உங்களுக்கும் ராஜயோகம் :17

wrapper

அண்ணே வணக்கம்ணே !

இன்னைக்கிருக்கிற அரசியல்ல ராஜகிரகங்கள்னு சொல்ற சூரியன், குரு ,செவ் மட்டுமே ராஜயோகத்தை கொடுக்கும்னு சொன்னா அது உட்டாலக்கடி . அப்படி சொல்ற பார்ட்டி தன்னை அப்டேட் பண்ணிக்கவே இல்லேனு அருத்தம்.

சாணக்கியர் ஆரு?பிராமணர். (குரு காரகம்) சந்திரகுப்தன் தன்னம்பிக்கை + வீரம்/போர்த்திறமை கொண்டவன். ( சூரிய/செவ் காரகம் ) இந்த காம்பினேஷன் அந்தகாலத்துல சூப்பர் ஹிட் அடிச்சுருச்சு .

ஆனால் இதுஇன்னைக்கு வேலைக்காகுமா? சாணக்கியரு வேணம்னா தப்பிச்சுக்கலாம்.சந்திர குப்தன்? ஆயுதத்தடை சட்டத்துல உள்ளே தூக்கி வச்சுருவாய்ங்க. நிற்க.

பழங்கால கிரந்தங்கள்ள சுக்கிரனை கூட ராஜகிரகம்னு சொல்லியிருக்காய்ங்க. அதுக்குண்டான காரண காரியங்களை ஆராய்ஞ்சம்னா டெக்காமெரான் கதைகள் மாதிரி போயிரும் .ஆகவே அம்பேல். இது மட்டும் இன்னைய தேதிக்கும் ஒர்க் ஆகுதாங்கற டவுட்டு எனக்குண்டு . இந்த தொடரின் கடைசி பதிவுல இதை எல்லாம் டச்சு பண்றேன்.

அன்னைக்கிருந்தது மன்னராட்சி .ஆகவே முன் சொன்ன 3 கிரகங்கள் /பின் சொன்ன சுக்கிரனை வச்சு ராஜயோகத்தை ஆட்டைய போட்டுட்டானுவ. இன்னைக்கு அப்படியா?

நம்ம நாட்ல எஸ்.சி/எஸ்.டி/பி.சி/மைனாரிட்டி மக்கள் மட்டும் 52% பேர் இருக்காய்ங்க. இவிகள்ள குறிப்பிட்ட சதவீதத்தினர் ஆதரிச்சாதான் எந்த கட்சியுமே ஆட்சிக்கு வரமுடியும்/எந்த வேட்பாளருமே செயிச்சு வரமுடியும்.

எஸ்.டி மக்களை சூரிய காரகம்னு சொல்லலாம். எஸ்.சி ? சனி காரகம். மைனாரிட்டி ? ராகு /கேது காரகம்.

பிசி? கண்ட சாதிகளையும் இந்த பட்டியல்ல சேர்த்து சொதப்பி வச்சிருக்காய்ங்க.ஆகவே அம்பேல். அந்தந்த சாதி /அதன் பின்புலம் /அவிக ஜீன்ஸ்ல பதிவாகியிருக்க கூடிய விஷயங்களை பொருத்து காரகங்களை நிர்ணயிக்கனும்.

பா.ம.க வன்னியர் ஓட்டு அன்னியர்க்கில்லைன்னு இறங்கினாய்ங்க. கிடைச்சுதா? இல்லை . இவிக செவ் காரகம்னு வச்சுக்கிட்டா எல்லா வன்னியரும் அன்புமணிக்கு தானே ஓட்டு போட்டிருக்கனும்?ஏன் போடல.

ஒரு வேளை அன்பு மணி ஜாதகத்துல செவ் பல்போ?

ஒரு சாதியில பிறந்ததாலயே அந்த சாதி மக்கள் எல்லாரையும் ஒரு கிரக காரகத்துவத்துல அடக்கிர முடியாது . அவிகவிக மென்டல் மெச்சூரிட்டி/கல்வி /என்விரான்மென்டை பொருத்து /அவிக ஜாதகத்துல பலம் பெற்ற கிரகங்களை பொருத்து அவிக காரகம் மாறீரும்.
புரியுதா?

இந்த பதிவுல செவ்வாய் பலம் பெறாத ஜாதகர்கள் செவ் வழங்கும் ராஜயோகத்தை பெறனும்னா என்ன செய்யனும்னு சொல்லோனம்.

ஆனால் செவ்வாயை சாக்கா வச்சுக்கிட்டு கிரகங்களை பற்றிய ஒட்டு மொத்த புரிதலை ஏற்படுத்திரனுங்கற கெட்ட எண்ணம் பலம்மா எழுந்துக்கிட்டிருக்கு.ஆகவே பரிகாரங்கள் அடுத்த பதிவில்.

ஒரு ஜாதகர் அல்பாயுசுனு வைங்க. அவர் ஜாதகத்துல நல்ல பலனை தரவேண்டிய கிரகங்கள் படபடனு பலன் தந்துக்கிட்டிருக்கும் (ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ண மாதிரி ) .

இதுவே ஒரு ஜாதகர் தீர்காயுசுன்னு வைங்க. நல்ல பலனை தரவேண்டிய கெரகம்லாம் கவர்ன்மென்ட் ஆஃபீஸ் க்ளர்க் மாதிரி ஸ்லோ மோஷன்ல வேலை செய்துக்கிட்டிருக்கும்.

ஆயுசை பொருத்து 2 ரகம் இருக்காப்ல யோகங்களைபொருத்தும் 2 ரகம் இருக்கு. முன் யோக ஜாதகம்/பின் யோக ஜாதகம்.

அஃதாவது முப்பது வயசுக்கு மிந்தியே பலன் கொடுத்துர்ர ஜாதகம் முன் யோகம். முப்பது வயசுக்கு பின்னாடி / 55 வயசுக்கு பின்னாடி பலன் தர்ர ஜாதகம் பின் யோக ஜாதகம்.

முன் யோக ஜாதகர் வாழ்க்கையில நல்ல பலன்லாம் ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ண மாதிரி ஓடும். கேக் வாக் கணக்கா. யோகம் முடிஞ்சு போச்சுன்னா ? அம்பேல் .

பின் யோக ஜாதகர் வாழ்க்கையில நல்ல பலன்லாம் ஸ்லோ மோஷன்ல நடந்துக்கிட்டிருக்கும். முப்பது / அம்பது வயசு டச் பண்ணிட்டா பிச்சுக்கும். எங்க பக்கத்துல ஒய்.எஸ்.ஆர்லாம் சி.எம் ஆகறப்ப வயசு 55.

இந்த செவ் மேட்டர்க்கு வந்தா செவ் ஒரு ஜாதகத்துல பல்பு வாங்கியிருந்தா திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்கு . அந்த மரணம் குத்து -கொலை – குண்டு வெடிப்புன்னும் நடக்கலாம். அல்லது என்விரான்மென்ட்/வளர்ப்பு காரணமா அப்பிராணியா ஹார்ட் அட்டாக்.

இதெல்லாம் ஒரே நாள்ள நடக்கிற மேட்டரா? ஊஹூம்.. ஓஷோ சொல்றாப்ல இறப்பு பிறப்புக்கு முன்னமே துவங்கிருது.
நான் பார்த்தவரை ஒருத்தன் ஜாதகத்துல செவ் பக்காவா உட்கார்ந்தாச்சுன்னா அவன் பாட்டுக்கு தேமேனு இருப்பான்.

வடிவேலு கணக்கா சில காலம் அடிவாங்காத ஏரியாவே இல்லேங்கற ரேஞ்சுக்கு அடி கூட வாங்கலாம். இதெல்லாம் ரிவர்ஸ் எஃபெக்ட். செவ் சம்பந்தப்பட்ட தசையோ /புக்தியோ சிக்கியாச்சுன்னா சீன் தலைக்கீழா மாறும்.

திடீர் வளர்ச்சி / கிடு கிடு வளர்ச்சிங்கறாய்ங்களே இதெல்லாம் செவ் பல்ப் வாங்கின ஜாதகம் அல்லது ராகு கேது பல்ப் வாங்கின ஜாதகமாவே இருக்கும்.

செவ் எப்படியா கொத்த முடிவை கொடுப்பாருன்னு சொல்லிட்டன். இந்த ராகு கேது? படக்குனு ஓவர் நைட்ல காணாம போயிருவாய்ங்க (வேந்தர் மூவிஸ் காரர் மாதிரி) அல்லது விஷமருந்தி தற்கொலை இத்யாதி .

செரிங்காணும் ..செவ் ஜாதகத்துல செரியில்ல.ஆனாலும் நான் செவ் தர்ர ராஜயோகத்தை டேஸ்ட் பண்ணியே ஆகனும்.அதுக்கு ஒரு வழியை சொல்லும்னு சலிச்சுக்கறேளா?
வெய்ட் பண்ணுங்கோ ..அடுத்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் கொடுத்துர்ரேன்.

11 Replies to “உங்களுக்கும் ராஜயோகம் :17”

thiru

09/06/2016 at 7:20 pm

Hello Sir,
Super article sir , entha veedu,planets vechu mun yogam pin yogam sollalam

Reply

  S Murugesan

  09/06/2016 at 8:38 pm

  வாங்க திரு !

  லக்னாத் சுபர்கள் லக்னம் முதல் ஐந்து ராசிகளுக்குள்ளாகவே நின்றிருந்தால் அதை முன் யோக ஜாதகம் எனலாம்.

  Reply

   Ashok

   10/06/2016 at 9:55 am

   அடியேனுக்கு 3 to 7 ல யோக காரகர்கள் இருக்கிறார்கள் ஐயா…..அப்போ இத எந்த கேட்டகரில எடுத்துக்கலாம்?

   Reply

    S Murugesan

    10/06/2016 at 10:22 am

    வாங்க அசோக் !

    யோக காரகர்கள் /நைசர்கிக சுபர்கள் 1/5/9 ல் இருந்தால் பெஸ்ட். 4/7/10 ல் இருந்தால் பெட்டர் 2,11 குட். 6/8/12ல் இருந்தா நாஸ்தி .மூன்றில் இருப்பது நாஸ்திக்கு கொஞ்சம் மிந்தின கேட்டகிரியா வச்சுக்கலாம்

    Reply

   thiru

   11/06/2016 at 6:30 pm

   Hello Sir,
   Vanakkam ayya oru doubt natural benefic : venus,mercury,moon pakkanum ah illa nama lagna padi functional benefic and malefic pakkanum ah ayya

   Reply

    S Murugesan

    11/06/2016 at 9:13 pm

    வாங்க திரு !
    பல முறை சொல்லியிருக்கேனே.. லக்னாத் சுபர்களே பெஸ்ட் . நைசர்கிக சுபர்களால் “இமிசை”தான்.

    Reply

     thiru

     12/06/2016 at 12:14 pm

     ayya vanakkam ,
     nama jathagam kadaga lagnam 1-chandran,4-shukran,
     9-chevvai(yogakaran) . entha age la luck start agum ayya ?

     Reply

      S Murugesan

      12/06/2016 at 4:05 pm

      வாங்க திரு !
      லக்னத்துலயே சந்திரன் இருப்பதால் எந்த ரெண்டே கால் நாள்ளயும் உங்களுக்கு பம்பர் லாட்டரி கணக்கான அதிர்ஷ்டத்துக்கு வாய்ப்பிருக்கு. டோன்ட் ஒர்ரி.

      Reply

       thiru

       13/06/2016 at 10:12 am

       Ayya vanakkam ,
       Nandri ayya !! yogakaran 9il irupathal 29 age la irunthu success ethirpakkalama

       Reply

        S Murugesan

        13/06/2016 at 11:39 am

        வாங்க திரு !

        பின்யோகம்னு தான் சொல்லனும். உங்களுக்கு சந்திரன் இளமையிலயே ஷாக்கிங் லிஃப்ட்லாம் கொடுத்திருப்பாரே ?

        Reply

         thiru

         16/06/2016 at 11:04 am

         Ayya vanakkam,
         positive points :Engineering degree mudichen high marks .
         negative points:2010 la irunthu 6 years no job career destroyed .
         neenga sonna mari bumper career vantha nala irukkum ayya.

         Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *