Tags     

Categories  அனுபவஜோதிடம் நூல் விற்பனை

ஜோதிடம் : சரியான புரிதலே நன்மை தரும்

1

அண்ணே வணக்கம்ணே !

சப்ஜெக்ட் எதுவா இருந்தாலும் அதன் பயன் நம் புரிதலை பொருத்தது. புராணம்னா மிஸ்டிக் கலர் பூசிய சரித்திரம்னு புரிஞ்சுக்கலாம்.ஆபத்து குறைவு . புராணத்துல சொல்லப்படறதெல்லாம் யோக நிலையில் மனிதர்களுக்கே சம்பவிக்க கூடியன. இப்படியும் புரிஞ்சுக்கலாம். ஓரளவுக்கு பயன் பெறவும் வாய்ப்பிருக்கு.
உ.ம் சிவ சக்தி தத்துவம்னா ஆணில் பெண் தன்மை /பெண்ணில் ஆண் தன்மை

சரித்திரம் எப்படி மிஸ்டிக் கலரால புராணமாச்சோ ஜோதிடமும் அதீத நம்பிக்கைகளால் “புரட்டு” வடிவம் தரித்து விட்டது .

விவேகானந்தர் சிகாகோ புறப்பட வேண்டிய சமயம் அன்னாருக்கு ஒரு கனவு வருது. தன் தாயார் புவனேஸ்வரி இறந்து போவதாய் கனவு கண்டு டர்ராயிர்ராரு .

அப்பம் ஒரு பார்ட்டி கிட்டே கூட்டிப்போறாய்ங்க. அன்னார் சுடுகாட்ல இருக்காராம் .இவிகள பார்த்ததுமே வம்ச விருட்சத்தையே ஒவ்வொருத்தர் பேரோட புட்டு புட்டு வச்சு “அம்மாவுக்கு ஒன்னம் ஆகாது .நீ கடல் கடந்து போய் சாதனை படைக்கப்போறே”ங்கறாரு அந்த ஆசாமி.

இந்த சம்பவம் நடக்காம இருந்திருந்தா ஒரு வேளை விவேகானந்தர் சிகாகோவுக்கே போகாம கூட போயிருக்கலாம்.
பேரை சொல்றதெல்லாம் சாத்தியமான்னா நாடி ,ஓலைன்னு போயிரும். நாடி குறித்த நம் அனுபவம் நெகட்டிவ்.உட்டாலக்கடி .ஒரு வேளை நெஜமா கூட இருக்கலாம்.

நான் ச்சும்மா நமக்கு தெரிஞ்ச நாலணா சோசியத்தை வச்சு ட்ரை பண்ணி பார்த்தேன். நமக்கு ஒன்பதாவது இடம் மீனம்-அதிபதி குரு -அப்பா பேரு சுந்தரேசன். (குரு காரகம் தானே) , ஏழை குரு பார்க்கிறாரு .பொஞ்சாதி பேரு சக்தி காரகம். அஞ்சாவது ராசி விருச்சிகம் .மவ பேரு சிரீஷா .ஆனா நான் சிறுசுனு தான் கூப்பிடறேன். ( நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க )

செரி இதை விடுங்க மேட்டருக்கு வரேன்.

ஜோதிடம் குறித்த நம் புரிதலை பொருத்து பலன் பெறலாம்னு சொன்னேன். இதுல நம்ம புரிதல் மட்டும் பயன் தந்துராது. நாம கான்டாக்ட் பண்ற சோசியரோட புரிதலும் முக்கியம்.

அவரு ஜோசியம்னா ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி புஸ்தவத்துல சொல்லியிருக்கிறதுதான் பலன்னு நினைக்கிற ஆளா இருந்தா அம்பேலாயிருவம்.

தற்போதைக்கு ஜோசியர் சொல்றது ஒரு சட்டமுன் வடிவு போலன்னு வச்சுக்கலாம். (சட்ட முன் வடிவு டிஸ்கஷனுக்கு பிறவு அமலாகலாம்/ஆகாம போகலாம் /சில பல மாற்றங்களோடு அமலாகலாம்)

நாம 1967 ஆம் வருசம் , ஆகஸ்ட் மாசம், 7 ஆம் தேதி காலையில 6.10 க்கு பிறந்தம். இந்தியாவுக்குள்ள கணக்கெடுத்தா கூட நிமிட்டுக்கு 4 கொளந்தை பொறக்குதாம். நாம பொறந்த அதே லக்னம் 2 மணி நேரம் இருந்திருக்கும். ஆக 120 நிமிஷத்துக்கு 4 கொளந்தைன்னா 480 கொளந்தை இதே ஜாதகத்துல பிறந்திருக்கும் (இந்தியாவுக்குள்ள மட்டும்) . நான் ? இதோ இருக்கேன். மத்த 479 பேர் எங்கே?

இப்பம் ஃபேஸ்புக்,ட்விட்டர்னு கச்சாமுச்சான்னு இருக்குல்ல .உலகமே ஒரு கிராமமாயிருச்சுல்ல? அட ஒரு 47 பேராவது இங்கே இருக்கனும்ல? இந்தியாவ வல்லரசாக்க கு.பட்சம் 47 திட்டம் பிரச்சாரத்துல இருக்கனும்ல? ஏன் இல்லை?

ஷீர்டி சாய்பாபா சொல்வாராம். நீங்கல்லாம் குருவிங்க மாதிரி – கால்ல நூலை கட்டி இழுத்தாப்ல உங்களை ஷீர்டிக்கு இழுக்கறேனு.

கெரகமும் இப்படித்தான் இழுக்கும்னு நீங்க நம்பினா உங்க புரிதல் தப்பு .உங்க ஜாதகங்கறது ரஸ்னா பவுடர் மாதிரி . இதை 22 கிளாசுக்கு மாத்தும் போது அதுக்கு உபயோகிக்கிற தண்ணி /தம்ளர் /சர்க்கரையை பொருத்து டேஸ்ட் மாறிப்போகுது .

உங்க ஜாதகம் ஒரு ப்ளூ ப்ரிண்ட். ஆனால் கட்டிடத்தை கட்டப்போறது நீங்க தேன். உங்க அப்பா ,அம்மா,சுற்றுச்சூழல் ,நண்பர்கள்,ஆசிரியர்கள் எல்லாம் தான் பில்டிங் மெட்டீரியல். சிமெண்டையே எடுத்துக்கோங்க .கிரேடு அது இதுன்னு சொல்றாய்ங்க. பில்லர் போடற சமயம் 53 கிரேட் இல்லின்னா என்ன 48 கிரேடை கொண்டானு கட்டி தொலைச்சா என்னாகும்? மவுலி வாக்கம் கேஸ் தான்.

அடுத்தது அப்பா -அம்மா . எங்கப்பாவோட நேர்மைக்கு பயம் /பயமே ஒரு காரணமா கூட இருந்திருக்கட்டும். நேர்மையா வாழ்ந்து போய் சேர்ந்துட்டாரு. அவரோட நேர்மைக்கு மத்தவிக என்ன விலை கொடுத்தாய்ங்கனு தெரியாது . நான்லாம் போயிங்77 ஃப்ளைட் மாதிரி .அப்பாவோட நேர்மை பிரகாசைம் ஹைரோட்ல ஓட விட்டுருச்சு . செம சேதம். கடுப்புல அந்த வயசுக்குண்டா (அ)புரிதலோட கச்சா முச்சான்னு டார்ச்சர் பண்ணேன். ஆனால் அந்த நேர்மைக்கு நானே ஒரு வாரிசாயிட்டன். காரணம் பயமில்லை . எப்படி வாழ்ந்தாலும் வாழ்க்கை ஒரு வெட்டினு ஒரு க்ளேரிட்டி.

கொய்யால என்னமா வாழ்ந்தாலும் பொசுக்குனு முடியப்போற சமாசாரத்துக்கு காட்டி -கூட்டி கொடுத்து வேற மெனக்கெடனுமாங்கற பெரும்போக்கு. அப்பாவோட கலெக்சன்ல இருந்த புக்ஸை அவர் நிச்சயம் படிச்சிருப்பாரு. எந்தளவுக்கு இம்ப்ளிமென்ட் பண்ணாருனு தெரியாது .ஆனால் நாம அந்தந்த காலகட்டத்துல 100+ சதவீதம்.
ஒரு கட்டத்துல செம கடுப்பு . ப்ளடி ஹிப்பாக்கிரட்னு ஒரு அவதானிப்பு . படிப்படியா மாறி மாறி ஒரு கட்டத்துல அவரோட பல விஷயங்களுக்கு நாமதேன் வாரிசு . இந்த நிலை வந்ததும் ரஜினி ஸ்டைலெல்லாம் மொக்கையா தோனிப்போச்சு. (இப்பல்லாம் வெளிய போறப்ப அப்பா மாதிரி மஞ்சப்பை கொண்டு போறேன்)

இன்னைக்கு கடல் கடந்து பலரும் நமக்கு படியளக்க இதான் காரணம்னு நம்பறேன் ( ஒன்பதாமிடம் தான் அப்பாவையும் -தொலை தொடர்பையும் காட்டுது பாஸ் – நமக்கு ஒன்பதாமிடத்துல வக்ர சனி -லக்னம் ஞா இருக்குல்ல -கடகம்)
ஹ.. சும்மா விடாதிங்க பாஸ்.. உங்கப்பாவுக்கு இன்னம் 3 பிள்ளைங்க இருக்கிறதா சொல்லியிருக்கிங்க. அவியளுக்கெல்லாம் ஒர்க் அவுட் ஆகலியானு கேப்பிக. சொல்றேன். அவிகளுக்கெல்லாம் அவர் இருக்கும் போதே றெக்கை முளைச்சுருச்சு . பறந்து போயிட்டாய்ங்க (ஐ மீன் ஜப் அண்ட் ஆல் தட்) றெக்கை முளைச்சாலும் ஒரு அப்பனோட உள்ளம் தன் பிள்ளைகளை அவ்ள ஈசியா மறக்காதுதான்.ஆனால் அவிக ரூட்டை மாத்திக்கிட்டாய்ங்களே.மாஸ்டர் சிவிவி அண்ட் ஆல் தட் .

அம்மா மேட்டரும் இப்படித்தான். ரெம்ப அப்பாவி . அப்பிராணி . மாமியாரோட அக்கா மவன் குடிச்சு தெரு நடையில புரண்டு பெய்து வச்ச மூத்திரத்தை எல்லாம் கழுவி விட்டிருக்காய்ங்கன்னா பார்த்துக்கங்களேன். (மணியக்காரர் மவ -அந்த காலத்து எஸ் .எஸ்.எல்.சி /கண்ணாலத்துக்கு முந்தி டீச்சர்)

அவிக மார்ல கட்டின்னதுமே கான்சரா இருக்கலாம்னு ஹரியப்புன்னேன். கேட்கல. யூட் ரஸ்ல அட்டாக் ஆயிருச்சு / அதை ரிமூவ் பண்ண ஹரியப்புன்னேன். கேட்கல. கீமோ தெரஃபிக்கப்பாறம் ஓடா தேஞ்சு வந்தப்ப நமக்கென்னமோ வயசு 17 தேன்.(1984) ரஜினி சார் கூட “அம்மா என்றழைக்காத உயிரில்லையே”பாட்டுக்கு ஆக்டு கொடுக்காத வருசம்தேன். ஒரு மவள் இருந்திருந்தா அவள் செய்திருக்க கூடிய காரியங்களை எல்லாம் கூட அலட்டிக்காத செய்தம். அப்பா அம்மன் பக்தர் எலுமிச்சம்பழத்துல கற்பூரம்லாம் ஏத்தி திஷ்டி கழிப்பாரு . நாம ஊஹூம். அண்ணா தம்பில்லாம் நெத்தியில விபூதி வச்சு மாஸ்ட சிவிவி நமஸ்காரம் தேன். நாம ஊஹூம்.

நம்ம ஆன்மீக முயற்சிகள் துவங்கியதே 1986 லதேன். ஆத்தா லைனை பிடிச்சது 2000 கடைசீல. அம்மாவோட பாட்டுக்கும் – எழுத்துக்கும் நாமதேன் வாரிசு . வேலூர் டாக்டர் கண்ணப்ப வெளியிட்ட நோயும் மருந்தும் அம்மாவோட தொகுப்புதேன்.

இப்படி ஒரு ஜாதகத்தோட பயணத்தை திசை திருப்பற மேட்டர் லட்சம் இருக்கு. ஆக ஜாதகங்கறது ஒரு அவுட்லைன் .ஒரு பேக் ட்ராப். இந்த அளவுல ஜோதிடத்தை நம்பினா நன்மை பெறலாம்.

பதிவின் ஆரம்பத்துல சொன்ன விவேகானந்தர் சம்பவத்துல போல வம்ச விருட்சத்தோட டீட்டெய்ல்லாம் இன்னைக்கு எதிர்ப்பார்க்க முடியாது . அதே சமயம் என்னதான் அவா டிக்கி கீழ வச்சு பத்திரப்படுத்தி பூட்டி வச்சாலும் கசிஞ்சு வந்து செலாவணியில இருக்கிற பல விஷயங்களில் பல விஷயங்கள் இன்னைக்கும் அச்சா ஒர்க் அவுட் ஆகுது .
ஜோதிடத்தோட அவுட் புட்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற இன்னொரு மேட்டர் என்னடான்னா ஜோசியரோட யோக்யதை . அஞ்சு கேள்விக்கு பதில் தர ரூ.500னு போட்டிருக்கும் . கேள்விக்கு பதில் ஆப்ஜெக்டிவ் டைப்பை விட சுருக்கமா வரும்.
அவனவன் அந்த ஐ நூறு ரூவாயை சம்பாதிக்க என்னமா உழைக்க வேண்டியிருக்கு? ஆனால் சிலர் இப்படி கொள்ளை.
நாமளும் இந்த மெனு கார்ட் வச்சிருக்கம்.ஆனால் உள்ளடக்கம்னு பார்த்திங்கனா ஓவராலா அந்த ஜாதகத்தையே நோண்டி நுங்கெடுத்திருப்பம்.

இதே போல இந்த புஸ்தவ மேட்டர். இவனே நாலு இடத்துல பொறுக்கி தான் நாலு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டிருப்பான். அதுல பாதி டுபுக்கா இருக்கும். அதை புஸ்தவமாக்கி ஒரே ரேட்டை போட்டு/அதுவும் யானை விலை குதிரை விலை வருசக்கணக்கா விப்பான். (ஒரு பிக்காலின்னா ஐ நூறு ரூவாய்க்கு தனக்கு வந்ததா பாராட்டு கடிதங்களை மட்டும் /நியூஸ் க்ளிப்பிங்ஸை மட்டும் /அதுவும் பெய்ட் ந்யூஸ் பிரிண்ட் பண்ணி வித்திருக்கான்.
நண்பர் வாங்கிட்டு கடுப்பாகி வண்டை வண்டையா திட்டி லெட்டர் போல கவருக்குள்ள ஐ நூறு வச்சு அனுப்பிட்டான்.

நம்மை பாருங்க.. அப்பா தன் லட்சியத்துக்காவ குடும்பத்தை பலி கொடுத்த கதை ஆயிரக்கூடாதுன்னு மொத அச்சுல ஐ நூறு ரூவா முன் பணம் வாங்கிக்கிட்டு 1+1 ஆ அனுப்பிட்டம். மறு அச்சுல ஒரு செட் ரூ.250 தபால் செலவு இலவசம். 3 ஆவது அச்சுல வர்ரப்ப ரூ.200 தான் தபால் செலவு இலவசம்.

கணக்கு போட்டு பார்த்ததுல நாம சேஃப் சைட்ல தான் இருக்கம்னு கன்ஃபார்ம் ஆயிருச்சு. அதனால ஆடித்தள்ளுபடிங்கற பேர்ல 200+50 அனுப்புங்க .ஒரு செட் ஃப்ரீனு அனவுன்ஸ் பண்ணிட்டம்.

லேட்டஸ்டா அம்பது ரூவா பேக்கிங்+ தபால் செலவுக்கு அனுப்புங்க. புஸ்தவம் அனுப்பிர்ரம் (1+1) உங்களுக்கு பிடிச்சிருந்தா காசு போடுங்க .இல்லின்னா அன்பு பரிசுன்னு ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கன்.

ஏன் இந்த கொலைவெறி?
1.மொத முறை ப்ரிண்ட் பண்ணும் போது செலவு சாஸ்தி.மறு அச்சுக்கெல்லாம் பாதி கூட ஆகாது
2.அசல்,லாபம் ,கூலி எல்லாமே கலெக்ட் ஆயிருச்சு. இதுக்கு மேல லாபம்னா புதன் கோவிச்சுக்குவாரு.
3. ரூவாய்க்கு நாலு ஜோசிய புஸ்தவம் கிடைக்கும்.ஆனால் அதெல்லாம் நாலு இட்லி ஒரு வடைன்னு வச்சு கட்டின பார்சல் மாதிரி. நம்ம புஸ்தவம்லா அப்படியில்ல தேவையான பொருட்கள்,செய்முறை எல்லாம் அடங்கியிருக்கும். இது பரவனும். பரவலா போய் சேரனும். கற்பதும் யோகம் .கற்பிப்பதும் யோகம்.

இப்படி இறங்கி வர்ரதுக்கு காரணம் பொளைக்க தெரியாமயே போய் சேர்ந்துட்ட எங்க அப்பா -அம்மாவோட ஜீன் தான் போல.

ஆனால் அவிக பயத்தாலயோ – ஆல்ட்டர்னேட்டிவ் இல்லாததாலயோ அப்படி வாழ்ந்திருக்கலாம்.ஆனால் நமை பொருத்தவரை நாம நினைச்சா தரை லோக்கலுக்கு இறங்கி அடிப்பம். ஆனாலும் பெரீமன்சன்னு ஒரு பேர் வந்திருச்சா ..இவ்ள காலம் நெல்லபடியா வாழ்ந்தாச்சு . திடீர்னு எப்படி சாக்கடையில இறங்கறதுன்னு ஒரு சின்ன தயக்கம் உண்டு.

ஆனால் பாருங்க லட்சியம்னு வந்துட்டா சான்சே கிடையாது .இன்னைக்கிருக்கிற அரசியல் வாதி , பிராமணாள் எல்லாம் வெட்கப்படற அளவுக்கு கூ-கா கொடுக்க ரெடி.

நிற்க .. ஜோதிடம் குறித்த புரிதலை தரக்கூடிய பல விஷயங்களை அவ்வப்போது சின்ன தொடர்போல தர ட்ரை பண்றேன். (அப்ப அனைவருக்கும் ராஜயோகம் கோவிந்தாவானு அச்சாணியமா கேட்டுராதிங்க -அதுவும் மைண்ட்ல இருக்கு)

print

1,349 total views, 1 views today

S Murugesan
rajeev says:

அய்யா ,
ஒரு ஜாதகத்தில் ஒருவர் தரைமட்டம் ஆய் போய் மீண்டு வருவாரா ?உதாரணம் : 7 வருடம் வேலை இல்லாமல் இருந்து தீடீர் என்று விட்டதை பிடிப்பது போல் நல்ல வேலை,சம்பளம் . எந்த வீடு கிரகம் பார்க்க வேண்டும் .

S Murugesan says:

வாங்க ராஜீவ் !
நீச பங்க ராஜயோகம் – விபரீத ராஜயோகம் -இரு வித ஆதிபத்யம் பெற்றுள்ள கிரகங்களின் தசாகாலங்களில் இப்படி ஏற்படுவதுண்டு.

ஏழரை சனி காலத்தின் இறுதி கட்டத்தில் (6 மாசம் முன்னாடி ) இப்படி நடப்பதுண்டு .

மணிவேல் says:

முருகேசு சார், இராசிச் சக்கரத்துல பரிபூரண அஸ்தங்கத / கிரகண தோஷமான கிரகத்துக்கு திருக் பலம் வேலை செய்யுமா? கொஞ்சம் விளக்கமா சொன்னா நெல்லாருக்கும். நன்றி.

S Murugesan says:

வாங்க மணிவேல் !
ஹஸ்தங்கதம்னா அங்கே சூரியன் மட்டும் இருப்பதாய் கருதி சிந்திக்கவும். கிரகண தோஷம் என்றால் அங்கு ராகு/கேது மட்டும் இருப்பதாய் கருதி சிந்திக்கவும்

S Murugesan says:

வாங்க மணி வேல் !
அஸ்தங்கதமான கிரகமா இருந்தா சூரியனோட பார்வை தான் வேலை செய்யும்.கிரகண தோஷ கிரகம்னா ராகு/கேது பார்வை தான் வேலை செய்யும்.

seenu kutty says:

சனி நேரடியா லக்னத்துல உட்சம் ஆட்சி பெற்று சுபகிரக பார்வை சேர்க்கை இல்லை என்ன ஆகும் சார்?

S Murugesan says:

வேலைக்காரிய லவ்ஸ் பண்றது ,குதப்புணர்ச்சி ,படு கஞ்சரா இருக்கிறது ,சேடிஸ்டா மார்ரது இப்படி பலதும் நடக்கும்

seenu kutty says:

எனக்கு லக்ன சுப புதன் ரென்டு கட்டத்துலயும் நட்பு வீட்ல வக்ரம் ஆனா புதன் எனக்கு bulb குடுக்கலையேsir?

S Murugesan says:

புதன் கொடுக்கிற பல்பு என்னனு தெரியுமா?

seenu kutty says:

தெறியலயே சார் புரியவைங்க……

S Murugesan says:

சீனு குட்டி !
நீ.ப.ரா.யோகம் பத்தி தானே கேட்கிறிய?

seenu kutty says:

ம்ம்ம்ம்ம்ம் நீ.ப.ரா பத்தி சொல்லுங்க அப்பறம் புதன் குடுக்குற பல்பு பத்தி சொல்லுங்க…..

seenu kutty says:

லக்ன பாவ கிரகம் நீசபங்கம் ஆனா நல்லது செய்யுமா சார் ?

S Murugesan says:

வாங்க சீனு குட்டி !

நிச்சயமா செய்யும். ஆனால் நீசபங்கம்னா என்னனு கரெக்டா தெரிஞ்சுக்கோங்க.

seenu kutty says:

mostly ரிஷப ராசிகாரவுகளாம் குன்டா இருக்காங்ளே அந்தமாறி ஒவ்வொரு ராசியோட appearance பத்தி சொல்லுங்க சார்…

S Murugesan says:

ராசி-கேரக்டர்னு ஒரு பதிவு இருக்கு பாருங்க

seenu kutty says:

நீச கிரகத்தோட உச்ச கிரகம் சேர்ந்தாலோ, நவாம்சத்துல உச்சம், வக்ரம், பரிவர்த்தனையான மட்டும்தான சார் effective நீசபங்கம் ? மத்த ரூல்ஸ்லாம் டுபுக்குதான சார் ?

S Murugesan says:

வாங்க சீனு குட்டி !
ஒரு பாவாதிபதி நீசமாகி – அவர் நின்ற இடத்ததிபதி ஆட்சி/உச்சம் பெறுதல்

seenu kutty says:

பாபகர்த்தாரி யோகம் எந்த அளவுக்கு work ஆகும் சார் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தையே சுத்தமா டெமாலிஷ் பன்னிடுமா சார் உதாரனத்துக்கு மஹாத்மா காந்தி ஜாதகத்துல துலா லக்னம் லக்னத்துல செவ்வாய, புதன், சுக்கிரன் 2ல சனி 12ல சூரியன் சார்…

S Murugesan says:

seenu kutty !
சுபர்களுக்கு முன்னோ பின்னோ பாபர்கள் அமைவது பாபகத்திரி யோகம். இதை ஓரளவுக்கு ராஜ்யசபாவில் பாஜக நிலைக்கு ஒப்பிடலாம்.

ஆனால் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறிருச்சுல்ல. அப்பது சுபர் தரவேண்டிய நற்பலனில் கொஞ்சம் இழுவை இருக்கலாம். இழுவைக்கு கடுப்பாகி மோடி ராஜினாமாவா செய்துட்டாரு?

seenu kutty says:

சார் என் friend ஒருத்தன் அப்பா அவன் சின்ன வயசுலயே இறந்துட்டாரு காரனம் என்னவா இருக்கும் சார் ? அவன் ரிஷப லக்னம் 4ல செவ்வாய் மாந்தி 5ல ராகு 9ல குரு நீசம் 11ல சூரியன், கேது, சந்திரன் (அஸ்தங்கம்) சுக்கிரன் உச்சம் அஸ்தங்கம் சனி அஸ்தங்கம், 12ல புதன் சுக்கிர தசை ஆன் தி வேய்….

S Murugesan says:

seenu kutty !

ரிஷப லக்னத்துக்கு குரு அஷ்டமாதிபதி 9 பித்ருஸ்தானம் .இது போதாதா?

seenu kutty says:

தனுசு லக்னம் 5ல நீச சனி வக்ரம் so சனி திசை எப்டி இருக்கும் சார் ?

S Murugesan says:

seenu kutty !

முழு படம் காட்டறேனு சொல்லிட்டன். (நாளைக்கு லெட்டர் போட்டுருங்க) இந்த டீசர் ,ட்ரெய்லர்லாம் எதுக்கு ?

seenu kutty says:

இல்ல சார் இது என்னோட படம் இல்ல…. நான் வேற படத்தை பத்தி கேக்குறேன்….

S Murugesan says:

seenu kutty !

ஒட்டு மொத்த ஜாதகத்தை வச்சு சொன்னாலே பல்பு வாங்குது.இதுல துண்டா துண்டா பார்த்து என்னத்த சொல்ல. விதிகளை பற்றி கேளுங்க. விதிகளை அப்ளை பண்ணி பாருங்க.

seenu kutty says:

over sex சுக்கிரனோட power ah குறைக்குமா சார் ?

S Murugesan says:

seenu kutty !

சர்வ நிச்சயமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *