ரங்கராஜ் பாண்டே பேட்டி (கலாய்தான்)

கேள்விக்கென்ன பதில்

அண்ணே வணக்கம்ணே !

ஜெயா நாட் ரீச்சபிள் ஃபார் 16 இயர்ஸ் வீடியோ சூப்பர் ஹிட் முக்காபுலா ஆயிருக்கு (உபயம் : JayaFails ) 20+ஆயிரம் பேர் பார்த்திருக்காங்க. ஆயிரம்+ பேர் ரீஷேர் பண்ணியிருக்காங்க.

ஒரு வேளை ஒரு த(த்)ந்தி டிவி பார்வைக்கு போயி பாண்டே நம்ம இன்டர்வ்யூ பண்ணா எப்படியிருக்கும்னு ஒரு கற்பனை . பாண்டே நம்மள மொக்கை பண்ணிட்டாரா? அல்லது நாம அவரை மொக்கை பண்ணியிருக்கமா? பதிவை ப்டிச்சுட்டு சொல்லுங்க.

வணக்கம் அன்பு நண்பர்களே !
கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி வழியாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . இன்றோடு நம்முடன் புதிய விருந்தினர் ஒருவர் இணைகிறார்.
தமிழகத்தில் தேர்தல் ஒரு புறம் – கோடை ஒரு புறம் -சூடு பறக்கிறது .சமூக வலை தளங்களில் இந்த சூடு அனலாகி பொறி பறக்கிறது .

அவரவர் தலைவர்களுக்கு ஆதரவாகவும் -மாற்று கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் பதிவுகள்,வீடியோக்கள்,மீம்ஸ் என்று தூள் பறத்துகிறார்கள்.
இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்றாலும் வேறு மானிலங்களில் வாழ்பவர்கள் ,ஏன் வெளி நாடுகளில் வாழ்பவர்கள் கூட உண்டு.

அண்டை மானிலமான ஆந்திரத்தை சேர்ந்த சித்தூர் முருகேசன் ஜெயா நாட் ரீச்சபிள் ஃபார் 16 இயர்ஸ் என்று ஒரு வீடியோவை பதிவேற்றியிருக்கிறார்.
இதில் தான் இந்திய நதிகள் இணைந்து நாடு வளம் பெற – அரசின் நிர்வாக செலவுகள் குறைந்து, வருவாய் கூடி மானிலங்கள் செழிக்க பல நிர்வாக சீர்திருத்தங்களை ,புதுமையான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தபால் ,கொரியர் மூலம் 16 வருடங்கள் தொடர்ந்து அனுப்பியதாக கூறியிருக்கிறார்.
இவற்றை பரப்பண அக்கிரஹாரா சிறை முகவரிக்கு கூட அனுப்பியதாகவும் ஆனால் தன் யோசனைகள் டாஸ்மாக் எம்.டிக்கு ஃபார்வார்ட் செய்யப்பட்டு அவர் தான் நன்றி தெரிவித்தார் என்று சொல்கிறார்.

இறுதியாக தமிழகத்தை ஆள்வது முதல்வரா ? டாஸ்மாக் எம்.டியா என்ற கடுமையான கேள்வியுடன் வீடியோ முடிகிறது .நம்மோடு முருகேசன் இருக்கிறார். அவரிடம் கேட்கலாம்..

ரங்கராஜ் பாண்டே:
வணக்கம் முருகேசன் ! உங்கள் திட்டங்களை 16 வருடங்களாக முதல்வருக்கு தொடர்ந்து அனுப்பியதாயும் முதல்வர் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை என்றும் கூறுகிறீர்கள். முதல்வர் என்ற வகையில் ஜெயலலிதாவுக்கு தினம் தினம் ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும்.எல்லாவற்றிற்கும் நேரடி பதில் தருவது சாத்தியமில்லை என்பது யதார்த்தம்.உங்களுக்கு 16 வருடங்களாய் பதில் கிடைக்காததை தேர்தல் சமயத்தில் ஒரு வீடியோ மூலம் வெளிக்கொண்டு வருவது உங்கள் நல்ல நோக்கத்துக்கு உள் நோக்கம் கற்பிக்க ஏதுவாய் இருக்கிறதே!

சித்தூர் முருகேசன்:
என்ன பாஸ்..மொத கேள்விக்கே செம ஃபார்ம்க்கு வந்துட்டிங்க.. என் திட்டங்களை ஆட்சியாளர்கள்,மீடியா பார்வைக்கு கொண்டு போறதை 1992லயே ஆரம்பிச்சுட்டன். அதனோட தொடர்ச்சி தான் இது. இங்கயாச்சும் ஜஸ்ட் வீடியோ தான்.ஆனால் எங்க சி.எம் சந்திரபாபுவுக்கு கன்ஸ்யூமர்ஸ் ஆக்ட் படி நோட்டீஸே கொடுத்தவன் நான். நான் என்ன ஆஃபீஸ் போட்டு சம்பளத்துக்கு ஆள வச்சு வேலை செய்யறனா? அந்தந்த சமயம் என்னென்ன வாய்ப்பிருக்குமோ அந்தந்த வாய்ப்புகளை எல்லாம் பயன் படுத்திக்கிறன்.என் திட்டங்களை மக்கள்/மீடியா/ஆட்சியாளர்கள் பார்வைக்கு கொண்டு போறது ஒன்னு தான் என் நோக்கம். இதுல உள் நோக்கம் என்ன தட்டுக்கெடுது?
சமீபத்துல உட்கார்ந்தே வேலை செய்து வெய்ட் போட்டுட்டன்.இல்லன்னா இன்னைக்கு ட்ரென்ட் படி செல்ஃபோன் கோபுரத்துல கூட ஏறியிருப்பன்.

ரங்கராஜ் பாண்டே :
வீடியோ பதிவேத்தினிங்க சரி .ஆனால் உங்க வீடியோவை திமுக ஆதரவு முக நூல் பக்கம் தானே பொதுவெளிக்கு கொண்டு வந்திருக்காங்க.

சித்தூர் முருகேசன்:
நான் பதிவேத்தினப்ப 188 பேர் தான் பார்த்தாங்க. அந்த 188 ல அந்த முக நூல் பக்க அட்மினும் இருந்திருக்கலாம். இன்னைக்கு அவங்க ஷேர் பண்ணதால அந்த வீடியோ 20 ஆயிரம் பேர் பார்வைக்கு போயிருக்கு 1500 பேருக்கு மேல ரீ ஷேர் பண்ணியிருக்காய்ங்க. இல்லைன்னா நீங்க என்னை இன்டர்வ்யூ பண்ண கூப்டிருப்பிங்களா? நல்லது நடந்திருக்குன்னு தான் நான் பார்க்கிறேன்.

ரங்கராஜ் பாண்டே :
திமுக ஆதரவாளர்கள் அவங்க நல்லதுக்கு உங்க வீடியோவை உபயோகிச்சுக்கிட்டாங்கனும் சொல்லலாமே. ஆக்சுவலா அவங்க தூண்டுதலின் பேர்ல தான் இந்த வீடியோவையே நீங்க பதிவேற்றினிங்கன்னு சொல்லலாமில்லையா?

சித்தூர் முருகேசன்:
ஹ ஹா.. இந்த வீடியோவை பதிவேற்ற தூண்டியது ஜெயலலிதாதான்னு நான் சொல்வேன்.ஏன்னா 14 வருசம் என் திட்டங்கள் அவிக பார்வைக்கு போகலைன்னா அதுல ஒரு லாஜிக் இருக்கு. கார்டன்,தலைமை செயலகம்,கட்சி அலுவலகத்துக்கெல்லாம் தினம் தினம் ஆயிரக்கணக்கான கடிதங்கள் போயிருக்கும்.ஆனால் பரப்பண அக்கிரஹாரா சிறை முகவரிக்கு எத்தனை கடிதம் போயிருக்கும்ங்கறிங்க? ஜெயிலர் கிட்டே சொல்லி அம்பது பைசா போஸ்ட் கார்டு வாங்கி யோசனைகளுக்கு நன்றி .பரிசீலிக்கிறேன்னு ரெண்டு வரி எழுதிப்போட்டிருந்தா பிரச்சினையே இல்லையே !

ரங்கராஜ் பாண்டே :
உங்க திட்டங்களை முதல்வருக்கு அனுப்பாம இருந்திருந்தா பதில் போடற பிரச்சினையே எழுந்திருக்காதே !

சித்தூர் முருகேசன்:
முதல்வரம்மா சரியான முறையில ஆட்சி நடத்தியிருந்திருந்தா இந்த யோசனைகளை அனுப்பனும்ங்கற எண்ணமே எனக்கு வந்திருக்காதில்லை

ரங்கராஜ் பாண்டே :
வழக்கமா நான் தான் மடக்குவேன்.

சித்தூர் முருகேசன்:
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு

ரங்கராஜ் பாண்டே :
உங்க வீடியோல அவங்களுக்கு ஜோசியம் சொல்லி கடிதம் எழுதினதாவும் அதுக்கு நன்றி தெரிவிச்சு ஏதோ கம்யூனிகேஷன் வந்ததாவும் சொல்லியிருக்கிங்க. சரியா?

சித்தூர் முருகேசன்:
ஆமாம். 2001 ல ஆட்சிய பிடிப்பிங்கன்னு எழுதியிருந்தேன்.பிடிச்சாங்க .. தேங்க்ஸ் கார்ட் அனுப்பினாங்க.

ரங்கராஜ் பாண்டே :
நீங்க வேற எதையோ பெருசா எதிர்ப்பார்த்து ஜெ தரப்புல அது நிறைவேற்றப்படாத கோபத்துல தான் நீங்க இப்படி வீடியோல்லாம் போட்டு பழி தீர்த்துக்கறிங்கன்னு சொல்லலாமா?

சித்தூர் முருகேசன்:
ஹ ஹா.. அப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் இருந்திருந்தா வெறும் ஜோசியத்தோட நின்னிருப்பனே . ஜோசியங்கறது அவிக திருப்திக்காக -என் திட்டங்களின் பால் அவிக கவனம் கவர. திட்டங்கள் என் மக்களுக்காக.

ரங்கராஜ் பாண்டே :
அரசியல் வாதி மாதிரியே பேசறிங்க?

சித்தூர் முருகேசன்:
என் ரோல் யோசனைகள் சொல்றதுதான். ஆட்சியாளர்கள் என் யோசனைகளை பரிசீலிக்க முன் வந்தா அரசியலே தேவையில்லையே .

ரங்கராஜ் பாண்டே :
இல்லை உங்க யோசனைகளை எல்லாம் நானும் படிச்சேன் 10 கோடி அன் எம்ப்ளாய்டை வச்சு நதிகளை இணைக்கனும்னு சொல்றிங்க. இதுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு?

சித்தூர் முருகேசன்:
இதை மானில அளவுல அமல்படுத்தலாமே ..ஊர்காவல் படை மாதிரி சிறப்பு படை ஒன்னை டெப்யூட் பண்ணி தமிழக நதிகளை இணைக்கலாமே.

ரங்கராஜ் பாண்டே :
தமிழக அரசின் நிதி நிலையை வச்சு பார்க்கும் போது இதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்னால சொல்ல முடியல ..

சித்தூர் முருகேசன்:
தமிழக அரசுக்கு மட்டுமில்லை இந்தியா மானிலங்கள் 29 க்கும் மக்கள் மேல பாரம் சுமத்தாம வருவாய் கூட்ட எக்கானமி பேக்கேஜ்ங்கற பேர்ல நிறைய யோசனைகள் தந்திருக்கன். அதை எல்லாம் இம்ப்ளிமென்ட் பண்ணா சாத்தியமாகலாமே

ரங்கராஜ் பாண்டே :
அதையும் படிச்சேன் .அதுல அரசு ஊழியர்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் ,சைக்கியாட்ரி டெஸ்ட் , நாலட்ஜ் அப்டேஷன்ல மறு தேர்வு வச்சு ஃபெயில் ஆகறவங்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பனும்னு சொல்லியிருக்கிங்க.

சித்தூர் முருகேசன்:
ஏன்? வெட்டியா வச்சுக்கிட்டு மக்கள் வரிப்பணத்தை சம்பளமா கொட்டி கொடுத்துக்கிட்டே இருக்கனும்னு நீங்க சொல்றிங்களா?

ரங்கராஜ் பாண்டே :
இந்த யோசனைகளை எல்லாம் கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் அனுப்பியிருக்கிறதா உங்க வெப்சைட்ல எழுதியிருக்கிங்க.

சித்தூர் முருகேசன்:
என் யோசனை அதிரடிக்கு பெயர் போன ஜெயலலிதாவாலேயே அமல் படுத்தப்படவில்லை . அந்த நாள் முதல் இந்த நாள் வரை அரசு ஊழியர்களுக்கு அனுகூலமானவர் என்ற பெயர் பெற்ற கலைஞரா அமல் படுத்திரப்போறாரு .

ரங்கராஜ் பாண்டே :
அப்போ அமல் படுத்த மாட்டாருன்னு தெரிஞ்சே அனுப்பியிருக்கிங்க.

சித்தூர் முருகேசன்:
இதென்னங்க வம்பா போச்சு நான் என்ன பிரதமரோட செயலாளரா – லிஸ்ட் போட்டு அனுப்பினதுமே படபடன்னு அமலாக்கிர்ரதுக்கு. நான் சொல்றது யோசனை . பரிசீலிக்கட்டும்னு அனுப்பறேன்.

ரங்கராஜ் பாண்டே :
அப்ப உங்க யோசனைகள் அமலாகலின்னாலும் பரவால்ல .

சித்தூர் முருகேசன்:
ஆஹா.. அர்ஜுன் மாதிரி கண்ல கத்திய விட்டு ஆட்டப்பார்க்கறிங்க. பரிசீலனைங்கறது ஃபர்ஸ்ட் ஸ்டெப் . அமலாக்கம்லாம் பிறவு வருது .பரிசீலனை பண்ணி இதெல்லாம் உதவாக்கரை யோசனைகள் அமல்படுத்தப்படாதுன்னு ரிட்டர்னா கொடுத்துட்டா நேரடியா மக்கள் கிட்டே கொண்டு போவேன்.

ரங்கராஜ் பாண்டே :
நீங்க பாட்டுக்கு யோசனைங்கற பேர்ல பெரிய லிஸ்டு போட்டு தபால் அனுப்பிருவிங்க.முதல்வரோ அதிகாரிகளோ எல்லா வேலையையும் விட்டுட்டு உங்க யோசனைகளை பரிசீலனை பண்ணனும் அப்படித்தானே !

சித்தூர் முருகேசன்:
ஏன் பாஸ் ரிட்டையர் ஆன அதிகாரிகளை எல்லாம் ஆலோசகர்கள்ங்கற பேர்ல வச்சுக்கிட்டு வெட்டியா சம்பளம் /க்வார்ட்டர்ஸ்/கார்/டிரைவர்னு கொடுத்து வச்சிருக்காங்களே ..அவிக அப்படி என்னதான் யோசனை சொல்லி கிளிச்சுட்டாய்ங்க? கோடிக்கணக்கான ரூபாய் செலவழிச்சு கிடைக்காத யோசனைகள் இலவசமா கிடைக்குதுன்னா பரிசீலனை பண்றது தானே லாப கரமானது?

ரங்கராஜ் பாண்டே :
அரசு உங்க கிட்டே யோசனைகள் கேட்டதா?

சித்தூர் முருகேசன்:
நம்முது மறைமுக சன நாயகம்.சனத்தொகை அதிகம். ஸ்விஸ் மாதிரி எல்லாரும் போய் சட்டமன்றத்துல உட்கார்ந்துக்கிட்டு விவாதம் பண்ண முடியாது .அதற்காக நமக்காக யோசிச்சு ,நமக்காக பேச எம்.எல்.ஏக்களை எலக்ட் பண்ணி அனுப்பறோம். இது ஒரு வசதிக்காகத்தான். அவங்க வசதிக்காக இல்லை .அவங்க ஒன்னமே செய்யாம இருக்கிறப்ப நாம இறங்கி செய்யலாம். தப்பே இல்லை.

(தொடரும் ?)

3 Replies to “ரங்கராஜ் பாண்டே பேட்டி (கலாய்தான்)”

பா. மணிவேல்

25/04/2016 at 6:01 pm

அப்படியே ரங்கராஜ் பாண்டே கேட்கிற மாதிரியே இருந்தது. சூப்பர். பாண்டே ஒரு அருமையான ஊடக நெறியாளர்.

Reply

S Muthukumar

25/04/2016 at 3:29 pm

Different Approach. Fine

Reply

    S Murugesan

    25/04/2016 at 5:07 pm

    வாங்க முத்துக்குமார் !
    சுஜாதா கணேஷுக்கு ஒரு கவுண்டர் பார்ட் வேணம்னு வசந்தை கொண்டு வந்தாராம்.அதை போல நமக்கு பாண்டே .. இந்த பேட்டியை தொடரலாம்னு பார்க்கிறேன். (ரீடர்ஸ் ரெஸ்பான்ஸை பொருத்து)

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *