கேள்வியும் நானே -பதிலும் நானே

kalachakram

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிட குறித்த புரிதல்னு அவ்வப்போது வெளிவரும் தொடரா ஒன்னை ஆரம்பிச்சன். அதனோட தொடர்ச்சியா கூட இதை வச்சுக்கலாம் .இது கேள்வி பதில் ஃபார்ம்ல இருக்கு அவ்ளதான்.

கே: 1990 மார்ச்சுலயே ஆஃபீஸ் போட்டுட்டதா சொல்றிங்க. அன்னையிலருந்து இன்னைக்கு வரைக்கும் ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பார்த்திருப்பிங்க. டீட்டெய்லா இல்லின்னாலும் ஒரு குன்ஸா சொல்லுங்க. இந்த கெரகங்களோட பிடியிலருந்து எஸ்கேப் ஆக ஒரே வழி-சரியான வழி எதுனா இருக்கா?

பதில்: ஆஹா.. பயாலஜி ப்ராக்டிக்கல்ஸ்ல தவளைக்கு ஆணியடிச்ச கணக்கா அடிச்சு வச்சுட்டு கேட்கிறியளே.. செரி ..சொல்லித்தானே ஆவனும். ரெம்ப சிம்பிள் ப்ரோ .சுய நலம் சுருக்கி -பொது நலம் பெருக்குதல்.

கே: ஊஹூம்..இது அழுகுணி ஆட்டம். உங்க ஃபிலாசஃபியை எங்க மேல திணிக்கிறிங்க. இதை ஜோதிட ரீதியா விளக்குங்க .

பதில்: செரி நம்ம லேப்ல நாம தானே மொத எலி. நம்முது கடக லக்னம். நமக்கு ஆயிரத்தெட்டு வித்தை தெரிஞ்சிருந்தாலும் மினிமம் கியாரண்டி கொடுத்து வண்டிய ஓட வைக்கிறது ஜோதிடம் தான். இதுக்கு புதன் தான் காரகன். இவரு லக்னத்துக்கு பகை +லக்னத்துலயே வேற உட்கார்ந்து தொலைச்சாரு .

நாம ஆஃபீஸ் போட்ட புதுசுல லக்னங்களுக்கு யார் சுபர் -யார் பாபி-யார் மாரகன்ங்கற டேட்டா கூட மைண்ட்ல ஸ்டோர் ஆகி இருக்காது .மொதல்ல என்ன லக்னம்னு பார்த்து சுபர்-பாபர்-மாரகன்னு மார்க் பண்ணிக்கிட்டு தான் பலன் சொல்ல ஆரம்பிப்போம். சப்ஜெக்ட்ல கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் “பைசா பார்த்துர்ரது”ங்கற நோக்கமே இருக்காது . நாம ஃபுல் ஃபார்ம்ல இருந்தப்போ பத்து பேரை அட்டெண்ட் பண்ணா அதுல கு.பட்சம் 3 பேருக்காவது இலவசமா சொல்லியிருப்பம். போற வர்ர வழியில “ஒரே ஒரு சொல்லு ..சொல்லிரு சாமீ”ங்கற கேஸ் எல்லாம் தனி .
மவ பிறந்தா லக்னம் கன்னி. புதன் 11 ல். ஜஸ்ட் ஒரு புதனோட டிப்பார்ட்மென்ட்ல சுய நலம் சுருக்கி 2 வருசம் காலத்தை ஓட்டினதுக்கே இயற்கை கொடுத்த பரிசு.(1992)

அவளுக்கு 13 வயசு இருக்கும் போது லோக்கல் மேகசின் ஒன்னு ஆரம்பிச்சேன்.(புத காரகம்) ஊத்தி மூடும் போது கடேசி பெசல் இஷ்யூ டர்ன் ஓவர் ஒரு லட்சத்து 28 ஆயிரம்.2014 ல் புஸ்தவம் போட்டோம் அதனோட டர்ன் ஓவர் ( அவ்வ்.. ஐ டி காரவிக ரெய்டு வந்துரப்போறாய்ங்க)

அப்படியும் ஜோதிட தொழில்ல பழைய ஸ்டைலை மாத்திக்கவே இல்லை . உபரியா பதிவுகள் மூலமா தொழில் ரகசியத்துல இருந்து பிரம்ம ரகசியத்துல இருந்து அவுத்து விட்டுக்கிட்டே இருக்கம்.

தொழில் முறையில பார்த்தாலும் ஆயிரத்துக்கும் அதே அவுட் புட் /இரு நூற்று அம்பதுக்கும் அதே அவுட் புட் (வச்சுக்கிட்டு வஞ்சனை செய்ய மிடியல ப்ரோ)

அங்கிருந்து 2016 வரை வண்டி இதே ரூட்ல தான் ஓடிக்கிட்டிருந்தது . மவளுக்கு ரெண்டாவதா மவன் பிறந்தான் சிம்ம லக்னம் . பதினொன்றில் சூரியன்+புதன் (மிதுனத்துல புதன் ஆட்சி என்பது பாடம் – சிம்ம லக்னத்துக்கு புதாத்திய யோகம் விசேஷம் )

மவளுக்கோ /மாப்ளைக்கோ புத காரகத்வத்துல உள்ள எந்த தொழில்லயும் ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது . மேலும் கருவானது முதல் நாம தேன் கேர் டேக்கர் அண்ட் ஜாமீன் தார்.

ஆகவே அவன் வளர்ந்து சொந்த முடிவுகள் எடுக்கிற வயசு வர்ர வரை அந்த புதாதித்ய யோகம்லாம் நமக்குதேன் பாத்யதை . தப்பித்தவறி அவனுக்கும் ஜோதிடத்துல ஆர்வம் வந்தாச்சுன்னா சொல்லவே தேவையில்லை .கடேசி வரைக்கும் குரு -சிஷ்ய பந்தம் இருக்கும்.

ஆஃப்டர் ஆல் காலணா ஜோசியத்தொழில்ல “பிசினஸ் லைக்கை ” ஒதுக்கி வச்சுட்டு செய்ததுக்கே இது ரிசல்ட் . சுய நலத்தை லேசா சுருக்கினதுக்கே இது ரிசல்ட்.

கடவுள் வேற ஏதாச்சும் சோர்ஸ் ஆஃப் இன் கம் கொடுத்து தொலைச்சு ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒரு கோவில் மண்டபத்துல “முற்றிலும் இலவசமா” சொன்னா என்ன ஆகும்னு ரோசிங்க.

4 Replies to “கேள்வியும் நானே -பதிலும் நானே”

Srini Sivakumar

23/08/2016 at 8:32 pm

சுய ஜாதகத்தில் நீசமடைந்திருக்கும் கிரஹம் காேசாரத்தில் நீசமடைந்தால் என்னவாகும் ஐயா.?

Reply

    S Murugesan

    23/08/2016 at 9:09 pm

    வாங்க ஸ்ரீனிசிவகுமார் !
    குறிப்பிட்ட கிரகம் லக்னாத் சுபராக இருந்து 6-8-12 தவிர பிற இடங்களில் இருந்தால் நற்பலன் குறையும். பாபராக இருந்து கேந்திர கோணங்களில் இருந்தால் தீயபலன் அதிகரிக்கும்.

    Reply

Ganezan nk

22/08/2016 at 8:58 am

நீங்க ஜோதிடர் ஆனதுக்கு காரணம் உங்கள் ஜாதகத்தில் உள்ள எந்த அமைப்பு!?

Reply

    S Murugesan

    22/08/2016 at 10:49 am

    வாங்க கணேசன் !
    ஏற்கெனவே நமக்கு சொந்த கதை பேசறதா ஒரு அபக்யாதி. இதுல இதுவேறயா?

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *