பல்லாண்டு வாழ்க ( நோய்கள் -ஜோதிடபார்வை) : 1

2

3

அண்ணே வணக்கம்ணே !

பல்லாண்டு வாழ்க ‘ங்கற இந்த தொடரை அறிவிச்சு வீடியோ ட்ரெய்லர் கூட விட்டுட்டம். ஆனால் மொத சாப்டருக்கே சிங்கியடிக்குது. என்னடா மேட்டருனு பார்த்தா செவ்வாய் எட்டுல உட்கார்ந்து ரிவிட் அடிச்சிருக்காரு . இந்த ஜல்லி கட்டு மேட்டர்ல ஆரோ என்னாகும்னு கேட்க ஜூம் போட்டு பார்த்து த்ரில்லாயிட்டன்.

செரி எப்படியோ செவ் ஒன்பதுக்கு வந்துட்டாப்ல தான். தூர தேசம்லாம் போயி நேர்காணல்லாம் முடிச்சுட்டு வந்துருக்கம்ல. ஆகவே அடுத்த மூன்று ஒன்னரை மாசங்களுக்கு ரெகுலரா சாப்டர் வரும் போல . இறைவனுக்கு நன்றி.

முண்டாசு பட்டி சினிமா கணக்கா வீடியோ போடறதால நம்ம “தேஜஸ்”குறைஞ்சுருதா ? புரியல. டெக்னாலஜியை உபயோகிச்சுக்கனும்ங்கற தவிப்புல ப்ளாக் பதிவுகள் ஆரம்பிச்சம். எழுதறது சுத்தமா நின்னு போச்சு வீடியோ பதிவுகள் ஆரம்பிச்சம். வலைப்பதிவுகள் ??

இந்த தொடர்பதிவுக்கான வெள்ளோட்டமா வீடியோ போட்டப்ப இருந்த மைன்ட் செட்டே வேற . இப்ப உள்ள மைன்ட் செட் வேற. நாம பல்லாண்டு வாழ -அதுவும் உடல் நலத்தோட வாழ லக்னாதிபதியே ஆப்பு. (அக்கிரமம்) இதை மொதல்ல பைசல் பண்ணிருவம்னு முடிவு பண்ணிட்டன். லக்னாதிபதியோட தசைகள்ள தான் கண்டங்கள்னு ஒரு பொதுவிதி இருக்கு. லக்னாதிபதி ஜாதகரை காட்டும் கிரகம். இவர் ஏன் கண்டங்களை கொடுக்கனும்?

லக்னம் தலையை காட்டற பாவம். லக்னாதிபதிக்குரிய தசையில/புக்தியில தலைக்குள்ளே இருக்கிற சமாசாரம்லாம் ஓவர் டைம் பண்ணும் போல. அந்த சமயம் ஃப்ரேக்சன் ஆஃப் தி செகண்ட் நம்ம உலகத்துல நாம இருந்தம்னு வைங்க என்னாகும்? விபத்துக்கு வாய்ப்பிருக்கா இல்லையா?

மேலும் நம்ம லைஃபை லீட் பண்றதே லக்னாதிபதிதானே. ரைஸ் மில் ஓடுனா சத்தம் வரும் ,மிளகாய் அரைக்கிற மிஷினு ஓடினா நெடி வரும். லக்னாதிபதியோட நேச்சரை பொருத்து தானே நம்ம லைஃப் இருக்கும். அந்த லைஃபால வரக்கூடிய வியாதிகள் வர சான்ஸ் இருக்கா இல்லையா? இப்படியாக அவரவர் லக்னாதிபதி தொடர்பான வியாதிகளுக்கு தான் மொத இடம்.

மேலும் பல ஜாதகங்கள்ள லக்னாதிபதி மட்டும் தான் ஹார்லிக்ஸ் பேபி மாதிரி புஷ்டியா இருப்பார் (அதனாலதேன் ஆவிசு )ஆனால் மத்தகிரகம்லாம் பல்பு வாங்கியிருக்க ஜாதகர் லக்னாதிபதி தொடர்பான தொழில்லயே இருப்பாரு என்னாகும்? தொழில் சார்ந்த வியாதிகள் (உ.ம் மாவு மிஷின் வச்சிருந்தா அலர்ஜி )

கொஞ்சம் ஸ்பெசிஃபிக்கா பார்ப்பம் .மேஷம் விருச்சிகம் இரண்டுக்கும் அதிபதி செவ். செவ்வாய்னா என்ன போலீஸ் ,மிலிட்டரி,ரயில்வே,எலக்ட்ரானிக்ஸ் ,நெருப்பு இப்படி ஆயிரத்தெட்டு இருக்கு. செவ்வாய் என்ன ஆவிசு முச்சூடுக்கும் ஒரே ராசியிலயா இருக்க போறார். அவர் பாட்டுக்கு ராசி மாறிக்கிட்டே இருப்பாரு. ஆனால் நாம அதே ஃபீல்டுல தான் இருப்பம். செவ் பிரதிகூலமா இருக்கிற சமயம் என்னாகும்? செவ் காரகமுள்ள வியாதிகள் வரும்.
இதே போல ரிஷபம் -துலா இவிகளுக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன்னா கில்மா. கில்மா மேட்டரால ப்ரஷர் குறையுது , ஸ்ட் ரெஸ் குறையுது . நல்ல தூக்கம் வருது இப்படி என்னென்னமோ நன்மைகளை சொல்றாய்ங்க. இதெல்லாம் எப்போ? பாடி அதுக்கு ரெடியா இருக்கிறச்ச.

பழக்க தோஷத்துல பாடி ரெடியா இல்லாத சமயம் கோதாவுல இறங்கினா என்னாகும்? அது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். இதே போல மிச்சமிருக்கிற எட்டு ராசிகளுக்கும் ஈசியா கெஸ் பண்ணி சொல்லலாம்.
லக்னாதிபதி யாருங்கறத பொருத்து சில வியாதிகள் வரும்.

மேஷம் -விருச்சிகம் : அதிபதி செவ் : ரத்தம்,எரிச்சல்,கோபம்,உஷ்ணம் தொடர்பானவை
ரிஷபம்-துலாம் : அதிபதி சுக்கிரன் : கைனகாலஜிக்கல் / ஜீரண கோளாறுகள்/ஷுகர்
மிதுனம் -கன்னி : அதிபதி புதன் : தோல்,கீல்,அண்டம்
கடகம் : அதிபதி சந்திரன் : மனம்,நுரையீரல்,சிறு நீரகம்
சிம்மம்: அதிபதி சூரியன் : பல் ,தலை ,எலும்பு,முதுகெலும்பு
தனுசு,மீனம் :அதிபதி குரு :வயிற்று கோளாறுகள் -வாயு கோளாறு /முதுமையில் இதய கோளாறுகள்
மகரம்,கும்பம் :அதிபதி சனி : கால்,நரம்பு,ஆசனம்

அடுத்த பதிவுல லக்னாதிபதி ஜாதகத்துல எங்கெல்லாம் நின்னா என்ன பிரச்சினை / எந்த கிரகத்தோட சேர்ந்தா என்ன பிரச்சினைன்னு பார்க்கலாம்.

(அவ்.. இனி பதிவே போடமுடியாதோன்னு பயந்தே போயிட்டன் -சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் -அடுத்த பதிவுல இந்த ரைட்டர்ஸ் ப்ளாங்க் ஒழிஞ்சுரும்னு நினைக்கேன்)

எச்சரிக்கை:
எஸ்.எஃப்.எஃப் யு ட்யூப் சானல்ல நம்ம விரிவான நேர்காணல் வந்திருக்கு. பாருங்க. சகட்டுமேனிக்கு எல்லா மேட்டரையும் டச்சு பண்ணியிருக்கம்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.