ஆப்பு வைக்க போகும் நபரின் உசரம்

DSC_0307

அண்ணே வணக்கம்ணே !

ப்ளாக் வந்து பேப்பர்ல எழுதறது போச்சு – ஃபேஸ்புக் வந்து ப்ளாக் சோனியாச்சு . யு ட்யூப் வந்து ஃபேஸ்புக்கும் நொண்டியடிக்குது .என்னதான் பண்ணி தொலைக்க? ஒரு காலத்துல அனுமார் வால் கணக்கா நீள நீளமான பதிவுகள் ஒரு நாளைக்கு ரெண்டு மூனெல்லாம் கூட போட்டிருக்கம். இப்ப? நோ சான்ஸ்.

என்னதான் பொளப்பு மென்னிய புடிச்சாலும் விடாம நம்ம அனுபவஜோதிடம் வலைதளத்தை ஒப்பேத்திக்கிட்டே வந்தன். கொக்கி இருந்தா எழுத நல்லாருக்கும்னு தொடர்களை பிடிச்சேன்.

சமீபத்துல ஒரு தொடரை ஆரம்பிச்சு அது முரண்டு பிடிக்க / அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா இன்னொரு தொடர் ஆரம்பிச்சு அதுவும் முரண்டு பிடிக்க அரண்டு கிடக்கேன்.

ஆகவே அந்த கால கல்கண்டு /முத்தாரம் கணக்கா சின்ன சின்ன / அதே சமயம் முக்கியமான மேட்டரை வச்சு சின்ன சின்ன பதிவா போட்டுரலாம்னு முடிவு பண்ணிட்டன். (இது எத்தனை நாளைக்கோ)

உங்களுக்கு பைசா தர போறவர் / புகழை தரப்போறவர் / ஆப்பு வைக்க போறவர் /நட்பா இருக்க போறவர் /உசுருக்கே உலை வைக்க போறவர் /சொத்து வாங்க உதவ போறவர் ஆரா இருப்பாய்ங்க? அவிக உசரமா? குள்ளமா? நடுத்தர உசரமான்னு தெரிஞ்சுக்க ஆர்வமில்லாதவிக ஆரு?

பைசா = 2/11 ஆம் பாவங்கள் ; புகழ் =5 ஆமிடம் ; ஆப்பு =6 ஆமிடம் ; நட்பு =7 ஆமிடம்; உசுருக்கு உலை = 8 ஆமிடம் ;சொத்து = 9 ஆமிடம்

எந்தெந்த மேட்டர் எந்த எந்த பாவகாரகம்னு சொல்லிட்டன். மேற்படி பாவங்கள்ள நின்ன கிரகம் / மேற்படி பாவாதிபதி / மேற்படி பாவங்களை பார்க்கிற கிரகம் இதுல எது வலிமையானதோ டிசைட் பண்ணுங்க.
அந்த கிரகம் புதன் ,குரு ,ராகு ,கேதுவாக இருந்தால் உயரமானவர்
சந்திரன்,செவ்வாய்,சனி ஆக இருந்தால் குள்ளமானவர்.
சூரியன் சுக்கிரன் ஆக இருந்தால் நடுத்தர உயரமனவர்.
மேட்டர் ஓகேவா?
________
நீங்க டிசைட் பண்ண கிரகம் குரு ,சுக்கிரனா இருந்தா குறிப்பிட்ட நபர் பிராமணரா இருக்கலாம்.(அல்லது பிராமணரை ஒத்த குணங்கள் கொண்டவரா ) அந்த கிரகம் சூரியன் ,செவ்வாயா இருந்தால் சத்திரியரா இருக்கலாம்,சந்திரன் அல்லது புதனா இருந்தா வைசியரா இருக்கலாம், சனியானால் ? சூத்திர ஜாதி , ராகு கேதுவா இருந்தால் ? உங்கள் மதமல்லாத வேற்று மத நண்பர்

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.