வாஸ்து அனுபவங்கள்: 5

வாஸ்து மூலைகள்

அண்ணே வணக்கம்ணே !

நியூமராலஜிப்படி எட்டாவது மாசம் நடந்ததாலயா? எட்டுவருசமா குடியிருந்த வீட்டை காலிபண்ணி புது வீட்டுக்கு குடிவந்ததாலயா? ஜாதகங்கள் டம்ப் ஆகி அடிச்சு பிடிச்சு வேலை பார்க்க வேண்டி வந்ததாலயா? காரணம் எதுவா வேணா இருக்கட்டும்.. நியூமராலஜி படி ஆறாவது மாசம் ஆரம்பிச்சப்ப டூ இன் ஒன்னா இருக்கட்டும்னு பல்லாண்டு வாழ்க தொடரை ஆரம்பிச்சேன்.

நம்முது கடகலக்னமாச்சா ஸ்தூலமா “நெல்லாவே” வந்தாலும் மனசுக்கு வல்லின்னா அதை தொடர்ரது ரெம்ப கஷ்டம். அப்டித்தான் அதை டீல்ல விட்டுட்டன். இந்த எட்டாம் மாசம் எந்தளவுக்கு டர்ராக்கிருச்சுன்னா ஆத்தாவுக்காவ எழுதி வச்ச தெலுங்கு கவிதைகளை DTP பண்ண கொடுத்த பிறவு – ரெண்டு தவணையா ஒரு ஆயிரம் ரூவா செலவழிச்ச பிறவுதான் வண்டி ஸ்டெடி ஆச்சு.

ஃபிசிக்கலா ஒரு ஆபத்தும் வந்துரல . மனசுல ஒரு மூலையில ஞம ஞமங்கும். (சனம் இதே ஃபீலோட 120 வருசம் வாழ்ந்துர்ராய்ங்க. அவிகல்லாம் தெய்வம் -நமக்கு இந்த நிலை கட்டுப்படியாகுதுங்கோ) .பல்லாண்டு வாழ்க தொடரை தலைமுழுகியாச்சு. இந்த வாஸ்து அனுபவங்களாச்சும் சுட்டியா ஓடும்னு பார்த்தா இதுவும் நொண்டியடிக்க ஆரம்பிச்சுருச்சு .

படிக்கிறவிக என்ன வாஸ்துல டிப்ளமா வாங்கவா படிக்கிறாய்ங்க. அவிகவிக பிரச்சினைக்கு இதுல ஒரு தீர்வு கிடைக்காதாங்கற நப்பாசையில தானே படிக்கிறாய்ங்க. வீட்ல எந்த மாதிரி பிரச்சினை இருந்தா வாழ்க்கையில என்ன மாதிரி பிரச்சினை வரும்னு பாய்ண்ட் டு பாய்ண்ட் சொன்னா ஆர்வமா படிப்பாய்ங்க.

ஆனால் நாம பாட்டுக்கு சித்தம் போக்கு சிவன் போக்குனு எழுத ஆரம்பிச்ச்சுட்டம். இது நமக்கே உறைக்குது .சனம் என்னமா நொந்திருப்பாய்ங்கன்னு புரியுது .ஆனால் உடைச்சு திருப்பலாம்னு பார்த்தா அந்த “மூட்” வரமாட்டேங்குது .
இந்த பதிவுல எப்படியும் ஒரு திசைக்காச்சும் பரிகாரம் சொல்லியே உட்டுர்ரன்.

ஏற்கெனவே சொல்லிப்புட்டதா ஞா.ஆனாலும் சந்தர்ப்பம் கருதி இன்னொருக்கா சொல்லிர்ரன். வீட்டோட நீள அகலங்களை தனி தனியே அளந்து 9 பாகமாக்கி -ஒவ்வொரு சைடும் மொத ,மற்றும் கடேசி ரெண்டு ரெண்டு பாகங்களை மூலையா வச்சுக்கனும். மத்தியில வர்ர 5 பாகத்தை முக்கிய திசையா வச்சுக்கனும். இதான் பேசிக். உங்களுக்கு நெல்லா புரிய ஒரு படத்தை கூட தேத்தி போட்டுர்ரன்.

முக்கிய திசைகள்னா நாலு. கிழக்கு மேற்கு – வடக்கு தெற்கு . இதுல கிழக்கு பக்கம் காலியா இருக்கோனம் /மேற்கை விட பள்ளமா இருக்கனும். திறந்த வெளியா இருந்தா சிரேஷ்டம். இதுக்கு மாறா இருந்தா? அஃதாவது மேற்கு திசை பள்ளம் கிழக்கு திசை மேடு . மேற்கு திசை திறந்தவெளி ,கிழக்கு திசை க்ளோஸ் இப்படி இருந்தா என்னாகும்னா..
அந்த வீட்டு பெண்கள் அல்லி ராஜ்ஜியம் நடத்தபார்ப்பாய்ங்க. செரி அவிகளாச்சும் “கெட்டியா” இருந்து மெயின்டெய்ன் பண்ணுவாங்களான்னா ஊஹூம். திடீர்னு அவப்பேர் வரும்/ உடல் நிலை பாதிக்கும்.ஆனால் அந்த வீட்டு ஆண்கள் கொஞ்சம் கொஞ்சமா கூன் பாண்டியர்கள் கணக்கா மாறிருவாய்ங்க.
இதுக்கு என்ன பரிகாரம்னா..

வீட்ல உள்ளவிகளுக்கு ஆஸ்மா இன்ன பிற பிரச்சினைகள் இல்லின்னா ஒரு ஃபீமேல் பெட் வளர்க்கலாம். வீட்ல உள்ள ஆம்பள சாமிகளை எல்லாம் பூஜை அலமாரியின் கீழ் வரிசைக்கும் ,பெண் தெய்வங்களை மேல் வரிசைக்கும் மாத்தி வைக்கலாம்.

சொந்த வீடா இருந்தா கிரானைட்ல பொஞ்சாதி பேரை செதுக்கி பதிக்கலாம். ஆண்கள் நைட்டி டிசைன்ல லுங்கி வாங்கி அணியலாம். மீசையை மழிச்சுரலாம். ஃபேர் அண்ட் லவ்லி /டால்கம் பவுடர் உபயோகிக்கலாம்.
இதை எல்லாம் செய்தா மேற்படி வாஸ்து தோஷத்தை காக்கா தூக்கிட்டு போயிரும்னு நினைச்சுராதிங்க. அடுத்த ஸ்டெப் பரிகாரத்தை செய்துக்கற “வாய்ப்பு”ஏற்படும்.

அடுத்த ஸ்டெப் பரிகாரம்னா ..சொந்த வீடுன்னா மேற்கு திசை சுவற்றை ஒட்டி ஒன்னரை அடி உசரத்துக்கு 2 அடி அகலத்துக்கு திண்ணை கணக்கா கட்டிரனும். அது மேல வேணம்னா சிமெண்ட் ஸ்லாப்ல ஷெல்ஃப் அமைச்சுக்கலாம். ஒரு வேளை வெளிப்பக்கம் காலியிடம் இருந்தா திண்ணையை வெளிப்பக்கமே அமைச்சுக்கலாம். சிரேஷ்டம்.

இதே போல கிழக்கு திசை சுவரை ஒட்டி வீட்டில் உபயோகிக்கும் தண்ணீர் வெளியேறும் பைப் லைன் அமைக்கலாம்.
இதை செய்தா தோஷம் போயே போச்சான்னு கேப்பிங்க. நோ பாஸ் ! இந்த வீட்டை காலி பண்ணிட்டு – பெட்டர் வாஸ்து உள்ள வீட்டுக்கு குடி போற வாய்ப்பு ஏற்படும் . இங்கே வர்ர வாடகையை வாங்கி அங்கே கொடுக்க வழி ஏற்படும். இங்கே குடி வர்ர சனம் மாசம் பொறந்தா வாடகையை எண்ணி வைக்கிற அளவுக்காச்சும் பெட்டரா வாழ்வாங்க.

அப்படி வாடகைக்கு விடும் போது லேடீஸ் ஹாஸ்டல் / பெண் சனத்தொகை அதிகமா உள்ள சனத்துக்கு விடுங்கப்பு. அவிகளுக்கும் தோஷம் குறையும்.

வாடகை வீடா இருந்தா என்ன பண்ணனும்னு கேப்பிக. வீட்டை காலி பண்ணிட்டு பெட்டர் வாஸ்து உள்ள வீட்டுக்கு ஜம்ப் ஆயிர வேண்டியதுதான்.
அடுத்த பதிவுல தெற்கு -வடக்கு திசைகளை பற்றி பார்க்கலாம். உடுங்க ஜூட்டு

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *