பல்லாண்டு வாழ்க ! (புதிய தொடர்)

astrology

அண்ணே வணக்கம்ணே !
“ஆடிய ஆட்டம் என்ன? கூடிய கூட்டம் என்ன?” இன்னைக்கு மிச்சம் நின்னது ரெண்டே ரெண்டு பார்ட்டிதேன். இதான் பாஸ் வாழ்க்கை . பதினாறு வருச ப்ளாக் பதிவுகள் , 07-feb-2011 முதலா வெப்சைட்ல பதிவுகள் ,தொடர்கள் நான் என்ன பைசா கேட்டேனா? ஊருக்கு வரேன் சாப்பாடு போடுங்கனு கேட்டேனா?

கொஞ்சம் டீப்பா போவம் பாஸ் .. பனிரண்டு லக்னத்துக்கும் ஒன்பது கிரகங்கள் எங்கெங்கே நின்னா என்ன பலன்னு வீடியோ பதிவு போடறேன். அதை டெக்ஸ்டா கொடுக்க ஒரு ஆளை அறிமுக படுத்துங்க. பைசா கொடுக்கறேன்னு தானே சொன்னேன்.

ஆக மொத்தத்துல தமிழ் கூறு நல்லுலகம் நுனிப்புல் மேயத்தான் லாயக்கு போல. இப்ப மறுபடி அச்சாணியமா வெகண்டையா ஒரு தலைப்பை பிடிச்சு புதுசா ஒரு தொடர் எழுதிர வேண்டியதுதேன். வண்டி ஓடனும்ல?
கில்மான்னா நிறைய எழுதியாச்சு. பைசாவ பத்தியும் எழுதிட்டம் .சந்தானமின்மை, கல்வி,வேலை வாய்ப்பு ,திருமண தாமதம் எதையும் விட்டுவைக்கல. பின்னே என்னதான் எழுதறது?

இன்னம் ஒரு வாரத்துக்கு ஹாலிடே மூட்ல இருப்பிங்க. எதை எழுதினாலும் பத்திக்கிறது கஷ்டம் . நோய்களை பத்தி – ஆயுள் பங்கம் பத்தி எழுதுவமா? இருக்கிற ஒன்பது கிரகங்களை வச்சு / இவிக எந்த எந்த பாவத்துல இருந்தா எப்படியா கொத்த நோய்லாம் வரும்னு ஜூம் போடுவமா?

மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து ..

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *