Menu

நால்வகை ராசிகள் :ஜோதிஷ வித்யா ப்ரகாசிகா

12 Comments


30181246

அண்ணே வணக்கம்ணே !

இதுவரை 2,500 செட் புஸ்தவம் வெளிய போயிருக்கு . யாரும் அதை சேர்த்திருக்கலாம் -இதை சேர்த்திருக்கலாம்னு சொல்லவே இல்லை. ஒரு நண்பர் மட்டும் இன்னைக்கு பாதகாதிபதி , மாந்தி குளிகனை பத்தி ஒன்னமே சொல்லலியேனு கேட்டிருக்காரு .காசா பணமா எழுதிருவம்னுருக்கன்.

இந்த சோசிய மேட்டர்ல பதிவு போடறது -புஸ்தவம் போடறது ரெண்டு ரகம் .ஒன்னு கட்டுச்சோறு .அதாவது பெரியவிக என்னெல்லாம் சொல்லி வச்சிருக்காய்ங்களோ அதை எல்லாம் ஃபுல் ஸ்டாப் ,கமா விடாம எடுத்து விடறது.இடையில கொஞ்சம் மொக்கை போட்டு ஒப்பேத்திர்ரது.

அடுத்தது மேற்படி கட்டு சோத்துக்கான அரிசியை அவிக எங்கருந்து எடுத்திருப்பாய்ங்க. எப்படி சமைச்சிருப்பாய்ங்கனு சைனாக்காரன் மாதிரி யோசிக்கிறது .ரிவர்ஸ் மெக்கானிசம். நம்முது ரெண்டாவது ரகம்.

இப்படியே ஒரு ஏழு வருசத்தை ஓட்டிட்டம். இந்த ஜோதிஷ கிரந்தங்களை பொருத்தவரை மொத்தையா ஒரு மளிகை சாமான் பட்டியல் கணக்கா அள்ளி விட்டிருப்பாய்ங்க. சிலது மனப்பாடபகுதி இல்லேங்கல.ஆனால் எல்லாத்தையும் மனப்பாடம் செய்தா எப்பூடி? ஏன் எதுக்குனு ரோசிக்கனும்ல?

ஒரு சூப்பரான பதிவர்னா லிஃப்கோவின் அரிச்சுவடியான குடும்ப ஜோதிடத்தையே பாரா பாராவா உருவியிருந்தாருன்னா பார்த்துக்கங்க.

என்னமோ நாலஞ்சு நாளா புதுசா எதுனா ஆரம்பிக்கலாம்னு பார்த்தா எல்லாம் தொடருக்குண்டான மேட்டராவே ஸ்பார்க் ஆகுது. அது ரெம்ப கஷ்டம். தாலி கட்டிக்கிட்டாப்ல ஆயிருது.

ஆகவே “ஜோதிஷ வித்யா பிரகாசிகா”னு ஒரு கிரந்தம் கை வசம் இருக்கு. இதுல சிந்தனைக்குரிய /சனம் தப்பா புரிஞ்சுக்க வாய்ப்புள்ள சில கான்செப்டுகளை உதிரியா கொடுக்கலாம்னு ஒரு கெட்ட எண்ணம். எதை எதையோ சகிச்சுக்கிட்டிங்க. இதையா சகிச்சுக்க மாட்டிங்க.

ராசிகள் மொத்தம் 12. இதை நாலு வகையா பிரிச்சிருக்காங்க.

நால் வகை ராசிகள்:

நெருப்பு ராசிகள், நில ராசிகள் ,வாயு ராசிகள்,நீர் ராசிகள்

இந்த பிரிவினைக்கு ரெண்டு வித அடிப்படைகள் இருக்கலாம் .ஒன்னு அண்டை வெளி மீதான அவதானிப்பு. அடுத்தது 12 ராசியினர் பற்றிய கேஸ் ஸ்டடி.

நெருப்பு ராசிகள்: மேஷம்,சிம்மம்,தனுசு

ஒடனே அவ்வ்..இதுவும் ராசிபலன் போலன்னு பரபரக்காதிங்க. நூல் சொல்ற விதி வேற .அஃதாவது உங்க ஜாதகத்துல மேற்படி 3 ராசிகளில் மெஜாரிட்டி ப்ளானட்ஸ் உட்கார்ந்திருந்தா உங்களுக்கு சில குண நலன் இருக்கலாம்.
இப்படி உட்கார்ந்துட்டா மட்டும் போதாது . மேற்படி நெருப்பு ராசிகளின் அதிபதிகள் அஃதாவது செவ், சூரியன்,குரு உங்கள் லக்னத்துக்கு துஸ்தானாதிபதிகளாவோ /மாரகாதிபதிகளாவோ / பாதகாதிபதிகளாகவோ இருக்கக்கூடாது பலகீனப்பட்டிருக்க கூடாது (எந்தவகையிலும்) அப்பத்தேன் இந்த பலன்லாம் உங்களுக்கு பொருந்தும்.
(அடுத்துவர கூடிய மூவகை ராசிகளில் மெஜாரிட்டி ஆஃப் தி ப்ளேனட்ஸ் இருப்பவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்)
உஷ்ண தேகம், தலைமை குணங்கள், தமக்கென தனிவழி கொண்டிருப்பது . /பிறரையும் தன் வழிக்கு இழுக்கும் குணம். புகழ்ச்சிக்கு மயங்குதல் .

நில ராசிகள்: ரிஷபம்,கன்யா,மகரம் ஆகியன நில ராசிகள்.

இவற்றில் மெஜாரிட்டி கிரகங்கள் இருந்தால் உடல் வலிமை,போஜன பிரியம்,முன் யோசனை, சுய நலம், தேவையற்ற கற்பனைகள் இருக்காது யதார்த்த வாதிகள். எடுத்த காரியத்தை முடித்தே ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள்.

வாயு ராசிகள்: மிதுனம்,துலா,கும்பம் ஆகியன வாயு ராசிகள் .

இவற்றில் மெஜாரிட்டி கிரகங்கள் இருந்தால் சிந்தனாவாதிகள் ,செயலில் ஊக்கம் இருக்காது , புதிய விஷயங்களின் பால் ஆர்வம்,திட்டம் தீட்டுவதில் ஆர்வம் ,சமூக வாழ்வில் முன் மாதிரியாக இருக்க நினைப்பார்கள்,மனிதாபிமானம் அதிகம் லைஃப் செட்டில்மென்ட் லேட் ஆகும்.

நீர் ராசிகள்: கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகியன நீர் ராசிகள் .

இவற்றில் மெஜாரிட்டி கிரகங்கள் இருந்தால் உணர்ச்சி வசப்படுபவர்கள்,கற்பனை அதிகம்,உணர்வு மயமானவர்கள்,எழுத்தாற்றல் /பேச்சாற்றல் இருக்கும். இவர்கள் மீது பிறரின் இம்பாக்ட் அதிகம் .சின்ன விஷயங்களுக்கும் அதீதமாய் ரெஸ்பான்ட் பண்ணுவாங்க.

புது ட்ரென்டை பிடிச்சிருக்கம். இதை தொடரலாமா? அல்லது நம்ம ஸ்டைலுக்கே வந்துரவா? கமெண்ட் ப்ளீஸ் !

print

2,783 total views, 1 views today

Tags:

12 thoughts on “நால்வகை ராசிகள் :ஜோதிஷ வித்யா ப்ரகாசிகா”

 1. Sri says:

  Kumba lakinam,
  7 suriyan + sevai+ketu
  Sevai astangam
  Manavalkai epdi erukum

  1. S Murugesan says:

   ஐயா/அம்மா !
   மன்னிக்கவும். இலவச ஜோதிட ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ள
   வேண்டும். கடிதத்தில் இ-மெயில் முகவரி தரவேண்டும்.

   பலன் ஆடியோவாக மெயில் மூலம் அனுப்பப்படும். கடிதத்துடன் ரிப்ளை கவர்
   இணைக்க தேவையில்லை.

   கடிதம் எழுத வேண்டிய முகவரி :

   சித்தூர்.முருகேசன்,
   17-201,கும்மரா தெரு,
   சித்தூர் ஆ.பி
   517001

 2. சீர்காழி செல்வகுமார் says:

  தொடரலாமே தல! நல்லாதான் இருக்கு!

 3. Prabu says:

  Good thought

 4. Vidhya Sagar says:

  Sir, I need ur contact No. I wanna talk to U..for my feature life..

  1. S Murugesan says:

   Vidya Sagar !

   I am available better via mail . My mail swamy7867@gmail.com

 5. Vidhya Sagar says:

  Sir,
  Ungalin pathivai padithen nandraga ullathu! Thodarnthu idhupondru nalla vishayathai makkalukku theriyavaiungal..!
  Nandri…

 6. saravanan says:

  good style ,continue like this one

 7. saravanan says:

  # 598 , kandasamy nagar ,
  chamrajpet , mecheri

  1. S Murugesan says:

   saravanan !

   Furnished address. For what?

 8. Kruba says:

  Continue sir

  1. S Murugesan says:

   வெல்கம் கிருபா ! வில் டூ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *