உங்களுக்கும் ராஜயோகம் : 18

mythryi

அண்ணே வணக்கம்ணே !
நம்ம வாழ்க்கையில எதுவுமே சில காலம் தான். ஒரு கட்டத்துல அதுவே வாழ்க்கை போல இருக்கும்.ஆனால் அடுத்த கட்டம் வரும் போது அப்படி ஒன்னு இருந்ததாங்கற ஞாபகமே இருக்காது .

இந்த பட்டியல்ல இந்த வலைப்பதிவும் சேர்ந்துருமோன்னு ஒரு சந்தேகம் வந்துக்கிட்டே இருக்கு . வலைப்பூ காலத்துலயே ஒரு நாளைக்கு ரெண்டு மூனு பதிவெல்லாம் போட்டிருக்கம்.

இப்ப என்னடான்னா..

உதிரியா எழுதினா தான் தொடர முடியறதில்லைனு தொடர்பதிவு போட்டுக்கிட்டிருக்கம்.இதுவும் ரெம்ப ரப்சர் பண்ணுது .

இன்னைக்கு ஜாதகத்துல செவ்வாய் பல்பு வாங்கியிருந்தா என்ன பரிகாரம் பண்ணா ராஜயோகம் பெற முடியும்னு சொல்லோனம்.

என் லேப்ல நான் தான் முதல் எலிங்கற நம்ம பஞ்ச். ஆகவே என்னை வச்சே தொடருவம். நம்ம ஜாதகத்துல நான்கில் செவ். கூடவே கேது (லக்னம் கடகம் ஞா இருக்குல்ல)

நான்கு என்பது தாய்,வீடு,வாகனம் ,கல்வி இதை எல்லாம் காட்டும்.செவ் கடகலக்னத்துக்கு 5 ,10 க்குடையவர்.
அஞ்சுன்னா புத்தி/புத்ர /பூர்வபுண்ணியஸ்தானம் .பத்து ?தொழில்/உத்யோகம்/வியாபாரத்தை காட்டற இடம்.

மொதல் 17 வருசம் வரை நம்ம படிப்பு சிறப்பா கன்டின்யூ ஆச்சு . பிறவுதான் ஆப்பு மேல ஆப்பு . `1984ல் இன்டர்ல அக்கவுண்ட்ஸ் புட்டுக்கிச்சு (23 மார்க்) மறுபடி கட்டி எழுதினம் 72.அம்மாவுக்கு யூட் ரஸ்ல கேன்சர். டிக்கெட்டு.

அம்மா இருக்கும் போதே ஒரு தரம் (வயசு ஞா இல்லை.ரெம்ப சின்ன வயசு ) பல் தேய்க்காம டிஃபன் சாப்டதுக்கு அண்ணன் திட்ட வீட்டை விட்டு போயிட்டம். கையில ரெண்டு ரூவா இருந்தது .வேலூர் போயாச்சு .டிக்கெட்டு ரூ.1.90. (4=வீடு)

அம்மாவுக்கு பிறகு வீடே நரகமாயிருச்சு .1989லயே லவ்ஸ் பண்ணி கண்ணாலம் கட்டி பிரிச்சுட்டானுவ. இல்லின்னா அன்னைலருந்தே உஞ்ச விருத்தி பண்ணியிருக்கனும்.பிரிச்சு போட்டதால அதுல இருந்து எஸ்கேப் .ஒரு ரெண்டு வருஷம் எக்ஸ்டென்ஷன் கிடைச்சது

ஆனாலும் என்ன 1991ல மறுபடி லவ்ஸ் . கண்ணாலம் .இந்த முறை எவனும் பிரிக்கல. 1994 வரையாவது அப்பாவோட மறைமுக ஆதரவு இருந்தது .அவரும் காலி .பிறவு என்ன? பூர்விக வீட்டை வித்து காசு கொடுக்கிறவரை உஞ்ச விருத்திதான்.

வறுமைன்னா தமிழ் சினிமா மாதிரி தொடர்ச்சியான வறுமைல்லாம் கிடையாது .இடையிடையே ஓயாசிஸ்களும் உண்டு .

வருமானம் இருந்ததே தவிர -நிரந்தரவருமானம் கிடையாது .பட்டுக்கோட்டையாரை விட அதிகமான வேலைகள் செய்த பார்ட்டின்னா பார்த்துக்கங்களேன் ( 10= தொழில்ஸ்தானம்) மணி மேனேஜ்மென்ட் தெரியாது -உலகம் தெரியாது -கற்பனைகள் அதிகம்.

1997 நவம்பர் 10 ஆம் தேதி ஒரு லட்சத்து ரெண்டாயிரம் ரூவா வருது . 1998 பிப்.23 ஆம் தேதி அரிசி வாங்க பணமில்லை .வீட்ல அரிசி இல்லை.
மறுபடி இங்கேருந்து 2007 வரை இதே நிலைதான்.(இடையிடையே ஓயாசிஸ்கள் உண்டு) .இந்த 2007 தான் நமக்கு டர்னிங் பாய்ண்ட்.

தினத்தந்தில வேலை .அன்னைய தேதிக்கு நம்ம வயசு 40.கொய்யால இந்த நாற்பது வயசுல கூட லைஃப்ல செட்டில் ஆகலின்னா பொளப்பு நாறிரும்னு கிரிமினல் தனமா ப்ளான் பண்ணேன்.

கரெக்டா ரெண்டே வருஷம் . இனி வேலை இல்லைன்னாலும் புவ்வாவுக்கு பயமில்லைங்கற நிலையை கொண்டு வந்துட்டன்.

கூடவே இந்த ரெண்டு வருஷத்துல நாம போட்ட பதிவுகள் கபாலி தீம் சாங் மாதிரி “நெருப்புடா”ரகம். ஹிட்ஸ் பிச்சுக்கிச்சு . கட்டண ஆலோசனையை ஆரம்பிச்சிருந்தம்.அதுவும் பத்திக்கிச்சு . -வேலைய விட்டுட்டன்.

இடையில என்ன ஆச்சு? என்னதான் பரிகாரம் செய்து தொலைச்சன்? எப்படி ஒர்க் அவுட் ஆயிருச்சுன்னு கேப்பிக சொல்றேன்.

1.கடந்த 24 வருசமா தொடர்ந்து ரத்த தானம் பண்ணிக்கிட்டிருக்கன். ஆரம்பிச்சப்ப உடல் எடை 48 கிலோ .இப்ப கு.பட்சம் 60 கிலோ .(ரத்தத்துக்கு காரகன் செவ்)

2.அம்மா போயாச்சு.வீடும் போயாச்சு. அரை டஜன் சைக்கிள் போயாச்சு. மூனு வண்டி போயாச்சு.இதுல மொத ரெண்டு வித்து மசூதிக்கு நன் கொடையா கொடுத்துட்டன்.கொசுறு ஒரு வாஷிங் மிஷின்.( எலக்ட் ரிக்கல் =செவ்) இப்பம் மவளுக்காவ ஒரு டிவி எஸ் எக்செல் செகண்ட் ஹேண்டி வாங்கி தந்திருக்கன் . ராத்திரி 7 மணிக்கு மேல அஞ்சு நிமிட் ஓட்டினா சாஸ்தி .

மொபைல் புக்ஸ்டோர் பண்றேன்னு நெல்லா இருந்த ரெண்டு டூ வீலரை இணைச்சு நாஸ்தி பண்ணி அது மேல ஒரு டப்பா வச்சு அதுக்கு கதவு வச்சு ..ஒரு பத்தாயிரம் ரூவா வரை வட்டம். ( நல்ல டைம் பாஸ்.மவளுக்கு கண்ணாலமான புதுசு – இந்த ப்ராஜக்ட் செம பிசியாக்கிருச்சு – பூமுடிப்பு /சீமந்தம் தவிர மவ வீட்டுபக்கம் அடியெடுத்து வைக்கலின்னா பாருங்க)

3.இருந்ததெல்லாம் வாடகை வீடு (இருப்பதும்) . கரண்ட் பில்லுக்கு வூட்டுக்காரன் சொல்ற அமவுண்டை படக்குனு எடுத்து வச்சுர்ரது . தனி மீட்டர் இருந்தா ஃபைன் போட்டுதான் கட்டறது .

4.மவ லவ் பண்ண ஆரம்பிச்சதுமே கொய்யால இதுவும் போச்சான்னு டிசைட் ஆயிட்டன் ( 5=புத்ரஸ்தானம்)

5.ஒரு சீசனல் ஃபீவர் போல திடீர்னு கார்ப்பென்டரிங்குல இறங்கிருவன்.அமெச்சூர்ங்கறதால செமயா ஏமாத்துவானுவ. பல நேரம் செய்த உருப்படி எதுக்கும் உபயோகமில்லாம போகும்.அல்லது திடீர்னு ஆருமேலனா அன்பு பொங்கி தூக்கி கொடுத்துருவன்.

6.ஒரு காலத்துல திடீர் திடீர்னு லைம் லைட்டுக்கு வந்துருவம். ( அஞ்சு = பெயர் புகழ்) வார்த்தா மாதிரி மேஜர் டெய்லில அரைப்பக்கம் ஸ்டோரில்லாம் வந்திருக்குண்ணே. இப்பம்? ஒரு ம..னாவும் கிடையாது .மோடி /ஜெ மேட்டர்ல பல்புல்லாம் செம பரிகாரம்ணே.அதுவும் கலைஞர் ஆதரவு நிலையை எடுத்த பிறவு செம பரிகாரம். (ஒரு சீக்ரெட் சொல்லவா .. கலைஞர் தான் முதல்வர்னு நாம சொல்லி -அது நடக்காம போன பிறவு தான் நம்ம கிராஃப் இன்னொரு பீக்குக்கு போயிருக்கு )

இத்தீனி இழவும் இழவெடுத்து போனதால தான் பொளப்பு ப்ரேக் இல்லாம ஓடுது .

அதுவும் இப்பம் இருக்கிற வீட்டை பத்தி சொல்லனும்னா தெற்கு பார்த்த வீடு (வாஸ்துப்படி இது நல்லதில்ல.ஆனால் தெற்கு செவ்வாய்க்குரிய திசை ) ஹால்ல போட்டிருக்கிற கிரானைட் பாக்கு நிறம்.

ஜாய்ன்ட் மீட்டர் இருந்தப்போ ஒரு கோ டெனன்ட் அச்சானியமா நான் 150 ரூ தான் கொடுப்பேன்னு அழிச்சாட்டியம் பண்ண அ நி யாயத்துக்கு அவன் உபயோகிச்ச உபரி கரண்டுக்கும் நானே கட்டி தொலைச்சன் (இப்பம் தனி மீட்டர் தான்)

அழிச்சாட்டியம் பண்ண கேஸு வேலை போயி /சொந்தமா கிளிக்கிறேன்னு இறங்கி ஷெட் ஆகி மறுபடி எங்கயோ வேலைக்கு போயிட்டிருக்கு . ( நம்ம கருமத்தை எல்லாம் இப்படி கழிச்சதுக்கு/ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கிட்டதுக்கு அன்னாருக்கு நன்றி )

இத்தனை பரிகாரத்துக்கு பிறவு நம்ம புத்தி சரியான ரூட்ல வேலை செய்யுது .லாஜிக்கலா திங்க் பண்றம்.தில்லா கருத்து சொல்றம் ( டாக்சி வரும் /ஆட்டோ வரும்னுல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணினானும் எதுவும் நடக்கல. தொழில் ஜரூரா நடக்குது .மவளும் கீழேயே வந்து சேர்ந்துட்டா.

ஒரு வேளை ஆத்தா நம்மை தூக்கி உள்ள வச்சாலும் பொஞ்சாதிக்கு மவ -மாப்ள துணை . பேரன் ? நல்ல பொழுது போக்கு.

இதெல்லாம் தானா நடந்த மேட்டரு தான். ஏதோ 1989 ல ஜோசியம் கத்துக்க ஆரம்பிச்ச பிறவு பல ஆயிரம் ஜாதகங்கள் -அந்த ஜாதகர்களின் வாழ்க்கைகளை பார்த்த பிறவு நானா மைண்டுல தொகுத்து வச்சிருந்தது ..இப்ப வெளிய வருது .

தானா நடந்ததை ப்ளான் பண்ணியும் நடத்திக்கலாம்ல? அதைத்தான் இன்னைக்கு சொல்ல நினைச்சேன்.இப்படி ஒரு பதிவு சொந்த கதையில பாழா போயிருச்சு .சாரிங்ணா..அடுத்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரம் தான்.உடுங்க ஜூட்டு ..

9 Replies to “உங்களுக்கும் ராஜயோகம் : 18”

seenu kutty

03/08/2016 at 2:32 pm

வணக்கம் ஐயா…
எனக்கு பத்தாம் அதிபதி சந்திரன் கேதுவோட 5ல இருக்காரே நிரந்தரவேலை அமையுமா சார் ?

Reply

  S Murugesan

  03/08/2016 at 4:27 pm

  மரத்தடி வினாயகருக்கு தினசரி ஜலாபிஷேகம் பண்ணி ஒரு ரூவா கற்பூரம் ஏத்திக்கிட்டு வாங்க .ஒர்க் அவுட் ஆகலாம்

  Reply

Siva

19/06/2016 at 9:17 pm

வணக்கம் சார்..விருச்சிக லக்னம். எட்டாம் இடமான மிதுனத்தில் செவ்வாய். 4( கும்பம்) ல் உள்ள குருவின் பார்வையால் செவ்வாய் தாேஷம் மற்றும் இதர கெடுபலன்கள் நிவர்த்தி ஆகி விடுகிறதா?

Reply

  S Murugesan

  19/06/2016 at 9:35 pm

  வாங்க சிவா !
  லக்னாதிபதி செவ் ஆகி எட்டுல இருக்கிறதுக்கும் , செவ் எட்டுல இருக்கிறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு . “நிவர்த்தி”ன்னா இல்லேனு அருத்தமில்லை.

  செவ் =கோபம் ; குரு = தொலைதூர சிந்தனை

  கோபம் வரும் போதும் இதை இவன் மேல காட்டினா நாளைக்கு எதுனா லாஸ் வருமாங்கற தொ.தூ.சிந்தனை வேலை செய்யும்.

  செவ் =நெருப்பு ; குரு =பணம்

  வசதியிருந்து சமையக்காரம்மாவ வச்சுக்கலாம் (வேலைக்கு ) தீவிபத்து நடந்தாலும் அவிய எஃபெக்ட் ஆவாய்ங்க

  Reply

rajendran

19/06/2016 at 1:16 pm

Hello Sir,
how to find wife rasi ,nakshtra with help of our birth chart .tell some method sir.

Reply

  S Murugesan

  19/06/2016 at 2:17 pm

  வாங்க ராஜேந்திரன் !
  ஜோதிடம் என்பது அவுட் லைனை சொல்றவரை மெட்டீரியலைஸ் ஆகற சான்ஸ் அதிகம்.எந்த அளவுக்கு ஜூம் போடறமோ அந்த அளவுக்கு டுபுக்காயிரும்.

  ஆனாலும் உங்க மொத கேள்விக்கே உங்களை டிஸ் அப்பாய்ண்ட் பண்ணக்கூடாதுன்னு சொல்றேன். செக் பண்ணிபாருங்க. ஜாதகத்துல லக்னத்துல /எழுல உள்ள கிரகங்கள், ஏழை பார்க்கும் கிரகங்கள், குரு,சுக்கிரன் இவர்களில் யார் அதிக பலம் பெற்றுள்ளனரோ அந்த கிரகத்துக்குரிய நட்சத்திரங்களில் மனைவி அமையலாம்.

  Reply

Ashok

15/06/2016 at 11:54 pm

இல்லை சார்….பாண்டிச்சேரியில உயிர்த்துளி ரத்ததான சேவை மையத்துல வாலண்டியரா சேர்ந்துட்டன்…..மூன்று மாதத்திற்கு ஒருமுறை அவங்களே call பண்ணி ஞாபகப்படுத்திடறாங்க……..

மூன்று மாதத்திற்கு ஒருமுறை தாராளமாக ரத்ததானம் செய்யலாம்!

ரத்தம் பெற்றவங்க மூலமா புதுப்புது நட்பு வட்டங்களும் பெருகிவிட்டது!

மனநிறைவாக இருக்கிறது!

Reply

Ashok

13/06/2016 at 9:48 pm

உங்களோடு பதிவுகள படிக்கறத்துக்கு முன்னமே அப்பப்போ ரத்ததானம் செய்வதுண்டு…..

இப்போதெல்லாம் தவறாம 3 மாசத்துக்கு ஒரு தடம் ரத்ததானம் செய்துடறன் சார்….

Nonveg சாப்படுறதல்லாம் கடந்த 3 வருஷமாக சுத்தமா விட்டுட்டன்…..ஆனா உங்க புத்தகத்துல சொல்லியிருந்த மாதிரி இப்போல்லாம் ஏழ பாழைங்களுக்கு கையில பைசா தேறும்போது பிரியாணி பொட்டலம் வாங்கி குடுக்கறன்…..

சண்டசச்சரவெல்லாம் குறைஞ்சிருக்கு!

முன்பெல்லாம் அடிக்கடி எங்கயாவது விழுந்து வடிவேலு கணக்காரத்தக்காயம் ஏற்படும்….

இப்போ அப்படியெல்லாம் நடக்கறதில்ல!

மனசும் happy ah இருக்கு!

அடியேனுக்கு கடக லக்னம், யோககாரகன் செவ்வாய் 6 ல…..

இந்த பரிகாரங்களை இனி விடுரதா இல்லை!

மறைந்து விட்ட யோககாரகனோட good books ல commit பண்ணிகிட்டேன்….

Reply

  S Murugesan

  13/06/2016 at 10:37 pm

  வாங்க அசோக் !
  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. அதே நேரம் //தவறாம 3 மாசத்துக்கு ஒரு தடம் ரத்ததானம் செய்துடறன் சார்…//என்பதெல்லாம் ஓவர் .வருடம் ஒரு முறை மிக சரி .

  கேப்ல ஏழை/பாழைகளுக்கு எலக்ட் ரானிக்ஸ்/எலக்ட் ரிக்கல் பொருட்களை தானம் செய்யுங்கள் போதும்.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.