குருப்பெயர்ச்சிபலன் : 2016-17 (மேஷம் முதல் கன்னிவரை )

DSC_2771

அண்ணே வணக்கம்ணே !
சோசியரா இருக்கிறதுல பெரிய இமிசை என்னடான்னா இந்த கோசார பலன் சொல்றதுதான். இதனோட இம்பாக்ட் எவ்ளோ ? இதெல்லாம் எந்தளவுக்கு “பல்பு” கொடுத்துரும்னு தெரிஞ்சு தெரிஞ்சு சொல்லியே ஆகவேண்டி வர்ரது. நெஜமாலுமே ஒரு ஆசிட் டெஸ்ட் மாதிரி . கமல் என்னதான் உலக நாயகனா இருந்தாலும் ரெண்டு லைஃப் டைம் ப்ராஜக்டுகளுக்கிடையில ஒரு படம் பண்ணுவாரே அந்த மாதிரி நம்க்கு இந்த குரு பெயர்ச்சி சனிபெயர்ச்சி பலன்லாம்.

ஒரு வகையில நாம சோசியத்துல இந்தளவுக்காச்சும் விஷயம் தெரிஞ்ச பார்ட்டியா மாற இந்த கோசார பலனும் ஒரு காரணம்.
1989 மார்ச்சுல ஒரு தாத்தா அன்றைய நம்ம எல்லா பிரச்சினைகளுக்கும் பத்துல உள்ள குரு தான் காரணம் . மே மாசம் குரு பார்வை வந்ததுமே எல்லாம் ஸ்விட்ச் போட்டாப்ல மாறிரும்னு அடிச்சு விட்டுட்டாரு .

நாமளும் நாக்கை தொங்க போட்டுக்கிட்டு (விட்டதை எல்லாம் பிடிச்சுரனும்ங்கற வெறியில பாஸ் !)வெய்ட்டிங். பிறவு குரு ராசி மாறட்டும்னு வெய்ட்டிங். பிறவு ஒரு தாடி ஜோசியருதான் அந்த நேரம் நொந்தாலும் க்ளியர் பண்ணிருவம்னு “கண்ணா ! சுக்கிரதசை முடியனும்”னு மேட்டரை ஒடைச்சுட்டாரு . இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா இந்த கோசார பலன்லாம் உங்களுக்கு ஒர்க் அவுட் ஆச்சுன்னு வைங்களேன். உங்க ஜாதகத்துல சரக்கே இல்லேனு அருத்தம். சரக்குள்ள ஜாதகங்களுக்கு இந்த கோசாரம்லாம் ஜூஜிபி.

மேலும் ஆர் யு ரெசிப்டிவ் ஆர் ரெபல் ? , உடலளவு மனிதரா? மனதளவு மனிதரா ? புத்தி ஜீவியா? அல்லது கடந்த பிறவிகளோட தொடர்ச்சியா புத்தியையும் தாண்டியவரா? இதை எல்லாம் பொருத்து இந்த கோசார பலன்லாம் தலை கீழா கூட மாறலாம்.
சரி ..சரி என் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்குன்னு சொல்லிருங்ணே ..நடக்கறதும் நடக்காததும் பிறவுன்னு நீங்க துடிக்கிறது எனக்கு தெரியுது .மேட்டருக்கு வந்துர்ரன்.

இந்த வருடம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி இரவு 9 மணி முதல் உத்தரம் 2 ஆம் பாதத்தில் அஃதாவது கன்னிராசியில் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறார் . 2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரை குரு அஸ்தமனம். அஃதாவது சூரியனோட சேர போறாரு . குருவோட இம்பாக்ட் மினிமைஸ் ஆகி சூரியனோட இம்பாக்ட் அதிகமா இருக்க கூடிய காலம்.

2017, பிப் 6 முதல் வக்ரம் பெறுகிறார் . அதாவது தான் சாதாவா சஞ்சரிச்ச காலத்துல கொடுத்த பலனுக்கு நேர் எதிரிடையான பலனை தர ஆரம்பிச்சுருவாருங்கோ.

(இந்த டேட்டாவுக்கெல்லாம் சோர்ஸ் நான் பல வருசமா நம்பி உபயோகிச்சுக்கிட்டிருக்கிற ஆந்திரபூமி -திருக்கணித பஞ்சாங்கம்.அன்னாருக்கு நன்றி)

எச்சரிக்கை:
கோசாரம்ங்கறது கார்ப்பரேஷன் காரவிக தண்ணி உடற டைம் மாதிரி. ஜாதகம் தான் பைப் லைன். பைப் லைன்ல பிரச்சினை இருந்தா எத்தீனி தபா -எத்தீனி இஞ்ச் தண்ணி விட்டாலும் வீட்டுக்குள்ள தண்ணி வந்து சேராதில்லை.

குருபலம்:
குரு உங்களுக்கு அஃதாவது உங்க ராசிக்கு 2-5-7-9-11 இடங்களில் இருந்தால் குரு பலம் இருக்குனு அருத்தம் (இது பொதுவிதி) சில சிறப்பு விதிகளின் படி மேற்சொன்ன இடங்களில் இல்லாமலும் குரு நல்ல பலனை தர வாய்ப்பிருக்கு. இதே போல சில சிறப்பு விதிகளின் படி மேற்சொன்ன இடங்களில் இருந்தும் குரு நல்ல பலன் தராம போகவும் வாய்ப்பிருக்கு .

நல்லதுன்னா என்ன நடக்கும்? கெட்டதுன்னா என்ன நடக்கும்? இதை குரு பலம் வந்தா என்ன போனா என்னனு ஒரு தனிப்பதிவுல விரிவா அலசியிருக்கேன். இங்கே அழுத்தி படிச்சுருங்க ப்ளீஸ் ..

1.மேஷம்
ஒங்களுக்கு இவரு 9-12 பாவங்களுக்கு அதிபதி . அஞ்சுலருந்து ஆறுக்கு வராரு .ஆகவே அப்பாவுக்கு சத்ரு /ரோக/ருண பீடைகள் வரலாம்.அவரோட முட்டல் மோதல் ஏற்படலாம்.இருக்கிற சொத்து /முதலீடு/சேமிப்புல வில்லங்கம் வரலாம் /அல்லது அவற்றின் மேல் கடன் வாங்கி செலவழிக்க வேண்டி வரலாம்.

அதே சமயம் உங்களுக்கு சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி ,ருண விமுக்தி போன்ற நல்ல பலனையும் சொல்லவேண்டியிருக்கு .2017, பிப் 6 முதலான குரு வக்ர காலத்துல மேற்சொன்ன பலன்லாம் தலைகீழா மாறும் .உபரியா வயிறு /இதயம் தொடர்பான பிரச்சினைகள் கூட வரலாம் .டேக் கேர்.
2016, செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துல குழந்தைகளுக்கு நோய் /நொடி ,மனைவிக்கு கருச்சிதைவு மாதிரி கூட நடக்கலாம். உங்களுக்கு அவப்பெயர் /அவமானம்/உங்க ஜட்ஜ்மென்ட் ஃபெயிலா போறதும் நடக்கலாமுங்கோ.

2.ரிஷபம்:
ஒங்களுக்கு குரு 8-11 க்குடையவர் .இவர் அஞ்சுக்கு வர்ராரு . நான்கில் இருந்து விலகியதால் தாய்,வீடு,வாகனம் ,கல்வி இத்யாதி மேட்டர்ல இருந்த டெட் லாக் படிப்படியா ஓப்பன் ஆகலாம். அதே சமயம் அஞ்சுக்கு வர்ரதால ஒருவன் மனது ஒன்பதடானு கவிஞர் சொன்னாரே ..அப்படி ஒங்க மனசு 90 விதமா அலைபாயும்.இதுல தற்கொலை எண்ணம் கூட வந்து போகும்னா பார்த்துக்கங்க. இடையில தனிமை /வறுமை /வெறுமைல்லாம் கூட படுத்தி எடுக்கும்.ஆகவே ஓஷோவின் நூல்களை படிங்க.தியானம் /யோகம்னு சேஃப் சைட் ஆயிருங்க.

குழந்தையை எதிர்ப்பார்த்து வெய்ட்டிங்குல உள்ளவிகளுக்கு ஆரம்பத்துல நிராசை எதிர்ப்படாலும் கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையாங்கறாப்ல ஜாதகத்துல உள்ள கிரகஸ்திதியும் கொஞ்சம் கை கொடுத்தா ரெட்டை புள்ள கூட பெத்துக்கலாம்.

2017, பிப் 6 முதலான குரு வக்ர காலத்துல நெகட்டிவ் தாட்ஸ்/தனிமை /வறுமை /வெறுமைல்லாம் கொஞ்சம் கழண்டுக்கும். அதே சமயம் வயிறு இதயம் கொஞ்சம் மக்கர் பண்ணலாம். 2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துல எதிர்பாராவிதமா தாய் வழி சொத்தாவோ/ அல்லது உங்க கல்விசெல்வம் கை கொடுத்து சம்பாதிச்சோ ஒரு வீடு/ஃபோர் வீலர் அமையலாம். சிலருக்கு அரசு வாகன சௌகரியம் கூட ஏற்படலாம்.

3.மிதுனம்:
உங்களுக்கு குரு 7/10 க்குடையவர் .இவர் மூன்றில் இருந்து விலகியது இதுவரை மனசுல இருந்த இனம் புரியாத அச்ச உணர்வை குறைக்கும்.இயல்பான மனோ தைரியம் ஏற்படலாங்கறது ப்ளஸ்.அதே நேரம் குரு 4 க்கு வர்ரது ஒன்னும் நல்ல மேட்டரில்லை. தாய்/வீடு/வாகன/கல்வி வகையறாவுல சிக்கல் தரலாம்.சிலருக்கு இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கு.இது 2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துல கூட நடக்கலாம்.
அதே நேரம் திருமணத்துக்கு காத்திருக்கிறவர்களுக்கு தாய் வழியில்/ கொலிக்ஸ் வகையில அல்லயன்ஸ் வரலாம். இந்த அல்லையன்ஸ் மேற்படி குரு அஸ்தமன காலத்துல ஈகோ பிரச்சினைகளால் பேக் அடிச்சு பிறவு ரீஸ்டோர் ஆகலாம். அல்லது தவறியே போகவும் வாய்ப்பிருக்கு .

2017, பிப் 6 முதலான குரு வக்ர காலத்துல காதலி/மனைவி/தாய் போக்கு , தொழில் உத்யோக,வியாபாரங்களிலான திருப்பங்கள் அதிர்ச்சியை தரலாம்

4.கடகம்:

குரு உங்களுக்கு 6-9 க்குடையவர். இவர் 3 ஆமிடத்துக்கு வர்ராரு . கடந்த வருசம் குரு ராகு சேர்க்கைய மீறிக்கூட பொருளாதார வகையில முழுக்குருடுக்கு ஒன்னரை கண்ணு மேலுங்கற வகையில வண்டி ஓடியிருக்கும். இந்த 3 ஆமிடத்து குரு அதுக்கும் ஆப்பு வச்சு மனசுல இனம் புரியாத திகிலைக்கூட கிளப்பி விட்டுரலாம்.ஆகவே அகல கால் வைக்காதிங்க .கிளிஞ்சிரும். இ.சகோதரம் நோய் வாய்ப்படலாம்.காதும் பாதிக்கலாம். ஆனால் 2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துல இதுக்கு நேர் மாறா மனோ தைரியம் பொங்கி -எதாச்சும் குண்டக்க மண்டக்க ரிஸ்க் எடுக்க -காசு பணம் துட்டு ஒர்க் அவுட் ஆகலாம்.

த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம் ஆகிய விஷயங்களில் வீண் விரயம் அல்லல்,அலைச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கு.

2017, பிப் 6 முதலான குரு வக்ர காலத்துல கடந்த பாராவுல சொன்ன நெகட்டிவ் மேட்டர்ஸ் ஓரளவுக்கு கட்டுக்குள்ளிருக்கலாம்.தீர்வுகளும் ஏற்படலாம்.

5.சிம்மம்:
உங்களுக்கு குரு 5-8 க்குடையவர் .போன வருசம் ஜன்ம குரு . என்னமோ பெருசா நடக்கப்போகுது .நாமளும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் ஆகனும்னு ஒரு Game ஆடிப்பார்த்திருப்பிங்க. மிஞ்சினதென்னவோ பூஜ்ஜியம் + வீண் பழி , நிம்மதி குறைவுதான். இந்த குரு ரெண்டாமிடத்துல வர்ராரு .ஆகையால மேற்சொன்ன தீயபலன்லாம் பெருமளவு குறைஞ்சுரும்.முக்கியமா பொருளாதார விஷயங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். கடந்த கால முயற்சிகளுக்கான பலன் இனி கிடைக்க ஆரம்பிக்கும். ஃபைனான்ஸ் மேட்டர்ல அதிர்ஷ்டம் கை கொடுக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துல இது ஸ்பஷ்டமா தெரியும். அதே சமயம் இனி நமக்கென்னன்னு அசால்ட்டா இருந்திங்கனா ஒரு பெரிய அமவுண்ட் லம்பா லாக் ஆகவும் / வாய் பேச்சால விரோதங்கள் வரவும் வாய்ப்பிருக்கு. கண்,தொண்டை ,வாய் தொடர்பான பாதிப்பும் வரலாம்.குடும்பத்தில் இருந்து ஒருவர் வெளியேறவும் வாய்ப்பிருக்கு .

2017, பிப் 6 முதலான குரு வக்ர காலத்துல லாக் ஆன அமவுண்ட் ரிலீஸ் ஆகும் ,குடும்பத்துலருந்து பிரிஞ்சு போனவர் மீண்டு வரலாம்./கண்,தொண்டை ,வாய் தொடர்பான பாதிப்பு அதிகரிச்சு ட்ரீட்மென்டுக்கு பிறவு செட் ரைட் ஆகும்.

6.கன்னி :
போன வருசம் விரயத்துல உட்கார்ந்து தாய்,வீடு,வாகனம்,கல்வி ,மனைவி,மனைவி வழி உறவுகளால் வீண் விரயங்களை தந்து கொண்டிருந்த குரு இப்ப ஜன்மத்துக்கு வர்ராரு . ஜன்ம குருன்னா எல்லாருக்குமே டர்ருதான்.உங்கள்ள சிலர் பெயர் புகழுக்கு ஆசைப்பட்டு கொஞ்சம் தாராளமா செலவையும் இழுத்து விட்டுக்கலாம்.பொருளாதார நெருக்கடி,பொறுப்புகள் அதிகரிக்கிறது ,வேளைக்கு சோறு தண்ணி இல்லாம போறது ,ஊர் வம்புல மாட்டறது வீண் பழி சுமக்கறது , கொய்யால எல்லாத்தையும் விட்டு ஒழிச்சுட்டு கண் காணாத இடத்துக்கு போயிரலாமான்னு தோன்றது கூட நடக்கும்.

ஆனால் பாருங்க..குரு தானிருக்கும் இடத்தை நசிக்க செய்தாலும் பார்க்கிற இடங்கள விருத்தி பண்ணுவாருங்கறது விதி. இதன்படி பெயர் புகழ்,அதிர்ஷ்டம் , குழந்தை பாக்கியம், அவிகளுக்கு வேண்டியதை பண்றது, நிம்மதி இத்யாதிக்கு மினிமம் கியாரண்டி. கண்ணாலமாகாதவிகளுக்கு கண்ணாலம்,ஆனவிகளுக்கு இல்வாழ்க்கையில் புத்துணர்ச்சி , பார்ட்னர்ஸோட முட்டல் மோதல் குறையறதுக்கும் வாய்ப்பு .

இதே போல இவரு ஒன்பதை பார்க்கிறதால அப்பா,அப்பா வழி உறவு , சொத்து,முதலீடு,சேமிப்பு ,பெரீ மன்சங்க வகையிலயும் அனுகூலம் ஏற்படும்.
சாதாரணமாவே உங்க தாய் -மனைவிக்கிடையில் ஒரு வித சிங்கரனைஸ் இருக்கும் (உபதேசம் பண்ணியே உங்களை டார்ச்சர் பண்றதுல) இப்ப 4-7 க்குடையவரான குரு ஜன்மத்துலயே வர்ரதால தலையிலயே ஏறி உட்கார்ந்து ரைட் -லெஃப்ட் சொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை .

2016,செப் 12 முதல் அக்டோபர் 9 வரையிலான குரு அஸ்தமன காலத்துல தாய்,மனைவி இருவரில் ஒருவரை பிரிய வேண்டி வரலாம்/அல்லது அவர்களால் வீண் விரயம் ஏற்படலாம்.

2017, பிப் 6 முதலான குரு வக்ர காலத்துல தாய்,மனைவி போக்கு அதிர்ச்சியை தரும். குரு 5-7-9 ஆம் இடங்களை பார்வையிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்று நான் சொல்லியிருக்கும் விஷயங்களில் சுணக்கம் /ரிவர்ஸ் கியர் பாசிபிள். அடுத்த பதிவுல துலாம் முதல் மீன ராசி வரையிலான பலனை பார்க்கலாம். உடுங்க ஜூட்டு .

அதிரடி:
நாம வெளியிட்டு 2 அச்சுகள் கண்டு கொடி பறக்கவிட்ட நான்கு நூல்கள் மீண்டும் ரீ ப்ரிண்ட் ஆகி சக்கை போடு போட்டு வருகின்றன. மேலும் அதிரடிதள்ளுபடியும் அறிவிச்சிருக்கம். இது ஜூலை 31 வரை மட்டுமே . மேலதிக விவரங்களுக்கு இங்கு அழுத்தவும்.

13 Replies to “குருப்பெயர்ச்சிபலன் : 2016-17 (மேஷம் முதல் கன்னிவரை )”

குரு வக்ர நிவர்த்தி பலன் : ( 2017 , ஜூன் 9 முதல் நவ.8 வரை ) · அனுபவஜோதிடம்

25/04/2017 at 12:49 am

[…] மேஷம் முதல் கன்னி ராசிகளுக்கான பலன் […]

Reply

rathan

22/07/2016 at 10:34 pm

ஐயா , எனக்கு ராகு திசை குரு புக்தி நடக்கிறது. கும்ப லக்கினத்திற்கு ஒன்பதில் சுக்ரனுடம் ராகு இருக்கிறது.
குரு இரண்டாம் இடம். செவ்வாய் 5ம் இடம் . இவ்வாறிருக்க, லாட்டரி ஏதாச்சும்………… கொஞ்சம் சொல்ல முடியுமா?

Reply

  S Murugesan

  23/07/2016 at 1:06 am

  வாங்க ரத்தினம் !
  சில கொள்கை முடிவுகள் எல்லாம் ஏற்கெனவே எடுத்திருக்கம். மரணம் -லாட்டரி இத்யாதி மேட்டர்லாம் நாம கண்டுக்கறதில்ல.

  Reply

   Rathnam

   30/06/2017 at 12:52 pm

   ஐயா எனக்கு கல்யாணம் னு ஒன்னு நடக்குமா ?

   நிறைய பொண்ணுங்க ஆசையோட பாக்கிறாங்க, ஆனா நான் approach பண்ண போன off ஆகிடுது , இல்லைன்னா ஏதாச்சும் தடங்கல், பொண்ணையே பாக்க முடியாம போயிடும் .

   arranged marriage ன்னு போனாலும் இதேதான்…..

   ஏதாச்சும் அறிகுறி தெரிஞ்சா சொல்லுங்க ஐயா ,

   தனி மரமா நின்னு ரொம்ப அலுத்து போச்சு ,

   என்ன risk எடுத்தாச்சும் family man ஆகிட்றதுன்னு முடிவு செஞ்சுட்டேன்…

   பிறந்த நாள் குறிப்பு 05/12/1975 12.35pm , இடம் திருச்சி .

   Reply

    S Murugesan

    30/06/2017 at 2:24 pm

    ரத்தினம் !
    நீங்க அப்ரோச் பண்ணா அதுக்கு பேர் காதல் . இது ஒர்க் அவுட் ஆகனும்னா சுக்கிரனுக்குரிய பரிகாரங்கள் செய்ங்க.

    பெரியவிக கிட்ட சொல்லி அவிக அப்ரோச் பண்ணா அதுக்கு குரு பலம் தேவை குருவுக்குரிய பரிகாரங்கள் செய்ங்க

    Reply

Mercury

21/07/2016 at 9:33 pm

Puriyidhu….puriyidhu. Neenga porumaya bathil sonadhukku Mikka nandri.

Reply

  S Murugesan

  21/07/2016 at 9:48 pm

  வாங்க மெர்க்குரி !

  இதுல ஒரு தொழில் ரகசியம் என்னன்னா நமக்கு லேசா கடுப்பாகி உடைச்சு சொன்னா சனத்துக்கு பச்சக்குன்னு புரியுது ..

  Reply

Mercury

20/07/2016 at 10:42 pm

Sir, u give predictions based on Rasi chart or Bhava chart? Because if a planet is in 11th house in RAsi chart but it Bhava chart it is placed in10th house…. How do u analyse in this case ?

Reply

  S Murugesan

  21/07/2016 at 1:31 am

  வாங்க மெர்க்குரி !

  ராசி -நவாம்சம்-பாவமிந்த பஞ்சாயத்தெல்லாம் எதுக்கு? உங்க அனுபவத்துல சூ+ராகு நல்ல பலன் கொடுத்திருக்கா? புத+ரா சேர்க்கை நல்ல பலன் கொடுத்திருக்கா? நம்ம சைட் பேரே அனுபவஜோதிடம்ங்கறதை மறந்துராதிங்க.

  புஸ்தவத்துல ஆயிரம் எழுதியிருக்கும். அதை எல்லாம் பண்டிதபரிசத்ல விவாதிக்கட்டும். நாம ப்ராக்டிக்கலா மேட்ச் பண்ணி பார்ப்பம் .

  Reply

   Mercury

   21/07/2016 at 8:39 am

   Ok sir Appo oru planet rAsi kattathil nalla irundhu , but navamsathil neecham adaindhaal kandukkolla vendama????

   Reply

    S Murugesan

    21/07/2016 at 2:46 pm

    வாங்க மெர்க்குரி !

    முருகேசன் நல்லவர்னு சொன்னா அப்ப மெர்க்குரி கெட்டவராங்கற மாதிரி இருக்கு உங்க கேள்வி . நான் என்ன சொன்னேன்.. ராசி நவாம்சம் பாவம்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் உங்க அனுபவம் என்ன சொல்லுது பாருங்கன்னேன்.

    ராசியில் உச்சம் பெற்ற கிரகம் நவாம்சத்திலும் உச்சம் பெற்றால் அதுக்கு வர்கோத்தமம்னு பேரு .அந்த கிரகத்துக்கு பலம் அதிகம். ராசி சக்கரம் லோக்சபா .நவாம்சம் ? ராஜ்ய சபா ..

    லோக்சபாவுல மெஜாரிட்டி இருந்தா பிரதமர் ஆகலாம்.ஆனால் புதிய மசோதாக்களை சட்டமாக்கனும்னா ராஜ்யசபாவுல தொங்கனும். புரியுதுங்களா?

    Reply

Mercury

20/07/2016 at 5:11 pm

Thulam mudhal meenam varai eppo release seiveenga

Reply

  S Murugesan

  20/07/2016 at 6:51 pm

  Welcome to Mercury !

  It may a take a couple of days.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *