ஜெ’வுக்கு ஒரு அக்னிபரீட்சை : மாற்றமா? ஏமாற்றமா?

cm cell

சித்தூர்,
27/05/2016

பெறுனர்
மாண்புமிகு .தமிழக முதல்வர்,
தமிழ் நாடு

விடுனர்
சித்தூர்.முருகேசன்,
17-201, கும்மரா தெரு ,
சித்தூர் ஆ.பி
517001

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு !
முதற்கண் ஆட்சியை தக்க வைத்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள். இந்த முதல்வரியை மட்டும் படித்துவிட்டு பொத்தாம் பொதுவாக “நன்றி” கடிதத்தை தள்ளி விடக்கூடிய பிரகஸ்பதிகள் உங்கள் கோட்டரியில் இருப்பதை நான் அறிவேன். (அனுபவம் அப்படி !)

எனவே முதலில் என் கண்டனங்களை பதிவு செய்து பிறகு என் கோரிக்கைகளுக்கு வருகிறேன். அதற்கு முன் என்னைப்பற்றி ஒரே வரி , கூகுள் ப்ளஸ்ஸில் என் ப்ரொஃபைலை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 6 வருடங்களில் ஜஸ்ட் 24 லட்சம் .

இந்த நாடும் ,மக்களும் வளம் பெற ஒட்டுமொத்த தீர்வுகளை கண்டறிந்து கடந்த 19 வருடங்களாக இந்திய பிரதமர்கள்,ஜனாதிபதிகள்,சபா நாயகர்கள்,முதல்வர்களுக்கு முன் மொழிந்துவருபவன் நான். எனக்கு இந்தியாவிலேயே 16 வருடங்களாக ரெஸ்பான்ட் ஆகாத ஒரே நபர் நீங்கள் தான். கிரவுண்ட் ரியாலிட்டி இல்லாத சந்திரபாபுவே 6 வருடங்களில் ரெஸ்பான்ட் ஆகிவிட்டார்.

ஆனால் 2014 ,பாராளுமன்ற தேர்தலின் போது மோடியா? லேடியா? என்ற கேள்வியை உங்கள் கட்சி முன்னெடுத்த போது தேசீய அளவில் உங்கள் உங்கள் இமேஜ் பூஸ்ட் ஆகும் /அதே சமயம் என் திட்டமும் கவனம் பெறும் என்ற எண்ணத்தில் திட்டத்தின் 234 பிரதிகளை சபா நாயகருக்கு அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் !
தங்கள் இல்ல முகவரிக்கு மீண்டும் ஒரு 234 பிரதிகளை அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் !இந்த விவரங்களை தங்கள் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் தெரிவித்தேன்.கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டது .

கட்சி அலுவலகத்துக்கும் அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் ! அந்த நேரத்தில் உங்கள் குட் புக்ஸில் , தொடர்பில் இருந்த வீணை காயத்ரி அவர்களுக்கும் அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் ! இதன் பிரதியை இக்கடிதத்தோடும் இணைத்துள்ளேன்.

எப்படியோ அந்த தேர்தலில் உங்கள் கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. ( நோ கமெண்ட்ஸ்). பிறகு பெங்களூர் சொ.கு.வழக்கில் பதவி இழந்து சிறை சென்றீர்கள் . சரி கார்டன்/தலைமை செயலகம்/கட்சி அலுவலகத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான கடிதங்கள் வரும் போல. இதனால் தான் நம் கடிதம் கவனம் பெறவில்லை என்று சிறை முகவரிக்கே அனுப்பினேன். அது டெலிவரியும் ஆனது . நோ ரெஸ்பான்ஸ்.

இந்த விவரத்தை தங்கள் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் தெரிவித்தேன். மனு நிராகரிக்கப்பட்டது .பிறகு நீங்கள் விடுதலையானீர்கள் .மீண்டும் அப்டேட் செய்தேன் .உங்கள் சிறப்பு பிரிவு அதிகாரிகள் என் ப்ரப்போசல்ஸை உரிய அதிகாரிக்கு அனுப்புவதாய் கூறி டாஸ்மாக் எம்.டிக்கு அனுப்பிவிட அவர் தரப்பில் இருந்தும் ” நன்றி” சொல்லி என்னோடு நாட்டையும்/மக்களையும் ஒரு சேர அவமானப்படுத்தி விட்டார்கள் .

இந்த கட்டம் வரை மட்டும் அல்ல – சென்னை மூழ்கும் வரை கட்சிகளை கடந்தவனாகவே இருந்த நான் அந்த நேரம் உங்கள் கட்சியும்/ஆட்சியும் செயல்பட்ட விதத்தை கண்டு விரக்தியுற்று இந்த ஆட்சி போனால் தான் விடிவு என்ற முடிவுக்கு வந்து மாற்று சக்திகள் வலிமையாக இல்லாத நிலையில் திமுக ஆதரவு நிலையை எடுத்தேன்.

முக நூல் ஒக்காபிலரியில் சொன்னால் “கழுவி கழுவி ஊற்றினேன்”. உங்களுக்கு யோசனைகள் தெரிவித்தால் டாஸ்மாக் எம்.டி நன்றி சொன்ன கதையை எக்கச்சக்க ஆதாரங்களுடன் வீடியோ ஆக்கி பதிவிட்டேன்.அதை திமுக ஆதரவாளர்கள் சகட்டுமேனிக்கு ஷேர் செய்ய 24+ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டது .சுமார் 1,313 பேரால் ஷேர் செய்யப்பட்டது .

முழு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் – நீங்க மாறி விட்டீர்கள் – ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கிறீர்கள், தமிழக முன்னேற்றத்துக்காக திமுகவுடன் இணைந்து செயல்பட போகிறீர்கள் என்று பேச்சாக இருக்கிறது .

பேச்சு செயலாகி இருக்கிறதா இல்லையா என்பதை என்னளவில் நான் அறிந்தால் தானே கருத்து சொல்ல முடியும் .எனவே என் யோசனைகளை மீண்டும் தங்களுக்கு அனுப்புகிறேன். இவற்றுக்கான தொடுப்பை சி.எம் செல்லுக்கு கன்வே செய்திருக்கிறேன். ஆனாலும் ஃபிசிக்கலாக அனுப்பவேண்டும் என்று இவற்றை மீண்டும் அனுப்புகிறேன்.

பார்க்கப்படும் .பரிசீலிக்கப்படும்.அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இருந்தால் இன்னும் அக்கறையாக -இன்னும் அலுவல் ரீதியாக இவற்றை வடிவமைத்திருக்கலாம். ஆரம்பத்தில் சொன்னதை போல் 16 வருடங்களாக நடக்காத அற்புதம் நடக்கவா போகிறது என்ற எண்ணமே என் மனதில் இருக்கிறது .
ஆகவே என் திட்டங்களை என் வலைதளத்திலிருந்து தரவிறக்கி அப்படியே அனுப்புகிறேன்.

இப்போதாவது பார்க்கப்படும் .பரிசீலிக்கப்படும்.அமல்படுத்தப்படும் என்று நம்ப ஆசைப்படுகிறேன்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,

சித்தூர் முருகேசன்

பிரதி :
திரு.மு.க ஸ்டாலின்
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர்,
சென்னை

2 Replies to “ஜெ’வுக்கு ஒரு அக்னிபரீட்சை : மாற்றமா? ஏமாற்றமா?”

Nandhu

29/05/2016 at 1:09 pm

மார்ச்ல என்னோட ஒபினியன் எபோட் தேர்தல் https://twitter.com/snandhu/status/705996370654601216

Reply

    S Murugesan

    29/05/2016 at 1:29 pm

    வாங்க நந்து !
    கருத்துக்கு நன்றி .

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.