உங்களுக்கும் ராஜயோகம் 28

3

அண்ணே வணக்கம்ணே !
தொடரோ/தனிப்பதிவோ ..எப்படியோ ஒரு பதிவை போட்டா 3 நாள்ள ஆயிரம் பேராச்சும் படிச்சுர்ரிங்க. அதுக்கு முதற்கண் நன்றி.
இந்த உங்களுக்கும் ராஜயோகம் தொடரை சட்டமன்ற தேர்தல் சமயத்துலயே முடிக்கிறதா தான் ஷெட்யூல் .ஏனோ தெரியல இழுத்துக்கிட்டே போகுது . உள்ளாட்சி தேர்தலுக்குள்ளயாச்சும் முடியுதா பார்ப்பம்.

ஜாதகத்துல சனி பலம் இல்லே -ஆனாலும் சனி தர்ர ராஜயோகத்தை கேட்ச் பண்ணனும்னா உங்க லைஃப் ஸ்டைலை எப்படி மாத்திக்கனும்னு சொல்லிர்ரன்.

இதை ராஜயோகம் பெறனும்னு நினைக்கிறவிக மட்டுமில்லை.ஒவ்வொரு இந்தியனும் ஃபாலோ பண்ணலாம். அப்படி ஃபாலோ பண்ணா இந்தியா மோடிய மீறி வல்லரசாயிரவும் ஒரு வாய்ப்பிருக்கு.மேட்டருக்கு போயிரலாமா?

உங்கள் உடலில் வியர்வை வாசம் இருக்கட்டும் (குளிக்காம இருந்திராங்கண்ணா – வியர்வை வராப்ல கொஞ்சம் ஸ்ட் ரெய்ன் பண்ணுங்க).
தாடி வச்சுக்கோங்க. வெள்ளை தாடின்னா சிரேஷ்டம் . ஹேர் டை போடாதிங்கோ. உடை ? ப்ராண்டட்லாம் போடாதிங்க. “என்னடா இது அமெரிக்காவுல கார்ப்பரேஷன் காரன் போடற மாதிரி”ன்னு எதிராளி கேட்கிறாப்ல உங்க ட்ரஸ் அப் இருக்கட்டும். சாயம் போனது /கிழிஞ்சது /கிளிச்சது . ஃபேர் எவர் க்ரீம்லாம் மூச். ஏசி நோ .

சமையலுக்கு நல்லெண்ணெய் யூஸ் பண்ணுங்க. (செக்குல ஆட்டினதா இருந்தா -கண் முன்னே -சிரேஷ்டம்) நடக்க முடிஞ்ச இடத்துக்கு நடந்தே போங்க. டூ வீலர்ல போக வேண்டிய இடத்துக்கு சைக்கிள்.

பேசும் போது கட் அண்ட் ரைட்டா பேசுங்க/ பாய்ண்ட் டு பாய்ண்ட் . உவமானம்/உவமேயம் -அடை மொழி -பழமொழி மாதிரி கருமாந்திரம்லாம் வேணா.

க்ளோஸ்ட் சர்க்கிள்ள பேசறப்ப அறச்சொல் போட்டு பேசுங்க.சாவடிங்க. கழுத்துல ஸ்டீல் செயின். அதுல எருமை /கபாலம் மாதிரி அபசகுனம் பிடிச்ச டாலர் .பர்ஸ் அரத பழசா இருக்கட்டும். ஆருனா தூக்கி எறிஞ்சதா இருந்தா சூப்பர்.

வீடு /ஆஃபீஸ்/சாம்பர்லாம் கொஞ்சம் தூசு படிஞ்சு செகண்ட் ஹேண்ட் பொருட்கள் /பிளாட்ஃபார பொருட்களால் நிரம்பியிருக்கட்டும். ரூம் ஸ்ப்ரேயர்லாம் நோ. வாகனமும் இப்படியே புல்லட் /அதுலயும் செகண்ட் ஹேண்ட்னா செம.

கொளந்தைகளை கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சேர்த்து விடுங்க. தனியார் ஸ்கூலுக்கு அழற காசுல அந்த ஸ்கூலுக்கு எதுனா செய்ங்க.
ஆரம்பத்துல சொன்ன மேட்டர்லாம் மனைவியும் ஃபாலோ பண்ணா நல்லது . உங்க அரசியல் வாழ்வுக்கு உதவாத எந்த சேக்காளியோடவும் டைம் பாஸ் பண்ணாதிங்க. அதை விட தனியாவே இருங்க. எப்பவும் உங்களை சுத்தி காக்கி சட்டை /நீல சட்டை /ப்ரவுன் சட்டை -யூனிஃபார்மை சொன்னேன்-போட்ட ஆட்கள் இருக்கட்டும். இல்லின்னா கிளிஞ்ச சட்டை /சாயம் போன சட்டை .செருப்பில்லாதவன்/தலித் உங்களோட இருக்கட்டும்.

பால்கனியிலயோ /மொட்டை மாடியிலயோ /வீட்டுக்கு முன்னே /பின்னே சின்னதா தோட்டம் போடுங்க. அக்கறையா மெயின்டெய்ன் பண்ணுங்க.

ஆரம்பத்துல சொன்ன மேட்டர்லாம் உங்க அப்பாவும் மெயின்டெய்ன் பண்ணா நல்லது . அவசரத்துக்கு உதவும்னு முதலீடு செய்யாதிங்க. ஹ்ம்..எப்படியும் பத்து வருசம் பிடிக்கும்ங்கற ஃபீலோட இன்வெஸ்ட் பண்ணுங்க.

நீங்க தூங்கற இடமும் தூசு படிஞ்சு /செகண்ட் ஹேண்ட் பொருட்களோட/பிளாட்ஃபார சமாசாரங்களோட இருக்கட்டும்.
இதுவர சொன்ன மேட்டரை எல்லாம் நூத்துக்கு நூறு மெயின்டெய்ன் பண்ண ஆரம்பிச்சா வரப்போற இடை தேர்தல்ல நாம் தமிழர் கட்சியில நின்னா கூட செகண்ட் ப்ளேஸ் கியாரண்டி .ஓகேவா உடுங்க ஜூட்டு .

அட எனக்கு ராஜயோகம்லாம் தேவையில்லைப்பா இதை எல்லாம் ஃபாலோ பண்ணா வேற என்ன நல்லது நடக்கும்னு கேட்கிறியளா? சொல்றேன்.

ஆவிசு கூடும். கால் வலி /பைல்ஸ் /நரம்பு பலகீனம்லாம் க்யூர் ஆகும். கொடுக்கல் வாங்கல் சரளமா இருக்கும். வேலை செய்யற இடம்/வீடு சொகம்மா இருக்கும். பேரும்புகழும் கிடைக்கும். மகிளா ஸ்டேஷன் வரை போயிருந்தாலும் இனி ஃபேமிலி லைஃப் பெட்டரா இருக்கும். ரெம்ப காலமா லாக் ஆகியிருந்த ப்ராஜக்ட் ரீஸ்டார்ட் ஆகும் -ரிட்டர்ன்ஸ் கிடைக்கும். நல்ல தூக்கம் வரும்.
அடுத்த பதிவுல புதபலம் தர்ர ராஜயோகத்தை பத்தி சொல்றேன். உடுங்க ஜூட்டு.

6 Replies to “உங்களுக்கும் ராஜயோகம் 28”

praveen

15/11/2017 at 12:07 pm

கடக ராசி க்கு 7 ல் சனி ஆட்சி இருக்கலாமா ? மனைவி குணம் எப்படி ?

Reply

ac logu

30/09/2016 at 1:31 pm

வணக்கம் சார் ரிசப லக்னம் மேச ராசி 7ல் சனி நான் என்ன பரிகாரம் செய்வது

Reply

சிவா

24/09/2016 at 8:24 am

சனி பலம் உள்ளவர்களும் இதை பாலோ பண்ணலாமா சார், உதாரணமாக சனி ஆட்சி, சனி உச்சம் ,லக்ன யோகாதிபதி இப்படி இருந்தாலும் மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றலாமா சார்

Reply

  S Murugesan

  24/09/2016 at 10:24 am

  சிவா !
  பேட்டரியில ஓட்டறவிக பவர் சேவிங் செய்தா பேட்டரிக்கு லைஃப் கூடும். பவர்ல உள்ளவிக பவர் சேவிங் செய்தா குத்தமில்லையே..”பெருசா” சாதிக்கலாம்ல

  Reply

Saravana

23/09/2016 at 3:40 pm

Sir, What about painting the house outer wall with grey color paint. Does it help to get the powers from shani ?

Reply

  S Murugesan

  23/09/2016 at 4:53 pm

  சரவணன் !
  பெய்ண்ட்லாம் சுக்கிர காரகம். செடி கொடி சனி காரகம். சின்னதா தொட்டிகள் வச்சு செடி நடுங்க.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.