ஆக்டிவேட்டிங் அண்ட் டீ ஆக்டிவேட்டிங் ப்ளானட்ஸ்

Exif_JPEG_420
Exif_JPEG_420

( நம் நாடு -மானிலங்கள் -திமுக குறித்த என் கனவுகளை கலைஞருக்கு அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் கூரியரில் அனுப்பினேன். அது காவேரி நிர்வாகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.மேற்படி கடிதம்/ அதற்கான கவரிங் லெட்டருக்கு டிசைன் செய்த லெட்டர் ஹெட் இத்யாதிய தான் படத்துல பார்க்கிறிங்க)

அண்ணே வணக்கம்ணே !

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆன்மா அமைதியில் நிலைக்க வேண்டி பதிவுக்கு போறேன்.
தமிழ் சினிமாவுக்கு தமிழ்ல பேர் வச்சா வரிவிலக்கு கிடைக்கும். இது என்ன பதிவு தானே. மேலும் இதே பொருள் தரக்கூடிய சுருக்கமான தலைப்பு சிக்கல.ஆகவே அப்டியே வச்சுட்டன். ஏன்னா பல நேரம் சிக்குன்னு தலைப்பு சிக்காமலே பதிவு போடறது தள்ளிப்போயிருக்கு.

ஏற்கெனவே பெரிய இடைவெளி. இன்னைக்கு போட்டே ஆகனும்னு ஒரு சங்கல்ப்பம். இப்ப கூட பாருங்க வரிவிலக்குன்னா அது கன்ஸ்யூமருக்கு தானே போய் சேரனும்? தியேட்டர் காரனே ஆட்டைய போடலாமாங்கற பஞ்சாயத்துல்லாம் மைன்ட்ல ஸ்பார்க் ஆகுது.

நிற்க தலைப்பை பார்த்துரலாம் ஆக்டிவேட்டிங் அண்ட் டீ ஆக்டிவேட்டிங் ப்ளானட்ஸ் தமிழ்ல சொன்னா கிரகங்களை செயலிழக்க செய்தலும் – செயல்பாட்டுக்கு கொண்டு வருதலும். கொய்யால கெரகம் என்ன சிம் கார்டா ஆக்டிவேட் /டி ஆக்டிவேட் பண்ணன்னு கேப்பிக சொல்றேன்.

ஒவ்வொரு ஜாதகத்துலயும் நன்மை செய்ற கிரகங்களும் உண்டு.தீமை செய்யும் கிரகங்களும் உண்டு. அதுவும் நன்மை செய்யும் கிரகமும் தீமை செய்யும் கிரகமும் ஒரே கட்டத்துல உட்கார்ந்திருக்கும். பாம்புக்கும் தவளைக்கு கயிறு கட்டி விட்டாப்ல. இதை எல்லாம் எப்படி டீல் பண்றது?

என் ஜாதகத்தையே எடுத்துக்குவம் கடகலக்னம். லக்னத்துலயே குரு-சூரியன்-புதன். குருவை சூரியன் டாமினேட் பண்ண, சூரியனை புதன் டாமினேட் பண்ண சம்பந்தா சம்பந்தமில்லாம ஜோசியர் கெட்டப்ல குப்பை கொட்டிக்கிட்டிருக்கம்.

இந்த இடத்துல சூரிய -புதன் இல்லாம குரு மட்டும் இருந்திருந்தா அக்மார்க் வேத விற்பனராகி – எல்லார்க்கும் நல்லவனா காலத்தை கழிச்சிருக்கலாம்ல?

இதுக்கு சூரியன் -புதனை டீ ஆக்டிவேட் பண்ணனும். அதெப்படி? அவியள வேலை செய்ய விடனும்பா. சூரியன் தன் முனைப்பை தரக்கூடியவர். ஈகோ.

இங்கே ஒரு தியரிய சொல்லியே ஆகனும். எதுவுமே முழுமை பெற்றுவிட்டால் அது சுவையான முரண் ஆகிவிடும். உ.ம் நம்ம பாடியோட டெம்பரேச்சர் என்ன? 98.4 இதுல உச்சத்துக்கு போன என்னாகும்? டிக்கெட்டு .பாடி ஜில்லுன்னு ஆயிரும்.

இதை போல ஈகோவை உச்சத்துக்கு கொண்டு போகனும். நானே என் லட்சியம் கவுன்சிலராவறதுன்னு சொல்லியிருந்தா ரேஸ்ல உள்ளவன்லாம் கட்டம் கட்டியிருப்பான். எம்.எல்.ஏ ஆகப்போறேன்னா எம்.எல்.ஏ ஆளுங்க கூப்டு விஜாரிச்சிருப்பாய்ங்க. நான் இந்தியாவுல நேரிடை சன நாயகத்தை கொண்டு வந்து சனாதிபதியாகப்போறேன்னு சொன்னா? சிரிச்சுட்டு போயிர்ராய்ங்க. எப்பூடி?

இதுவே நானு எனக்கு ஈகோவே இல்லை . நான் ரெம்ப அடக்கமானவன் பணிவானவன்னு ஃபிலிம் காட்டிக்கிட்டிருந்தா எவன்னா திடீர்னு சுரண்ட உள்ளாற அடைப்பட்டிருந்த ஈகோ சீறி கிளம்பிரும்.

ஆக கிரகத்தை ஆக்டிவேட் பண்றதுன்னா நம்ம சமூக வாழ்வு -ப்ரொஃபெஷ்னல் கேரியர்- பொருளாதாரம் பாதிக்காம அதை உச்சஸ்தாயில வேலை செய்ய விடறது .

இதுவே நான் இந்தியாவோட ஜாதகத்தை வச்சு அடுத்த 100 வருசத்துல என்னெல்லாம் நடக்கும்னு பிரம்மங்காரு கணக்கா கால ஞானம் எழுதப்போறேன்னா என் ப்ரொஃபெஷ்னல் கேரியர் பாதிக்கும்.

புரியுதுங்களா?

அடுத்து புதன் .இவர் விரயாதிபதி. எல்லாமே விரயமா போகனும். விரயத்தை அனுமதிக்கனும். இல்லின்னா என்னாகும்? புதனோட வேக்குவம் கூடிக்கிட்டே போயி ஒரு நாள் படக்குன்னு ப்ரஷர் குக்கர் கணக்கா வெடிச்சு வைக்கும்.

விரயம்ங்கறது நம்ம உணவு,உறக்கம்,தாம்பத்யம், செலவிடும் முறை இப்படி பலதை காட்டுது . கில்மா மேட்டர்லாம் 1984-1986 கால கட்டத்துலயே உச்சஸ்தாயிக்கு போயி ஆடி முடிச்சு இறங்கி வந்துட்டம் .பிழைச்சம். மத்த மேட்டர்னா உணவு.

நம்ம மேல அன்பு ,மருவாதி உள்ளவிக மணம்மா ரசம் வச்சு -வெறுமனே ஒரு ஊறுகாய் இருந்தாலும் 3 தாட்டி போட்டு மூக்கு பிடிக்க சாப்பிட்டுருவம். கொழுப்பெடுத்தவன் கண்ணால பஃபேன்னாலும் அளவா /அம்சமா சாப்டாப்ல பேர் பண்ணிட்டு வந்துட்டே இருப்பம்.ஆனால் இந்த செலவு மேட்டருதான் ரெம்ப காலம் கண்ணா மூச்சி காட்டிக்கிட்டிருந்தது.

மவ கொஞ்சமா தலை எடுத்ததும் பெட்டி சாவியையே தூக்கி கொடுத்துட்டம். (அவ லக்னம் கன்னி -நம்ம மூலமா செட்டியாருங்க சகவாசம் வேற -செம கேல்க்குலேட்டட் -அதுவும் நம்ம மேட்டர்லன்னா -இவன் ஜொள்ளு பார்ட்டின்னுட்டு கத்திரி போட்டுக்கிட்டே இருப்பா) பொளைச்சன். ஒரு அஞ்சு வருசம் கணக்கா வாழ்ந்ததால மவளோட கண்ணாலம் நல்லபடியா ஓவர். பிறவு ஒரு வருசம் தொடர்ந்ததுல பிரசவம்/பேரன் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி மாதிரி புயல்களுக்கு பிறவும் காலம் ஓடிக்கிட்டிருக்கு.

ஒரு வகையில சொன்னா புதனோட வேக்குவத்தை அடக்கி வச்சதுனால கண்ணால மேட்டர்ல அது தன் உச்ச பட்ச வேகத்தை காட்டிருச்சுன்னும் சொல்லலாம். இடையில இந்த பாம்லெட்,பாக்கெட் சைஸ் புக் . நாமபோட்ட புஸ்தவங்களை காம்ப்ளிமென்டா கொடுக்கிறதுல்லாம் கூட டீ ஆக்டிவேஷன் ஆஃப் மெர்க்குரி தான். தூக்கமும் அது இஷ்டத்துக்கு வரும் .வரும் போது தூங்கிரனும். வராது . வேலைய பார்த்துக்கனும். இப்டித்தான் ஓடுது.

அதே சமயம் புதனும் -சூரியனும் ஒட்டு மொத்தமா டீ ஆக்டிவேட் ஆயிட்டா குரு தனித்து நின்ன எஃபெக்ட் அதிகரிச்சுரும் (வீண்பழி / நிந்தனை /ஃபேட்டல் வீக்னெஸ் /ஒரு வித அச்சம்) .
இப்ப என்ன தான் சொல்ல வர்ரேனு சலிச்சுக்காதிங்க பாஸ் ! நான் சொல்றது சிம்பிள் பாய்ண்ட். ஒரு கிரகத்தை டீ ஆக்டிவேட் பண்ணனுமா? அதை வேலை செய்ய விடுங்க. உச்ச பட்ச எஃபெக்டுக்கு பிறவு அது “பாச்சா ” குட்டி ஆயிரும்.

அடுத்து நம்ம ஜாதகத்துலருந்தே இன்னொரு உதாரணம் சொல்றேன். வாக்கு ஸ்தானத்துல சுக்கிரன். இவர் லக்னத்துக்கு பாதகாதிபதி. சுக்ரன்னா செக்ஸாலஜி. நாம இதை பத்தி பேசாமயே இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்?
அனுபவஜோதிடம் வலைதளமே குடத்திலிட்ட விளக்கா முடங்கி இருந்திருக்கும். நாம ப்ளாக் யுகத்துல எழுதின கில்மா தொடர்களை நினைச்சா இப்ப கூட உதறுது.

ஆனால் இதனால என்ன லாபம்? சுக்ரனை வேலை செய்ய விட்டம். ஆகவே தான் நம்ம வாய் நாற வாயா இருந்தாலும் – நாம சொல்ற மேட்டர்லாம் நிர்வாண உண்மைகளா இருந்தாலும் அதையும் வெகண்டையா -பச்சையா சொன்னாலும் ஜூரிகள்/புலிகள்/ அப்பா டக்கர்கள் எல்லாம் பல்பு வாங்கற ஒரு மேட்டரை நாம அசால்ட்டா முன் வச்சாலும் இது வரை நம்ம முக நூல் கணக்கு முடங்கல. சைபர் கிரைம்ல கம்ப்ளெயிண்ட் ஆகல.

மேலும் நாம காவியத்தமிழ்ல எழுதின காலத்துல சோத்துக்கு லாட்டரி அடிச்சதையும் – இந்த ஸ்லாங்குல எழுத ஆரம்பிச்ச பிறவு மினிமம் கியாரண்டி வந்தைதையும் மேட்ச் பண்ணி பார்த்துக்கோங்க.
புரியுதுங்களா பாஸ்?

அடுத்த பதிவுல நன்மை செய்யும் கிரகங்களை ஆக்டிவேட் பண்றது எப்படின்னு பார்ப்பம்.

எச்சரிக்கை:1
இதுக்கு பதிலா உங்க கோவில் குளம் ,ஹோமம்,யாகம்லாம் என்ன பண்ணுதுன்னா தீமை செய்யும் கிரகங்களை டீ ஆக்டிவேட் பண்ண பார்க்குது. இதனோட விளைவுகள் என்ன? அதனோட வெக்குவம் அதிகமாகி ஒரு நாள் ஆளையே அடிச்சு தூக்கிருதுங்கோ. இந்த மேட்டரை ஜெயலலிதாவின் மரணத்துக்கு அப்ளை பண்ணி விரிவா பேசினதை வச்சு ஒரு வீடியோ போட்டிருக்காய்ங்க. இங்கே அழுத்தி அதை பாருங்க.

எச்சரிக்கை: 2
நமக்கு தெரிஞ்ச மாதிரி இந்த சைட்டுக்காவ ஒரு ஆப் கிரியேட் பண்ணியிருக்கம். நீங்க ஸ்மார்ட் ஃபோன் யூஸ் பண்றவரா இருந்தா இங்கே அழுத்தி டவுன்லோட் பண்ணிக்கங்க. உங்களில் யாருக்காச்சும் பெட்டர் ஆப் கிரியேட் பண்ண முடிஞ்சா கிரியேட் பண்ணி கொடுங்க .புண்ணியமா போகும்.

எச்சரிக்கை:3
2017,ஜனவரி ,26 ஆம் தேதி நடைபெற விருக்கும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கான பலன் வீடியோவாய் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது. மற்ற ராசிகளுக்கும் விரைவில் வரும்.

நன்றி:
ஜெ மரணம் : ஜோதிட பார்வை ங்கற வீடியோ 10 ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது . பார்த்த அனைவருக்கும் பார்க்கப்போகும் உங்களுக்கும் நன்றி .

5 Replies to “ஆக்டிவேட்டிங் அண்ட் டீ ஆக்டிவேட்டிங் ப்ளானட்ஸ்”

Victor

10/12/2016 at 9:37 am

அருமை.
////////

“இது வரை நம்ம முக நூல் கணக்கு முடங்கல. சைபர் கிரைம்ல கம்ப்ளெயிண்ட் ஆகல.”

கோரிக்கை வைக்கிராப்ல இருக்கு.

Reply

  S Murugesan

  10/12/2016 at 1:02 pm

  வாங்க விக்டர் !

  அவ்வ்வ்வ்வ்.. உங்க கமெண்டை பார்த்தா கோர்த்து விடறாப்ல இருக்கு. நான் நடந்ததை வச்சுத்தானே அனலைஸ் பண்ணி சொல்றேன் ( இனியும் நடக்காதுங்கற நம்பிக்கையில)

  Reply

Kruba

10/12/2016 at 7:29 am

Super Sir.

Reply

Pandian

10/12/2016 at 4:29 am

ஐயா வணக்கம்,

தங்களின் styleல் அருமையான பதிவு.

தீமை செய்யும் கிரகங்களை செயல்பட விட்டால் அவை நமக்கு டிக்கட் போட்டுவிட்டால் என்ன செய்வது. உதாரணமாக லொடக்கானி வண்டிய மூளையில போட்டா நாம safe. அதவிட்டுட்டு அந்த வண்டிய நம்பி ரோட்டுல போனா?!

Reply

  S Murugesan

  10/12/2016 at 8:18 am

  பாண்டியன் !
  நம் பொருளாதாரம்,சமூக வாழ்வு ,ப்ரொஃபெஷ்னல் கேரியர் பாதிக்காத வகையில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்னு தானே சொல்லியிருக்கன். நாமளே டிக்கெட் போட்டுட்டா என்னத்தை பொருளாதாரம்,சமூக வாழ்வு ,ப்ரொஃபெஷ்னல் கேரியர்?

  தீமை செய்யும் கிரகத்தை வேலை செய்ய விடுவது என்பது நீண்ட நாள் கடனை தவணையில் செலுத்துவது போன்றது.

  இல்லின்னா ஜப்தி நோட்டீஸ் வந்துரும்ல. தீமை செய்யும் கிரகத்தை வேலை செய்ய விடாமல் தடுத்தாதான் டிக்கெட்டு .

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.