அம்மாவின் காதல்

Happy-Mothers-Day-SMS-2 (1)

அண்ணே வணக்கம்ணே !

ஒரு நிறைவு தரும் சோதிடப்பதிவு போட்டு ரெம்ப காலமாயிட்டாப்ல ஒரு ஃபீல். செரி இதுவும் நல்லதுக்கேன்னு தான் ஒப்பேத்தற வேலைல்லாம் செய்யல.

இதற்கிடையில் வாசக பதிவர் திருமதி .பானுகுமார் நம்ம வீடியோக்களை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி நாலு வரி எழுத -அவர் எழுத்தில் இருந்த “ஃப்ளோ” எது மாதிரியும்/எவர் மாதிரியும் இல்லாத நடை எனக்கு பிடிச்சு போச்சு.

அனுபவஜோதிட வாசகரான உங்கள் ரசனை மேலயும் -என் தேர்வு மேலயும் நம்பிக்கை வச்சு வெறுமனே வீடியோ சுருக்கத்தோட நின்னுராதிங்க. சொந்தமா எழுதுங்கன்னு சொல்லி வச்சேன். அன்னையர் தினம் முடிய இன்னம் ஒன்னரை மணி நேரமே இருக்கும் நேரத்தில் இதோ அவர் பதிவு .

எச்சரிக்கை:
கிராம ஊழியன் ங்கற பத்திரிக்கையில தமிழின் புகழ் பெற்ற படைப்புகள் எல்லாம் வெளியானாப்ல இந்த ஜோதிட வலைதளத்தில் அன்னாரின் எழுத்துக்கள் வெளியாகுது .

சோதிட பிரியர்கள் சோர்ந்து போயிராதிய. சீக்கிரமே வார்ம் அப் பண்ணிக்கிட்டு செம மேட்டரோட நான் வரேன். அப்படியே திருமதி பானுகுமார் நம்ம ஜோதிட வீடியோக்களோட எழுத்துவடிவத்தையும் தருவாங்க. இனி ஓவர் டு வாசக பதிவர் .

_______________

என் வாழ்க்கையின் அழியா காவியம் என் தாய்.எத்தனையோஅவமானங்களையும்
நிராகரிப்புகலையும் தாங்கிக் கொண்டு,எங்களைக் கட்டி காத்தவள்
சகிக்கமுடியாத கசப்பை தான் விழுங்கி எங்களுக்கு அமுதூட்டிய..அமுதாக்கி ஊட்டிய
அட்சயப் பாத்திரம் அவள்.

படிக்கத்தெரியாது,தன் தாய் மொழி தவிர வேறு பாஷை சரியாகப் பேசத்தெரியாது.
அதனாலேயே ஒரு வம்பு தும்புக்கு போகத்தெரியாது.வேலை முடிந்தால் ஆல் இண்டியா
ரேடியோ தான் அவள் தோழி.

இத்தனையும் தாண்டி சினிமாவே பிடிக்காத கணவனுடன்
வாழ்ந்தும் எப்படியோ எம்.ஜி.ஆர்.மேல் அபரிமிதமான காதல்.

வாரத்திற்கு ஒரு முறை காய்கறி,மளிகை வாங்க மார்கெட் விஜயம்.அந்த நேரத்தில் மாட்னி ஷோ பார்த்து
வளர்ந்த காதல்.இது அப்பாவிற்கும் தெரியும் .கண்டும் காணமல் இருப்பார்.

காரணம் …அம்மாவின் தியாகங்கள்.அவளுடன் ஒட்டுண்ணியாய் திரியும் நான் காவல்காரன்
படத்தை மட்டும் ஒரு 20 தடவைப் பார்த்திருப்பேன்.வேற வழி..எம்.ஜி.ஆரைத் தவிர
வேறு நடிகனைப் பாராத அவளது கற்பு.

ஆனால் உயிரே போனாலும் அது விளக்கு வைக்கும் முன்பாக வீட்டிற்கு வந்து போகட்டும் என்பாள்.வெளியே சென்ற நாங்கள் வீடு திரும்ப நேரமானால் வாசல் கேட்டைப் பிடித்துக் கொண்டு தவிப்பாள்…அதனாலேயே நாங்கள் வெளித்தங்கியதில்லை.

கை நீட்டி அடித்ததில்லை,கடுஞ்சொல் பேசியதில்லை.சேட்டை அதிகமானால் தொடையில் ஒரு திருகு..அந்த வருஷமெல்லாம் வலித்திருக்கும்.

சத்தியமாய் அவள் சாப்பிட்டு நாங்கள் பார்த்ததில்லை.அவள் தூங்கியதைப் பார்த்ததும்
அவளது இறுதியில் தான்.

நாங்கள் உண்ண துவங்கியதும் தான் உண்ண மறந்தாள்.,வளர்ந்ததும் தன் உடுப்பை
மாற்றினாள்,மலர்ந்ததும் தன் மலர்களை தவிர்த்தாள்.

எங்கள் சோகத்தை அவளது முந்தானையில் புதைத்தோம்.ஆனால் அவள் சோகம் அறிந்ததில்லை.
எங்களிடம் காட்டாமல் அவள் மறைத்த அத்தனைச் சுமைகளும் அவளது
இதயத்தை சுக்கு நூறாக உடைத்த போது தான்…சுவாசத்தை நிறுத்திய போது தான் எங்களுக்கு தெரிந்தது.

முகம் புதைத்த அந்த மடியின் வாசம்….கண்மூடி படுத்திருந்த அவளது கைகளைப்
பிடித்திருந்த அந்த ஸ்பரிசம்…..என்னச் சொல்வேன்

அம்மா…இப்போதும் உன் மடி
தேவையாக இருக்கிறது…..உன் ஸ்பரிசம் தேவையாக இருக்கிறது…

வருவாயா.. தருவாயா…….

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *