குற்றத்தடுப்பு சாத்தியமே

clibbing from vartha 2002

அண்ணே வணக்கம்ணே !

சமீபத்திய ஸ்வாதி வழக்கு மக்கள் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது .முக்கியமாக பெண்கள். சென்னை மக்கள்/பெண்கள் சைக்காலஜிய என்னால ஓரளவு கெஸ் பண்ண முடியுது . மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்னு சொல்லலாம்.அந்தளவுக்கு முரண்.

சென்னை வெள்ளத்தின் போதான சனங்க சைக்காலஜிக்கும் – தேர்தலின் போதான சைக்காலஜிக்கு நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் சம்பவத்தின் போதான -அதற்கு பிறகு 2 மணி நேரம் வரைக்குமான சைக்காலஜிக்கும் ரெம்ப வித்யாசம் இருக்கு இந்த தனிப்பட்ட சம்பவத்துக்குள்ள நான் போக விரும்பல.
பொதுவாகவே குற்றங்களை தடுக்க முடியுமாங்கறது தான் இந்த பதிவின் கேள்வி . நம்ம ஸ்டைல்ல பதிலையும் தந்தே உடறேன்.
நதிகள் இணைப்பாச்சு ,எக்கானமி பேக்கேஜாச்சு ,ஜெ’வுக்கு யோசனைகள் ஆச்சு ,கலைஞருக்கு யோசனைகள் ஆச்சு .இப்ப குற்றத்தடுப்பாங்கற உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது.

இவிக எப்படியும் நாறடிக்க போறானுவன்னு காற்று வீசாமயா இருக்கு? இவிக எப்படியும் கடல்ல தான் விடப்போறானுவன்னு மழை பொழியாமயா இருக்கு? அதே மாதிரி தான் இதுவும்.

செவியிருப்போர் கேட்க கடவர் – கண்ணிருப்போர் காணக்கடவர். இந்த பதிவுல குற்றத்தடுப்புக்கு நாம தரப்போற யோசனைகளோட கெத்து என்னடான்னா எப்பமோ தெலுங்கானா சி.எம்க்கு மெயில் பண்ணியிருக்கம். நம்ம மெயில்ல எதையோ தேடப்போனா இது சிக்கிருச்சு . செரி அப்படி என்னதான் சொல்லிட்டம்னு ஸ்க்ரால் பண்ணா அப்டியே மெர்சலாயிட்டன். பல மேட்டரையும் தெலுங்கானா அரசு அமலாக்கிக்கிட்டு வருதுங்கோ. ( நமக்கு எட்டணா போஸ்ட் கார்டுல நன்றி கூட சொல்லாம ..ஒழியறானுவ ..நம்ம கருமத்தை வாங்கிக்கிறானுவ)

நிற்க குற்றத்தடுப்பு சாத்தியமா?

இதே கேள்வியை தலீவர் படத்துல வில்லனுங்க கேட்பாய்ங்க அதுக்கு தலீவர் சொல்வாரு “அசாத்தியங்களை சாத்தியமாக்கிறது என் ஹாபி” (தலீவர் = என்டிஆர்)

குற்றத்தடுப்புக்கு தலையாயது காவல் துறை .

மொதல்ல காவல் துறையை ஒரு ஆசிட் வாஷ்க்கு உள்ளாக்கனும். அதுக்குண்டான செயல் திட்டம்லாம் இங்கே இருக்கு . இதை செய்யாம நாம இந்த பதிவுல சொல்லப்போற மேட்டரை செய்ய ட்ரை பண்ணா ஊத்திக்கும். மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கிழிச்சு தொங்க விட்டுருவாய்ங்க. டேக் கேர்.

காவல்துறைக்கான ஆசிட் வாஷ்ல குற்றவாளியை பிடிக்கிறது/ஆதாரங்களை சேகரிக்கறதோ காவல் துறை ஸ்டாப் ஆயிரனும் .கோர்ட்டுக்கு அலைய வேற ஏஜென்சி வந்துரனும்னு சொல்லியிருப்பன்.

குற்றத்தடுப்புக்குன்னு ஏற்கெனவே ஒரு பிரிவு இருக்குன்னு நினைக்கேன்.(எத்தனை பிரிவுடா சாமீ !)ஆனால் எங்க ஆத்துக்காரும் கச்சேரிக்கு போறாருங்கற மாதிரி தான் அழுது வடியும் எல்லா பிரிவும் .

அப்படியில்லாம காவல் துறைக்கு இணையா – 50-50 பட்ஜெட்ல ஒரு பிரிவை உருவாக்கனும்.
குற்றத்தடுப்புங்கறது வெறுமனே காவல்துறை மட்டும் கிளிச்சுர்ர மேட்டர் இல்லை. பப்ளிக் இன் க்ளூஷன் இருக்கனும். இப்ப உள்ள போலீஸ் நண்பர்கள்ளாம் ச்சொம்மா சாங்கியம். அதெல்லாம் வேலைக்காகாது .

பப்ளிக் போலீசுக்கு கோ ஆப்பரேட் பண்ணனும்னா மொதல்ல காவல்துறை தன் குட் வில்லை அதிகரிக்க பாடுபடனும்.

1.வி.ஐ.பி செக்யூரிட்டி .
கொய்யால த்ரெட் இருக்குன்னா வீட்டோட இருந்துக்க வீடியோ கான்ஃபிரன்ஸ்ல அரசியல் செய்துக்கோன்னிரனும்.(பார்டர்ல வேலை வெட்டி இல்லாம இருக்கிற ராணுவத்தை இதற்கு உபயோகிக்கலாம்)

2.ஜாப் செக்யூரிட்டி
லஞ்ச குற்றம் தவிர எந்த குற்றம் சுமத்தப்பட்டாலும் பாதி சம்பளத்தோட வீட்ல வைக்கனுமே தவிர வேலைக்கு ஆப்பு இல்லேங்கறதை தெளிவு படுத்திரனும்.

3.வெரிஃபிகேஷன்
பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன்ல இருந்து எல்லா இழவும் வெரிஃபிகேஷனுக்கு இவிகளுக்கு தான் வரும் இதை தடுத்தே ஆகனும்.

4.மாற்றம்
என்விரான்மென்ட் போலீஸ் ஸ்டேஷனுங்கறதை மறக்கடிக்கனும். தப்பு பண்ணாதவனுக்கு போலீஸ்னா “நம்மாளு”ங்கற ஃபீல் வரனும். அப்படி எல்லாத்தையும் மாத்தனும்.

5.ஆசிட் வாஷ்ல சொன்னதை போல விலைவாசிங்கறது போலீஸ் காரனை டச்சு கூட பண்ணப்படாது .
_________
மேற்சொன்ன மேட்டரை எல்லாம் 70% ஆச்சும் ஒர்க் அவுட் பண்ணிட்டா பிறவு நம்ம ரோசனைகளை கொஞ்சம் தகிரியமா அமல் படுத்தலாம். யோசனைகளுக்கு போயிரலாமா?

1.ஒவ்வொரு ஸ்டேஷன் லிமிட்லயும் உள்ள சனத்தை குற்றப்பரம்பரை கணக்கா நேரடியா கணக்கெடுத்து கைரேகை பதிஞ்சு – ஒரு டோக்கன் போல கொடுத்துரனும். வீட்டுக்கு எந்த உறவுக்காரன்/நண்பன் /பேயிங் கெஸ்ட் ரா தங்க வந்தாலும் அவனோட டோக்கன் நெம்பர் ஏரியா இன்ஸ்பெக்டர் செல்லுக்கு எஸ்.எம்.எஸ்ஸா போயிரனும்.

2.ஏரியா லிமிட்ல உள்ள சந்து பொந்து எல்லாத்தையும் ஸ்டேஷன்ல உட்கார்ந்தே கண்காணிக்கிறாப்ல சிசி டிவி /வெப் காஸ்டிங் வச்சுக்கனும்.
3.இதே போல ஸ்டேஷன்லயும் சிசி டிவி இருக்கனும்.வெப் காஸ்டிங்ல ஆரு வேணம்னா ஆன்லைன்ல பார்வையிடறாப்ல அரேஞ்ச் பண்ணிரனும்.
4.வாடகைக்கு வீடு/அறைனு வந்தாலும் சரி -வண்டி வாகனம் வாங்கி வித்தாலும் செரி சிம் வாங்கினாலும் செரி கைரேகை கட்டாயம்னு ஆக்கிரனும். டேட்டா ஸ்டேஷன்ல எப்பவும் அவெய்லபிள்ள இருக்கோனம்.

5.எங்க பக்கத்துல லீகல் சர்வீசஸ் அத்தாரிட்டிங்கறம் .அந்த பக்கம் என்ன சொல்விங்கனு தெரியல .அதான் பாஸ் ..வாதி -பிரதி வாதி ரெண்டு பேரையும் சமாதானம் பண்ணி அனுப்பிருவாங்களே. அப்படி ஜூடிஷியல் பவர்ஸ் உள்ள ஒரு நபரை வாரம் ஒரு நாளாச்சும் ஸ்டேஷன்ல வச்சுக்கிட்டு சமாதானத்துக்கு வாய்ப்பிருக்கிற பெட்டி கேஸை எல்லாம் பைசல் பண்ணி அனுப்பிரனும்.
6.காவல் துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வ செல் ஃபோன்ல இருந்து பேசறதுதான் செல்லும் .அனாமத்தா ஃபோன் போட்டு வான்னா போக தேவையில்லைன்னு ஒரு விதிய கொண்டு வந்துரனும்.

7.பழைய குற்றவாளிகளுக்கெல்லாம் தேவையை பொருத்து வங்கி கடன் /தொழில் பயிற்சினு கொடுத்து கல்யாணம் ஆகாதவனுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சிரனும்.
8.ஆசிட் வாஷ்ல ஷிஃப்ட் சிஸ்டம் பத்தி சொல்லியிருக்கம். நெக்ஸ்ட் ஷிஃப்ட்ல வர்ர ஆளு திணறக்கூடாதுங்கறதால விசாரணைகளோட ப்ரோக்ரசை ரிக்கார்ட் பண்ணிக்கிட்டே வரனும். (வீடியோ பெஸ்ட்)

9.புதுசா வீடு கட்டறவன் / குறிப்பிட்ட ரேஞ்சுக்கு மேல தொழில் துவங்கறவன்/ கல்யாணம் கட்டறவன்லாம் ஒரு நடை ஸ்டேஷனுக்கு வந்துட்டு போகனும்.
10.போலீஸ் பீட்ல கிராஸ் ஆகற காதல் ஜோடிகளோட டேட்டா ஸ்டேஷனுக்கு வந்துரனும். ( ஆனா சீக்ரசி மெயின்டெய்ன் பண்ணலாம் -கிரைமா மாறாதவரை )

11. பாகப்பிரிவினை நடந்தவன் /வெய்ட் பண்றவன்,பார்ட்னர் ஷிப்ல வியாபாரம் பண்றவன் ,மூடப்பட்ட தொழிற்சாலைகளின் ஊழியன்ஸ் இவிக டேட்டாவை தனிய வச்சுக்கிட்டு அப்பப்போ வெரிஃபை பண்ணனும் .கு.பட்சம் ஃபோன்லயாவது .
12.வார இறுதி நாட்கள்ள எஸ்.ஐ ஒரு க்ரூப் ஆஃப் போலீஸ் மென்னோட தெரு தெருவா போகனும். எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்புன்னு .. தகிரியம் கொடுக்கனும்.

13.அன் மேரீட்,விடோயர் ,டைவர்சிகளை திருமணம்/ மறுமணத்துக்கு தூண்டிக்கிட்டே இருக்கனும்.
14.ஒவ்வொரு ஸ்டேஷன் ஏரியாவுலயும் யூத் ஆர்கனைசேஷன். கவுரவ தலைவர் தாசில்தார் /தலைவர் எஸ்.ஐ, சைக்கியாட் ரிஸ்டுகள் நிச்சயம் கவுன்சில்ல இருக்கனும். இதுல மேற்படிப்பு /வேலை தேடல் /தொழில் முனைப்பு இப்படி வெவ்வேறு நிலையில உள்ள யூத்துக்கு அவியளுக்கு தேவையான ஒத்துழைப்பை உரியவர்களிடம் இருந்து எஸ்.ஐ பெற்று தரனும்.

15.லாஜிக்கே இல்லாத வேலைல்லாம் போலீசுக்கு தரப்படாது . உ.ம் பொது இடத்தில் புகை பிடிக்கிறது இத்யாதி
16.சேவ கட்டு / சீட்டாட்டம் இத்யாதியில ஆர்வம் உள்ளவிக ஒரு டிக்ளரேஷன் கொடுத்துட்டு புகுந்து விளையாட அனுமதிக்கனும்.
வன்முறைக்கு நாங்க தான் பொறுப்பு போல.
17. மேன்ஷன் ஹவுஸ்/அப்பார்ட்மென்ட்ஸ்/மக்கள் தொகை அடர்த்தி மிக்க ஏரியாக்களை முன்னறிவிப்பில்லாம சீல் பண்ணி கோம்பிங்க் பண்ணனும்.

18.பழங்குற்றவாளிகளின் கை ரேகைகளை டிஜிட்டலைஸ் பண்ணி ஹார்ட் டிஸ்க்லயும்/ஆன்லைன்லயும் வச்சுக்கனும். மக்கள் ஏகமாக கூடும் இடங்களில் ஒரு ஸ்கானர் இருக்கனும்.சனம் அதுமேல தங்கள் கைய வச்சா பழங்குற்றவாளியா இருந்தா அலாரம் ஒலிக்கனும்.
முக்கியமா இதை திருப்பதி மாதிரி பிரபல பு.சேத்திரங்கள்ள வைக்கனும்.கொத்தா சிக்குவாய்ங்க.

19.எந்த வழக்கா இருந்தாலும் 3 மாசத்துல தீர்ப்பு வர்ராப்ல செட் அப்பை மாத்தனும் . உதாரணமா நீதிமன்றங்கள் கூட ஷிஃப்ட் சிஸ்டத்துல வேலை செய்யனும் . ப்ளஸ் கவைக்குதவாத / வழக்கை தாமதப்படுத்தக்கூடிய விதிகளை எல்லாம் தூக்கிரனும்.

தப்பிதவறி எந்த வழக்காவது 3 மாசத்துக்கு மேல நிலுவையில இருந்தா அந்த தகவல் எஸ்.ஐக்கு வந்துரனும். நம்மாளு உடனே சம்பந்தப்பட்ட ஆளுங்களை கூப்டு விஜாரிச்சு வழக்கு சீக்கிரம் முடிய நடவடிக்கை எடுக்கனும்.

20.ஷேர் மார்க்கெட் ,சினிமா, ரியல் எஸ்டேட், கிரானைட்ஸ் மாதிரி ஈசி மணி துறைகளில் இருப்பவிக மேல ஒரு கண்ண வச்சிட்டே இருக்கனும்.

21.குற்றங்களை பத்தி தகவல் கொடுத்தவிக / சாட்சி சொல்றவிக விவரங்களை கசிய விடக்கூடாது .அவிக பாதுகாப்பை உறுதி செய்யனும். வழக்கோட சீரியஸ்னெஸ்ஸை பொருத்து வட இந்தியா பக்கத்துக்கு கூட ஷிஃப்ட் பண்ணலாம் ( பொளப்புக்கு வழிய கொடுத்து )

4 Replies to “குற்றத்தடுப்பு சாத்தியமே”

raghavan

30/07/2016 at 11:58 am

அய்யா வணக்கம்,
கடக லக்கினம் குரு 6/9 உடையவர் 11 பாதக ஸ்தான யஹில் உள்ளார் .குரு மிக மோசமா பலன் கொடுப்பாரா /நன்மை செய்வாரா ?

Reply

  S Murugesan

  30/07/2016 at 2:35 pm

  வாங்க ராகவன் !

  குரு டூ இன் ஒன் அல்லவா.. எனவே கடன் வாங்கி சொத்து வாங்குவிங்க. சொத்தை அடகு வச்சு கடனும் வாங்க வேண்டி வரும்.

  Reply

Siva

04/07/2016 at 5:37 pm

காேச்சார குருப்பெயர்ச்சி _2016♥♥♥♥உண்டா?

Reply

  S Murugesan

  04/07/2016 at 6:06 pm

  வாங்க சிவா !
  நிச்சயமா உண்டு.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.