குருப்பெயர்ச்சி 2016-17 (துலாம் முதல் மீனம் வரை )

DSC_2771

அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்காரவிகளுக்கு கு.பெ பலன் எழுதியாச்சு. அடுத்து உள்ள 6 ராசிக்காரவிகளுக்குண்டான கு.பெ பலன் இந்த பதிவில்.ஆனால் சில பொதுவான விஷயங்களை முன் கூட்டி நான் சொல்ல நீங்க தெரிஞ்சுக்கறது நல்லது. ஆகவே இங்கே அழுத்தி கடந்த பதிவை ஒரு தாட்டி பார்த்துருங்கனு சொன்னா பார்க்கவா போறிங்க.ஆகவே அந்த விஷயங்கள் இந்த பதிவிலும் காப்பி பேஸ்டாக.

இந்த வருடம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி இரவு 9 மணி முதல் உத்தரம் 2 ஆம் பாதத்தில் அஃதாவது கன்னிராசியில் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறார் . 2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரை குரு அஸ்தமனம். அஃதாவது சூரியனோட சேர போறாரு . குருவோட இம்பாக்ட் மினிமைஸ் ஆகி சூரியனோட இம்பாக்ட் அதிகமா இருக்க கூடிய காலம்.
2017, பிப் 6 முதல் வக்ரம் பெறுகிறார் . அதாவது தான் சாதாவா சஞ்சரிச்ச காலத்துல கொடுத்த பலனுக்கு நேர் எதிரிடையான பலனை தர ஆரம்பிச்சுருவாருங்கோ.

(இந்த டேட்டாவுக்கெல்லாம் சோர்ஸ் நான் பல வருசமா நம்பி உபயோகிச்சுக்கிட்டிருக்கிற ஆந்திரபூமி -திருக்கணித பஞ்சாங்கம்.அன்னாருக்கு நன்றி)

எச்சரிக்கை:
கோசாரம்ங்கறது கார்ப்பரேஷன் காரவிக தண்ணி உடற டைம் மாதிரி. ஜாதகம் தான் பைப் லைன். பைப் லைன்ல பிரச்சினை இருந்தா எத்தீனி தபா -எத்தீனி இஞ்ச் தண்ணி விட்டாலும் வீட்டுக்குள்ள தண்ணி வந்து சேராதில்லை.

குருபலம்:
குரு உங்களுக்கு அஃதாவது உங்க ராசிக்கு 2-5-7-9-11 இடங்களில் இருந்தால் குரு பலம் இருக்குனு அருத்தம் (இது பொதுவிதி) சில சிறப்பு விதிகளின் படி கூட குரு நல்ல பலனை தர வாய்ப்பிருக்கு. இதே போல சில சிறப்பு விதிகளின் படி மேற்சொன்ன இடங்களில் இருந்தும் குரு நல்ல பலன் தராம போகவும் வாய்ப்பிருக்கு .
நல்லதுன்னா என்ன நடக்கும்? கெட்டதுன்னா என்ன நடக்கும்? இதை குரு பலம் வந்தா என்ன போனா என்னனு ஒரு தனிப்பதிவுல விரிவா அலசியிருக்கேன். இங்கே அழுத்தி படிச்சுருங்க ப்ளீஸ் ..

7.துலாம்:
குரு உங்களுக்கு 3-6 க்குடையவர் . இவர் உங்க ராசிக்கு 12ல வரப்போறாரு .குரு 11ல இருக்கிறது பொது விதிப்படி ஆகா ஓகோ .ஆனால் உங்களுக்கு ? அல்லலும் அலைச்சலும் , சத்ரு ரோக ருண உபாதைகளும் தான் கடந்த குருப்பெயர்ச்சி காலத்துல ஏற்பட்டிருக்கும் .இடையில ஏற்பட்ட குரு வக்ர காலம் /குரு ராகு சேர்க்கை காலமே பெட்டரா இருந்திருக்கும்.

ஆகவே குரு விரயத்துல வராரானு டென்சன் ஆயிராதிங்க. இவர் விரயத்துக்கு வர்ரது உங்களுக்கு (மட்டும்) நல்லதுதான். மிஞ்சிப்போனா லோக்கல்ல வண்டிய போட்டுக்கிட்டு வெத்தா சுத்த வேண்டியிருக்கும்.இ.சகோதரத்துக்கு செலவழிக்க வேண்டி வரலாம்.பாதம், தூக்கம், உணவு ,கில்மா தொடர்பா கொஞ்சம் அல்லல் /அலைச்சல் ஏற்படும்.
இதை எல்லாம் மவுனமா ஏத்துக்கிட்டா உங்களுக்கு கிடைக்க போறதென்ன தெரியுமா? சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி .

2017, பிப் 6 முதல் வக்ரம் பெறும் காலத்தில் லம்பா ஒரு அமவுண்ட் கடனா வாங்க வேண்டி வரலாம் . உடல் நலம் பாதிக்கலாம்.

2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துல பாதம், தூக்கம், உணவு ,கில்மா தொடர்பா – ஜஸ்ட் ஈகோ காரணமாவோ / ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ் காரணமாவோ பெரிய ஆப்பா வச்சுக்க சான்ஸ் இருக்கு டேக் கேர்.

8.விருச்சிகம்
உங்களுக்கு குரு 2-5 க்குடையவர் . இவர் 11க்கு வராரு . தலீவர் சொன்ன பழம் கனியறது மட்டுமில்லை – நேர உங்க வாய்ல வந்து விழுந்த கதை தான். நான் இப்ப சொல்லப்போற நல்ல மேட்டர்லாம் 2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துல இன்னம் பக்காவா நடக்குமுங்கோ.

அதே சமயம் 2017, பிப் 6 முதல் குரு வக்ரம் பெறும் காலத்தில் கொஞ்சம் அசந்தாலும் காசு மேட்டர்லாம் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கும். நோட் திஸ் பாய்ண்ட்.

இந்த குரு பெயர்ச்சி காலத்துல குற்றம் சொல்லியே பேர் வாங்கும் புலவரான உங்க வாய்ல இருந்து கூட சனங்க மனசை குளிர்விக்கிறாப்ல வார்த்தைகள் வரும்னா பார்த்துக்கோங்க. இதனால கொடுக்கல் வாங்கல்லாம் சுமுகமா -சரளமா இருக்கும். குறைஞ்ச வட்டிக்கு / கைமாத்தா பெரிய அமவுன்டெல்லாம் கூட பெயருமுங்கோ. அடகுல உள்ள நகை நட்டு வீட்டை வந்து சேரும்.புதுசா ஒரு 3 கிராமாச்சும் வாங்குவிங்க. குடும்பத்துல குதூகலம்.

நம்ம ஒன்னாங்கிளாஸ் வாத்யாரை பார்த்து ஒரு சால்வை போட்டுட்டு வரனும்யானு நினைக்கிற அளவுக்கு உங்க மனசும் /புத்தியும் குளிர்ந்து மலர்ந்து இருக்கும். மாதா செய்தது மக்களுக்குங்கறாப்ல நீங்க இப்படி பண்ற எம்.ஜி.ஆர் வேலைகள் உங்க குழந்தை குட்டிகளோட வளர்ச்சி -கல்வியிலயும் உதவும். நம்ம…………… இதுக்கு மிந்தி மாதிரி இல்லப்பா ..ங்கற அளவுக்கு உங்க பெயர் பரவும் .உபரி தகவல்களுக்கு குருபலம் வந்தா என்ன போனா என்னங்கற நம்ம பதிவையும் படிங்க.

9.தனுசு
உங்களுக்கு குரு 1-4 க்குடையவர்.பத்துல வர்ராரு .அய்யய்யோ குரு 10 க்கு வந்தா பதவி பறிபோகுமாம்லனு டர்ராயிராதிங்க.

மூ ..முலாஜா பார்க்காதிங்க.கறாரா இருங்க. ஆருக்கும் கியாரண்டி ஷ்யூரிட்டில்லாம் கொடுக்காதிங்க. எந்த ரெண்டு பேருக்கிடையிலயும் பஞ்சாயத்து பண்ணாதிங்க தூது போகாதிங்க .காசு -தங்கம் ஹேன்டில் பண்ணும் போது கேர்ஃபுல்லா இருங்க.

அதே சமயம் 2017, பிப் 6 முதல் குரு வக்ரம் பெறும் காலத்தில் மேற்சொன்ன சில்லறை பிரச்சினைல்லாம் மம்மி மின்னாடி அதிமுக மந்திரி மாதிரி பம்மியே இருக்கும். தடார்னு ஹெல்த் மக்கர் பண்ண ஆரம்பிச்சுரும் அதான் சிக்கல் .
வீடு கட்டறது /ஆல்ட்டர் பண்றது மாதிரி வேலை இருந்தா நெல்லா விஜாரிச்சு நல்ல ஆளா பார்த்து ஒப்பந்த அடிப்படையில கொடுத்துட்டு உங்க வேலைய நீங்க பாருங்க.இதை 2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துல செய்துருங்க. இந்த காலகட்டத்துல பத்துல குருவை மீறி ப்ரமோஷன் / எம்.டி.சேம்பர்ல சமோசா டீல்லாம் ஒர்க் அவுட் ஆகும். டோன்ட் ஒர்ரி பீ ஹேப்பி .

10மகரம்:
ஒங்களுக்கு குரு 3-12 க்குடையவர் . இவர் 9ல் வராரு . போன வருசம் 8 ல இருந்ததே பெட்டர்ங்ணா.போன வருசம் பைசா மேட்டர்ல இருந்த நிலை இப்போ தலைகீழா மாறும் .சாக்கிரதை. (ஹி ஹி ..போன வருசம் செலவு மேட்டர்ல ரெம்ப அடக்கி வாசிச்சு கஞ்சூசுனு பேர் வாங்கியிருப்பிங்க. இந்த வருசம் ? வாயை கட்டி வவுத்தை கட்டி சாதிச்சது என்ன.. கொஞ்சம் செலவழிக்கலாமேனு இறங்குவிங்க.ஆனால் டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் இல்லையா? அதுக்கு தேன் சாக்கிரதைன்னேன்) இ.சகோதரம் மேட்டர்ல ஒரு இன்ப அதிர்ச்சி இந்த வருசம் உண்டு.
மத்த படி அப்பா,அப்பா வழி உறவு , சொத்து,முதலீடு,சேமிப்பு ,பெரீ மன்சங்க மேட்டர்ல எல்லாம் அல்லல் அலைச்சல் வீண் விரயங்கள் ஏற்படும்.2017, பிப் 6 முதல் குரு வக்ரம் பெறும் காலத்தில் இந்த நிலை மாறும். மனசதை தேத்திக்கங்க.

2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துல திடீர்னு அப்பா கூட முட்டிக்கும். சொத்து /முதலீடு /சேமிப்பு மேட்டர்ல வில்லங்கம் வரலாம். அல்லது அதுலயும் கை வச்சு செலவழிக்க வேண்டி வரலாம்.

11.கும்பம்:
உங்களுக்கு குரு 2-11 க்குடையவர். எட்டுக்கு வராரு . வங்கி கணக்கு காசிருக்கு . ஏடிஎம்ல செருகி -காசு எடுக்க போறிங்க. ப்ராசசிங்னு ஸ்க்ரீன்ல வரும் .பணம் எண்ற சத்தம் கூட வரும்.ஆனால் படக்குனு அமவுண்ட் மட்டும் டெபிட் ஆகி காசு கைக்கு வராம போயிரும். ஏறக்குறைய இந்த மாதிரி நேரம் தான் இது .
2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துலன்னா உங்க கார்டே கூட ப்ளாக் ஆயிரலாமுங்கோ. ஆகவே பைசா மேட்டர்ல ரெம்ப கேர்ஃபுல்லா இருங்க. பேச்சை விடாதிங்க. நோ ரிலே.ஒன்லி ரிக்கார்டட் ப்ரோக்ராம் தான் (கொய்யால ..பொஞ்சாதி கிட்டே பேசறதா இருந்தா கூட மனசுக்குள்ள ரிகார்சல் பண்ணிட்டு பேசுங்க. அல்லது பக்கத்துல பூரிக்கட்டை இருக்கானு ஓரக்கண்ல பார்த்துக்கிட்டே பேசுங்க – ஹெல்மெட் பெஸ்ட் சாய்ஸ்) .

குடும்பத்துல உள்ள குஞ்சு குளுவான் கூட கேள்வி கேட்கலாம். ஜெ மாதிரி பேசாம நகர்ந்துருங்க.
மூத்த சகோதரத்துக்கு அல்லது மூ.சகோதரத்தால் ஒரு ஆப்பு வெய்ட்டிங். லாபம் கருதி எந்த செயல்லயும் இறங்காதிங்க. நஷ்டம் நிச்சயம்.

ஆகவே முக்கியமான கொடுக்கல் வாங்கல் ,முதலீடு ,கல்யாண முயற்சி ,முக்கிய அதிகாரிகளை பார்க்கிறது மாதிரி விஷயங்களுக்கு .2017, பிப் 6 முதல் குரு வக்ரம் பெறும் காலத்துக்காக வெய்ட் பண்ண வேண்டியதுதான்.

12.மீனம்
உங்களுக்கு குரு 1-10 க்குடையவர் . இவர் 6 ல் இருந்து 7 க்கு வராரு .இதுவே மகா பாக்கியம். நோய்-நொடி -சதா எரிச்சல் -சிடு சிடுப்பு இதெல்லாம் மாறிரும். ஹெல்த் நல்லாருக்கும் . உற்சாகம் கரை புரளும்.
இதே போல தொழில். தொழில் மேட்டர்லயும் உபரி முதலீடு கிடைக்கிறது , நான் நதிகள் இணைப்பு/பணம் பற்றிய கட்டுரைகள்ள அடிக்கடி சொல்றாப்ல ரென்ட் , வேஜஸ், இன்டரஸ்ட் எல்லாம் கவர் ஆகி லாபம்னு ஒன்னை கண்ல பார்க்கலாம். ஸ்வீட் எடு கொண்டாடுதான்.

காதல்/கண்ணாலம்/தாம்பத்யம் எல்லாமே ஷோ ரூம்ல டெலிவரி எடுத்த வாகனம் கணக்கா சல்லுனு பறக்கும். அதே சமயம் 2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துல உப்பு ஊறுகாய்க்கு ஒதகாத மேட்டர்ல முட்டிக்கிட்டு பேசாம கொள்ளாம கூட இருக்க வேண்டி வரலாம். முன் கூட்டி சொல்றதால அடக்கி வாசிங்க.
ஆனால்.. 2017, பிப் 6 முதல் குரு வக்ரம் பெறும் காலத்துல பெரிய பல்பா வாங்க வேண்டியிருக்கும் . நீங்களே பைத்தியக்காரத்தனமா தப்பான முடிவெடுத்து ஆப்பு வாங்கலாம். நல்லா இருந்த ஹெல்த் திடீர்னு மக்கர் பண்ணலாம். முக்கியமா வயிறு (வாயு). நடுத்தர வயசை தாண்டினவிகளுக்கு இதயம் கூட பூச்சி காட்டும் . டேக் கேர்.

அதிரடி:
நாம வெளியிட்டு 2 அச்சுகள் கண்டு கொடி பறக்கவிட்ட நான்கு நூல்கள் மீண்டும் ரீ ப்ரிண்ட் ஆகி சக்கை போடு போட்டு வருகின்றன. மேலும் அதிரடிதள்ளுபடியும் அறிவிச்சிருக்கம். இது ஜூலை 31 வரை மட்டுமே . மேலதிக விவரங்களுக்கு இங்கு அழுத்தவும்.

20 Replies to “குருப்பெயர்ச்சி 2016-17 (துலாம் முதல் மீனம் வரை )”

rajan

17/05/2017 at 6:53 pm

விரைய குரு திருமனம் பன்னலமா

Reply

  S Murugesan

  17/05/2017 at 6:57 pm

  ராஜன் !
  வர தட்சிணை -சீர் செனத்தி இல்லாமன்னா பண்ணலாம்

  Reply

Mercury

29/07/2016 at 9:54 am

Sir, adhe kadaga lagnam Sir , 2nd Lord Sun in 12th house with Budhan, Sun in guru saaram ( punarpoosam 1st Padam). Sukiran in Rishabam, moon(uttirattadhi 4th Padam) and rahu In Meenam, Sani in Mesham, Sevvai in Viruchikam ( vakram ) , Guru and Ketu in Kanni., ivarukku Chandra dasa eppadi irukkum? Ippo nadappadhu surya Dasa (sevvai bhukthi till Nov 24). Innum oru varudathil ashtamathil guru sanjarippar appozhudhu ivarukku baathippu romba irukkuma?

Reply

Abishegapriyan

27/07/2016 at 4:10 pm

///////////////////மேலும் விரயாதிபதி விரயத்துல ஆட்சி பெற்றதால் செலவழிக்கவே பணம் வந்துரும். எப்ப அவர் செலவை குறைக்கிறாரோ அப்பவே வருமானத்துக்குஆப்பு வந்துரும்.////////////////////////

துலாமுக்கு 12ஆமிடம் கன்னி. அதன் அதிபதி புதன் அங்கேயே வக்கிரம் பெற்றாலும் இதுதான் கதியோ?

Reply

  S Murugesan

  27/07/2016 at 8:47 pm

  வாங்க அபிஷேகபிரியன் !
  ஊஹூம் வக்ரமானா தண்டச்செலவெல்லாம் பிடி உஷா கணக்கா பாய்ஞ்சு வரும். நல்ல செலவே செய்ய முடியாது .

  Reply

Ganezan nk

26/07/2016 at 10:41 am

//இருக்க கூடாத இடத்துல இருக்கிற சூரியனுடைய பலம் குறைஞ்சா அது ஒரு யோகம் // அது என்ன யோகம் சார்!? இந்த யோகத்தை பத்தி சொல்லுங்க!?

Reply

  S Murugesan

  26/07/2016 at 12:55 pm

  வாங்க கணேசன் !

  இருக்கக்கூடாத இடம் என்பது சூரியன் பெறும் ஆதிபத்யத்தை பொருத்தது.

  Reply

   Ganezan nk

   26/07/2016 at 1:55 pm

   அந்த யோகத்தோட பேர் என்னன்னு சொல்லுங்க?

   Reply

    S Murugesan

    26/07/2016 at 8:24 pm

    வாங்க கணேசன் !
    யோகம்னா பாசிட்டிவ் பாய்ண்ட் என்ற பொருளில் தான் நான் குறிப்பிட்டேன்.

    Reply

Mercury

25/07/2016 at 9:53 pm

Sir, I would like to share an important point in astrology . If a planet gets exalted( uchcham) then it’s moolatrikona house will get affected. For example, for kadaka lagnam if Mars( sevvai) gets exalted in Makaram then it’s moolatrikona house ,that is 10th Bhava( mesham) will be affected . But 5th house( viruchigam) may flourish. This is Bhrigu nadi concept. I hv checked some horoscopes , it is true.

Reply

  S Murugesan

  26/07/2016 at 8:41 am

  வாங்க மெர்க்குரி !

  இரண்டு வீடுகளுக்குடைய கிரகம் ஒரு வீட்டில் ஆட்சி பெற்றால் அதன் மற்ற வீடு தரும் பலன் ஃபணால்னு ஒரு விதி இருக்கு. அதை போன்றதே இதுவும் போல.

  ஒரு எழுத்தாளர் வளரும் நிலையில இருக்கும் போது ஆஃபீஸ் வேலையும் பார்க்கிறார். எழுதவும் செய்றாரு.எழுத்து உச்சம் பெற்று விட்டால் ஆஃபீஸ் வேலைய ராசினாமா பண்ணிர்ராரு . இதை போன்றது தான் நீங்க சொன்னதும்.

  Reply

   Mercury

   26/07/2016 at 9:13 am

   Good point sir

   Reply

Mercury

25/07/2016 at 5:04 pm

Thank u very much sir.

Reply

Mercury

25/07/2016 at 8:32 am

Sir , what’s your opinion about 2nd Lord getting placed in 12th house? Especially for kadaga lAgnam. 2nd Lord Suriyan in 12th house(mithunam) with Budhan. Suriyan in guru saaram( punarpoosam 1st Padam). But I have seen this person earning pretty well. Usually they say 2nd Lord shouldn’t go to 12, 6 or 8th house . One more example is Actor Vijay . Same kadaga LAgnam . 2nd Lord hasbeen placed in 12th house with Budhan and Sani.

Reply

  S Murugesan

  25/07/2016 at 3:39 pm

  வாங்க மெர்க்குரி !
  2 க்குடையவர் 12 ல் இருந்தால் ஏழையாத்தான் இருக்கனும்னுல்ல. ஒரு கண் டப்ஸாகலாம்/திக்குவாய் இருக்கலாம்/வெகண்டையா பேசற ஆளா இருக்கலாம்/குடும்ப கலகங்கள் இருக்கலாம்.கண்/தொண்டை/வாய்பாதிக்கலாம்.

  மேலும் சூரியனோடு இன்ன பிற கிரகங்கள் சேர்ந்தால் அவற்றின் பலம் குறையும். ஆனால் புதன் சேரும் போது சூரியனுடய பலம் குறையும். இருக்க கூடாத இடத்துல இருக்கிற சூரியனுடைய பலம் குறைஞ்சா அது ஒரு யோகம்.

  மேலும் விரயாதிபதி விரயத்துல ஆட்சி பெற்றதால் செலவழிக்கவே பணம் வந்துரும். எப்ப அவர் செலவை குறைக்கிறாரோ அப்பவே வருமானத்துக்குஆப்பு வந்துரும்.

  கூடவே சனி வேற இருக்கிறதா சொல்றிங்க. சனி அஷ்டமாதிபதியாச்சே .அவர் 12 ல மறையறது ஒரு யோகமல்லவா? ஆனால் இவர் 7 க்கும் உடையவர் என்பதால் மனைவியின் நிலை ??

  12ங்கறது பாதத்தை காட்டும். ஜாதகரின் பாதம் எப்படி இருக்கிறது ? ஜோசியம்ங்கறது ஜெனரல் மேத்ஸோ / ரெண்டாம் வாய்ப்பாடோ அல்ல . அல்ஜீப்ரா மாதிரி .வெளிப்படையா தெரியறதை நம்ப கூடாது (டோன்ட் ட்ரஸ்ட் அப்வியஸ்)

  Reply

Mercury

25/07/2016 at 8:19 am

Thank u sir.

Reply

Mercury

24/07/2016 at 7:01 am

Sir, if u don’t mind Unga LAgnam ,Rasi and other planetary positions therinjikkalaama? Ennoda yoogam…. Ungalukku Budhan and guru must be strong in your horoscope.

Reply

  S Murugesan

  25/07/2016 at 5:02 am

  வாங்க மெர்க்குரி !

  உங்க ஆசைய கெடுப்பானேன். லக்னம் கடகம் , ராசி சிம்மம். லக்னத்துல சூ,கு,பு , ரெண்டுல சந்திரன் ,சுக் , நான்கில் செவ் கேது , 9 ல் சனி வக்ரம், 10 ல் ராகு , நடப்பு ராகு தசை ராகு புக்தி

  Reply

Mercury

22/07/2016 at 6:17 pm

Thank u verymuch sir for Guru peyarchi palangal. You r doing a great job!

Reply

  S Murugesan

  22/07/2016 at 8:28 pm

  வாங்க மெர்க்குரி!
  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி .ஆக்சுவலா எனக்கு இந்த ராசிபலன் மேல எல்லாம் பெருசா பிடிப்பில்லை . ஆனால் நேயர் விருப்பம் போல தொடர்ந்துக்கிட்டிருக்கன்.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *