Menu

உங்களுக்கும் ராஜயோகம் : 35

28 Comments


%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3

அண்ணே வணக்கம்ணே !

உங்களுக்கும் ராஜயோகம் தொடரின் இறுதி பதிவு இது. அடுத்து என்ன செய்யப்போறேங்கறதை கடேசியில சொல்லியிருக்கன்.

இந்த பதிவுல ராஜயோகம் தரும் சுக்கிர காரகங்கள்/ சுக்கிர பலமற்றவர்கள் என்ன செய்யலாம்ங்கற மேட்டரை தந்திருக்கன்.

பதிவு என்னமோ ரெம்ப சுருக்கமா முடிஞ்சுட்டாப்ல ஒரு ஃபீல். இதை பேலன்ஸ் பண்ண நீங்க நிறைய கேள்விகள் கேளுங்க. அள்ளி தரேன் ( சொந்த ஜாதக கேள்விகள் வேண்டாம்)

1.வசதியான வீடு,படாடோபமான பர்னிச்சர்:
உங்களுக்கு படாடோபமான பர்னிச்சர்களுடன் கூடிய வசதியான ஒரு வீடு இருந்தால் தலைவர்கள் சுற்றுப்பயணத்தின் போது தங்க கொள்ள இருப்பாய்ங்க.

2.வாகனம் :
உங்க வாகனம் ஆத்திரம் அவசரத்துக்கு கட்சிக்கு பயன்பட்டா கட்சியில் உங்க பிராபல்யம் கூடும். என்.டி.ஆரின் சைதன்ய ரதம் , கலைஞர் /ஸ்டாலின் உபயோகிக்கும் பிரச்சார வாகனங்கள் அவற்றின் முக்கியத்துவம்லாம் உங்களுக்கு தெரியும் தானே

3. மனைவி:
இதன் நெகட்டிவ் ஃபார்மை ஏற்கெனவே சொல்லியாச்சு. கருமம். ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட் .இதுக்கு பாசிட்டிவ் கோணமும் உண்டு.ஆந்திரத்தின் ஹோம் மினிஸ்டரா இருந்தவர் இந்திரா ரெட்டி .அவர் மனைவி சபீதா இந்திரா ரெட்டி. அவர் நக்சல்ஸ் தாக்குதல்ல இறந்து போயிட்டார். ஒய்.எஸ்.ஆர் சி.எம் ஆனதும் சபீதா இந்திரா ரெட்டிக்கு ஹோம் டிப்பார்ட்மென்டை கொடுத்தார். சாகறவரை அந்த அம்மாவ தங்கையாவே ட்ரீட் பண்ணாரு.

4.பட்டாடைகள்:
தலீவருகளுக்கு கதராடை போர்த்தறவிகளை விட தலைவர் வீட்டு பெண்களுக்கு பட்டாடைகள் தருவோருக்கு வாய்ப்பு அதிகமுங்கோ

5. நடனம், சங்கீதம்
ராசாங்க காலத்துல இருந்து ராசாங்களை நெருங்க இதுவும் ஒரு பாஸ்போர்ட்டுதேன்.

6.அறுசுவை உணவு
பொஞ்சாதி கையால நல்லா சமைச்சு போட்டே சீட் வாங்கினவிக உண்டு.

7.ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்:
அரசியல்ல சம்பாதிச்சு கட்டினவிகளும் உண்டு , இதை வச்சு அரசியல்ல பெரிய ஆளு ஆனவிகளும் உண்டு.

8.வெள்ளிச்சாமான்கள்:
1991-96 கால கட்டத்துல நடந்த ஊழல் தொடர்பா ரெய்டு நடந்தப்போ எத்தனை கிலோ வெள்ளி எடுத்தாய்ங்கனு ஆருனா சொல்லுங்க.அதை கொடுத்தவன்லாம் நேர்த்தி கடனுக்கா கொடுத்திருப்பான்.

9.ப்யூட்டிபார்லர்/மசாஜ் பார்லர்
இதுக்கு பெருசா விளக்கம்லாம் தேவையில்லை சசிகலா புஸ்பா பேரை சொன்னா போதும்ல?

10.டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்/உல்வா பஸ்ஸு
குட்டி தலைவர்கள் ஆரம்ப காலத்துல இதுகளை தான் ப்ரிஃபர் பண்ணுவாய்ங்க. அப்பமே இந்த ஜூரிகளை கைக்குள்ள வச்சிருந்தா சேஃப்டி.

11. விருந்து,பார்ட்டி:
ஒரு காலத்துல சுப்பிரமணியம் ஸ்வாமி கொடுத்த டீ பார்ட்டி ஞா இருக்குல்ல.

நிற்க சுக்கிர பலமற்றவர்கள் எப்படி ராஜயோகத்தை கேட்ச் பண்ணலாம்னும் இந்த பதிவுலயே பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்லிர்ரன்.

1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். (பார்த்து பாஸ் ! கண்ட நேரத்துல பொத்துக்கிட்டு பாய்ஞ்சு தொலைச்சா வம்பு -சீக்கிரமே கண்ணாலம் கட்டிக்கங்க. அதான் சேஃப்)
2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.
3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்கள் அரசியல் முன்னேற்றத்துக்காக இவற்றை தலைவருக்கோ / தலைவர் ஃபேமிலி மெம்பர்ஸுக்கோ ஆஃபர் பண்ணலாம்.
4. முக்கியமாக சொந்த வாகனங்களைத் தவிர்க்கவும். பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் பெஸ்ட்.
5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும்.
6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.
7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல).
8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும்.
9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.
10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். இவற்றை தலைவருக்கோ / தலைவர் ஃபேமிலி மெம்பர்ஸுக்கோ ஆஃபர் பண்ணலாம்.

எச்சரிக்கை:

இத்துடன் உங்களுக்கும் ராஜயோகம் தொடர் முடிவடைகிறது . அடுத்த பதிவில் இருந்து ஜோதிடத்துலயே உள்ள சில அதிரடி விஷயங்களை அதிரி புதிரியா கொடுத்து பீதிய கிளப்பலாம்னு இருக்கன். ஆனால் எல்லாமே தனிப்பதிவுகள் தான்.

உங்களுக்கும் எதுனா தலைப்பு/மேட்டர் ஸ்பார்க் ஆனா கமெண்டுல சொல்லுங்க.

print

4,827 total views, 1 views today

Tags: ,

28 thoughts on “உங்களுக்கும் ராஜயோகம் : 35”

 1. Ashok says:

  ரொம்ப நாளா வேலைபளு காரணமா பதிவுகள தொடர்ச்சியா படிக்காம விட்டுட்டன்….இன்னிக்கு 3 மணி நேரம் மூச்சு தெணற தெணற 35 “உங்களுக்கும் ராஜயோகம்” பதிவுகளயும் படிச்சு தெளிஞ்சாச்சு…..

  இனிமே தொடர்ந்து ஃபாலோ பண்ணிப்பன்….

  இப்படிக்கு தங்கள் பதிவுகளின் நிரந்தர ரசிகன் அஷோக்!

  தொடர்ந்து மேலும் பல ஆக்கப்பூர்வமான அனுபவ ஜோதிட பதிவுகளை எதிர்நோக்கி உங்களுடன்!!

  நன்றி

  வாழ்க வளமுடன்!

  1. S Murugesan says:

   நன்றி அசோக் !

 2. sk says:

  sir,
  lagnathuku(simmam) 6m athipathy sani 6 l atchi kudave ragu irukurar, appo sani dhasavula ragu puthi epdi irukum sir.

  1. S Murugesan says:

   Sk ,
   சத்ரு -ரோக -ருண விஷயங்கள் அனுகூலமாவும் -மனைவி விஷயத்தில் பிரதிகூலமாகவும் இருக்கும்.

   1. sk says:

    sir,
    wife matterla problem solve panna enna pannanum

    1. S Murugesan says:

     SK,
     Clear ! R u married or not ?

     1. sk says:

      sir,
      i m not married and u told about unmarried person problem obsolutely correct sollution sollunga sir please.

      1. S Murugesan says:

       SK,
       Pl search in this site it self. Follow remedies for insufficient “Sani balam”

   2. sk says:

    sir,
    marriage agama iruntha epdi irukum

    1. S Murugesan says:

     SK ,
     You may have to face troubles from friend/lover/partner/servants

 3. sk says:

  sir,
  sukran 8 la uchama iruntha enna pannum

  1. S Murugesan says:

   எஸ்.கே !

   லக்னாத் பாபியா இருந்தா நோ மச் ப்ராப். சுபரா இருந்தாலும் பரவால்ல தான்.ஆனால் லக்னாதிபதியா இருந்தா??

 4. V. SUDHARSAN says:

  Dear Murugesan,
  I read in your blog about “Punishments given by Planets ” . Kindly Re Publish that article once again. It was excellent and very informative to read. V. Sudharsan

  1. S Murugesan says:

   வாங்க சுதர்சன் !

   சமீபத்துல ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணியிருந்தன். உங்க ரெஃபரன்ஸுக்கு இங்கே அழுத்துங்க

 5. Pandian says:

  ஐயா வணக்கம்,

  தங்களின் formula படி ஒரு கிரகத்தின் காரகத்துவங்களை நம் வாழ்க்கையில் குறைத்துக் கொண்டால் நமக்கு வேறு வகையில் அந்த கிரகம் யோகம் செய்யும்.
  ஜோதிடத்தை நம்பாதவர்களுக்கும் யோகம் செயல்படத் தானே செய்கிறது ஐயா.

  1. S Murugesan says:

   பாண்டியன் !
   இதில் என்ன சந்தேகம்? கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்த பெரியார் இயக்கத்தோழர்கள் எல்லாம் “தல பாடா” அடிச்சிக்கிட்டாலும் செரியான வாகனத்தை வாங்கி யூஸ் பண்ணாம டக்கோட்டா வண்டியிலயே பிரச்சாரம் செய்ததால சுக்கிர பலம் சேவ் ஆகி மணியம்மையார் வாழ்க்கை துணையா வந்தாய்ங்கல்ல?

   1. Pandian says:

    ஐயா,

    இதையே நாம் மாத்தி யோசித்து பார்த்தால், இளவயதில் தியாகம் செய்து முதுமையில் கிடைத்து என்ன பலன் ஐயா. (முதுமையில் சுகமும், நிம்மதியும் தருவது commitment இல்லாத வாழ்க்கை தானே ஐயா).

    1. S Murugesan says:

     பாண்டியன் !
     நான் என்ன சாமியாராவா வாழ சொல்றேன்? அடக்கி வாசிக்க சொல்றேன். தட்ஸால். இளமையில் வேறெதுவும் தேவையில்லை. வயாக்ரா முதல் வால் போஸ்டர் வரை. இளமை ஒன்றே போதுமானது. ஆனால் முதுமையில்??

     எல்லாம் தேவை. எதனாலும் பயன் இருக்காது என்றாலும்.

 6. sk says:

  sir,
  6l ragu and 12l kethu epdi irukum effect explain clearly and pariharam

  1. S Murugesan says:

   எஸ்.கே !

   ஆறில் ராகு உலக வாழ்வில் சாதிக்கும் துடிப்படி தரும். அதே சமயம் தன் சாதனைகளின் அர்த்தமற்ற தன்மையும் உறைத்துக்கொண்டே இருக்கும்.

   1. sk says:

    sir ,
    12 la kethu pathi sollunga

    1. S Murugesan says:

     எஸ்.கே !

     ஷார்ட்டா சொல்லி முடிச்சாச்சுல்ல. வேணம்னா நேயர் விருப்பத்துல சேர்த்துக்கறேன். ஒரு பதிவுல விஸ்தாரமா பார்க்கலாம்.

 7. Prabu says:

  Hello Sir,
  Just a reminder…. Can you please write articles on GemStones and effects of it combining with Astrology.

  Thanks,
  Prabu

  1. S Murugesan says:

   வாங்க பிரபு !
   இப்பத்தேன் தொடர் முடிஞ்சுருச்சுல்ல. எழுதிருவம்.

 8. Saravanan says:

  என்ன தல… சேப்டர் நம்பர் ஏற்கனவே டைப் பண்ணியாச்சா… அல்லது நாங்க கவனிக்கிறோமான்னு நீங்க செக் பண்றீங்களா? சேப்டர் 35?

  1. S Murugesan says:

   சரவணன் !
   நாம கணக்குல வீக்கு . இந்த சாப்டர் விவகாரத்தாலயே தொடர் எழுதறத நிப்பாட்டிட்டேன்னா நம்பவா போறிங்க?

 9. Saravana says:

  Sir, kethu balam ilathavargal enna seithu Rajayogam peruvathu endru neenga sollave illaye ?

  1. S Murugesan says:

   சரவணன் !

   அப்படில்லாம் இருக்காதே? ஆனாலும் என்ன.. இப்ப சொல்லிர்ரன். எளிமையினும் எளிமையான வாழ்க்கை – ஆராய்ச்சி – தியானம் /யோகம்/யோகிகள் குறித்த ஆழ்ந்த வாசிப்பு ஆகியன ராஜயோகம் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *