ஹார்லிக்ஸ் வித் ஹனுமான்

movie_HANUMAN_epic_story

என்ன பாஸ்..திடீர்னு ? மடியா பிரம்மச்சரியம் காத்தப்பல்லாம் வல்ல. இப்ப திடீர் விசிட்டு ?”
“பிரம்மச்சரியம்ங்கற வார்த்தைய உச்சரிக்க கூட உனக்கு தகுதியில்லை ”
“எனக்கே இல்லை பாஸ் ! முழுமையான ஆண் /பெண் ஆருக்குமே அந்த தகுதி கிடையாது . உயிரியல் படி அசாத்தியம்”
“அப்ப நான்லாம் டுபாக்கூருங்கறயா?”
“அப்படி நான் சொன்னனா பாஸ் ! அவா தான் நீங்க ஆகாய மார்கமா போறச்சே வியர்வையை வழிச்சு விட்டிங்க அதை ஒரு மீன் விழுங்கிருச்சு – கர்பமாயிருச்சுன்னு கதை விட்டிருக்காய்ங்க”
“இப்ப உங்காளுங்க தான் க்ளோன் பண்ண தெரிஞ்சுவச்சிருக்காங்களே. அதையும் கதைன்னுவயோ”
“ஹ.. அதெல்லாம் கதைன்னுட்டா எப்படி பாஸ்? வெட்டியா லேப்ல உட்கார்ந்து வருச கணக்கா ஆராய்ச்சி பண்றாய்ங்கல்ல”
“சரி.. அந்த பஞ்சாயத்தெல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் . இப்ப நான் நேரடியா ஒரு கேள்விய கேட்க தான் வந்தேன்.”
“கேளுங்க பாஸ் ! உங்களுக்கில்லாததா? கொஞ்சம் ஹார்லிக்ஸ் அடிங்க. தெம்பா இருக்கும் . தொடர்ந்து பேசுவம்”

* * *
“ஓகே பாஸ் ..உங்க கேள்விய கேளுங்க”
” நான் உனக்கு பாஸ் தானே”
“எஸ் பாஸ் !”
“ராமன் எனக்கு பாஸ் தானே”
“எஸ் பாஸ் ”
“அப்ப ராமன் உனக்கும் பாஸ் தானே?”
“ஒன்னு விட்ட பாஸ்னு வச்சுக்கலாம்”
“என்ன லந்து பண்றியா?”
“அப்டியில்ல பாஸ் ! உங்களை நானா வாலன்டியரா பாஸா ஏத்துக்கிட்டேன். நீங்க அவரை பாஸா ஏத்துக்கிட்டதால நானும் ஏத்துக்கிட்டேன் .இதுல டைரக்ட் டீலே இல்லையே.அதான் ஒன்னு விட்டன்னு சொன்னேன்”
“வாலை சுழட்டி ஒன்னு விட்டேன்னு வை”
“அவ்வ்.. என்ன பாஸ் ! ரெம்ப கடுப்புல இருக்கிங்க போல?”

“குசல புராணம்லாம் பிறவு . என்னோட பாஸுக்கு கோவில் கட்டறதை நீ எதிர்க்கிறயாமே?”

“அய்யய்யோ .. எவனோ குடுமி உங்களுக்கு வத்தி வச்சுட்டான் போல. ராமனுக்கு கோவில் கட்டறதை எதிர்க்கல பாஸ் ! எப்பமோ கோயில் இருந்தது – அதை இடிச்சு பாபர் மசூதி கட்டிட்டாரு -அதை இடிச்சுட்டு அங்கயே கோவில் கட்டுவம்னு பிடிவாதம் பிடிக்கிறதை தான் எதிர்க்கிறேன்”
“கட்டினாத்தான் என்ன?
“சிதறிரும் பாஸ் .. முகமதியர் படையெடுப்பு / பிரிட்டீஷார் படையெடுப்பு இத்யாதி காரணங்களால ஒரு நாடா கட்டி எழுப்பின இந்தியா சிதறிரும்”
“பாபர் மசூதியை இடிச்சப்பமே சிதறியிருக்கனும்ல”
“சிதறல தான்.ஆனால் நெட்ட நெடுக்க ஒரு விரிசல் வந்திருச்சே. ”
“அதெல்லாம் எனக்கு தெரியாது ..என் பாஸுக்கு கோவில் கட்டறவிகளோட சேர்ந்து நீயும் வேலை செய்யனும்”
“ஹ.. கொள்கை அடிப்படையிலயே நான் கோவிலுக்கு எதிரி. நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை ங்கறதுதான் என் கொள்கை ”
“உன் கொள்கை முக்கியமா ? நான் முக்கியமா?”

“இதே கேள்விய உங்க பாஸ் கூட உங்க கிட்டே கேட்டாப்ல ஞா”

“இது எப்போ?”
“பாஸ் ! தெரியாதமாதிரி கேட்கிறிங்களே ? உங்க மம்மி ஆருக்கோ அபயம் கொடுக்க / அந்த நபரை போட்டு தள்ளியே தீருவேன்னு உங்க பாஸ் வர ..ரெண்டு பேரும் ஸ்டார் வார்ஸ் கணக்கா ஃபிலிம்லாம் காட்டியிருக்கிங்க. ஞா இருக்கு”
“கொள்கை கொள்கைன்னு பீத்தறயே.. நீ என்னை ஏத்துக்கறதுக்கு மிந்தி உன் கொள்கை என்னன்னு சொல்லட்டா”
“ஆஹா.. அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி சமாசாரமாச்சே”
“அப்ப உன் கொள்கையே நான் போட்ட பிச்சை தானே எனக்காவ உன் கொள்கையை விட்டு கொடுக்க கூடாதா”
“வேணா பாஸ் ! எனக்கு வேற ஒரு சம்பவம் ஞா வருது ”
“என்னா அது ?”
“பிரம்மன் சரஸ்வதியை படைச்சுட்டு – நான் தானே படைச்சேன்னு கைய புடிச்சு இழுக்க பாய்ஞ்ச கதை தான்”
“செரி.. ராமனுக்கு கோவில் கட்டறதை செகண்டரியா வச்சுக்கலாம். ராமனையாவது ஏத்துக்கறியா இல்லையா?”
“சில விமர்சனங்களோட ஏத்துக்கறேன்”
“அதென்ன விமர்சனங்கள் ?”
“ஒன்னா ரெண்டா நிறையா இருக்கு பாஸ் ! அதுலயும் சம்பூக வதம்லாம் மன்னிக்கவே முடியாத மேட்டர்”
“ஏன்பா பாரதியை ஆருனா விமர்சிச்சா மட்டும் அவர் வாழ்ந்த காலத்தையும் சேர்த்து ரோசிங்கன்னு சால்ஜாப் சொல்றே .ராமனை மட்டும் சந்திக்கு இழுக்கறியே”
“பாரதிய கடவுள்னு சொல்லலியே”
“அப்ப ராமன் கடவுள்ங்கறதை ஏத்துக்கறியா?”
“கடவுளா ப்ரொஜெக்ட் பண்ணதை சுட்டிக்காட்டறேன்”

“ராமனை என்னவாத்தான் மனசுல வச்சிருக்கே?”

” நீங்க எனக்கு பாஸ் ! அவரு உங்களுக்கு பாஸ் ! எனக்கு ஒன்னு விட்ட பாஸ் !”
“செரி .. லோலாயி கணக்கா லோல் பட்டுக்கிட்டிருந்த உன்னை ஏக பத்தினி விரதனாக்கின ராமனுக்கு என்னதான் பண்ணலாம்னு இருக்கே”
“ராம நாமத்தை நான் மட்டும் ஜெபிச்சிக்கிறேன். ஆருனா நவ துவாரத்துலயும் புகை போக சரண் புகுந்தா அவியளுகும் சிபாரிசு பண்றேன். ராமனுக்கு கோவில் கட்டறம்னு காவிங்க அலப்பறை கொடுத்துக்கட்டும். நான் அவனுவளுக்கு எதிரா குரல் கொடுத்துக்கிட்டே இருப்பேன். தப்பித்தவறி இந்த நாட்ல டைரக்ட் எலீக்சன் வந்து – நான் பிரதமராகி தொலைச்சா ராமராஜ்ஜியத்துல இருந்த ஓட்டை உடைசலை எல்லாம் அடைச்சு இதான்யா ராமராஜ்ஜியம்னு ஹைலைட் பண்றேன்”
“எனக்கு என்ன பண்ணுவே?”
“உயிரியல் விதிகளுக்கு இணங்க – குறிப்பிட்ட காலை இடைவெளிக்கு பிரம்மச்சரியத்தை மேற்கொள்ள சிபாரிசு பண்றேன்”
“இதான் உன் முடிவா?”
“எஸ் பாஸ் !”
“ஒரு வேளை இந்த கதையால உன் மண்டையில ஒன்னு போட்டா?”
” அதை விட பாக்கியமா? இந்த டிஜெனரேட்டட் பக்கிங்க கையால சாகறதை விட உங்க கதையால கதை முடிஞ்சா சூப்பர் ஃபினிசிங்காச்சே. எப்படியும் நல்ல வாழ்க்கையை தான் வாழலை . நல்ல சாவாவது கிடைச்சதேனு சந்தோசப்படுவேன்”
“ஒரு வேளை ராமன் வந்து பாணம் விட்டா?”
“டிட்டோ தான் ”

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *