உங்களுக்கும் ராஜயோகம் : 9 (ஆன்மாவுடன் உரையாடல்)

DSC_7886

அண்ணே வணக்கம்ணே !
ஒரு காலத்துல ஒரே நாள்ள ரெண்டு மூனு பதிவெல்லாம் கூட போட்டிருக்கன். அப்பம் நம்ம ப்ளாகர்ஸ் ப்ளாக் இந்தியாவுக்குள்ள 25,000 ரேங்குக்குள்ள இருந்த கால கட்டம்லாம் உண்டு.

இடையில எதை எழுத நினைச்சாலும் ஏற்கெனவே எழுதிட்டாப்ல ஒரு ஃபீல் வரும். சில மேட்டர்ல சனத்துக்கு இதெல்லாம் புரியுமாங்கற டவுட்டு வந்துரும். இந்த தர்ம சந்தேகங்களை எல்லாம் ஓவர்கம் பண்ணத்தான் தொடர்கள்ங்கற டெக்னிக்கையே கண்டுப்பிடிச்சம்.

ஆனாலும் தொடராவே ஆரம்பிச்சுட்டாலும் இடையில சுஸ்தாயிரும். மைன்ட் ப்ளாங்க் ஆயிரும். நம்மை பொருத்தவரை எதை செய்தாலும் முழு மனசா செய்யனும் -இறங்கி செய்யனும் (கலைஞரை ஆதரிக்கிறதாவே இருந்தாலும்) அதை விட்டுட்டு என் மனசு ஈடுபடாத ஒன்னை செய்யவே முடியாது ( நம்முது கடகலக்னங்ணா)

இந்த ராஜயோகம் தொடரை மே 14 ஆம் தேதிக்குள்ள முடிச்சு தொலைச்சுரனும். (இது தேர்தல் ஸ்பெஷலாச்சே) அப்ப ஏப்ரல்ல ஒரு 20 நாள் , மே மாசத்துல ஒரு 14 நாள் .மொத்தம் 34 நாட்கள். சூரியன் மேட்டர்ல இன்னம் ரெண்டு பதிவு போட்டா மேட்டர் ஓவர் .

ஒரு கிரகத்துக்கு 3 நாள்னு வச்சுக்கிட்டா 27 நாள் . இடையில ஏதாவது ஒரு கிரகம் ஒன்னு ரெண்டு பதிவுகள் சாஸ்தி எடுத்துக்கிட்டாலும் மே 14 க்குள்ள முடிச்சுரலாம். இந்த சவால் தான் நம்மை தூண்டி விடுது .அதுக்காவத்தான் தம் கட்டி ரெண்டு நாளைக்கொருக்கா லைனுக்கு வந்திட்டிருக்கன். (இனி தினமும் கூட வரலாமுங்கோ )
கடந்த பதிவுல சூரியன் ஆன்மாவுடனான உரையாடலை தருவார்னு சொல்லியிருந்தன். இந்த ஆத்மாங்கற சமாசாரத்தை யூனிவர்சல் மைன்டுனு சொல்லலாம் . சப் கான்ஷ்யஸை தாண்டி உள்ள டிவிஷனுன்னு சொல்லலாம். இதனோட ஸ்பெஷாலிட்டியே என்னடான்னா ..

மத்த டைமன்ஷன்ஸ்ல நமக்கு இருக்க கூடிய லிமிட்டேஷன்ஸ் எதுவுமே இருக்காது . நம்ம ஜாதகத்தை பொருத்தவரை லக்னத்துல சூரியன் (கடக லக்னத்துக்கு இவர் வாக்கு ஸ்தானாதிபதி அவ்ளதான்) ஒரு காலத்துல எது கிடைச்சாலும் “எனக்கு”ங்கற ஃபீல் தான் இருக்கும். இது எப்படி மாறுச்சுன்னே தெரியல.
இப்ப எதை பார்த்தாலும் -எது கிடைக்கிறாப்ல இருந்தாலும் இதை அவனுக்கு கொடுத்தா உபயோகமா இருக்குமா? இதை அவளுக்கு கொடுத்தா நல்லாருக்குமாங்கற எண்ணம் தான் வருது .பல சமயம் பொஞ்சாதி வாய்ல வவுத்துல அடிச்சுக்கிட்டிருந்தாலும் தூக்கி கொடுத்துர்ரதுதான்.

இந்த நேச்சர் வரதுக்கு சூரியபலம் காரணம்னு சொல்ல முடியாது .இவரோட 3-12 க்கு உரியவரான புதன் சேர்ந்த எஃபெக்டா இருக்கலாம். (3 =சேலஞ்சிங் டீட்ஸ், 12= வீண் விரயம்) காரணம் எதுவா இருந்தாலும் இந்த செயல்களால ஃபோர்த் டைமன்ஷன் அப்பப்போ கண்ணா மூச்சி கணக்கா க்ளிக் ஆகுது .
ஃபோர்த் டைமன்ஷன் (ஆத்மா) ங்கறது உடலை,மனதை ,புத்தியை மீறி சிந்திப்பது – இயங்குவது . லாஜிக்கே இல்லாம இயற்கை ஒத்துழைக்கிறது .
இந்த தேச கனவுகள் ,மானில கனவுகள் ,மோடிக்கு அனுப்பின ஸ்கில் இண்டியா ,கலைஞருக்கு அனுப்பின கோம்போ பேக் எல்லாமே எனக்கே எனக்குன்னு வச்சிருக்கிற விஷயங்க தான். படக்குனு இந்த நாட்டுக்கு பிரதமர் ஆயிட்டா எல்லாத்தையும் புரட்டி போட வேணாமா பாஸ் !

ஆனாலும் கொய்யால நாம பிரதமராகி ஆளவாச்சும் சனம் உசுரோட இருக்கனுமில்லையா -இவிக ஒட்டு மொத்தமா எல்லா சனத்தையும் சாகடிச்சுர மாதிரியிருக்கேங்கற பதட்டம் ஒரு பக்கம். ஒரு வேளை இவிகளுக்கு இப்படி எடுத்து சொல்ல சனம் இல்லாமத்தான் இப்படி இருக்காய்ங்களோ ? செரி நாமளாச்சும் சொல்லிப்பார்ப்பங்கற கருணை ஒரு பக்கம்.

திமுக தேர்தல் அறிக்கை பார்த்தேன். எல்லாமே கில்லின்னு சொல்ல மாட்டேன் (இப்பவும் ) இந்த சிலை,மணி மண்டபம்,பூங்கா எல்லாம் ஜல்லி . சனங்களோட வாழ்க்கை முறை மாறிப்போச்சு -காஸ்ட் ஆஃப் லிவிங் சாஸ்தி ஆயிருச்சு -சனம் பெருத்து போச்சு ,மனுஷனுக்கு மனுஷனோட அவசியமே தெரியல. கிருபானந்த வாரியார் சொல்ற கதையில வர்ர தேன் துளியா மனித வாழ்க்கை மாறிருச்சு .

இந்த காலமாற்றத்தை கணக்கில் கொண்டதாவே தெரியல. சாங்கோபாங்கமா ஆரம்பிக்கிறாய்ங்க. தொன்மம்,குறியீடு ,ஸ்தூல பிரச்சினைகள், எசன்ஷியல்ஸ்,கம்ஃபர்ட்டபிள்ஸ்,லக்சரீஸ் எல்லாத்துக்கும் சம பங்கு .

ஆனால் ஒரு நிறுவனமாவே மாறிப்போன கட்சியில இந்த அளவுக்கு எல்லா பிரிவு மக்களையும் கவனத்துல வச்சு அறிக்கை தயாரிச்சதே ஒரு மலை.
என் ஆதங்கம் என்னன்னா ஏறக்குறைய ஒரு ஃபைனான்ஸியல் எமர்ஜென்சிய ரெண்டரை வருசம் இம்ப்லிமென்ட் பண்ணிட்டு பிறவு தொன்மம்,குறியீடு ,கம்ஃபர்ட்டபிள்ஸ்,லக்சரீஸ்க்கு போவம்னு சொல்லி போட்டிருக்கலாம்.

மதுவிலக்கு ? கேள்வியே இல்லை . பொருளாதார அமைப்புலயே இது ஒரு ப்ளாக் ஹோல் மாதிரி .எல்லாத்தையும் காலி பண்ணிரும்.
கனிம வளங்களை இளைஞர்கள் சுய உதவி குழுக்களை லிங்க் பண்ணி யோசிச்சிருக்காங்க.சூப்பர் .டாஸ்மாக் ஊழியர்களை மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு உபயோகிப்போம்ங்கறாய்ங்க.

இதை எல்லாம் ஏன் சொல்லவரேன்னா உடல் ,மனம் ,புத்தி இதுக்கு தான் புவியியல் எல்லைகள். ஆத்மா இதை எல்லாம் கடந்தது.
நான் இங்கே ஆந்திராவுல இருக்கன்.தமிழ் நாடு எக்கேடு கெட்டாலும் எனக்கு என்ன நஷ்டம் வந்துரப்போகுது ? கேரளா மேட்டர் பார்த்திங்கல்ல . இன்றைய கோவில்களே வெட்டி.இதுல போட்டி போட்டு வெடி போட்டு 100+ உயிர்களை பொசுக்கிட்டானுவ.

இதைத்தான் ஆன்மாவுடனான உரையாடல்னு நான் சொல்றேன். இது சூரியபலத்தால் சாத்தியம் . ஒரு வேளை இதுவே கூட சிந்தனையாகி -செயலாகி – சரித்திரமாகி ராஜயோகத்தை கூட தரலாம்ல?

சமீபத்துல நம்ம நண்பரான ஆர்ட்டிஸ்ட் கிட்டே போயிருந்தேன். த்ரீ பை ஃபோர் டின் போர்டுல மச்சாவதாரம் வரைஞ்சு வச்சிருக்காரு .அப்படியே ஷாக் ஆயிட்டேன். அன்னமய்யா கீர்த்தனைகள்ள ஒரு பாட்டோட இசைக்கு நாம தமிழ்ல எழுதியிருந்த பாட்டு ஒன்னு யதேச்சையா ஞா வர -மனசுக்குள்ளயே ஹம் பண்ணிக்கிட்டு போறம் – நம்ம பாட்டுல குறிப்பிட்ட வரி வரதுக்கும் போர்ட் நம்ம கண்ல படறதுக்கும் சரியா இருந்தது .

நான் ஹம் பண்ணிக்கிட்டு போன பாடல்வரி ………..

அமுதினை கடைந்திடும் வேளையில் ஆங்கே கூர்மத்தின் வடிவினில் நின்றவனே

வரம் தந்து ஈசனும் தவிக்கின்ற வேளையில் மோகினியாக வந்தவனே
தூணிலும் துரும்பிலும் இருப்பவன் நீ என்று தந்தைக்கு கூறிய பிரகலாதன்

துதித்திட தூணினை பிளந்துவந்தாயே எண்ணவும் குளிருது என் மனம்
கயல் என வந்தவன் நீயன்றோ
உயிர்களை காத்தவன் நீயன்றோ

அந்த செகண்ட்ல எனக்குள்ள ஒரு மேட்டர் ஸ்பார்க் ஆச்சு. காற்றில் மிதக்கும் தொன்மங்கள் ,சம்பவங்கள் ,எண்ணங்கள் என்றோ ஒரு தினம் எழுத்தாகின்றன/பேச்சாகின்றன.

பின் பல காலத்துக்கு பின் காட்சிப்படுத்தப்படுகின்றன.

பின் பல காலத்துக்கு பிறகு நடந்தும் தொலைக்கலாம்.

ஆகவே சூரிய பலம் இருக்கோ இல்லையோ – உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளள். எண்ணம் போல் மனம் .மனம் போல் வாழ்வு
Think Bigger..

அடுத்த பதிவுல ஜாதகத்துல சூரியபலம் இல்லாதவிக (கடந்த பதிவுகளில் சொன்ன குணங்கள் குறியீடுகள் இல்லாதவர்கள்) என்ன செய்தா சூரிய பலத்தை பெறலாம். ராஜயோகத்தை பெறலாம்ங்கறதை சொல்றேன்.
உடுங்க ஜூட்டு ..

11 Replies to “உங்களுக்கும் ராஜயோகம் : 9 (ஆன்மாவுடன் உரையாடல்)”

Ashok Ramanujam

16/04/2016 at 4:18 pm

அடியேன் தங்களின் அனுபவ ஜோதிடம் blog ன் தீவிர ரசிகன் ஐயா!

தாங்கள் அளிக்கும் practical பரிகாரங்களை கண்டு பலசமயம் வியந்ததுண்டு!

தங்களின் பதிவுகள் அனைத்தையும் நான் விடாமல் படிக்கிறேன்….

ஆனால் லோக்கல் தமிழ் தான் புரிந்துகொள்ள சற்று சிரமமாக உள்ளது…..

பட் தங்களது தனித்துவமும் அதுவாக இருக்கும் பட்சத்தில் அதை மாற்ற வேண்டாம் ஐயா
ஜோதிடத்தை முற்றிலும் ஒரு அறிவியல் சார்ந்த கலையாக தாங்கள் அனுகும் முறையும் பிச்சி பெனாட்டெடுக்கும் விதமும் சூப்பர்!!!

தங்களின் பணி இனிதே தொடர இச்சிறியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வாய்ப்பு கிடைக்குமானால் தங்களிடம் மாணவனாக ஜோதிடம் கற்க பெரிதும் விரும்புகிறேன் ஜீ!

Reply

  S Murugesan

  16/04/2016 at 8:59 pm

  வாங்க அசோக் ராமானுஜன் !

  பாராட்டுக்கு நன்றி . //பட் தங்களது தனித்துவமும் அதுவாக இருக்கும் பட்சத்தில் அதை மாற்ற வேண்டாம் ஐயா// காப்பி பேஸ்ட் ஆபத்தையும் இது தவிர்க்கிறது
  //வாய்ப்பு கிடைக்குமானால் தங்களிடம் மாணவனாக ஜோதிடம் கற்க பெரிதும் விரும்புகிறேன் ஜீ!//. ம்.. http://archive.org வெப்சைட் போங்க. swamy7867 என்று தேடுங்கள்.ஜோதிட பால பாடம்னு நிறைய ஆடியோ பாடம் போட்டிருக்கன். கேட்டு பயன் பெறுங்கள் .

  Reply

   Ashok Ramanujam

   16/04/2016 at 9:05 pm

   மிக்க நன்றி ஐயா….

   வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு!
   தங்களின் பணி மேன்மேலும் சிறக்க இச்சிறியேனின் மனமார்ந்த பிரார்த்தனைகள்….

   Reply

    S Murugesan

    16/04/2016 at 10:21 pm

    Ashok Ramanujam !
    நன்றி .

    Reply

Ajay

15/04/2016 at 7:01 pm

மதிப்பற்குரிய ஐயா, oru doubt….konjam clear pannunga sir…..
ஒரு ஜாதகத்தில் நவாம்சம், அஷ்டவர்க்கம், ஷட் பலம்….இவற்றில் எது கிரகங்களின் பலத்தை நிர்ணயக்க சரியானது ?

நவாம்சத்தில் சில கிரகங்கள் உச்சம் பெற்று நல்ல ஷட் பலம் பெற்றிருந்தாலும் , அவை அஷ்டவர்க்க சுயவர்க்கத்தில் 3 க்கும் குறைவான பரல்கள் மட்டுமே பெற்றுள்ள நிலையில், அந்த உச்ச பலன்கள் கிடைக்காமலேயே போய்விடுமா ??

இல்லை அதற்கு விதிவிலக்குகள் உண்டா ?!

Reply

  S Murugesan

  15/04/2016 at 9:37 pm

  வாங்க அஜய் !

  ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:

  ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி), செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.

  மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கும் நம்ம வலைப்பூ/வலைதளங்களுக்கும் அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன்.

  Reply

   Ajay

   15/04/2016 at 10:32 pm

   ஐயா….நீங்கள் சொல்வது சரிதான்..!!…எக்கச்சக்க கணக்குகள் போட்டாலும் அடித்து 100 percent சரியான பலனை கூறுவது சவால் தான்….

   Reply

Prabu

14/04/2016 at 5:15 pm

The story you explained in comments section is True. Just a opinion — How about an article with +ve and -ve of all the parties contesting election (Tamilnadu) from Astrological view.

by,
Prabu

Reply

  S Murugesan

  14/04/2016 at 10:01 pm

  வாங்க பிரபு ,
  ஜெயா,கலைஞர் ,கேப்டன் ஜாதகங்களை அனலைஸ் பண்ணி பைசல் பண்ணியாச்சே..மத்தவிகல்லாம் ஆட்டத்துலயே இல்லை .கேலரியில உட்கார்ந்து விசில் அடிக்கிறாய்ங்க .தட்ஸால்

  Reply

Siva

14/04/2016 at 9:53 am

“கிருபானந்த வாரியார் சொல்ற கதையில வர்ர தேன் துளியா மனித வாழ்க்கை மாறிருச்சு ” அது என்ன கதை?

Reply

  S Murugesan

  14/04/2016 at 10:28 am

  வாங்க சிவா !
  மனிதனை புலி துரத்த -கிணற்றில் விழப்போக -சுற்றுச்சுவர் கொடியை பிடித்து தொங்க -மேலே புலி -கிணற்றில் முதலை -அந்த நேரம் பார்த்து ஒரு கருப்பு எலியும் -வெள்ளை எலியும் கொடியை கடிக்குது.

  அதே சமயம் ஒரு தேனடையிலருந்து தேன் சொட்டுது. அதை நாக்கை நீக்கி கேட்ச் பண்ணி சுவைக்கிறான் மன்சன் .உலக இன்பங்கள் இதை போன்றதுதான் என்பது பாடம்.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *