Tags    

Categories  அனுபவஜோதிடம் சர்ப்பதோஷம்

சர்ப்பதோஷம் : ஜாலி பரிகாரங்கள்

DSC_0300

அண்ணே வணக்கம்ணே !

சில மாதங்களுக்கு மிந்தி எஸ்.எஃப்.எஃப் யு ட்யூப் சானல்ல நம்ம பேட்டி ஒன்னு வெளி வந்தது . அதை எத்தனை பேர் பார்த்தியளோ இல்லையோ? திருமதி பானுகுமார் அந்த வீடியோவை பார்த்து – வீடியோ பார்க்க வசதியில்லாதவிகளுக்காவ அதன் சுருக்கத்தை தந்திருக்காய்ங்க. அன்னாருக்கு நன்றி.

___________

கிரகங்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரு தவிர்க்க முடியாத தொடர்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.அதனால் மனித வாழ்வில் ஏற்படும் நன்மை,தீமைகளின் தன்மைகளை,அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கணிக்கும் கருவியாத்தான் இந்த ஜோதிடம் விளங்குகிறது.

அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கணிக்கிறார்கள்.பெரும் பாலும் மிரட்டுகிறார்கள் என்றே சொல்வேன்.சாதரணமாக நம் வாழ்வில் நன்மைகள் ஏற்படும் போது குதூகலிக்கும் மனது,பிரச்சனைகள் தலைதூக்கும் போது பேதலித்துவிடுகிறது.

உடனே அதற்கான தீர்வை நோக்கி அலைமோத துவங்கிவிடுகிறது.இப்போ தான் உண்மையிலேயே பிரச்சினை ஆரம்பிக்கிறது.இந்த கோயிலுக்கு இத்தனை நாள் போ..அங்கே இத்தனை நாள் விளக்கேற்று..இந்த யாகம் செய்..இந்த பூஜை செய்..இந்த தானம் செய் என்று ஏற்கனவே நொந்தவனை நாறாக கிழிக்க வழி செய்கிறார்கள் வேடிக்கை ஜோதிடர்கள்.

அதெல்லாம் வேண்டாம் இதோ நவீன மனிதர்களுக்கான நவீன பரிகாரங்கள் என்று ஒரு புதிய கதவு திரு.சித்தூர்.முருகேசனால் திறக்கப் பட்டுள்ளது.

பகுத்தறிவு ஜோதிடம் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள்.அவர் சொல்வது என்னவென்றால் கிரகம் உங்களை என்னவாக மாற்ற திட்டமிடுகிறதோ .அதுவாக நீங்கள் மாறிவிடுங்கள்.

அது கொடுக்க இருக்கும் கெடு பலன்களை முன்கூட்டியே உங்களுக்கு நீங்களே கொடுத்துவிடுங்கள் என்பது தான்.
உதாரணமாக செவ்வாய் தோஷம் இருந்தால் நீங்களாக முன்வந்து இரத்ததானம் செய்துவிடுங்கள்.விபத்து நடக்ககூடிய கால நேரம் என்றாலும் இரத்ததானம் அதை சமன் செய்துவிடுகிறது..இல்லாமல் செய்துவிடுகிறது.
நடக்கப்போகிற கெடு பலனை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தச் சொல்கிறார்.இதனால் கெடு பலனும் போய் புண்ணிய கணக்கிலும் வரவு வைக்கப்படுகிறதல்லவா.

சர்ப்பதோஷம் என்கிற விஷயம் சாமானியனை நடுங்கச்செய்கிறது. .இதற்கு பரிகாரம் எனப் பார்த்தால் சர்ப்பதோஷமே தேவலைனு ஆக்கிருவாங்க நம்ம ஆளுங்க.ஆனால் முருகேசன் சார் என்ன சொல்றாருன்னா இந்த சர்ப்ப கிரகங்களின் கெடு பலன்கள்….அதாவது திருட்டு,ஏமாற்றுதல்,போர்ஜரி செய்தல்.கதிகெட்டு ஊரில் இருக்க முடியாமல் போதல்,முறைகேடான வழியில் ஈடுபடுதல்,விஷ பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளை உங்களுக்குச் சாதகமான முறையில் நீங்களே செய்துவிடுங்கள் என்பது தான்.

திருட்டு—-உங்கள் வீட்டிலேயே சில சுவாரஸ்யமான வேடிக்கை திருட்டுகளைச் செய்யுங்கள்.
ஏமாற்றுதல்—மாஜிக் கற்றுக் கொள்ளுங்கள்,அதைச் செய்து காட்டி ஏமாற்றுதலை ஒரு கலையாக மாற்றுங்கள்.
உங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களுடனே பணம் வைத்து சூதாடுங்கள்.

ஏதேனும் ஒரு அன்னிய மொழியைக் கற்றுக் கொள்வது,,,அல்லது கேட்கவாவது செய்வது(பாட்டு,நியூஸ் இப்படி)
மாப்ஃபியா பற்றிய படங்களைப் பார்ப்பது,கதைகளைப் படிப்பது அல்லது அவற்றைப் பற்றி கதை எழுதுவது.
டிராகன் படம் போட்ட தலையணை உறை,படுக்கை விரிப்பு,படங்கள் இவற்றை உபயோகப்படுத்துவது.அருகம்புல் சாறு அருந்துதல்,வேப்பந்துளிர்களைச் சாப்பிடுதல்,போன்றவற்றைச் செய்வதன் மூலம் பரிகாரங்கள் என்பதை ஒரு சுமையாக இல்லாமல் சுவாரஷ்யமான விஷயமாக மாற்றி தந்துள்ளார்.

இதைச் செய்வதில் என்ன கஷ்டம் சொல்லுங்க.

இதற்கெல்லாம் தலையாய விஷயமா ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார் சார்….பேத பாவத்தை /பேதம் பார்ப்பதை விட்டுவிட்டால் எந்த கிரகத்தின் பாதிப்பும் உங்களைத் தொடாது என்கிறார்.

அதாங்க சாதி பேதம்,உறவு பேதம்,தொழில் பேதம்,பொருளாதார பேதம்,நான்,எனது என்கின்ற அகங்கார பேதம் இவற்றை விட்டுவிட்டு நானே நீ..நீயே நான் என வாழ்ந்தால் கிரகங்கள் இப்போது நம் வசமாகிவிடும்…
அன்புமயமான ஆத்மாவை ஆண்டவனாலும் ஒன்றும் செய்யமுடியாது.பிறகென்ன தெய்வம் நின்று பேசுமே!!!!!!!!!!

S Murugesan
Chandrasudan T says:

All is well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *