டியர் மிஸ்டர் தளபதியாரே !

stalin

அண்ணே வணக்கம்ணே !

ப்ளாக் டு ஃபேஸ்புக் ; ஃபேஸ்புக் டு யு ட்யூப்னு ரூட்டை மாத்தி போயிட்டே இருக்கம். ஒரு வகையில ப்ளாக் போஸ்ட் தான் நம்ம நாற்றங்கால் பழசை மறக்க கூடாதுல்ல. எப்பமோ நாம போட்ட வீடியோவை பதிவாக்கியிருக்காய்ங்க திருமதி பானுகுமார் . அன்னாருக்கு நன்றி.

_________

மவுனம் கலையட்டும் ..யுத்த பேரிகை முழங்கட்டும் !

ஜோதிட வித்தகர்..அரசியல் விக்கிரமாதித்தர்…( இப்படிச் சொல்றதுக்கு ஒரே காரணம் ஜனநாயக முறையிலான நல்லாட்சிக்கு அவரது விடாமுற்சியான பங்களிப்புகள்) திரு.சித்தூர்.முகேசனாரின் ஆதங்கத்தை…மனக் கொந்தளிப்பை அவராகவே உங்களிடம் பகிர்கிறேன்.இனி சித்தூர்.முருகேசன்……..

இந்தநேரம் கலைஞர் மட்டும் தன் மெளனத்தை கலைத்திருந்தால் ஆட்சியிலுள்ள புழுக்களை எல்லாம் சும்மா பெருக்கி தள்ளியிருப்பார்.அவருடைய ஒரு சொல் போதும்..சுடவும்,சுண்டி விடவும்.

திரு.ஸ்டாலின் அவர்கள் பொறுமையாக இருக்கிறார்..திறமையாகப் பேசுகிறார்..ஆனால் இது மட்டுமே போதாதே.. அரசியலுக்கு கொஞ்சம் சாணக்கியதனமும் வேண்டும்..நாம நல்லவனா இருந்தா தான் நம்மை ரொம்ப சீண்டுவார்கள்.இதே நயவஞ்சகர்களிடம் நெருங்க பயப்படுவார்கள்.ஒரு டெம்போவை,திகிலை ஏற்படுத்த வேண்டும்மூடிய கைகளுக்குள் என்ன இருக்கிறது என்று பதற வைக்க வேண்டும்.தி.மு.கவின் ஓட்டால் ஆட்சி கலையுமா ..இல்லையா என்பது வேறு.ஆனால் இந்த ஆட்சி நிச்சயம் கலையும்
..அதற்கான முயற்சியை செய்வோம்…எனறு பீதியை கிளப்பிவிட வேண்டும்.

மக்கள் அ.தி.மு.கவுக்கு மட்டும் ஓட்டு போடவில்லை..உங்களுக்கும் தான் போட்டுள்ளார்கள்.

நீங்கள் ஒரு சதவீதத்தை இழப்பாக பார்கிறீர்கள்..நாங்கள் அதை99 சதவீத வெற்றியாகப் பார்கிறோம்.

தி.மு.க வின் ஓட்டு என்றென்றும் தி.மு.க விற்குத்தான்.

ஒரு போதும் தி.மு.க காரன் ஓட்டை மாற்றிப் போட மாட்டான்..அந்த ஒரு சதவீத வித்யாசத்துக்கு கூட நோட்டாக்கு போட்டவனும்,நோகாமல் வீட்டில் உட்கார்ந்திருந்தவனும், ம.ந.கூ/கே.ந.கூ மேதாவிகளும் தான் காரணம் .இப்போதிருக்கும் சூழ்நிலையில் எல்லோருடைய விருப்பமும் தற்போதுள்ள அரசை ஒன்றுமில்லாமல் செய்துவிட வேண்டும் என்பது தானே…

ஆக இப்போது களம் நம்முடையதாக இருக்கிறது.அடித்து ஆடுவோம் என்று மக்களுக்கு நம்பிக்கையை தரவேண்டும்.அதே நேரம் ஆட்டத்தை வேறு மாதிரியாக மறைமுகமாகவும் ஆடவேண்டும்.

காதலிலும், போர் களத்திலும்,அரசியலிலும் எதுவும் தவறில்லை..இங்கே எந்த நியாங்களும் இல்லை தர்மங்களும் இல்லை…வெற்றி ஒன்று தான் லட்சியமாக இருக்க வேண்டும்.இங்கு ஒப்பாரி வைக்கவும் கூடாது..உட்கார்ந்து யோசிக்கவும் கூடாது. எதிரணியில் வலுவான ஆட்டக்காரர்கள் இருந்தால் தடுத்து விளையாடலாம். அடித்துவிளயாட வேண்டிய நேரத்தில் ஆற அமர யோசிக்கலாமா?

பார்க்கும் எங்களுக்கு பதைக்கிறதே.அரசியல் ஒரு புத்தி விளையாட்டு..ஆட்டத்தை ஆடனும்..இல்லேனா ஆடத் தூண்டனும். கெட்டவன் தான் இறங்கி அடிக்கனுங்கிறதில்லே

மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்களும் அவர்களைக் காப்பாற்ற இறங்கி தான் ஆகவேண்டும்.
காலம் எதை வேண்டுமானாலும் செய்யும்… அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்…அங்கிருப்பவர் நாளையே இங்கு வரலாம்…விமர்சன்ம் செய்பவன் செய்து கொள்ளட்டும்.நம்பிய மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.

நீங்கள் செயல்படவில்லை என்று சொல்லவில்லை தளபதியாரே…..அதில் கொஞ்சம் பவர் வேண்டும்…மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே என் ஆசை.என் நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும்.எம் தலைவனின் குரலாக உங்கள் குரல் ஒலிக்கவேண்டும்!!!!!!!!!
மவுனம் கலையட்டும் ..யுத்த பேரிகை முழங்கட்டும் !

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.