என் கெணத்த காணோம் (வாஸ்து அனுபவங்கள்: 6)

kenathai kanom

அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவில் கிழக்கு மேற்கு திசைகளை பற்றி சில விஷயங்கள் சொன்னேன். உபரியாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் மனையின் /வீட்டின் நான்கு பக்கங்களையும் அளந்து ஒவ்வொரு பக்கத்தையும் ஒன்பது பாகமாக்கி முதல் 2 பாகம் மற்றும் கடைசி 2 பாகங்களை மூலைகளாகவும் /மத்தியில் வரும் 5 பாகங்களை முக்கிய திசையாகவும் கொள்ள வேண்டும்.

இப்படி கணக்கிட்டதில் முக்கிய திசையாக வரும் பகுதிகளை பற்றி தான் கடந்த பதிவிலும் சொன்னேன். இந்த பதிவிலும் சொல்ல இருக்கிறேன்.

மேற்கு ,தெற்கு திசைகள் மேடாக இருக்க வேண்டும் . கூரையால் மூடப்பட்டிருக்க வேண்டும்.திண்ணைகள் ,ஷெல்ஃப் ,பரணை இத்யாதி இருக்கலாம். இந்த பகுதியில் கட்டுமானம் இருப்பது நல்லது .

காம்பவுண்ட் போட்ட வீடாக இருந்தால் காம்பவுண்டுக்குள் மேற்கு தெற்கு திசைகளில் உள்ள காலியிடத்தை விட வடக்கு ,கிழக்கு பகுதிகளில் இருமடங்கு காலியிடம் இருக்க வேண்டும். காம்பவுண்ட் இருந்தால் மேற்கு,தெற்கு திசைகளில் காம்பவுண்டுக்குள் இருக்கும் காலியிடம் திறந்தவெளியாக கூட இருக்கலாம். ஆனால் இந்த திசைகளில் கிளை பரப்பாத நெட்டுக்குத்தாக வளரும் மரங்கள் இருப்பது சிறப்பு .

வடக்கு ,கிழக்கு திசைகள் மேற்கு ,தெற்கு திசைகளை விட கொஞ்சம் பள்ளமாக இருப்பது நல்லது .திறந்தவெளியாக இருப்பது நல்லது. இந்த பகுதியில் கட்டுமானம் இல்லாதிருப்பதும் நல்லது .மேலும் இந்த திசை சுவர்களில் சன்னல் இருக்க வேண்டும். ஷெல்ஃப் /பரண் களை தவிர்ப்பது நல்லது .

நான்கு திசைகளும் மேற்சொன்ன நிபந்தனைகளுக்குட்பட்டு இருந்தால் மினிமம் கியாரண்டி கிடைக்கும். அஃதாவது ஆண்கள் ஆண்களாகவும் -பெண்கள் பெண்களாகவும் இயல்பாக இருப்பார்கள் . ஆண்கள் பெண்களை நேசிப்பதும் ,பெண்கள் ஆண்களை கௌரவிப்பதுமாக இருக்கும்.

மேற்படி நிபந்தனைகள் மாறியிருந்தால் ஆப்பு தான். பெண்கள் அடக்கியாள பார்ப்பார்கள் ,நோய்வாய்ப்படுவார்கள் ,அவப்பெயருக்கு ஆளாவார்கள் .ஆண்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ரெப்புட்டேஷனை இழந்து பெண்கள் மீது குற்றம் சொல்லியபடி அவர்களை அடிமைகளாக நடத்த துடிப்பார்கள் ,பெண்கள் புரட்சி செய்வார்கள் .

நான்கு திசைகளை பற்றி சில அடிப்படையான விஷயங்களை சொல்லிவிட்டேன். அடுத்து இந்த மூலைகளை பற்றி பார்க்கலாம். வடிவேலுவின் கெணத்தை காணோம் காமெடி அல்லாருக்கும் தெரிஞ்சதுதேன். ஆனால் ஒரு வீட்ல அக்னி மூலையை காணோம் -இன்னொருத்தர் வீட்ல வாயு மூலையை காணோம். ஒரு வீட்ல நைருதி மூலையை காணோம்,ஒரு வீட்ல ஈசான்ய மூலையையே காணோம் என்னாச்சு தெரீமா? அனுபவங்கள் தொடரும்.

6 Replies to “என் கெணத்த காணோம் (வாஸ்து அனுபவங்கள்: 6)”

Sarvanan.s

04/10/2017 at 11:22 am

கிழக்கு மேற்கு தெரு வடக்கு தெற்கு தெரு .கிழக்கு வாசல் தெற்கு ஒட்டியா விடு இருக்கலாமா

Reply

லோகநாதன்

16/05/2017 at 1:42 pm

வணக்கம் சார் ஜாதக படி ஓவ்வொருத்தருக்கும் ஓவ்வொரு திசை செட்டாகுமா இல்லை வாஸ்த்து படி சரியாக அமைந்தால் போதுமா சார்

Reply

  S Murugesan

  16/05/2017 at 3:11 pm

  லோக நாதன் !

  பொதுவா கிழக்கு பார்த்த வாசல் எல்லாருக்குமே மினிமம் கியாரண்டி . வடக்கு பார்த்த வாசல் ரெம்ப லந்து கொடுக்கும். செட் ஆய்ட்டா சூப்பர்.

  தெற்கு வாசல் போலீஸ்/மிலிட்டரி ஆட்களுக்கு ஓகே. மேற்கு வாசல் ? விதவைகள்/பெண் டைவர்சிக்களுக்கு பெட்டர்

  Reply

saravanan

21/04/2017 at 1:40 pm

niruthi is open , unable to close due to various reasons , many flowr plants r there all corners are good roof of agni moolai is lower than vayu moolai , what is the parigaaram ?

Reply

  S Murugesan

  21/04/2017 at 3:18 pm

  Sir,
  If possible shift from there and then alter. If not so just shift from there. You may get a chance to alter .

  Reply

abishegapriyan

18/04/2017 at 9:34 am

சகோ…. வாஸ்து பற்றி இப்போ மீண்டும் பதிவிடுவதாலும், மேலும் அக்னி முலை, வாயுமூலை என்று கிணத்தைக்காணோம் என்ற ரீதியில் சஸ்பென்ஸ் வைத்ததாலும் வரைபடத்தை மெயிலுக்கு அனுப்பிவிட்டு இங்கே கேள்வி…. (அனைவருக்கும் பயன்படட்டுமே என்றுதான்)

ஈசான்யத்தில் (கிட்டத்தட்ட வட கிழக்கில் கழிவறை, வடக்கு, கிழக்கு மூலை சந்திப்பில் பூஜை அறை (அதுவும் காட்டு தெய்வத்தின் பிடிமண்ணை வைத்து மனைக்குள் பூஜிக்கிறார்கள்.)

மனையின் வடக்கில் காலியிடம் ஒரு இஞ்ச் கிடையாது. ஆனால் தெற்கில் காலியிடம், அது நடைபாதை, தெற்கில் பக்கத்து கட்டிடத்தை ஒட்டி இந்த மனையின் தெற்கில் குட்டி சாக்கடை. அது மேற்கில் இருந்து கிழக்கில், அக்னி மூலையில் தெரு சாக்கடையில் சேருகிறது.

வடக்கும் மேற்கும் சந்திக்கும் இடத்தில் செப்டிக் டேங்க், கழிவறை.

கிழக்கில் இறங்கினால் ரோடு. ஆனால் மேற்கில் சுமார் பத்தடி அகலம் காலியிடம். அந்த இடத்தில் அதாவது மேற்கில்தான் ஒரு காலத்தில் அடிபம்பு போர் போடப்பட்டிருந்தது.

நம் பாகத்தின் முதல் வீட்டில் அந்த இடத்தினைப் பொறுத்தவரை அக்னி மூலையில் அதாவது தெற்கில் நடைபாதை அருகில் மின்சார மீட்டர் மற்றும் முனிசிபல் வாட்டர் பைப் உள்ளது.

வரைபடத்தில் பச்சை பார்டர்தான் நம்ம மனையின் எல்லைகள்.

இப்போ சொல்லுங்க சகோ… இதுல எந்த எந்த மூலை காணோம்னு.

இப்படிக்கு,
அபிஷேகப்ரியன்.

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *