Tags      

Categories  அனுபவஜோதிடம் ரோக பாவம்

பல்லாண்டு வாழ்க ( நோய்கள் :ஜோதிட பார்வை ) : 2

nadi

அண்ணே வணக்கம்ணே !

நியூமரலாஜிப்படி இது நமக்கு ஆறாவது மாசம் .(ஆகஸ்டுல பிறந்ததால இதை முதல் மாதமா வச்சுக்கனும். ஆறுன்னா ரோகம் தானே – நாம பந்தாவா சித்தன் போக்கு சிவன் போக்குங்கறாப்ல பல்லாண்டு வாழ்கனு தலைப்பை போட்டு ரோக காண்டத்தை ஆரம்பிச்சுட்டம்.

விதி வழியே மதிங்கறது எம்மாம் கரீட்டா ஒர்க் அவுட் ஆகுது பாருங்க மேலும் நம்ம லக்னத்துக்கு எட்டுக்குடையவர் 6 க்கு வரப்போறாரு -சனி – அவ்வ்வ்)

அல்லோபத்தியில பாடிய பார்ட் பார்ட்டா பிரிச்சு தான் அனலைஸ் பண்ணுவாய்ங்க. அததுக்கு ஒரு பெசலிஸ்ட் உண்டு. இந்த சாப்டர்ல ச்சும்மா ஆயுர்வேதத்தை டச்சு பண்ணிருவம். அடுத்தடுத்த சாப்டர்ல ஒன்லி அல்லோபத்தி ஓகேவா.
ஆயுர்வேதத்தோட தியரி என்னன்னா ஹ்யூமன் பாடியில வாதம் ,பித்தம் ,சிலேத்துமம்னு பிரதானமா 3 நாடி ஓடுது . இந்த 3 நாடியும் ஓவர் ஆக்டிங் இல்லாம அதும்பாட்டுக்கு ஓடிக்கிட்டுக்கிடந்தா நோயே வராது .

ஜோதிடத்துல ஒவ்வொரு கெரகத்துக்கும் ஒவ்வொரு நாடி சொல்லி வச்சிருக்காய்ங்க. குரு ,புதன்,சனி =வாத நாடி ; சூரியன் ,செவ் ,ராகு ,கேது =பித்த நாடி ; சுக்கிரன்,சந்திரன் =சிலேத்தும நாடி .

லக்னாதிபதி -லக்னத்துல நின்ன கெரகங்களோட இம்பாக்ட் உங்க பாடி மேல இருக்குமா இல்லையா? ஒவ்வொரு கெரகமும் ஒவ்வொரு நாடியை தூண்டி விடுதுன்னு பார்த்தம்.இந்த விதிப்படி உங்க லக்னாதிபதி ஆரு ? லக்னத்துல உள்ள கிரகங்கள் ஆருனு பார்த்துக்கங்க.

அந்த நாடியோட டாமினேஷன் உங்க உடல் மேல் இருக்குமா இல்லையா? இருக்கா இல்லையா? நீங்களே டாலி பண்ணிக்கலாம். இந்த பாடாவதி வார இதழ்கள்ள தான் ஏதோ ஒரு கருமத்துல படிச்சன் . சனத்தை அவிக பாடியில எந்த நாடி டாமினன்டா இருக்கோ அதை வச்சு 3 கேட்டகிரியா பிரிச்சு அவியளோட டோட்டல் நேச்சர்,டேஸ்ட்,லைஃப் ஸ்டைல் எல்லாத்தையும் பட்டியல் போட்டிருந்தாய்ங்க. நாம அம்மாந்தூரம் போகப்போறதில்லை. ச்சும்மா ச்சூ காட்டி விட்டுர்ரன். பிறவு உங்க சமர்த்து. தேடுங்கள் கிடைக்க பெறுவீர்கள் .

கெரகங்களுக்கு இந்த நாடி அந்த நாடிங்கறாய்ங்க ஓகே. இதே போல தமிழ் மாசங்கள்ள ஒவ்வொரு நாடி ஒவ்வொரு மாசத்துல டாமினன்டா இருக்கும்ங்கறாய்ங்க. கான்வென்ட்ல படிச்ச பார்ட்டிங்களுக்கு ஷார்ட்டா ஒரு க்ளூ கொடுத்துர்ரன். மேஷம் முதல் மீனம் வரை வரிசையா 12 ராசிகளை எழுதிக்கோங்க. அந்தந்த ராசிக்கு நேர் எதிரா தமிழ் மாசங்களை எழுதிக்கோங்க. உங்க ஜாதக சக்கரத்துல சூரியன் எந்த ராசியில இருக்காருன்னு பாருங்க. அந்த ராசிக்கு நேர இருக்கற தமிழ் மாசத்துல தான் நீங்க பிறந்திங்க. அய்யர் மாரு ஜாதகத்தை மேன்யுவலா எழுதியிருந்தா தமிழ் மாசத்தை கட்டாயம் குறிப்பிட்டிருப்பாய்ங்க டோன்ட் ஒர்ரி.

இப்ப கீழ உள்ள விதிய பாருங்க.
____________

கடகம் முதல் துலாம் வரை (ஆடி முதல் ஐப்பசி வரை ) வாதம் வளர்ச்சி பெறும். மீனம் முதல் மிதுனம் வரை (பங்குனி முதல் ஆனி வரை ) பித்தம் வளர்ச்சி பெறும். விருச்சிகம் முதல் கும்பம் (கார்த்திகை முதல் மாசி வரை ) சிலேத்துமம் வளர்ச்சி பெறும் என்பர்
நன்றி : http://jadesamy.blogspot.in/2015/07/blog-post_27.html

வாத நாடி
வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும். வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும் ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.

அறிகுறிகள்:
உடல் குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல் கொஞ்சமாகவும் வெளியாகும்.

பித்த நாடி
பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு,காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம், குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள் உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

அறிகுறிகள்:
உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும் வெளியாகும்.

சிலேத்தும நாடி:
சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து நடுங்கும், உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு, வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சு மற்றும் விலாப்பகுதியில் வலி இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர் குறைவாகப் போகும்.

உடல் அறிகுறிகள்:
உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.
நன்றி: http://aanmeegaiyarkai.blogspot.in/2011/11/blog-post_75.html

__________

நாம வளர்ந்து கடாவா வளர்ந்த பிறகே அந்தந்த மாசத்துல அந்தந்த நாடி டாமினன்டா இருக்கும்னா அதே மாசத்துல பிறந்த நம்ம பாடியில ?? அந்த நாடியோட இம்பாக்ட் இருக்குமா இல்லையா?
_________

அடுத்து திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது நாடி பொருத்தம்னு ஒன்னை பார்ப்பம். நாம ஃபாலோ பண்ற தெலுங்கு பஞ்சாங்கத்துல ஆதி நாடி ,மத்ய நாடி ,அந்த்ய நாடின்னு கொடுத்திருக்காய்ங்க. அஃதாவது வாதம்,பித்தம் , சிலேத்துமம். தமிழ் பஞ்சாங்கத்துல எப்படி கொடுத்திருக்காய்ங்க தெரியல.

அஃதாவது உங்க நட்சத்திரத்துக்குன்னு ஒரு நாடி இருக்கு. உங்க பாடியில அந்த நாடி டாமினன்டா இருக்கும். நாடிப்பொருத்த மேட்டர்ல ஜோதிட விதி என்னன்னா மணமகள் -மணமகனுக்கு வேறு வேறு நாடி வரனும். (எவ்ள அலார்ட்டா இருக்காய்ங்க பாருங்க.)

இப்படி நிறைய மேட்டர் இருக்கு .எல்லாத்தையும் அடுத்தடுத்த பதிவுகள்ள பந்தி வைக்கிறேன். எனக்கென்னமோ இனி வீடியோ யுகம் தான்னு தோனுது. இருந்தாலும் பழக்க தோஷம் காரணமா பதிவு போட்டுக்கிட்டிருக்கன். நம்ம வெப்சைட்ல படிக்கிறவிக ஒவ்வொருத்தரும் ஒரு பத்து பேருக்கு சைட்டை பத்தி சொல்லி -பத்து பேரு கூடுதலா படிக்க செய்தாலும் இன்னம் ஒரு வருசமாவது பதிவு போடறதை தொடரலாம். இல்லின்னா ??

எச்சரிக்கை:

நாம சாப்பிடற ஒவ்வொரு திட,திரவ பொருளுக்கும் ஒரு குணமிருக்கு. மேற்படி 3 நாடிகளில் ஏதோ ஒன்றை தூண்டி விடக்கூடிய பவர் இருக்கு.

மேற்சொன்ன நோய்குறிகள் மேற்படி நாடிகள் மந்தமாகும் போதோ -பிடி உஷா கணக்கா ஓடும்போதோ தான் பிரச்சினை வரும்.

லோக்கல்ல ஆருனா சின்சியரா ஆயுர்வேதத்தை மட்டும் ப்ராக்டிஸ் பண்ற டாக்டர் இருந்தா ஒரு தாட்டி கன்சல்ட் பண்ணுங்க. டீட்டெய்ல்டா கைட் பண்ணுவாங்க.

(அதுக்காவ போலி டாக்டர் கிட்டே சிக்கிராதிங்க )

S Murugesan
sabari says:

vanakkam ayya,

thayavu seithu keela vulla book a padichu vunmaiya sollunga.please..

Ayurvedic Astrology: Self-healing Through the Stars
http://www.eso-garden.com/specials/ayurvedic_astrology.pdf

–sabari.

S Murugesan says:

சபரி !

நம்ம ஆங்கில அறிவு ஆட்டுவால் மாதிரி. இதெல்லாம் மண்டையில ஏத்தறது ரெம்ப குஷ்டம். முடிஞ்சா ஒரு சுருக்கம் கொடுங்க. என் கருத்தை சொல்றேன்.

Thanigaivel says:

அய்யா ,

நிரந்தர வேலை , நிரந்தர வீடு அமைய பரிகாரம் சொல்லுங்கள்.
இரண்டும் ஆறு அல்லது ஒரு வருடத்திற்கு மேல் மாற வேண்டி உள்ளது.

உங்கள் பதிலை எதிர் நோக்கி,
வேலையில்லாதவன்.

(தனுசு ராசி/தனுசு லக்னம்)

S Murugesan says:

தணிகை வேல் !
தற்போது எந்த வேலையில் உள்ளீர் . வீட்டின் சுற்றுப்புறம் ? தலைவாசல் எத்திசையை நோக்கி உள்ளது தெரிவிக்கவும்.

Thanigaivel says:

அய்யா,

தற்போது accounts officer ஆக உள்ளேன். (15 நாளாக வேலை இல்லாமல் உள்ளேன்.)

நாங்கள் இருக்கும் வீடு தனியாக உள்ளது. வீட்டின் எதிரே விளையாட்டு (சுற்று சுவருடன்) மைதானம். தலைவாசல் தெற்கு நோக்கி உள்ளது. வீட்டு உரிமையாளர் முஸ்லீம்.

நன்றி அய்யா ,
தணிகைவேல்

S Murugesan says:

தணிகைவேல் !

இன்று முதல் பச்சை நிற ஆடை /அணி கலன் அதிகம் யூஸ் பண்ணுங்க. பக்கத்துல பெருமாள் கோவில் ஏதாவது இருந்தா அஞ்சு நாள் வரிசையா துளசி மாலை போட்டு வணங்கிட்டு வாங்க.இதனால் வேலை விஷயத்தில் நல்ல திருப்பம் வரும் (வந்த பிறகு ஒரு தபா ரிமைன்ட் பண்ணுங்க)

அதே போல வீட்லயே பிள்ளையார் விக்கிரகம் சின்னதா வச்சு தினசரி பூஜை பண்ணுங்க (ஏற்கெனவே இருந்தா சிரேஷ்டம் -இல்லின்னா வாங்கிருங்க) இது வீடு மேட்டருக்கு நல்லது .

Thanigaivel says:

நன்றி அய்யா,

தணிகைவேல்.

Kalpana says:

Vanakkam Sir

2 varusamaa thodarndhu mudi kottuthu sir. but no medical reason sir. All blood test report is positive nothing problem. itharku oru theervu sollungal sir please .

S Murugesan says:

அம்மா !
ஜோதிட ரீதியாக சனி பிடிக்கும் போது இது நிகழலாம். ஜாதகத்தில் லக்னம் / ஏழில் உஷ்ண கிரகங்கள் இருந்தாலும் நடக்கும். அல்லது லக்னத்தை உஷ்ண கிரகங்கள் பார்ப்பதாலும் நடக்கலாம்.

பிரச்சினை என்னன்னு தெரியாம என்ன சொல்றது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *