Tags       

Categories  அனுபவஜோதிடம் அரசியல் யுத்தம்

காத்திருக்கிறது பேரழிவு – யுத்தம்?

%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8d

அண்ணே வணக்கம்ணே !

தொடர் முடிஞ்சுருச்சு. சுவாரஸ்யமா எதுனா எழுதலாம் எனி ஐடியானு முக நூல்ல கேட்க நண்பர் ஒருவர் இந்தியாவின் ஜாதகத்தை அனலைஸ் பண்ணி எழுதுங்கன்னுட்டாரு.

நல்ல விஷயமா எதுனா நடக்கும். முன் கூட்டி சொல்லி சனங்க வவுத்துல பால் வார்க்கலாம் பார்த்தா…. கரன்சி ரத்து மேட்டர்லயே டர்ராகி கிடக்கிற சனத்துக்கு கெட்ட செய்திய தான் சொல்ல வேண்டியிருக்கு . சாரி

சுதந்திர இந்தியாவின் ஜாதகம் :

லக்னம் ரிஷபம்.

1-7 ல ராகு கேது :

நம்பினவன்லாம் ஆப்பு வைக்க இதுவும் ஒரு காரணம். இந்தோ சீனா பாய் பாய்னு சொல்லி ரீ சவுண்ட் அடங்கறதுக்குள்ள யுத்தம் வந்திருச்சுல்ல.

மேலும் வயசு புள்ளைங்க -பொஞ்சாதியோட தாம்பத்ய வாழ்க்கையில ஈடுபடற தாக்கத் உள்ளவிக பிரதமராக முடியாத போனதுக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம். நேருவின் மனைவி நோயாளி /இந்திரா டைவர்சி இப்படி அனலைஸ் பண்ணிக்கிட்டே போகலாம்.

ரெண்டுல செவ்:

( ராணுவ செலவு கழுத்தை நெறிக்க இதுவும் ஒரு காரணம்) நடந்த எல்லா யுத்தத்துலயும் வெற்றி வெற்றினு மார் தட்டிக்கிட்டாலும் இழந்த ஏரியா இழந்ததாவே இருக்குதுங்கோ. தாஜ் ஹோட்டல் சம்பவம்,பாராளுமன்றத்து மேல தாக்குதல் ,பத்தான் கோட் தாக்குதல் இப்படி எத்தனை இருக்கு?

3ஆம் பாவத்துல சுக்கிரன் :
ஆக்சுவலா 3 ங்கறது மாரக ஸ்தானம் .இங்கே பாபகிரகங்கள் இருந்தால் ஓகே .லக்னாதிபதியே இருந்தா என்னாகும்? ஆப்புதேன். ஆட்சியாளர்களுக்கும் ஆப்பு /சனத்துக்கும் ஆப்பு . லக்னாதிபதியான சுக்கிரனே 3 ல் இருப்பதால் இது பெண்களுக்கு அனு கூலமானதல்ல. பெண்களுக்கான இட ஒதுக்கீடு இன்னம் அமலாகாம இருக்க இதுவும் ஒரு காரணமா இருக்கலாம். இதே போல பட்டினி /சத்துணவு குறைபாடு – லேட்டஸ்டா சர்க்கரை வியாதி பரவல் /ஆண்மை இழப்பு , நடை பாதை வாசிகள் , வறுமை காரணமாய் அரை நிர்வாணிகளாகவே வாழ்ந்து மரித்தல் இத்யாதிக்கும் இது ஒரு காரணம்.

6ல குரு:
இது ஒன்னு தான் பாக்கிஸ்தான் மாதிரி நாசமுத்து போயிராம நிற்க வைக்குது . எட்டுக்குடைய குரு 6 ல நிற்கிறதால கடன் மூக்குக்கு கீழே இருக்கு / பாக்கிஸ்தான் கூட நேரடி யுத்தம்னா பம்மிருது . ஓரளவுக்கு நோய் தடுப்பு ஊசிகளை பிரபலமாக்கி பல நோய்களை இல்லாம ஆக்கியிருக்கம். என்ன ஒரு இமிசைன்னா இந்த அவா தான்.ஆட்சியாளர்கள் என்னதான் இவிகளை தலை மேல தூக்கி வச்சு கொண்டாடினாலும் விசுவாசமாவே இருக்க மாட்டேங்கிறாய்ங்க. ஒவ்வொரு பத்து வருசத்துக்கொருக்கா வங்கித்துறை மேல ஏதோ ஒரு இடி விழ இதுவும் ஒரு காரணம்.

மூன்றில் சனி சூரியன் :
ஏற்கெனவே சொன்னாப்ல பாப கிரகங்களான சனி சூரியன் இங்கே இருக்கிறது கொள்கை ரீதியில் ஓகே.ஆனால் சனி 9-10 க்குடையவர். லக்னாத் யோக காரகன். இவர் 3 ல் நின்றது பூப்பறிச்சாப்ல நடக்க வேண்டிய முன்னேற்றம் கூட ஏகப்பட்ட அல்லல் அலைச்சல் /வாழ்வா சாவா நிலையில தான் நடக்கும் .( இந்த கரன்சி ரத்து மேட்டரையே பாருங்களேன் -கிட்னியாக யோசிச்சிருந்தா கூட பெட்டரா செய்திருக்கலாம்.)

இங்கே சூரியன் சேர்ந்தது சனி பலத்தை குறைக்குது .சூரியன் கிராமப்புறங்களில் வாழும் ரூலிங் க்ளாஸ்க்கு காரகம் . சனி தலித்துகளுக்கு. இன்னைக்கு கிராமப்புறங்களில் கோலோச்சும் சாதீய அமைப்புக்கு இது ஒரு காரணமுங்கோ.

மூன்றில் புதன்:
சுபகிரகமான புதன் 3 ல் நிற்க கூடாது .செரி சூரியனோட சேர்ந்து பாவியாயிட்டாரேனு கேப்பிக. இவர் 2-5 க்குடையவர்.இவர் 3 ல் நின்றது தேச ஒற்றுமை -உலக அரங்கில் நாட்டுக்கு நற்பெயர் இத்யாதியை போராடித்தான் மெயின்டெய்ன் பண்ண வேண்டியிருக்கு. அதே போல துண்டு பட்ஜெட் /வரி ஏய்ப்பு/ஊழல்-லஞ்சம் -லாவண்யம்னு வீண் விரயமா போக இது ஒரு காரணம்.

மூன்றில் சந்திரன்:
மூன்றுக்குடையவர் 3 ல் ஆட்சி பெற்றால் ரெம்ப நல்லது .தைரியம் பொங்கனும். ஆனால் இவர் சந்திரனா போயிட்டதால இதுவும் போச்சு. சந்திரன் தேய்பிறையில பாவிங்கறதால தேய்பிறையில தோள் தட்டி – வளர்பிறை வந்ததும் சொனங்கி போயிர்ரதும் நடக்கலாம்.

இந்த ஒரு சந்திரன் 3 ல் நின்ற எல்லா கிரகங்களோட பலா பலன்லயும் ஒரு வித இன்செக்யூரிட்டி -அப் அண்ட் டவுன்ஸ் -எதிர்ப்பாரா தன்மையை தராருங்கோ.

2009 ,செப்,9 முதல் 2015,செப் ,9 வரை சூரிய தசை தான் நடந்தது .கூட புத சந்திரர்கள் இருக்கிறதால ஒட்டு மொத்த நாட்டு பொருளாதாரமே டப்பா டான்ஸ் ஆடியிருக்கனும். ஏதோ மன்மோகனார் புண்ணியத்துல தடுக்கி தடுக்கி தப்பிச்சு வந்துட்டம்.

2015,செப் ,9 முதல் சந்திர தசையே ஆரம்பிச்சிருச்சு. சந்திரன்னாலே ஏறுனா ரயிலு -இறங்கினா செயிலுதானே. மூன்றாம் பாவத்துல உள்ள எல்லா கிரகங்களோட காரகங்கள்ளயும் இன்ஸ்டெபிலிட்டி தேன். இது இதோட நின்னா பரவால்லயே. 2016,ஜூலை ,9 ஆம்தேதிக்கு சந்திர தசையில சந்திரபுக்தி முடிஞ்சு செவ் புக்தி ஆரம்பிச்சுருச்சு. இந்த செவ் ரெண்டுல நின்னு எட்டை பார்க்கிறாருங்கோ ..செவ்வானே யுத்தகாரகன்னு பேரு. எட்டுன்னா ? தெரியும்ல மரணம்.

கோசாரத்தை பார்த்தா சனி செவ் பார்வை வேற இருக்கு (டிசம்பர் ,12 வரை ) முக நூல்ல ஒரு சமயம் கரன்சி ரத்தே யுத்தத்துக்கான முஸ்தீபோனு சொல்லியிருந்தன். (அது அந்த நேரத்துக்கு ஒரு ஊகம் தேன் -மோடிஜி கரன்சி ரத்து அறிவிப்பை செய்றதுக்கு மிந்தி முப்படை தளபதிகளை சந்திச்சுட்டு தேன் வந்தாரு .இதை வச்சு சொன்னேன்.ஆனால் இப்ப ஜாதகத்தையே பார்த்துட்டதால கியாரண்டின்னு தான் நினைக்கேன் )

ஆக சந்திர செவ் புக்தி முடியறதுக்குள்ள அஃதாவது 2017,பிப்,9 முடியறதுக்குள்ள ஒரு கெண்டமிருக்கு.அது யுத்தமா ? வேற எதுனாவா பார்ப்பம்.

S Murugesan
Victor says:

தலைக்குமேல கத்தி தொங்கிட்டே இருக்குனு சொல்ரீங்க.

அருமையான ஆய்வு.

S Murugesan says:

வாங்க விக்டர் !

ஆஃப்டர் ஆல் ஒரு டி-மானிட்டைசேஷன்லயே சொதப்பற தலைமை – 14 நாள் ஆகியும் ஒரு மிமி முன்னேற்றமும் இல்லாத நிலைமை . எதிர்காலத்தை நினைச்சா பயம்மா இருக்கு .

Babu says:

Bro!
ஏற்கனவே பத்திகிட்டு எரியுது !
அணைக்க முடியுமா னு தெரில. இப்போ உங்க யூகம், இனியாவது எச்சரிக்கையா இருங்கடா னு சொல்ற மாதிரி தெரியுது.
தெரிய வேண்டியவர்களுக்கு தெரிஞ்சா இறைவனுக்கு நன்றி சொல்லிடுவோம். வேற என்ன செய்ய ?

S Murugesan says:

வாங்க பாபு !

இன்றைய செய்தி 2003 க்கு பிறகு மிக பெரிய தாக்குதலை இந்தியா மேற்கொண்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *