியூஸ் சானல்ஸ்ல வராது .

அப்படி ஒரு சம்பவத்தை வாசக பதிவர் திருமதி பானுகுமார் பகிர்ந்துள்ளார். ஓவர் டு பானுகுமார்.

___________

எல்லோரிடத்திலும் பரவல்லாக காணப்படும்..உணரப்படும் எண்ணம் இந்த உலகத்தில் இத்தனை அநியாங்களும் அக்கிரமங்களும் நடக்கிறதே ஏன்?இதையெல்லாம் யாரும் கேட்பதில்லையே ஏன்?இதற்கு முடிவு தான் என்ன? தெய்வம் என்று ஒன்று உண்டா இல்லையா? என்பது தான்.எனக்குள்ளும் இந்த கேள்விகள் உண்டு.பல நேரங்களில்

வாழ்க்கையை வெறுத்ததுண்டு.வாழ்க்கை வெறுப்பதற்கல்ல வாழ்வதற்கே என ஒரு நிகழ்வு எனக்கு புரியவைத்தது.
கடைவீதியில் இருக்கும் என் நண்பரின் துணிக்கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.அப்போது வீதியிலொரு மாற்றுத்திறனாளி பெண் கைகளை ஊன்றிக் கொண்டு உட்கார்ந்தவாறே நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தாள்.அவளை நான் பலமுறை பார்திருக்கிறேன்.யாரிடமும் ஏதும் கேட்க மாட்டாள்.யாராவது எதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வாள்.

எப்போதும் நைட்டி தான் போட்டிருப்பாள்.அவளது உடை மிகவும் மோசமாக இருந்தது…நான் அந்த கடைகாரரிடம் பாவம் பாய்..அவளது டிரஸ் இவ்வளவு அழுக்கா எப்படி இருக்கு பாருங்க என்றேன்.அவர் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை

உடனே ஒரு நைட்டியைக் கொடுத்து முடிந்தால் அவரிடம் கொடுங்கள் என்றார். அதற்குள் அந்தப் பெண் நாலு கடைத் தாண்டிவிட்டிருந்தாள்.பாயிடம் அந்த நைட்டியை வாங்கிக் கொண்டு அவளிடம் ஓடிச் சென்று கொடுத்து இதை போட்டுக்கமா என்றேன்.

என்னால் எழுந்து நிற்க முடியாது என்றாள்.அதனாலென்ன என்னால் குனிய முடியுமே

என்று சொல்லி கடைப் பெண்கள் இருவரை அழைத்து மறைப்பு கட்டி அங்கே தெரு ஓரத்திலேயே அவள் போட்டிருந்த உடுப்பை களைந்து கையில் வைத்திருந்த நைட்டியை போட்டு விட்டேன்.போட்டு முடித்ததும் அந்தப் பெண் என் கண்களை ஒரு நொடி ஏறெடுத்து பார்த்தாள்.அந்த கண்களில் ஒரு மின்னல் போல் ஒரு ஒளி தெறித்தது.

வேறு ஒன்றுமே பேசவில்லை…கைகளை ஊன்றியபடி ஊற ஆரம்பித்தாள். இது நடந்து ஒரு பத்து நாளிருக்கும்..மீண்டும் அந்த பாய் கடையில் பேசிக் கொண்டிருக்கும் போது சட்டென்று எனக்கு அந்தப் பெண்ணின் நினைவு வந்தது.எப்போதும் குறுக்கும் நெடுக்குமாக சென்று வரும் அவளைச் சில நாட்களாக காணவில்லையே என தோன்றி அவரிடம் விசாரித்தேன்.

அவர் அந்தப் பெண்ணை ஒரு வண்டி மோதிவிட்ட்தால் தான் அவளது இடுப்பு பாதிக்கப்பட்டு எழுந்திருக்க முடியாமலிருந்தாள் என்றும் திடீரென்று சிறிது சிறிதாக அவளால் எழுந்து நிற்கவும்,நடக்கவும் முடிவதாகவும் இப்போது அவள் பிச்சைக்கு வருதில்லை எனவும் சொன்னார்.

எனக்கு பொறி கலங்கியது போலிருந்த்து.அநியாயங்களும்,அக்கிரமங்களும் நடக்கும் இந்த உலகத்தில் தான் அருள் பேராற்றலும்,அற்புதங்களும் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன.அநியாயத்தின் ஆரவாரம் அதிகமாக இருப்பதால் சத்தியத்தின் சான்னித்தியம் நமக்கு புலப்படாமல் போகிறது.
கொஞ்சம் அமைதியாக,அன்பாக பொறுமையாக நம்பிக்கையுடன் பார்த்திருந்தால்,,,காத்திருந்தால் தெய்வத்தை நம்மில் பார்க்கலாம்.

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே….! இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே……!!

__________

எச்சரிக்கை :
இந்த பதிவை படிச்ச உங்களில் பலருக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதை கமெண்ட்ல தெரிவிச்சா நல்லாருக்கும்.

.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.